Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 3

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 3

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்

துணைப்பாடம் : தலைமைப் பண்பு

இயல் ஒன்று

துணைப்பாடம்

தலைமைப் பண்பு

செந்தூர் என்ற சிற்றூரில் வேம்பன் என்ற ஊர்த்தலைவர் வாழ்ந்து வந்தார். அவ்வூரை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகப் பலரை நாடிச்சென்று பொருளுதவி பெற்றார். பல திட்டங்களைச் செயல்படுத்த திறமையான நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார். இச்செய்தியை ஊர்மக்களுக்குத் முரசு அறைந்து அறிவித்தார். அவ்வூரைச் சேர்ந்த பாலன், பூவண்ணன் இருவருமே அப்பொறுப்பைத் தம்மிடம் வழங்குமாறு விருப்பம் தெரிவித்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்த தலைவர் ஒரு முடிவிற்கு வந்தார். மக்கள்மீது உண்மையான அன்புகொண்டு, தேவையானவற்றைச் செய்து, சரியான நிருவாகத் திறமை உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களுக்கு மூன்று போட்டிகள் வைத்தார்.

அவ்விருவரும் போட்டிகளில் கலந்து கொண்டனர். முதல் போட்டி, மக்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். போட்டியைப் புரிந்துகொண்ட பாலன், அவ்வூர் மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தார். மக்கள்மகிழ்ந்தனர். பூவண்ணன் அவ்வூரிலுள்ள திறமைசாலிகள் சிலரைத் தேர்ந்தெடுத்துத் தொழில் சார்ந்த பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது போட்டியானது, அவ்வூர் மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். இதற்காகப் பாலன் தம்மிடமிருந்த செல்வங்களைமக்களுக்குப்பிரித்துக் கொடுக்கத் தொடங்கினார். இதனால்,மக்களுக்குப் பாலன்மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது. பூவண்ணன் தாம் தேர்ந்தெடுத்த திறமைசாலிகளுக்குக் கல்வியுடன் மற்ற கலைகளையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்தார். மக்கள், இந்தச் செயல்களைக் கண்டு அவரை ஏளனமாகப் பார்த்தனர். அதனைப் பார்த்த பாலனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

மூன்றாவது போட்டி மக்களிடம் பரிவு காட்டவேண்டும் என்பதாகும். அதனை ஒப்புக்கொண்டு இருவரும் சென்றனர். மறுநாள் பாலன் சிந்தித்துக் கொண்டே நடந்து சென்றார். அவ்வழியில் மூதாட்டி ஒருவர் மரத்தடியில் படுத்திருந்தார். “தம்பி, என்னைத் தூக்கிவிடு, என்னால் எழுந்திருக்க முடியவில்லை” என்றார். “எனக்கு அவசர வேலை இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பாலன் வேகமாகச் சென்றுவிட்டார். சற்று நேரத்தில் அவ்வழியே வந்த பூவண்ணன், அந்த வயதான மூதாட்டியின் அருகில் சென்று, “என்ன வேண்டும்” என்று கேட்டார். “தம்பி என்னைத் தூக்கிவிடு” என்று அந்த மூதாட்டி கூறினாள். உடனே பூவண்ணன் மூதாட்டியின் அருகில் சென்று, அவரைத் தூக்கி உட்கார வைத்தார். பிறகு, மூதாட்டியின் களைப்பைப் போக்க உணவும் வாங்கிக் கொடுத்தார்.

மறுநாள் ஊர்மக்கள் முன்னிலையில், நிருவாகி பதவி யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதைஅறிவிக்க ஊர்த்தலைவரால் கூட்டம் கூட்டப்பட்டது. மக்களில்பெரும்பாலனோர் பாலனே நிருவாகி பதவிக்குத் தகுதியானவர் என முணுமுணுத்தனர். பூவண்ணன் அமைதியாக நின்றிருந்தார்.

ஊர்த் தலைவர் இருவரின் செயல்களையும் கேட்டறிந்தார். பாலன், மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கியதையும், தம் செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டதையும் கூறினார். மேலும், அனைவருடனும் அன்பாகப் பழகுவதாகவும் கூறினார். அதுமிட்டுமின்றி, தமக்கு அப்பதவி கிடைத்தால் சிறப்பாகச் செயல்படுவேன் என்றும் கூறினார்.

பூவண்ணன், திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்துக் கல்வியுடன் தனியாகத் தொழில் செய்து, பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பயிற்சிகள் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னார். மேலும், மற்றக்கலைகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார். இருவரின் கருத்துகளைக் கேட்ட ஊர்த்தலைவர், மக்களின் இப்போதைய தேவைக்குப் பாலனால் வழங்கப்படும் அறுசுவை உணவும் செல்வமும் பயன்படலாம். அதைப் பகிர்ந்து கொடுக்க நினைத்ததில் மகிழ்ச்சி. ஆனால், எதிர்காலத்தேவை, மக்கள் முன்னேற்றம், சமூக முன்னேற்றத்திற்குக் கல்வியறிவு இன்றியமையாதது. அதனால், இந்த நிருவாகிப் பதவிக்கு ஏற்றவர் பூவண்ணனே என்று கூறினார். மக்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. அவர் கூறியதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். அதைப் புரிந்து கொண்ட ஊர்த்தலைவர், “சற்றுப் பொறுத்திருங்கள். இதோ வருகிறேன்” என்று கூறிச் சென்றார். சிறிதுநேரம் கழித்துப் பாலன், பூவண்ணனிடம் உதவி கேட்ட மூதாட்டி தள்ளாடியபடியே மக்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வந்தார். தட்டுத் தடுமாறிக் கீழே விழப்போன மூதாட்டியைப் பூவண்ணன் விரைந்து சென்று, தாங்கிப் பிடித்தார். எல்லாரும் அவரைப் பார்த்தனர். தடுமாறி விழுந்த மூதாட்டி, தம்முடைய வேடத்தைக் கலைத்தார். அவர் வேறு யாரும் அல்லர்; ஊர்த்தலைவர் வேம்பனே ஆவார்.

மக்களே, நான் பூவண்ணனைச் சிறந்த நிருவாகி என்றபோது, அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயங்கினீர்கள். இப்பொழுது உண்மையை உணர்ந்து கொண்டீர்களா? எதிர்காலச் சிந்தனை, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மக்களிடம் பரிவு காட்டும் தன்மை இவை அனைத்தையும் பெற்றவரே சிறந்த நிருவாகத் திறமை உடையவர் என்றார் ஊர்த்தலைவர். இந்தத் திறமை முழுவதும் பூவண்ணனிடமே உள்ளது. எனவே, அவரே சிறந்த நிருவாகி என்றார். ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க,

1. வேம்பன் எதற்காகப் பலரை நாடிச் சென்று பொருளுதவி பெற்றார்?

விடை

வேம்பன் செந்தூர் என்ற ஊருக்கு ஊர்த்தலைவராக இருந்தவர். அவ்வூரின் முன்னேற்றத்திற்காகப் பலரை நாடிச் சென்று பொருளுதவி பெற்றார்.

2. ஊர்த்தலைவர் அறிவித்த இரண்டாவது போட்டி என்ன?

விடை

செந்தூர் மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது போட்டியாகும்.

3. செந்தூர் மக்களுக்குப் பாலன் மீது நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன?

விடை

● பாலன் மக்களுக்கு அறுசுவை உணவளித்தார்.

● தம் செல்வங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

● இச்செயல்களால் செந்தூர் மக்களுக்கு பாலன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

4. சிறந்த நிருவாகி என ஊர்த்தலைவர் யாரை அறிவித்தார்?

விடை

ஊர்த்தலைவர் பூவண்ணனைச் சிறந்த நிருவாகி என அறிவித்தார்.

5. பூவண்ணன் மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ததாகக் கூறினார்?

விடை

மக்களின் முன்னேற்றத்திற்குப் பூவண்ணன், திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்துக் கல்வியுடன் தனியாகத் தொழில் செய்து, பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பயிற்சிகள் – கொடுத்திருப்பதாகவும் மற்றக் கலைகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்திருப்பதாகவும்” கூறினார்.

சிந்தனை வினாக்கள்.

1. உங்கள்ஊரைமுன்னேற்றம் பெறச் செய்ய நீங்கள்எந்தவகையில் உதவுவீர்கள்?

விடை

● ஊரை முன்னேற்றம் பெறச் செய்ய முதலில் செய்ய வேண்டியது கல்வி கற்காத மாணவர்கள் இவ்வூரில் இல்லை என்று கூறும் நிலையை ஏற்படுத்துவேன்.

● மழைக்காலங்களில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களைச் சரிசெய்வேன்.

● பொதுக்குழாய்களில் நீர் வரும் நேரத்தை அதிகப்படுத்துவேன். குழாய்கள் சரியாக மூடப்படாமல் இருந்தால் அவற்றை மாற்றிப் புதிய குழாய் அமைப்பேன்.

● மின் விளக்குகள் பகல் நேரங்களில் தெருக்களில் எரிந்தால் அதனை மின்வாரியத்திற்குத் தெரிவிப்பேன்.

● சிறியவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சத்து மிகுந்த இயற்கை உணவு கிடைக்க வழி வகை செய்வேன்.

● மழைநீர் தேங்கி அதனால் கொசுக்கள் பெருகுவதைத் தவிர்க்க மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வேன்.

● நோய்கள் வராமல் இருக்க சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன். மேற்கூறிய அனைத்தையும் செய்தால் ஊர் முன்னேற்றம் அடையும்.

2. உங்களுக்குத் தலைமைப் பண்பு கிடைக்கிறது எனில்என்னவெல்லாம் செய்ய நினைப்பீர்கள்பட்டியலிடுக.

விடை

எனக்குத் தலைமைப் பண்பு கிடைத்தால் நான் செய்ய நினைப்பவை :

● நாட்டின் முன்னேற்றத்திற்குக் கல்வி மிக மிக அவசியம் என்பதால் கல்வி நிலையங்களை உருவாக்கிப் புதிய கல்வி முறை மூலம் பல சான்றோர்களை உருவாக்குவேன்.

● வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு உதவி புரிவேன்.

● கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்கு படித்த இளைஞர்களை நியமித்து இலவசமாகக் கற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்வேன்.

● போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவேன்.

● சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை உண்டாக்கித் தருவேன்.

● ஏரி, குளங்களை அமைத்து நீர் நிலைகளைப் பலப்படுத்துவேன்.

● பொதுப்பணிகளைச் செய்வதற்கு அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் வீட்டிற்கு ஒருவரை வரவழைத்து செவ்வனே செய்வேன்.

● உழவுத்தொழிலில் புதிய உத்திகளை ஏற்படுத்துவேன்.

கற்பவை கற்றபின்

 இக்கதையை உம் சொந்த நடையில் கூறுக.

விடை

செந்தூர் என்ற சிற்றூரில் வேம்பன் என்ற ஊர்த்தலைவர் வாழ்ந்து வந்தார். அவ்வூரை முன்னேற்றுவதற்காக திறமையான நிருவாகி ஒருவரை நியமிக்க விருப்பதாக மக்களுக்கு முரசு அறைந்து அறிவித்தார். அவ்வூரை சேர்ந்த பாலன் பூவண்ணன் இருவரும் நிருவாகியாக இருப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இருவருக்கும் மூன்று போட்டிகள் வைக்கப்பட்டன.

முதல் போட்டி மக்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். பாலன் அவ்வூர் மக்களுக்கு விருந்தளித்தார். பூவண்ணன் திறமைசாலிகள் சிலரைத் தேர்ந்தெடுத்துத் தொழில் சார்ந்த பயிற்சிகளை அளித்தார்.

இரண்டாவது போட்டி, அவ்வூர் மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும். பாலன் தம்மிடமிருந்த செல்வத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தார். மக்கள் மகிழ்ந்தனர். பூவண்ணன், தாம் தேர்ந்தெடுத்த திறமைசாலிகளுக்குக் கல்வியுடன் மற்ற கலைகளையும் சேர்த்துக் கற்றுக் கொடுத்தார். மக்கள் ஏளனமாகப் பார்த்த னர்.

மூன்றாவது போட்டி, மக்களிடம் பரிவு காட்ட வேண்டும். மறுநாள் பாலன் சென்ற வழியில் மரத்தடியில் படுத்திருந்த மூதாட்டி ஒருவர் பாலனைப் பார்த்து, “தம்பி என்னைத் தூக்கிவிடு, என்னால் எழுந்திருக்க முடியவில்லை” என்றார். பாலன் தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிச் சென்றுவிட்டார். அதே வழியில் வந்தார் பூவண்ணன். அவர் அந்த வயதான மூதாட்டியின் அருகில் சென்று “என்ன வேண்டும்?” என்று கேட்டார். அம்மூ தாட்டி தன்னைத் தூக்கிவிடும்படிக் கூறினார். பூவண்ணன் மூதாட்டியைத் தூக்கி உட்கார வைத்து மூதாட்டியின் களைப்பைப் போக்க உணவும் வாங்கிக் கொடுத்தார்.

மறுநாள் ஊர் மக்கள் முன்னிலையில் பாலன், பூவண்ணன் இருவரில் சிறந்த நிருவாகி யார் என்பது அறிவிக்கப்படவிருந்தது. பெரும்பாலானோர் பாலன் தகுதியானவர் என்று முணுமுணுத்தனர். இருவரும், மூன்று போட்டிகளுக்காக செய்த செயல்களைக் கூறினர்.

ஊர்த் தலைவர் மக்களிடம், “பாலன் செய்த செயல்கள் தற்கால உதவி என்றும், பூவண்ணன் செய்தவை எதிர்காலத் தேவையை நிறைவு செய்யும்” என்று கூறினார். அதனால் பூவண்ணனே தகுதியானவர் என்று கூறினார். மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். ஊர்த் தலைவர் கூட்டத்தை விட்டு “சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து பூவண்ண னிடம் உதவி கேட்ட மூதாட்டி அங்கே தட்டுத் தடுமாறி நடந்து வந்தார். கீழே விழப்போன மூதாட்டியைப் பூவண்ணன் தாங்கிப் பிடித்தார். அம்மூதாட்டி தன் வேடத்தைக் கலைந்தார். ஊர்த் தலைவர்தான் மூதாட்டி என்பதை உணர்ந்தனர். ஊர்த் தலைவர் நடந்தவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி பூவண்ணனை நிருவாகியாக்கினார்.

 உமக்கு மிகவும் பிடித்த போட்டி எதுஅதில் பங்கேற்றிருப்பின் அந்த அனுபவத்தைப் பற்றிக் கூறுக.

விடை

எமக்கு மிகவும் பிடித்த போட்டி சதுரங்கப் போட்டி.

எங்கள் வீட்டில் நான் என் அண்ணன், அப்பா இருவருடனும் விளையாடுவேன். விளையாடத் தொடங்கிய காலத்தில் ஓரிருமுறை தோற்றுவிட்டேன். தோல்வியே வெற்றிக்கு முதற்படி’ அல்லவா?

என்னுடைய தோல்வி என்னை மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டியது. நான் அதற்குப் பிறகு என் அப்பா, அண்ணன் இருவரிடமும் தோற்கவே இல்லை. இதனால் எனக்குச் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டது. என் பள்ளியில் உள்ள உடற்பயிற்சி ஆசிரியரிடம் என் விருப்பத்தைக் கூறி பள்ளியின் மூலம் பல போட்டிகளில் கலந்து கொள்வேன்.

நான் போட்டிக்குச் சென்றாலே பரிசுடன்தான் வருவேன். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

நான் இப்போட்டியில் நன்கு பயிற்சி பெற்றுள்ளேன். ஒவ்வொரு போட்டியின் போதும் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். இப்போது மாநில அளவில் முதலிடத்தில் உள்ளேன். என்னால் என் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை கிடைத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *