Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 3

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் துணைப்பாடம் : தலைமைப் பண்பு இயல் ஒன்று துணைப்பாடம் தலைமைப் பண்பு செந்தூர் என்ற சிற்றூரில் வேம்பன் என்ற ஊர்த்தலைவர் வாழ்ந்து வந்தார். அவ்வூரை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகப் பலரை நாடிச்சென்று பொருளுதவி பெற்றார். பல திட்டங்களைச் செயல்படுத்த திறமையான நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார். இச்செய்தியை ஊர்மக்களுக்குத் முரசு அறைந்து அறிவித்தார். அவ்வூரைச் சேர்ந்த பாலன், பூவண்ணன் இருவருமே அப்பொறுப்பைத் தம்மிடம் […]

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 3 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 2

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் உரைநடை : வாரித் தந்த வள்ளல் இயல் ஒன்று உரைநடை வாரித் தந்த வள்ளல் குழந்தைகள் அழுதபடி அம்மா பசிக்கிறது, சோறு போடுங்கள் நங்காய்! குழந்தைகள் ஏன் அழுகின்றனர்? உணவு கொடுக்கக்கூடாதா? இருந்தால் ‘கொடுத்திருப்பேனே! தானியங்களும் மாவும் நேற்றே தீர்ந்து போய்விட்டன. இந்த நிலைக்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனே, என் செய்வேன்? ஐயனே! நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? சொல் நங்காட் நீ சொல்லும் யோசனையால்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 2 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 1

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் செய்யுள் : சிறுபஞ்சமூலம் – காரியாசான் இயல் ஒன்று செய்யுள் நாடு / சமூகம் / அரசு / நிருவாகம் கற்றல் நோக்கங்கள் ❖ பண்டைத் தமிழ் மன்னர்களின் நிருவாகத் திறனையும் ஆட்சிமுறையையும் அறிந்துகொள்ளுதல் ❖ கடையெழு வள்ளல்களின் கொடைத்தன்மையைத் தெரிந்துகொள்ளுதல் ❖ தமிழர்களின் சமூகச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளுதல் ❖ நடைமுறை வாழ்க்கையில் இணைச்சொற்களைப் பயன்படுத்துதல் சிறுபஞ்சமூலம் கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் –

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 1 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 4

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் இலக்கணம் : அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி கற்கண்டு அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி தேனிசை அடடே, செல்வியா? வா! வா! வா! எப்படி இருக்கிறாய்? செல்வி (கலகலவென நகைத்தவாறே) ஓ! நன்றாக இருக்கிறேன். அத்தை எங்கே? தேனிசை அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். (அப்போது தடதட வென அங்கே ஓடி வருகிறான் தேனிசையின் தம்பி மதியழகன்) செல்வி மதி, ஏன் இப்படி படபடவென மூச்சு இரைக்க ஓடி வருகிறாய்? என்ன ஆயிற்று? மதியழகன் அக்கா, அங்கே பாம்பு, பாம்பு…… தேனிசை மதி, விளையாடதே, அன்றும் இப்படித்தான் தீ, தீ, தீ என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்தாய். ஆனால், அப்படி எதுவும் இல்லை. போ, போ, போ இப்படியெல்லாம் பொய் சொல்லாதே. மதியழகன் அக்கா, உண்மையாகத்தான் சொல்கிறேன். நீங்களே வந்து பாருங்கள். செல்வி தேனிசை, தம்பி திரும்பத் திரும்பச் சொல்வதைப் பார்த்தால் பொய் சொல்வதுபோல் தெரியவில்லையே, வா, வா, போய்ப் பார்க்கலாம். (அவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது, அருகிலிருந்த மரத்தின்மீது பாம்பொன்று சரசரவென ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் உடல் பளபளவென வெயிலில் மின்னியது), மேற்கண்ட உரையாடலில் சில சொற்கள் தடித்த எழுத்துகளில் உள்ளன. அவை என்னவென்று அறிந்துகொள்வோமா? சில சொற்கள் எப்போதும் இரண்டாகவே வரும். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தால் பொருள் தரா. உரையாடலில் கலகல, தடதட, படபட, பளபள என வரும் சொற்கள். கலகல என்பதைக் கல எனத் தனியாகப் பிரித்தால் பொருள் இல்லை. அதனால், இம்மாதிரியான சொற்கள் எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வரும். ஆகவே, இவற்றை இரட்டைக்கிளவி என்பர். இரட்டை என்பது, இரண்டு. கிளவி என்பது, சொல். இரட்டைக் கிளவி ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, சினக்குறிப்பு போன்ற பலவகைக் குறிப்புகளை உணர்த்தும், சில சொற்கள் இரண்டாகவோ மூன்றாகவோ ஏன் நான்காகவோ அடுக்கி வரலாம். ஆனால், அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும். உரையாடலில் வா வா வா, பாம்பு பாம்பு, தீ தீ தீ, போ போ போ, திரும்பத் திரும்ப போன்ற சொற்கள் வந்துள்ளன. இவற்றைத் தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும். இவற்றை அடுக்குத்தொடர் என்பர். வா, வா, வா என மூன்றுமுறை அடுக்கிவரும் சொல்லை வா எனத் தனியே பிரித்தாலும் அஃது ஓரெழுத்து ஒருமொழியாய் வருகையைக் குறிக்கிறது. அடுக்குத்தொடர் அசைநிலை, விரைவு, வெகுளி, அச்சம், உவகை, அவலம், இசைநிறை முதலிய பொருள்களைக் குறித்து வரும். ● எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வருவது, இரட்டைக்கிளவி. ● ஒரு சொல்லே இரண்டுமுறைக்குமேல் அடுக்கி வருவது, அடுக்குத்தொடர். இரட்டைக்கிளவி இரட்டைச் சொல்லாக வரும் தனித்தனியே பிரித்தால் பொருள் தராது இரண்டு முறைக்குமேல் அடுக்கி வராது அடுக்குத்தொடர் ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வரும். தனித்தனியே பிரித்தாலும் பொருள் தரும். இரண்டுமுறைக்குமேல் அடுக்கி வரும். மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1. அடிபட்ட கால் ………………. என வலித்தது. அ) கடகட ஆ) விண்விண் இ) படபட ஈ) கணகண [விடை : ஆ) விண்விண்] 2. காலைப்பொழுது ………………. வென புலர்ந்தது. அ) பலபல ஆ) தடதட இ) புலபுல ஈ) மளமள

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 4 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 3

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் துணைப்பாடம் : நேர்மை நிறைந்த தீர்ப்பு இயல் மூன்று துணைப்பாடம் நேர்மை நிறைந்த தீர்ப்பு பல ஆண்டுகளுக்குமுன் தென் பாண்டிய நாட்டை மங்கையர்க்கரசி என்பவர் ஆண்டு வந்தார். அவர், நீதியும் நேர்மையும் மிக்கவராக விளங்கினார். அவர் ஆட்சியில் மக்கள் குறைவின்றி வாழ்ந்து வந்தனர். ஒருநாள், கிராமத் தலைவர் ஒருவர் அரசியிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தார். அவருடன் நான்கு பேர்களும் அரண்மனைக்கு வந்தனர். அரசியை வணங்கிய கிராமத் தலைவர், தம் வழக்கை எடுத்துரைத்தார். “செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர். நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர். ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். அவரவர்க்கும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் அந்தப் பஞ்சாயத்து தலைவர். அரசியார் அந்நால்வரையும் பார்த்தார்., ‘ஒவ்வொருவராக உங்கள் சாதனையைச் சொல்லுங்கள்,” என்று ஆணையிட்டார். முதலில் முருகேசன் என்பவர் தம் சாதனையைச் சொல்லத் தொடங்கினார்; “நான் ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக்கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள். அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள். ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தான பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன். என்று சொன்னார் முருகேசன். இரண்டாவதாக, கண்ணன் என்பவர் தம் சாதனையைச் சொல்லலானார். நான் ஒரு கவிஞன். பல பாடல்களும் கவிதைகளும் இயற்றியுள்ளேன். ஒரே இரவில், உலகம் வியக்கும்படியாக நூறு செய்யுள்களைக் கொண்ட ‘ஆனந்த வாழ்வு என்ற காவியத்தைப் படைத்துள்ளேன். மக்கள் எல்லாரும் அதை விரும்பிப் படிக்கிறார்கள். ஒரே இரவில் இப்படி ஒரு காவியத்தைப் படைத்தது ஓர் இலக்கிய சாதனை அல்லவா? எனவே பொற்கிழி பெற முற்றிலும் தகுதி உள்ளவன் நான் ஒருவனே!” இவ்வாறு தன்னிலை விளக்கம் அளித்தார் கவிஞர். அடுத்ததாக மூன்றாவது ஆள், கல்தச்சர் கந்தசாமி. அவர் தம் சாதனையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். ‘கரடுமுரடான பாறையையும் வெட்டிக்கொண்டு வந்து, அழகிய சிலையாகவும் எழிலான தூண்களாகவும் செய்யும் கல் தச்சன் நான். சிற்றுளியைக் கையில் எடுத்தால் போதும், அது பேசும்; பாடும்; நடனமாடும். பாறையைக் குடைந்து குடைவரைக் கோவில்களும் மண்டபங்களும் செய்துள்ளேன். நான் செதுக்கிய குகைக் கோவிலைக் கண்டு வியந்து பாராட்டாதவர்களே இல்லை. அது என் அரிய சாதனை. அதில் என்னை வெல்ல எவருமில்லை. எனவே, பொற்கிழியை எனக்குக் கொடுப்பதே பொருத்தம்!” என்றார் கல்தச்சர் கந்தசாமி. நான்காவதாக முதியவர் ஒருவர் வந்தார். அவர், தமது சாதனை என்ன என்று சொல்லலானார். ‘நான் சாதாரண ஓர் ஏழை விவசாயி. என் மூதாதையர் வழியில் எனக்குக் கிடைத்த ஒரு காணி நிலத்தை நன்கு உழுது பயிரிட்டுப் பிழைத்து வருகிறேன். என் மனைவி காலமாகிவிட்டாள். என் மகளும் நானும்தான் வயலில் உழைத்து வாழ்க்கை நடத்துகிறோம். இருவரும் பாடுபட்டு வேலை செய்ததால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மூன்று மடங்கு விளைச்சல் கண்டுள்ளது. என் குடும்பத்திற்குத் தேவையான நெல் போக, மீதியைப் பத்துக் குடும்பத்திற்கு விற்றேன். ஒரு காணி நிலத்தைக் கொண்டு பத்துக் குடும்பத்தைக் காப்பாற்றியது என் சாதனைதானே?” என்று கேட்டார் முதியவர். மங்கையர்க்கரசி சற்று யோசித்தார். பிறகு தம் தீர்ப்பைக் கூறலானார். ‘தன் உயிரையோ, பகையையோ பொருட்படுத்தாமல், பாய்ந்துசென்று பகையாளி மகளைக் காப்பற்றியது அரிய சாதனைதான். பகைவருக்கும் நட்பு காட்டுவது நமது பண்பாடு. ‘இராவணனைப் பார்த்து இன்றுபோய், நாளை வா!” என்றதும் “சுற்றி நில்லாதேபோபகையே, துள்ளி வருகுதுவேல்” என்றபாடல் வரிகளும் பண்பாட்டையே வெளிப்படுத்துகின்றன. எனவே, பகைவரின் மகளை நீர் காப்பாற்றியது, நமது பண்பாட்டுச் செயலே தவிர, புதிய சாதனை ஏதுமில்லை”. “அடுத்து, கவிஞர் ஒரே இரவில் நூறு கவிதைகளைப் புனைந்து காவியம் படைத்துள்ளதாகச் சொன்னார். சோழ நாட்டில் இருந்த பெண் கவி ஒருவர், ஒரே இரவில் ஆயிரம் கவிதை புனைந்து காவியம் படைத்தது பழைய செய்தி. எனவே, ஒரே இரவில் நீர் நூறு கவிதை புனைந்து காவியம் படைத்ததை அரிய சாதனையாக ஏற்க முடியாது”. ‘அடுத்ததாகக் கல் தச்சர், பாறையைக் குடைந்து பார்ப்போர் வியக்கும்வகையில் குடைவரைக் கோவில் உருவாக்கியதை ஒரு சாதனையாகச் சொன்னால், மாமல்லபுரம் கோவில்களும், திருச்சி பல்லவர்காலக் கோவில்களும் அழகிய குடைவரைக் கோவில்களே! எனவே, இவர் செய்தது புதுமையான சாதனை அன்று”, நாலாவதாக, முதிய விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம், இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்’ என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை வழங்கினார் மங்கையர்க்கரசி அவரது தீர்ப்பைக் கேட்டு, மக்கள் எல்லாரும் அவரை வாழ்த்தினர். மதிப்பீடு வினாக்களுக்கு விடையளிக்க, 1. அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு யாது? விடை அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு: “செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர். நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர். ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் கிராமப் பஞ்சாயத்து தலைவர். 2. முருகேசன் தாம் என்ன சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார்? விடை “நான் ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக் கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள். அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள். ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தான் பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்” என்று சொன்னார் முருகேசன். 3. விவசாயியின் சாதனைதான் உயர்ந்தது என்று அரசி கூறக் காரணம் என்ன? விடை “முதியவரான விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பம்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்” என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை அரசி வழங்கினார். சிந்தனை வினா நண்பர்கள் உன்னை வீட்டில் வந்து சந்திக்கின்றனர். அவர்கள் சென்றபிறகு, பணப்பை ஒன்று நாற்காலியில் இருப்பதைக் காண்கிறாய். இந்நிலையில் நீ செய்யப்போவது என்ன? அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன் ஆ) உரியவரே தேடிக்கொண்டு வரட்டும் எனக் காத்திருப்பேன். இ) நான் பார்த்ததால், எனக்குத்தான் உரியது என வைத்துக்கொள்வேன்.

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 3 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 2

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் உரைநடை : விதைத் திருவிழா இயல் மூன்று உரைநடை விதைத் திருவிழா காலை வழிபாட்டுக் கூட்டத்தில், தலைமையாசிரியர் கூறிய செய்தி, மாணவர்களின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அடுத்த வாரம் அவர்களை அழைத்துச் செல்லப் போகிறார்கள். அன்று முழுவதும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளைத் தம் நண்பர்களுடன் கண்டு மகிழலாம் அல்லவா! விதைத் திருவிழா தொடர்பான துண்டு விளம்பரத் தாள்களைத் தலைமையாசிரியர் வகுப்பாசிரியர்களிடம் வழங்கினார். நம் பள்ளியிலிருந்து விதைத் திருவிழாவில் மாணவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினார். தலைமையாசிரியரிடமிருந்து பெற்ற விளம்பரத் தாள்களை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர். துண்டு விளம்பரத்தாளிலுள்ள செய்திகளைப் படித்துப் பார்க்கச் செய்தனர். மாணவர்கள், விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டனர். விதைத் திருவிழாவில் தங்களுடைய பள்ளி சார்பாக என்னென்ன படைப்புகளை வழங்கலாம் எனக் குழுவில் கலந்துரையாடினர். பின்னர், தாங்கள் திரட்டிய படைப்புகளை ஆசிரியரிடம் காண்பித்து அனுமதி பெற்றனர். விதைத் திருவிழாவுக்குச் செல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர். மாணவர்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது, பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல, வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்களின் கனிவான பேச்சு, மாணவர்களுக்கு உற்சாகம் தந்தது. ஆசிரியர்: மாணவர்களே, நாம் விதைத் திருவிழா நடைபெறும் அரங்கை நெருங்கி விட்டோம். நமது படைப்புகளைக் கண்காட்சியில் வைப்பதற்கு நான் உதவுகிறேன். வாருங்கள். ரமணன்: எனக்கு இந்த விதைத் திருவிழா பெருமகிழ்ச்சியைத் தருகிறது, மாலா, ரெஹானா விதைகளையெல்லாம் பாருங்களேன். இத்தனை வகைகளா? வியப்பாக இருக்கிறதே! மாலா: ஆமாம், ரமணா! வகை வகையான விதைகள் என்பதைவிட, இந்த விதைகளை நாம் எப்படி சேகரிக்க வேண்டும், அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், அவற்றை எவ்வாறு முறைப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் எழுதி வைத்துள்ளார்கள். விதைகள் எல்லாம் தரமானவையாக உள்ளன. இந்த விதைகள் மூலம் கிடைக்கும் சத்துக்கள், மருத்துவப் பயன்கள் பற்றியும் விளக்கமாகக் கூறுகிறார்கள், மேலும், விளக்கப் பலகைகளும் வைத்திருப்பது, மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. மணிமொழி: முகிலா, நெல் விதைகளின் பெயர்களைப் பார்த்தாயா? நாட்டு நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா முதலான பல்வேறு மரபு நெல் விதைகள், நாட்டுக்கம்பு, குதிரைவாலி, சோளம் போன்ற சிறு தானியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலை, உளுந்து, முந்திரி, நாட்டுப்பருத்தி விதைகள், சிறுதானிய விதைகள் மட்டுமல்லாமல் அரிய மூலிகைச் செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்ப்பதை நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். நிலவளத்தைக் காப்போம்! நீர்வளத்தைப் பெருக்குவோம் ! பூமித்தாயைப் போற்றுவோம்.! இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமை 350க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் சேகரிப்பு ● இயற்கை வேளாண் பொருள்கள் ● இயற்கை இடு பொருள்கள் ● இயற்கை பருத்தி ஆடைகள் ● இயற்கை கைவினைப் பொருள்கள் ● மண்ணோடு மட்கக்கூடிய பொருள்கள் ● மண்ணின் ஊட்டச்சத்து நீர் மேலாண்மை ● சூழலியல் ● தோட்டக்கலை ● பண்ணை அமைப்பு ● உணவுப் பாதுகாப்பு ● இயற்கை வேளாண்மை அனைவரையும் சுண்டி இழுக்கும் 27 அரங்கங்கள் பாரதி: மணிமொழி அதோ, அங்கே பார்! அந்த அரங்கில் இயற்கை இடுபொருள்கள் இயற்கை உணவுகள், வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான குறிப்புகளும் தருகிறார்கள். வாங்க, வாங்க, என்ன சொல்கிறார்கள் எனக் கேட்போம். மணிமொழி: ரமணா, பாதிப்பு என்று இந்த அரங்கத்தில் எழுதியிருக்கே, என்னவாக இருக்கும்? ரமணா: இரசாயன விதைகள், இரசாயனப் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும்விளைவுகளைத்தாம் பாதிப்பு என்று சொல்கிறார்கள். இதனால், மண்ணின் தன்மை கெடுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள். ரெஹானா: பாரதி, இங்கே பார்! சமையல் பாத்திரங்கள். இவை சாதாரண பாத்திரங்கள் அல்ல, பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட செம்பு, மரத்தாலான சமையல் பாத்திரங்கள், கருவிகள். இவற்றையும் நாம் பார்வையிடுவதற்காக வைத்துள்ளனர். ஆசிரியர்: மாணவச் செல்வங்களே, அனைத்துக் கூடங்களையும் பார்த்தீர்களா? இந்த விதைத் திருவிழா, உங்களுக்கு மிகுந்த பயனைத் தந்திருக்குமென நினைக்கிறேன். (மாணவர்கள் அனைவரும் “ஆமாம், ஐயா” என்று கூறுகின்றனர்.) பாரதி: ஐயா! அங்கே பாருங்கள். இயற்கை உணவுப்பொருள்கள் என்று எழுதப்பட்ட அந்த அரங்கத்தில் எல்லாரும் ஏதோ சுவைக்கிறார்கள். நாமும் அங்கே செல்லலாமா? மணிமொழி: விழாவிற்கு வந்தவர்களுக்கு இயற்கை முறையில் தயாரித்த நவதானிய உணவுகளான இனிப்பு உருண்டை, பிட்டு, பொங்கல், கேழ்வரகுக் கூழ், கேழ்வரகு அடை, முளைகட்டிய பாசிப்பயறு, நவதானிய சுண்டல். கொண்டைக்கடலை, தட்டைப்பயறு, மொச்சை போன்ற தின்பொருள்களை வழங்குகிறார்கள் ஆசிரியர்களுடன் மாணவர்களும் அந்த அரங்கில் நுழைந்தார்கள். இயற்கை உணவுகளைச் சுவைத்து மகிழ்ந்தார்கள். “இந்த விதைத் திருவிழா எங்களுக்குப் பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நாள் எங்களுக்கு இனிய நிகழ்வாகவும் அமைந்தது. இங்குப் பார்த்தவற்றை நாங்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்” என்று மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்கக் கூறினார்கள். விதைத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி கூறி, மீண்டும் தங்களுடைய பள்ளிக்குத் திரும்பிச் சென்றார்கள். மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 1. அனுமதி – இச்சொல் குறிக்கும் பொருள் ——— அ) கட்டளை

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 2 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 1

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் பாடல் : உழவுப் பொங்கல் – நாமக்கல் வெ. இராமலிங்கனார் இயல் மூன்று பாடல் தொழில் / வணிகம் கற்றல் நோக்கங்கள் ❖ உழைப்பின் மேன்மையை அறிந்துகொள்ளுதல் ❖ உழவுத்தொழிலே உலகத்தின் அச்சாணி எனப் புரிந்துகொள்ளுதல் ❖ இயற்கை வேளாண்மையைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் ❖ செய்யும் தொழிலில் நேர்மையின் இன்றியமையாமையை உணர்ந்துகொள்ளுதல் ❖ அடுக்குத் தொடர்களையும் இரட்டைக் கிளவிகளையும் இடமறிந்து பயன்படுத்துதல் உழவுப் பொங்கல் பொங்குக பொங்கல் பொங்குகவே புதுவனம் நிறைந்தரம் தங்குகவே எங்கணும் யாவரும் இன்பமுற ஏர்த்தொழில் ஒன்றே தெம்புதரும் உணவுப் பொருள்கள் இல்லாமல் உயிரோ டிருப்பது செல்லாது பணமும் அதுதரும் நலனெல்லாம் பயிர்கள் விளைப்பதன் பலனேயாம் உழவுத் தொழில்தான் உணவுதரும் உடையும் அதனால் அணியவரும் பழகும் மற்றுள தொழில்யாவும் பயிர்த்தொழில் இன்றேல் விழலாகும் தங்கமும் வெள்ளியும் இருந்தாலும் தானியம் ஒன்றே விருந்தாகும் இங்கிதன் உண்மையை உணர்ந்திடுவோம் ஏர்த்தொழில் மிகுந்திடத் துணிந்திடுவோம் உழவே செல்வம் உண்டுபண்ணும் உழைப்பே இன்பம் கொண்டுவரும் உழவைத் தொழுதிட வருநாளே உற்றஇப் பொங்கல் திருநாளாம் ஏழையும் செல்வரும் இங்கிதமாய் இசைந்துளம் களித்திடும் பொங்கலிது வாழிய பயிர்த்தொழில் வளம்பெருகி வையகம் முழுதும் வாழியவே – நாமக்கல் வெ. இராமலிங்கனார் சொல்பொருள் எங்கணும் – எங்கும் களித்து – மகிழ்ந்து

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 1 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 4

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு இலக்கணம் : இணைப்புச்சொற்கள் கற்கண்டு இணைப்புச்சொற்கள் செழியன் : இளந்தமிழா, நாளை வெளியூர் செல்வதாகக் கூறினாயே? மறந்துவிட்டாயா? உன்னுடன் யாரெல்லாம் வருகிறார்கள்? இளந்தமிழ் : மறக்கவில்லை, செழியா! நாளை நான் மட்டும்தான் செல்வதாக இருக்கிறேன். அதனால், என்னுடன் யாரும் வரவில்லை. செழியன் : அப்படியானால் நீ கவனமாக இருக்கவேண்டும் அல்லவா? இளந்தமிழ் : நான் ஏற்கெனவே சென்ற இடம்தான். ஆதலால், அச்சம் ஒன்றும் இல்லை. செழியன் : அது சரி, இளந்தமிழ். மறுநாளே வந்துவிடுவாயா அல்லது வருவதற்கு நாளாகுமா? இளந்தமிழ் : நான் திரும்பி வருவதற்கு இரண்டு நாளாகும். ஆகையால், தேவையான உடைகளைக் கொண்டு செல்கிறேன். செழியன் : ஏனெனில், இந்த வார இறுதியில், நமக்கு மட்டைப்பந்து போட்டி இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன். நீ கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். ஆகவே, மறந்துவிடாதே நண்பா! குழந்தைகளே! மேற்கண்ட உரையாடலைப் படித்தீர்களா? உங்களிடம் வழக்கம்போல ஒரு வினா கேட்கலாமா? நீங்கள் படித்த உரையாடலில் எத்தனை இணைப்புச் சொற்கள் உள்ளன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். அட, மீண்டும் உரையாடலைப் படிக்கத் தொடங்கிவிட்டீர்களா? நாம் கண்டுபிடித்த இணைப்புச் சொற்களைப் பட்டியலிடலாமா? மட்டும், அதனால், அப்படியானால், ஆதலால், அல்லது, ஆகையால், ஏனெனில், ஆகவே படித்தீர்களா? இவைபோன்றஇணைப்புச்சொற்கள், நாம் பேசும் பேச்சில் இயல்பாகவே இடம்பெறுகின்றன. இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திப் பேசவும் எழுதவும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. நாம் தங்குதடையின்றிப் பேசவும் எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர். தொடர்களில் பயன்படும் சில இணைப்புச்சொற்கள் பின்வருமாறு: அதனால், அப்படியானால், அல்லது, அவ்வாறெனில், ஆனால், ஆகையால், ஆகவே, ஆதலால், ஆயினும், இருந்தபோதும், உம், எனவே, எனில், ஏனெனில், எவ்வாறெனில் மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1. ‘அதனால்‘ என்பது அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல் ஈ) இணைப்புச்சொல் [விடை : ஈ) இணைப்புச்சொல்] 2. கருமேகங்கள் வானில் திரண்டன ………………..மழைபெய்யவில்லை .இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச்சொல் அ) எனவே ஆ) ஆகையால் இ) ஏனெனில் ஈ) ஆயினும் [விடை : ஈ) ஆயினும்] 3. கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ………… அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான். அ) அதனால் ஆ) ஆதலால் இ) இருந்தபோதிலும் ஈ) ஆனால் [விடை : ஈ) ஆனால்] ஆ. கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக. 1. நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். (உம்) நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம். 2. வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை . (ஆனால்) விடை

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 4 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 3

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு துணைப்பாடம் : கங்கை கொண்ட சோழபுரம் இயல் இரண்டு துணைப்பாடம் கங்கை கொண்ட சோழபுரம் கயலினி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். ஏன்? இந்த விடுமுறை நாள்களை அவள் மகிழ்வுடன் கழிக்கப் போகிறாள் அல்லவா! அதனால்தான். அன்பு தரும் ஆசைப் பாட்டியின் ஊருக்குப் புறப்படத் தயாராகிவிட்டாள். வாருங்கள், குழந்தைகளே! நாமும் அவள் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வோம். சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில்தான் உள்ளது, அந்த ஊர். தன் தாயுடன் பேருந்தில் ஏறிச் சன்னலோரம் அமர்ந்து கொண்ட அவளுக்கு வாயெல்லாம் ஒரே பாட்டுத்தான். ‘ஆறு சட்டம் நூறு பண்ணி ஐம்பத்தாறு ரயில் வண்டி கங்கை கொண்டான் மண்ணெடுத்து கிண்ணுது பார் ரயில் வண்டி…‘ அவள் பாட்டி சொல்லிக் கொடுத்த நாட்டுப்புறப் பாட்டுத்தான் அது. இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே, அவள் எங்கே செல்கிறாள் என்று? ஆமாம், அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரத்திற்குத்தான் அவள் செல்கிறாள். அவள் பாட்டி, இந்த விடுமுறையில் சில இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தாள். அதுதான் கயலினியின் துள்ளலுக்குக் காரணம். ஊர் வந்ததும் அவள் பாட்டி அவர்களை வரவேற்க பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். பாட்டியைக் கண்டதும் ஓடிச்சென்று ஆரத் தழுவிக் கொண்டாள் கயலினி. “பாட்டி… பாட்டி,நீங்க தொலைபேசியில சொல்லிக் கொடுத்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுல கங்கை கொண்டான் மண்ணெடுத்து என்று வருதுல அப்படினா என்ன பாட்டி?” எனக்கேட்டாள்.” ஓ ஓ… அதுவா! சோழர்கள் காலத்துல தமிழ்நாட்டை ஆண்ட முதலாம் இராசேந்திர சோழன் என்னும் மன்னன் வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தான். அதன் அடையாளமாகத்தான் அவனைக் கங்கை கொண்டான் என்று சொல்கிறோம், அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காகத் தான் உருவாக்கிய புதிய நகரத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயரும் வைத்து விட்டான்” என்று பதிலளித்தாள் பாட்டி. ● வெற்றித் திருநகரான கங்கை கொண்ட சோழபுரம் ‘கங்காபுரி’ என்றும் ‘கங்காபுரம்’ என்றும் புலவர் பெருமக்களால் போற்றப் பெற்றுள்ளது. ● ‘கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்காக புரிபரந்த கற்பம்’ என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார் “ஓ! அப்படியா? நம் ஊருக்கு இப்படித்தான் பெயர் வந்ததா? ” சரி, பாட்டி. எங்கேயோ அழைத்துச் செல்கிறேன் என்றீர்களே, போகலாமா?” என்றாள் கயலினி. முதலில் சாப்பிட்டு ஒய்வெடு. பிறகு போகலாம்” என்ற பாட்டி அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும், ‘பாட்டி…’ என்று இழுத்தாள் கயலினி.” சரி…சரி.. நான்புரிந்து கொண்டேன் வா போகலாம்” என்று பாட்டி கூற இருவரும் சோழ நாட்டுக்கு வளம் சேர்த்த சோழ கங்கத்தை அடைந்தனர். ‘இதுதான் சோழ கங்கம். பார்த்தாயா இதன் அழகை!’ என்று பாட்டி சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் கயலினி, “பாட்டி, இது என்ன பொன்னேரினு எழுதியிருக்கு? நீங்க சோழ கங்கம்னு சொல்றீங்க?” எனக் கேட்டாள். “ஆமாம், சோழ கங்கப் பேரேரிதான் இன்று பொன்னேரினு பெயர் மாறியிருக்கு. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இதனால் பாசன வசதி பெற்று உழவுத்தொழில் தழைத்தோங்கியது” என்றாள் பாட்டி, மலைகளும் குன்றுகளும் இல்லாத சமவெளியில் பதினாறு கல் தொலைவுவரை வலிமையான உயரமான கரைகளைக் கட்டி, நீண்ட கால்வாய் வெட்டித் தண்ணீரைப் பள்ளத்தாக்கிலிருந்து மேட்டிற்குக் கொண்டு வந்து, ஏரியில் தேக்கி வைத்ததைக் கற்பனையில்கூட எண்ணிப் பார்க்கவே கயலினிக்குக் கடினமாகத் தோன்றியது. “பாட்டி, இது அவ்வளவு எளிமையான செயலன்று” என்று சோழர்களின் நீர்ப்பாசன முறையை எண்ணி வியப்புற்றாள். இருவரும் பேசிக்கொண்டே கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்தனர். கோவிலைப் பார்த்ததும் “இதுவும் தஞ்சைப் பெரிய கோவில் போன்ற அமைப்பிலேயே உள்ளதே”? வியப்புடன் கேட்டாள் கயலினி. “ஆமாம், இருந்தாலும் இக்கோவில் இராசேந்திரனின் தந்தை இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலைவிட உயரம் குறைவானதுதான் என்றாள் பாட்டி. “அது என்ன பாட்டி? ‘என்று கோவிலின் விமானத்தைப் பார்த்துக் கேட்டாள் கயலினி… அதற்கு பாட்டி “அதுதான் விமானம். அங்கே பார், விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள மிகப்பெரிய வட்ட வடிவக்கல். அது 34 அடி குறுக்களவு கொண்டது. மேலும், இது ஒரே கல்லால் அமைக்கப்பெற்ற விமானம் ‘ என்று கூறிக் கயலினியை வியப்படையச் செய்தாள் பாட்டி. “பாட்டி, அதோ பாருங்கள் நந்தி! இது கல்லால் செதுக்கப்பட்டதுதானே”? என்று கூறிக்கொண்டே ஓடிப்போய் அதனைத் தொட்டுப்பார்த்தாள் கயலினி. “இல்லை, இல்லை. இது முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டது” என்று உரைத்தாள் பாட்டி. அழகு மிளிர்ந்த இச்சிலையைக் கண்டபடி உள்ளே சென்றாள் கயலினி. ‘என்ன பாட்டி, கோவிலின் வாயில் இவ்வளவு உயரத்தில் உள்ளதே!’ என்றாள் கயலினி. “ஆமாம். எல்லாக் கோவிலின் வாயில்களைக்காட்டிலும் தரைமட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் இருப்பதே இதன் சிறப்பு” என்று கூறிய பாட்டி, கயலினியை உள்ளே அழைத்துச் சென்றாள். படியைக் கடந்து ஏறியதும் வாயிற்காவலர் சிலைகளைக் கண்டு களித்தாள் கயலினி.. அவற்றைப் பார்த்ததும் அவளுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு பொங்கியது. தூண்களிலும் கோவில்களிலும் இருந்த சிற்பக்கலைகளைக் கண்டு களித்தாள் கயலினி. கோவிலின் வடக்குப் பக்க நுழைவாயிலின் இருபக்கங்களிலும் உள்ள கலைச்செல்வி மற்றும் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி ஆகிய சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை என்பதைப் பாட்டி மூலம் அறிந்து கொண்டாள். “பாட்டி, இங்கே பாருங்க, சிங்கம் வடிவத்திலிருக்கும் இந்தச்சிற்பத்தின்வயிற்றிலே ஒரு வாயில் இருக்கிறதே’ என்றாள் கயலினி”, அதற்குப் பாட்டி, “அதுதான் சிங்க முகக் கிணறு ‘என்றாள். “என்னது? சிங்கத்தின் வயிற்றுக்குள் கிணறா?” என்று தன் இரு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி சோழர்களின் கலையை எண்ணி வியந்தாள். தமிழர்களின் கலைத் திறமையை கண்டு உள்ளம் மகிழ்ந்த அவள், அக்கலைக்கூடத்தைவிட்டு வரவே மனமில்லாமல் பாட்டியுடன் வீடு வந்து சேர்ந்தாள். இந்தியச் சிற்ப வரலாற்றில் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பங்கள் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளன. கலையழகும் புதுப்பொலிவும் கொண்ட சிற்பக் கூடமாகவே கங்கை கொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னமாகக் கங்கை கொண்ட சோழபுரத்தை அறிவித்துள்ளது நமக்கெல்லாம் பெருமைதானே! என்ன, குழந்தைகளே, கயலினியோடு நாமும் அருமையும் பெருமையும் மிக்க கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டோமே! இப்போது, உங்களுக்கும் மகிழ்ச்சிதானே. நாம் மீண்டும் சந்திப்போமா? மதிப்பீடு வினாக்களுக்கு விடையளிக்க, 1. முதலாம் இராசேந்திர சோழனை ஏன் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்? விடை

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 3 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு உரைநடை : தமிழர்களின் வீரக்கலைகள் இயல் இரண்டு உரைநடை தமிழர்களின் வீரக்கலைகள் தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது தமிழ் மரபு. தமிழரின் பண்பாட்டுக் கூறுகளும் கூறுகளும் கலைகளும் இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பண்டைத்தமிழன், வாளாண்மையால் பகைவரை வென்றான். தாளாண்மையால் நன்னிலம் ஆக்கினான். வேளாண்மையால் வளம் பெருக்கினான். வீரமும் தீரமும் நிறைந்த விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினான். தமிழர்க்கென்றே இருக்கும் வீரம் செறிந்த கலைகளை அறியுந்தோறும் வியப்பு மேலிடும்; மனம் மகிழ்ச்சியில் நிறைந்திடும். ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், மற்போர் முதலான கலைகள் தமிழர்களின் வீரக்கலைகளாக விளங்குகின்றன. இக்கலைகளுள் இன்றளவும் நடைமுறையில் உள்ள சில விளையாட்டுகளைப் பற்றி அறிந்துகொள்வோம். ஏறுதழுவுதல் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று, ஏறுதழுவுதல் ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும். இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு இன்றுவரை விளையாடப்பட்டு வருகிறது. வளமான புல்வளம் கொண்ட முல்லைநிலமே ஏறு தழுவுதலுக்கு உகந்த நிலமாக விளங்கியது. இன்று பல மாவட்டங்களில் இவ்வீர விளையாட்டு நடைபெறுகிறது. பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நாள்களில் ஏறுதழுவதல் என்னும் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களிலும் அது அழைக்கப்படுகிறது. ஊரிலுள்ள இளைஞர்கள், காளைகளை அடக்கித் தங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றனர். காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது, தமிழர் கொள்கை. கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்பதைத்தமிழர்கள் திடமாக நம்பினர். காளையின் வாலைப் பிடித்தவன், அதன் காலால் உதைபட்டு, மண்ணிடை வீழ்வான். ஆதலால், கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல் வசமாகப் பிடி கிடைத்தால், காளையின் விசை அடங்கும்; வீரம் அடங்கும்; திடமின்றி மண்ணில் சோர்ந்து விழும். இத்தகைய வீர விளையாட்டை விளையாடுவதற்குச் சில விதிமுறைகள் இன்று பின்பற்றப்படுகின்றன. இவ்விளையாட்டில் பங்குபெறும் காளைக்குக் கன்று பருவத்திலிருந்தே பாய்ச்சலுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காளையின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டுத் துணியை எடுப்பவரே வெற்றிபெற்றவர் ஆவர். தற்காலத்தில் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் காளைகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. போட்டி நடைபெறும்போது வாடிவாசலை மறித்துக்கொண்டு போட்டியாளர்கள் நிற்கக்கூடாது. காளையின் திமில் பகுதியைப் பிடித்தபடி 15 மீட்டர் தூரம் அல்லது 30 வினாடிகள் அல்லது மூன்று துள்ளல்கள்வரை ஓடும் போட்டியாளர் வெற்றி பெற்றவர் ஆவார். இவ்விளையாட்டில் ஈடுபடுவதற்கு நல்ல உடல் திறனும், அஞ்சா நெஞ்சமும் தேவை. சிலம்பாட்டம் தமிழர்களின் மற்றொரு வீர விளையாட்டு, சிலம்பம். சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் இதற்கு உண்டு. தற்காப்புக்காகத் தோன்றிய இக்கலை, இன்று வீர விளையாட்டாக அறியப்படுகிறது. சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல் எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் போன்றவை அடிப்படையாகும். இதற்கான கம்பு நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய ‘சிறுவாரைக்கம்பு’ என்னும் மூங்கில் இனத்திலிருந்து செய்யப்படுகிறது. சிலம்பக் கலையில் மான்கொம்பு, பிச்சுவா கத்தி, சுருள்பட்டா, வளரி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்துவர். நாடிநரம்புகளையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும் இவ்விளையாட்டு, தமிழரின் வீரத்திற்கும் நுட்பமான செயல்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வில்வித்தை வித்தை என்பது, வியப்படையச் செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் ஒரு செயல். அவற்றுள் வில் வித்தையும் ஒன்று. பண்டைத் தமிழர் விரும்பிக் கற்றுக்கொண்ட விளையாட்டாக வில்வித்தை விளங்கியது. தொடக்கத்தில் அம்பெய்தி விலங்குகளை வேட்டையாடவும், போர்முனைகளில் எதிரிகளை வெல்லவும் இவ்வில்லாற்றல் பயன்பட்டது. கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ‘வல்வில் ஓரி’ ‘வல்வில் ஓரி’ வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம். அவர், வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, பெரிய யானையொன்று எதிர்ப்பட, அதன்மீது அம்பெய்தினார். அந்த அம்பானது, அப்பெரிய யானையின் தலையில் பாய்ந்தும், அங்குக் குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றும், அதனைக் கடந்து சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் மேல் பாய்ந்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓர் உடும்பின் மீதும் பாய்ந்து தன் சினம் தீர்த்தது என்று புறநானூற்றுப் பாடல்வழி அறிகிறோம். படைத்திறமும் கொடைத்திறமும் கொண்டு விளங்கிய வல்வில் ஓரியை வன்பரணர் பாடி மகிழ்ந்தார். இன்று வில்வித்தை, ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளமை தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும். மற்போர் படைக்கலன்கள் ஏதுமின்றி இருவர் போரிடும் விளையாட்டே மற்போர். மல் என்பது, வலிமையைக் குறிக்கும். ஒருவன் தன் உடல் வலிமையால் செய்யும் போரே, மற்போர்’. மற்போரில் வெற்றி பெற்றவர்களை மல்லன்’ என்னும் சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. மற்போரில் சிறந்து விளங்கியமையாலேயே மாமல்லன் என்று அக்கால அரசர்கள் போற்றப்பெற்றனர். மல்யுத்தம் என உலகம் முழுதும் போற்றப்படும் இவ் வீரக்கலை, பண்டைத்தமிழரின் போர்முறைகளுள் ஒன்றாக இருந்தது. புறநானூற்றுப் பாடலொன்றில் மற்போர் பற்றிய நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இருவர் கைகோத்துக் கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவருடன் ஒருவர் போர் செய்வதே மற்போர். பகைவரை எதிர்கொள்ளும் வகையில் விளங்கிய இம்மற்போர், பின்னர் வீரவிளையாட்டாக மாறியது. நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மற்போர் கழகங்கள் உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் மற்போரிடுவதும் ஒன்றாக இருந்து வருகின்றது. மேலும் பல விளையாட்டுகள், பண்டைக் காலம்முதல் இன்றுவரை வழக்கில் இருந்து வருகின்றன. வழுக்குமரம், நீர் விளையாட்டு, கபடி என்கின்ற சடுகுடு போன்றபலவிளையாட்டுகளை நாம் இப்போதும் விளையாடிமகிழ்கிறோம். உடலில் வலிமையும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் விளையாட்டால் ஏற்படுகின்றது. உடலில் உறுதி உடையவரே, உலகை ஆளும் உள்ள உறுதியும் உடையவர் ஆவர். ஆகையால், குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குப் பிடித்த வீரவிளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம், அதுமட்டுமின்றி, உலக விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியை நாட்டிற்கு அளிப்போம். மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1. தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது அ) சிலம்பம் ஆ) மற்போர் இ) மட்டைப்பந்து ஈ) நீர் விளையாட்டு [விடை : அ) சிலம்பம்] 2. ‘மஞ்சு விரட்டு‘ என்பதைக் குறிக்கும் விளையாட்டு அ) மற்போர் ஆ) ஏறுதழுவுதல் இ) சிலம்பாட்டம் ஈ) வில்வித்தை [விடை : ஆ) ஏறுதழுவுதல்] 3. மற்போர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) மற் + போர் ஆ) மள் + போர்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 2 Read More »