Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Transport

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 3 : போக்குவரத்து அலகு 3 போக்குவரத்து கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ பல்வேறு காலங்களில் வளர்ச்சி அடைந்த போக்குவரத்தின் வகைகளை அறிந்து கொள்ளுதல் ❖ சாலைப் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளுதல் நாம் கலந்துரையாடுவோமா! நீங்கள் எந்தெந்த வகையான வாகனங்களைப் பார்த்திருக்கிறீர்கள்? பள்ளிக்கு எவ்வாறு வருகிறீர்கள்? போக்குவரத்து என்பது மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கும் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் உதவுவது ஆகும். இன்று நாம் சாலைகளில் பயணம் செய்வதற்கு துள்ளுந்து, மூவுருளி, மகிழுந்து, பேருந்து, சிற்றூர்தி, தொடர்வண்டி போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். பேருந்து மற்றும் சிற்றூர்தியை விட தொடர்வண்டியில் அதிக மக்கள் பயணம் செய்யலாம். ஆகாயத்தில் பயணம் செய்ய வானூர்தி மற்றும் உலங்கு வானூர்தியும் ( ஹெலிகாப்டர் ) நீரில் பயணம் செய்ய கப்பல், படகு போன்றவற்றையும் பயன்படுத்துகிறோம். இந்த வாகனங்களைப் பயன்படுத்தி நீண்ட தூரத்திலுள்ள இடத்தைக் குறுகிய காலத்தில் அடையவாம். இவை எரிபொருள் (பெட்ரோல், மசல்) மூலம் இயங்குகின்றன. தீயணைப்பு மற்றும் மீட்பு வண்டியும் அவசர ஊர்தியும் முக்கியத்துவம் வாய்ந்த வாகனங்களாகும். தீயணைப்பு வண்டி தீயை அணைக்கவும் அவசர ஊர்தி ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் பயன்படுகின்றன. இவ்வாகனங்களுக்கு எப்பொழுதும் முதலில் வழி விட வேண்டும் தீயணைப்பு மற்றும் மீட்பு வண்டி அவசர ஊர்தி எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்குக் (✔) குறியிடுவோமா! போக்குவரத்தின் கதை முந்தைய காலங்களில் மனிதர்கள் நடந்தும் பல்லக்குகளைப் பயன்படுத்தியும் யானை மற்றும் குதிரை போன்ற விலங்குகளைப் பயன்படுத்தியும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணம் செய்தனர். மக்கள் அடர்ந்தகாடுகளில் பயணம் செய்வதற்கும் பொருள்களைச் சுமந்து செல்வதற்கும் யானைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பிறகு மனிதனால் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. சாலையில் எந்த ஒரு வாகனமும் சக்கரம் இல்லாமல் நகராது. மனிதன் சக்கரத்தைப் பயன்படுத்தி வண்டியை உருவாக்கினான். பின்னர் மக்கன் குதிரை; காளை காளை மற்றும் கழுதை ஆகிய விலங்குகளை வண்டிகளில் பூட்டி சுமை ஏற்றிச் செல்லவும் பயணம் மேற்கொள்ளவும் பயன்படுத்தினர். சக்கரத்தைப் பயன்படுத்தி தேர், மிதிவண்டி போன்றவை உருவாக்கப்பட்டன. பிறகு இன்று நாம் பார்க்கக்கூடிய வாகனங்களான மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி, மூவுருளி போன்றவை உருவாக்கப்பட்டன. இரண்டு சக்கர வாகனங்களுக்கு நீல வண்ணமும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிவப்பு வண்ணமும் இடலாமா? மிதிவண்டி அனைவருக்குமே இந்த வண்டியை ஓட்டப் பிடிக்கும். உங்களால் அதை ஊகிக்க முடிகிறதா? ஆம்! அதுதான் மிதிவண்டி. மிதிவண்டி முந்தைய காலத்திலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு தற்பொழுது உள்ள நிலையை அடைந்துள்ளது. மிதிவண்டியின் பெயர்களை அதன் பாகங்களுடன் இணைப்போமா! சாலைப் பாதுகாப்பு நாம் சாலையைக் கடக்கும் போது சாலை விதிகளைப் பின்பற்றுவது பாதுகாப்பானது. 1. போக்குவரத்து சமிக்ஞைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ❖ சிவப்பு – நில் ❖ மஞ்சள் – தயாராக இரு ❖ பச்சை – செல் 2. எப்பொழுதும் நடைபாதையில் நடக்க வேண்டும். 3. சாலையைக் கடக்க பாதசாரிகள் கடக்கும் கோட்டினைப் (Zebra crossing) பயன்படுத்த வேண்டும். பச்சை விளக்கில் மனித உருவம் தெரியும் போது மனிதர்கள் சாலையைக் கடக்க வேண்டும். 4. ஒருபோதும் வாகனங்களுக்குப் பின் ஒளிந்து கொள்ளக் கூடாது. 5. ஒருபோதும் சாலையில் ஓடவோ, விளையாடவோ கூடாது. சிந்தித்து விடையளி. பாதசாரிகள் கடக்கும் கோட்டினை ஆங்கிலத்தில் “Zebra crassin;” என அழைக்கிறோம். ஏன்? சரியான விடையை (✔) குறியிட்டுக் காட்டுவோமா! 1. சாலையில் மஞ்சள் / பச்சை✔விளக்கு எரியும் பொழுது வாகனங்கள் செல்ல வேண்டும். 2. நடந்து செல்வதற்கு நடைபாதை✔/ சாலையைப் பயன்படுத்த வேண்டும். 2. சாலையைப் பாதசாரிகள் கடக்கும் கோட்டில் மட்டுமே கடக்க வேண்டும்✔/ எந்த இடத்தில் வேண்டுமானாலும் கடக்கலாம். மதிப்பீடு 1. சரியானதை (✔) குறியிட்டுக் காட்டுக. […]

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Transport Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Neighbourhood 

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நமது சுற்றுப்புறம் அலகு 2 நமது சுற்றுப்புறம் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ அண்டை அயலார் பற்றி விவரித்தல் ❖ வெவ்வேறு வாழிடங்களைப் பற்றி அறிதல் ❖  பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் பூஞ்சோலை ஓர் அழகிய நகரம். அங்கு சீனு தன்பெற்றோருடன் வசித்து வருகிறான். அவன் தன் வீட்டு முகப்பு மாடத்திலிருந்து சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறான். அவன் எவற்றை எல்லாம் பார்க்கிறான்? படத்தை உற்றுநோக்கி கலந்துரையாடவும். இதே போல் உன் சுற்றுப்புறத்தைப் பற்றி பேசுவோமா! நமது வீட்டைச்சுற்றியுள்ள இடங்களை நமது சுற்றுப்புறம் என்கிறோம். நம் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களை அண்டை அயலார் என்கிறோம். அவர்கள் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள். நமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் நமது சுற்றுப்புறத்திலேயே கிடைக்கும். நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மரங்களும் விலங்குகளும் நம் சுற்றுப்புறத்தின் ஓர் அங்கமே. வட்டத்திற்குள் உள்ள பொருள்களை அவற்றுடன் தொடர்புடைய இடங்களுடன் இணைக்க. வாழிடங்கள் சீனு : நமது உறவினர்களான ராம், ரம்யா, ரேகா, ராகவ், ரகு எங்கே வசிக்கிறார்கள்? அம்மா : அவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் இடங்களை நான் உனக்குப் படத்தில் காண்பிக்கிறேன். “ராம் கிராமத்தில் வசிக்கிறான். இது அவனுடைய வீடு. அவன் வீட்டில் பசுக்களும், கோழிகளும் உள்னை. அவளது வீட்டின் பக்கத்தில் மாட்டுக் கொட்டகை உள்ளது”. “ரம்யாவும் கிராமத்தில் வசிக்கிறாள். அவன் வீட்டிற்குப் பின்புறம் காய்கறித் தோட்டம் உள்ளது”. ரேகா நகரத்தில் உள்ள ஒரு பெரிய உயர்ந்த கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் வசிக்கிறாள். அவளுக்கு தன் செல்லப் பிராணியான நாயை வளர்ப்பது மிகவும் பிடிக்கும்”. சீனு : ”அம்மா! எனக்கும் வளர்க்க ஒரு நாய் “வேண்டும்”. அம்மா : சரி, சீனு. அம்மா : “ராகவ் ஒரு மலைப்பாங்கான பகுதியில் வசிக்கிறான். அவனுக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் வீட்டின் முன்புறம் அழகான பூந்தோட்டம் உள்ளது”. “ரகு ஓர் ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்கிறான். அவனது வீட்டைச் சுற்றி பல தென்னை மரங்கள் உள்ளன”, சீனு : “எனக்கு சலசலவென்ற ஆற்றின் ஒலி மிகவும் பிடிக்கும்”. நமது வீடுகளை எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும். வீடு வெயில், குளிர், மழை, புயல், காட்டு விலங்குகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நமது முகவரியை எழுதக் கற்றுக் கொள்ளலாமா! பெயர் : ——————— கதவு எண் : ——————— தெவின் பெயர் : ——————— கிராமம்/நகரம்/மாநகரம் பெயர் : ——————— கிராமமும் நகரமும் கிராமம் மற்றும் நகரத்தின் படங்களை உற்றுநோக்கி நாம் பார்த்தவற்றைப் பற்றி பேசுவோமா! என்ன வேறுபாடுகளை நீ காண்கிறாய்? கிராமம் நகரம் நகரத்திலும் கிராமத்திலும் பொதுவாகக் காணப்படும் மூன்று இடங்களில் நீல நிற ( ☆ ) நட்சத்திரக் குறியை வரைவோமா!. கிராமத்தில் நீ பள்ளியிலிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியில் என்னென்ன இடங்களைப் பார்க்கிறாய்? கிராமத்தில் இல்லாமல் நகரத்தில் மட்டும் காணப்படும் மூன்று இடங்களில் சிவப்பு நிற (☆) நட்சத்திரக் குறியை வரைவோமா! நகரத்தில் நீ பார்க்கும் இடங்களின் பெயர்களைக் கூறுவோமா! திசைகள்

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Neighbourhood  Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Materials Around Us

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 1 : நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அலகு 1 நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ தங்களைச் சுற்றியுள்ள பல்வேறு பொருள்களை அடையாளம் காணல் ❖ பொருள்களுக்கு இடையேயான வேறுபாட்டை அறிதல் நாம் பேசுவோமா! படத்தை நன்றாக உற்றுநோக்கி, அதில் என்னென்ன பொருள்கள் உள்ளன என்றும் அவை எவற்றால் ஆனவை என்றும் பேசுவோமா! நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் மரக்கட்டை, கனிமஸ், கல், மளால், உலோகங்கன் போன்றவற்றால் ஆனவை. மரக்கட்டை மீரா பென்சிலால் வண்ணம் தீட்டுகிறாள். தாத்தா நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார். புத்தகங்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. விமல் பொம்மை வைத்து விளையாடுகிறான். மரத்தின் தண்டு, கிளைகளிலிருந்து மரக்கட்டை பெறப்படுகிறது. நாற்காலி, பொம்மை, பென்சில், ஏணி, கிரிக்கெட் மட்டை, தீக்குச்சி, கதவு, புத்தக அலமாரி போன்ற பல பொருள்கள் மரக்கட்டையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. உங்களுடைய வகுப்பறையில் உள்ள பொருள்களில் மரத்தாலான பொருள்களை அடையாளம் காண்போமா! மரத்தாலான பொருள்களை (✔) குறியிட்டுக் காட்டுவோமா! களிமண் பாத்திமா மண்ணில் ஒரு மரக்கன்றை நடுகிறாள். மண் என்பது களிமண், மணல், உடைந்த பாறைத்துகள்கள், உலர்ந்த இலைகள் போன்றவற்றின் கலவையாகும். களிமண் ஒட்டும் தன்மையுடையது, இதற்கு நீரை உறிஞ்சும் தன்மை உண்டு. செங்கல் களிமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது. களிமண்ணிலிருந்து மேலும் பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பானை மண் அடுப்பு விளக்கு கூரை ஓடுகள் ராஜன் மரப்பொம்மைகளையும் கமலா களிமண் பொம்மைகளையும் சேகரிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை பொம்மைகள் சேகரித்தனர் என்பதை எண்ணி எழுதுவோமா! கல் சந்தியாவும் காவ்யாவும் கூழாங்கற்கள் வைத்து விளையாடுகிறார்கள். கல்லின் ஒரு வகை கூழாங்கல். கல் என்பது பூமியில் காணப்படும் ஒரு கடினமான பொருள் ஆகும். நாம் கற்களைப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். கற்களில் பல வகைகள் உள்ளன. கற்சிற்பங்களுக்கு பெயர் பெற்ற இடம் மகாபலிபுரம். கற்கள் வீடுகள்கட்டுவதற்குப் பயன்படுகின்றன. சலவைக்கல் – கல்லின் ஒரு வகையாகும். இது தளங்கள் அமைப்பதற்கும் கட்டடங்கள் கட்டுவதற்கும் பயன்படுகிறது. ஜல்லி எனப்படும் சிறிய கற்கள் சாலைகள் அமைக்கப் பயன்படுகின்றன. கற்கள் சிலைகள் செய்யப் பயன்படுகின்றன. சிவப்புக் கல் என்பதும் ஒரு வகைக் கல்லே, இதனைச் கொண்டும் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விலை உயர்ந்த இரத்தினக் கற்களைக் கொண்டு ஆபரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட பொருள்கள் எவற்றால் ஆனவை என கோடிட்டு இணைப்போமா! மணல் ரவியும் பிரபுவும் மாலில் விளையாடுகிறார்கள். உனக்கு மணலில் விளையாடப் பிடிக்குமா? பாறைகள் சிதைந்து பல ஆண்டுகளுக்கு பிறகே மணலாக மாறுகிறது. சிமெண்ட்டுடன் மணல் கலக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கண்ணாடி தயாரிப்பிலும் மணல் பயன்படுகிறது. மணலைக் கொண்டு அழகிய மணற்சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனை மணற்சிற்பக்கலை என்கிறோம். பழங்காலத்தில் மணல் கடிகாரங்கள் நேரத்தைக் கணக்கிடப் பயன்பட்டன. மணல் கடிகாரம் செய்வோமா! ❖ ஒரே மாதிரியான இரண்டு கண்ணாடி சீசாக்களை எடுத்துக் கொள்ளவும். ❖ ஆசிரியரின் துணையுடன் இரு சீசா மூடிகளிலும் சிறிய துணையிடவும். ❖ ஒரு சீசாவில் பாதியளவு மணலை எடுத்துக் கொள்ளவும்.

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Materials Around Us Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Society

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நமது சமுதாயம் அலகு 3 நமது சமுதாயம் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ பல்வேறு திருவிழாக்களை அடையாளம் கண்டு அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல் ❖ சமூகத்தில் காணப்படும் மக்களின் பல்வேறு பணிகளை அறிதல் திருவிழாக்கள் நாம் பல திருவிழாக்களைக் கொண்டாடுகிறோம். அவற்றுள் சில திருவிழாக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தவும் சில உள்ளூர் விழாக்களாகவும் கொண்டாடப்படுகின்றன. அனைத்து திருவிழாக்களும் நம் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. பாரம்பரிய திருவிழாக்கள் பொங்கல் நாம் ஏன் பொங்கலைக் கொண்டாடுகிறோம் தெரியுமா? பொங்கல் என்பது அறுவடைத் திருநாளாகும். இவ்விழா நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம். நாம் பொங்கல் திருநாளை நான்கு நாள்கள் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு நாளும் தனித்துவம் வாய்ந்தது. முதல் நாள் – போகி இந்நாளில் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைச் சுத்தம் செய்வர். வீட்டிற்குப் புது வண்ணம் பூசுவர். வீட்டின் முன் அழகிய வண்ணக் கோலமிடுவர். இந்நாளில் பழைய சேதமடைந்த பொருள்களை எரிப்பர். டயர் மற்றும் நெகிழிப் பொருள்களை எரிக்கும்போது காற்று மாசடைகிறது. எனவே இவற்றை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். இரண்டாம் நாள் – தைப்பொங்கல் தைப்பொங்கல் நாளில் மக்கள் சூரியனுக்கு நன்றிசெலுத்தும் விதமாக அறுவடை செய்த புது அரிசியைக் கொண்டு புதுப்பாளையில் பொங்கலிட்டு வழிபடுவர். மூன்றாம் நாள் – மாட்டுப் பொங்கல் இந்நாளில் உழவில் உறுதுனையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவற்றை அலங்கரித்து வணங்கிக் கொண்டாடுவர். நான்காம்நாள் – காணும் பொங்கல் (உழவர் திருநாள்) இந்நாள் உழவர்களுக்காக கொண்டாடப்படும் நாள் ஆகும். இந்நாளில் மக்கள் உறவினர்களையும் நண்பர்களையும் கண்டு மகிழ்வர், கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வர். அனைவரும் சேர்ந்து உணவு உண்டு மகிழ்வர். இனிப்புப் பொங்கல் செய்யத் தேவையான பொருள்களை (✔) குறியிட்டுக் காட்டுவோமா! உள்ளூர் திருவிழாக்கள் வான்மதி தன் தாத்தாவுடன் ஊரில் நடக்கும் திருவிழாவைக் காணச் சென்றாள். இப்படங்களை உற்றுநோக்கி அங்கு என்ன நடந்தது என்று அறிவோமா! வான்மதி குடை இராட்டினத்தின் குதிரை மீது அமர்ந்து சுற்றி மகிழ்ந்தாள். அவள் அங்கு கரகாட்டம், புலியாட்டத்தைக் கண்டு இரசித்தாள். பின்பு வண்ண வண்ண வளையல்கள், பலூன்கள் மற்றும் பொம்மைகள் வாங்கினாள். தேரில் உள்ள அமைப்புகளைப் பூர்த்தி செய்து, அலங்கரித்து வண்ணமிடுவோமா! திருநாள்கள் தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ் போன்ற திருநான்கள் மகிழ்ச்சியையும் பகிர்தலையும் உணர்த்தும் நாள்கள் ஆகும். இத்திருநாள்களின் போது வீடுகளை அலங்கரித்தும் புத்தாடை அணிந்தும் இறைவழிபாடு செய்தும் மகிழ்வர். அந்நாளில் சிறப்பு உணவு வகைகள் செய்து அவற்றை அனைவருக்கும் அளித்து மகிழ்வர். சிறப்பு உணவு வகைகள் பட்டாசைச் சரியாக வெடிக்கும் முறைகளுக்கு (✔) குறியிட்டுக் காட்டுவோமா! வான்மதிக்கும் டேவிட்டுக்கும் பிரியாணியை வழங்க அப்துலுக்கு வழிகாட்டுங்களேன். நம் நண்பர்கள் வான்மதி தன் தோழிக்கு கடிதம் எழுதினாள். அதனை அஞ்சல் பெட்டியில் சேர்ப்பதற்கு யாரையெல்லாம் சந்தித்தான் எனப் பார்ப்போமா! நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா? இல்லை. நான் ஆசிரியர். எனக்கு குழந்தைகளைப் பிடிக்கும் நான் மாணவர்களுக்கு பாடங்களையும் நன்னெறியையும் கற்பிக்கிறேன். நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா? இல்லை. நான் காவலர். நான் பொது இடங்களையும் பொதுமக்களையும் பாதுகாக்கிறேன். நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா? இல்லை. நான் மருத்துவர். நான் நோயாளிகள் நலமடைய உதவுகிறேன். நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா? இல்லை. நான் செவிலியர். நான் நோயாளிகளிடம் அன்புடனும் அக்கறையுடனும் இருக்கிறேன். நான் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டு கட்டி. ஊசியும் போடுவேன்.

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Society Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Water

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர் அலகு 2 நீர் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ நீரின் பல்வேறு பயன்பாட்டிளைப் பட்டியலிடுதல் ❖ நீரினைப் பயன்படுத்தி சிறுசிறு சோதனைகள் செய்தல் ❖ நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்தல் நம் வாழ்வில் நீர் நாம் கலந்துரையாடுவோமா! நம் அன்றாட வாழ்வில் நீரினைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பல்வேறு செயல்களைப் படத்தை உற்றுநோக்கி பேசுவோமா! குளித்தல் பருகுதல் சமைத்தல் துவைத்தல் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு செயல்களைச் செய்ய நீரைப் பயன்படுத்துகிறோம். உடலை நலமாக வைத்துக் கொள்வதற்கு நீரைப் பருகுகிறோம். குளிப்பதற்கு, சமைப்பதற்கு துணி துவைப்பதற்கு, தாவரங்களை வளர்ப்பதற்கு நீரைப் பயன்படுத்துகிறோம். நீர் இல்லாமல் நாம் உயிர்வாழ இயலாது. ஆகையால் நீரை கவனமுடன் பயன்படுத்தவும். சொற்களஞ்சியம்: குளித்தல், பருகுதல், துவைத்தல், வளர்த்தல், சமைத்தல், ஊற்றுதல், பல் துலக்குதல். எலுமிச்சை சாறு தயாரித்தல் எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக வெட்டி குவளையில் அதன் சாறைப் பிழிய வேண்டும். அதனுடன் சர்க்கரையும் சிறிது உப்பும் சேர்த்து நீரினை ஊற்றி நன்கு கலக்க வேண்டும். செயல்களை அதற்குரிய பொருள்களுடன் இணைப்போமா! ஆசிரியருக்கான குறிப்பு: எலுமிச்சை சாறு தயாரித்தலை வகுப்பறையில் செய்து காட்டவும். நீர்,எங்கெங்கும் நீர் பாடல் நேரம் மழை மழையே! மழையே! வா வா வா! மாதம் மும்முறை வா வா வா! பச்சைப் பயிர்கள் யாவுமே பாரினில் தழைக்க வா வா வா! தரணியில் வாழும் உயிர்களுக்கும் தாகம் தணித்திட வா வா வா! ஏரி, குளம், கிணறு, ஆறு போன்றவற்றிற்கு மழையே முக்கிய ஆதார வளமாகும். அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ நீர் அவசியம். மீன், தவளை, வாத்து மற்றும் பல தாவரங்களும் நீரில் வாழ்கின்றன. தூய மற்றும் பாதுகாப்பான குடிநீரைத் தயாரிக்கும் படிநிலைகள் ● நீரைப் பாத்திரத்தில் சேகரித்தல் ● வடிகட்டுதல் ● கொதிக்க வைத்தல் ● தட்டு கொண்டு மூடுதல் ● குளிர்வித்தல் எண்ணிப் பார்த்து எழுதுவோமா! நீர் வேடிக்கைகள் ஒரு கிண்ணத்தில் பணிக்கட்டியை எடுத்துக்கொண்டு பத்து நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பனிக்கட்டியில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை உற்று நோக்கவும். பனிக்கட்டி மெதுவாக உருகி நீராக மாறுகிறது. நீங்கள் இதனைத்தொட்டுப் பார்த்து உணரலாம். உணவு நிறமூட்டிகளைப் பயன்படுத்தி பல வண்ணங்களில் நீரைத் தயாரிப்போமா! கொடுக்கப்பட்ட பானையில் நீரை நிரப்ப எத்தனை குவளை நீர்தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிந்து எழுதுவோமா? ஆசிரியருக்கான குறிப்பு: நீரைப் பயன்படுத்தி செய்யும் வேடிக்கை விளையாட்டுகளை வகுப்பறையில் செய்து காட்டவும். நீர் சேமிப்பு சின்னப் பாப்பா சிரித்திடு! விழிப்பாய் நீயும் இருந்திடு!

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Water Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Delicious Food

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 1 : சுவையான உணவு அலகு 1 சுவையான உணவு கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ உணவின் முக்கியத்துவத்தை உணர்தல் ❖ உணவின் பல்வேறு வகைகளைப் பட்டியலிடுதல் ❖ அரிசி கடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளுதல் உணவின் முக்கியத்துவம் பாடல் நேரம் சாப்பிடுவேன் நல்லா சாப்பிடுவேன்! காயும் கனியும் சாப்பிடுவேன்! சத்துகள் பலவும் பெற்றிடவே கீரையை நானும் சாப்பிடுவேன்! பாங்காய் நானும் வளர்ந்திடவே பாலும் முட்டையும் சாப்பிடுவேன்! உடல் உறுதி பெற்றிடவே தானியங்களைச் சாப்பிடுவேன்! வீட்டில் சமைக்கும் உணவையே விரும்பி நானும் சாப்பிடுவேன்! நாம் கலந்துரையாடுவோமா! தினமும் என்னென்ன உணவுப்பொருள்களை நீங்கள் உண்கிறீர்கள்? நாம் உயிர் வாழ உணவு தேவை. வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும் தேவையான ஆற்றலை உணவு தருகிறது. நாம் தினந்தோறும் பல்வேறு விதமான உணவை உண்கிறோம். அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொய்யா கேரட் வேர்க்கடலை இட்டலி, வடை, தோசை, சாப்பாடு ஆற்றல் தரும் சில உணவுகள் கேழ்வரகு களி சோறு சப்பாத்தி பால் உடலுக்கு சத்தானது. இது பற்களையும் எலும்புகளையும் வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. பருப்பு வகைகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவை நம் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நமது உடலை நலமாக வைத்துக்கொள்ளவும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கும் கொட்டைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை அவற்றிற்குரிய காய்கறிகளுடன் பொருத்துவோமா! நம் உணவு பால், இறைச்சி, மீன், முட்டை, பழங்கள், காய்கறிகள், பூக்கள், தானியங்கள், கொட்டைகள், எண்ணெய், நெய் போன்றவை நாம் உணவாக எடுத்துக் கொள்கிறோம் தானியங்கள் பருப்பு வகைகள் முழுமையான மற்றும் உடைக்கப்பட்ட பருப்பு வகைகள் நம் உடல் நலமாக இருக்க நீர் அவசியம். ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு குவளை நீரை நாம் கட்டாயமாகப் பருக வேண்டும். பின்வருவனவற்றை அடையாளம் கண்டு பழமாக இருப்பின் 1 எனவும், காய்கறியாக இருப்பின் 2 எனவும், பருப்பு வகையாக இருப்பின் 3 எனவும், தானியமாக இருப்பின் 4 எனவும், கொட்டையாக இருப்பின் 5 எனவும் குறிப்பிடவும். பல்வேறு உணவு வகைகள் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் தனித்துவமான சுவையினைக் கொண்டது. அவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களால் ஆனவை. ஒரே வகையான பகுதிப் பொருளைப் பயன்படுத்தி நாம் பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கலாம். கோதுமையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களுக்கு மட்டும் (✔) குறியிடுவோமா! ஒரு நாளைக்கான உணவு காலையில் நாம் உண்ணும் உணவு காலை உணவு, மதிய வேளையில் உண்ணும் உணவு மதிய உணவு மற்றும் இரவு வேளையில் உண்ணும் உணவு இரவு உணவு ஆகும். நாம் எந்த ஒருவேளை உணவையும் தவிர்க்கக் கூடாது. நம்மில் சிலர் சைவ உணவையும் சிலர் அசைவ உணவையும் விரும்பி உண்பர். பள்ளிக்குச் செல்லும் முன் நான் காலை உணவை உண்கிறேன்… நீங்கள்? உணவைத் தவிர பிற தின்பண்டங்களை நொறுக்குத் தீனிகள் என்கிறோம். சத்தான உணவு வகைகளை நாம் நொறுக்குத் தீனிகளாகத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Delicious Food Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Animals Around Us

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் அலகு 4 நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் கற்றல் நோக்கங்கள்: ❖ விலங்குகளை’ உற்றுநோக்கி பறவைகள், பூச்சிகள், பாலூட்டிகள் என அடையாளம் காணல், பெயர் கூறல். வேறுபடுத்தி அறிதல், விவரித்தல் மற்றும் ஒப்பிடுதல் ❖ விலங்குகளைப் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தங்களுக்குப் பிடித்த விலங்கினைப் பற்றிப் பேசுதல் நாம் பேசுவோமா! படத்தில் உள்ள விலங்குகளை உற்றுநோக்கவும், இந்த விலங்குகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவை என்ன செய்கின்றன? நாம் பேசுவோமா! காங்கேயம் காளையை உற்றுநோக்கி அதன் பாகங்களை அறிவோமா! ‘திமில் கொம்பு தலை கழுத்து வால் கால் சொற்களஞ்சியம் சிறிய, பெரிய, தலை, கண்கள், மூக்கு காதுகள்.வாய், பற்கள், நாக்கு,கொம்புகள். கழுத்து, நிறம் (வண்ணத்திட்டுகள் ), முடி, உரோமம், வால், கால்கள், திமில். ❖ இப்போது மேலே உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பசுவைப் பற்றிஉங்களால் விவரித்துக் கூற இயலுமா? மாடு பெரியது மற்றும் நீண்ட வால் கொண்டது. கொம்புகள் கூர்மையானவை. அதற்கு நான்கு கால்கள் உள்ளன. மாடு வெள்ளை நிறத்தில் இருக்கும். ❖ உடல் பாகங்களை அவற்றின் பெயருடன் பொருத்துக. ❖ நீங்கள் பார்த்த விலங்குகளுக்கு (✔) குறியிடுவோமா! விலங்குகள் பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. சில விலங்குகள் பெரியவை, சில பெரியவை அல்ல. சில விலங்குகள் சிறியவை. ❖  உங்களுக்குப் பிடித்த விலங்கின் படத்தை ஒட்டவும். உங்களுக்குத் தெரியுமா குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை. பாலூட்டிகள் சில விலங்குகள் உடலின் மேல் முடி அல்லது உரோமத்தைக் கொண்டுள்ளன. இவை குட்டிகளை ஈன்று பாலூட்டும். இவை பாலூட்டிகள் என அழைக்கப்படும்.

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Animals Around Us Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Nature Bounty

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 3 : இயற்கையின் கொடை அலகு 3 இயற்கையின் கொடை கற்றல் நோக்கங்கள்: ❖ இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவற்றை உற்றுநோக்கல். அடையாளம் காணுதல். ❖ பெயரறிதல், விவரித்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல் செல்வி ஒருநாள் தன் வீட்டருகே உள்ள தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே ஒரு தக்காளிச் செடியில் அழகான மஞ்சள் நிறப் பூவைக் கண்டாள். உடனே அதனைப் பறிக்க முயன்றாள். அப்போது அங்கு வந்த தேனீ ஒன்று “அது என்னுடைய உணவு விட்டுவிடு” என்றது. வியப்படைந்த செல்வி செடியில் சிவப்பு நிறத் தக்காளியைக் கண்டதும் அதைப் பறிக்க முயன்றாள். அப்போது பச்சைக்கிளி ஒன்று பறந்துவந்து “அது எனக்கான உணவு விட்டுவிடு” என்றது. செல்வி பச்சைக்கிளிக்காகத் தக்காளியை விட்டுவிட்டு. பின் தக்காளிச் செடியின் இலையை வருடினாள். அப்போது அங்கு வந்த வெட்டுக்கிளி “அது எனக்கான உணவு, தயவு செய்து இலையைப் பறிக்காதே” என்றது. தாவரங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன என்று அப்போதுதான் செல்விக்குப் புரிந்தது. உடனே “நீதான் எங்கள் அனைவருக்கும் உணவு தருகின்றாய் மிக்க நன்றி” என மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே தக்காளிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள் செல்வி. இலைகள் கதை பிடித்ததா குழந்தைகளே! நாம் தற்போது தாவர உலகத்திற்குள் பயணிப்போமா? நாம் பேசுவோமா! தாவரங்கள் பல்வேறு வகையான இலைகளைக் கொண்டுள்ளன. இலைகள் பல்வேறு அளவு, வடிவம், வண்ணம் மற்றும் தன்மைகளில் உள்ளன. உங்களைச் சுற்றிக் காணப்படும் இலைகளில் நீங்கள் பார்த்த இலைகளைப் பற்றிப் பேசலாமா! இதோ உங்களுக்கு உதவ சில வார்த்தைகள். சொற்களஞ்சியம் வெளிர் பச்சை, கரும் பச்சை, மென்மையான, மிருதுவான, சொரசொரப்பான, விளிம்புடைய, கூர்மையான, வட்டமான, உலர்ந்த, பெரிய, சிறிய, நுனி. ❖ நீ அறிந்த வார்த்தைகளைக் கொண்டு இலைகளை வேறுபடுத்துவோமா! ❖ இலையின் மேல் தேய்த்தல் – இலைகளின் மேல் வண்ண மெழுகுப் பென்சிலால் தேய்த்து அதன் அமைப்பை உருவாக்குவோமா! ❖ பச்சை இலை ஒன்றை வகுப்பிற்கு கொண்டு வரவும். அந்த இலையில் ஏற்படும் மாற்றத்தை ஒரு வாரம் வரை தினமும் உற்றுநோக்குவோமா! பூக்கள் படங்களைப் பார். இவை நம்மைச் சுற்றிலும் காணப்படும் சில பூக்கள். அவற்றின் பெயர்களைச் சொல்வோமா! ❖ உங்களுக்குப் பிடித்த பூ எது? அப்பூவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்வீர்களா! இதோ உங்களுக்கு உதவ சில வார்த்தைகள். சொற்களஞ்சியம் மணம், இதழ், மென்மையான, மிருதுவான, சொரசொரப்பான, முட்கள், வண்ணம், சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள். ❖ சிலபூக்களுக்கு மணம் உண்டு. செண்பகப்பூ மல்லிகைப்பூ ரோஜாப்பூ பூ வாடாமல் இருக்க வேண்டுமெனில் படத்தில் உள்ளது போல் செய்யலாம். பூக்கள் பல்வேறு வகையான இதழ்களைக் கொண்டுள்ளன. இதழ்களின் வடிவங்களை உற்றுநோக்கவும். ❖ இதழை உரியபூவுடன் இணைக்கலாமா! காய்கறிகள் பாடல் நேரம் சின்னச் சின்ன சுண்டைக்காய் குண்டு குண்டுக் கத்தரிக்காய் நெட்டை நெட்டை முருங்கைக்காய் நீண்டு தொங்கும் புடலங்காய் கொடியிலே பூசணிக்காய் கொத்துக் கொத்தாய் அவரைக்காய் வழ வழக்கும் வெண்டைக்காய் வளமான வாழைக்காய் பட்டை போட்ட பீர்க்கங்காய் பாங்கான வெள்ளரிக்காய் இத்தனையும் வேண்டுமா? இன்றே தோட்டம் அமைத்திடுவோம்! இயற்கை வளம் காத்திடுவோம்!

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Nature Bounty Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium MY Wonderful Body

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 2 : எனது அற்புதமான உடல் அலகு 2 எனது அற்புதமான உடல் கற்றல் நோக்கங்கள்: ❖ உடல் உறுப்புகளின் பெயர்களைக் கூறல் ❖ பல்வேறு புலன்களை அடையாளம் காணல் ❖ தன் சுத்தம் பேணுதல் நாம் பேசுவோமா! ❖ விளையாடுதல். நடத்தல், ஓடுதல், கேட்டல். பார்த்தல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொட்டு உணர்தல் போன்ற செயல்களை நாம் மேற்கொள்கிறோம். ❖ சில உடல் உறுப்புகளை நம்மால் பார்க்க இயலும். சில உறுப்புகளைப் பார்க்க இயலாது. ஏனெனில், அவை உடலின் உள்ளே உள்ளன. ❖ சில உடல் உறுப்புகள் எண்ணிக்கையில் இரண்டாக உள்ளன. அவற்றுள் சிலவற்றை உங்களால் கூற முடியுமா? இப்பாடலின் மூலம் நம் உடல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை நாம் அறிவோமா! பாடல் நேரம் தலையை ஆட்டு தலையை ஆட்டு சொய்ங் சொய்ங் சொய்ங். கண்ணைச் சிமிட்டுகண்ணைச் சிமிட்டு கிளிங் கிளிங் கிளிங்… கையைத் தட்டு கையைத் தட்டு கிளப் கிளப் கிளப்… காலைத் தட்டு காலைத் தட்டு தப் தப் தப்… நம் உடல் உறுப்புகளை அறிவோமா! உடல் உறுப்புகளின் பெயர்களை உரிய பாகத்தோடு இணைப்போமா? படங்களை உற்றுநோக்கு. வருண் தன் உடலால் பல்வேறு இயக்கங்களை மேற்கொள்கிறான். அதே செயல்களை நாமும் செய்து பார்ப்போமா ! நடத்தல் பிடித்தல் தோப்புக்கரணம் குதித்தல் மூக்கைத் தொடுதல் கண் புருவத்தை உயர்த்துதல் வளைதல் எறிதல் கயிறு தாண்டுதல் உதைத்தல் தூக்குதல் கண் இமைத்தல் இதே போன்று வேறு என்ன செயல்களை உன்னால் செய்ய முடியும்? ❖ நம் உடலில் உள்ள உறுப்புகளுள் சில எண்ணிக்கையில் இரண்டாகவும் சில ஒன்றாகவும் காணப்படுகின்றன. ❖ உங்கள் கை மற்றும் விரல்களில் கோடுகள் உள்ள இடங்களை உங்களால் மடக்க முடியும். முயற்சி செய்து பார்ப்போமா? ❖ நாம் பல்வேறு விதமான உணர்வுகளான மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம் போன்றவற்றை அனுபவிக்கிறோம். அந்த உணர்வுகளை நாம் முக பாவனைகள் மூலம் வெளிப்படுத்துகிறோம். இந்த முகபாவனைகளை செய்து பார்க்க நாம் முயற்சிப்போமா! படத்தில் இரண்டாக உள்ள உறுப்புகளை இரண்டு என்ற எண்ணுடனும் ஒரே ஒரு உறுப்பாக உள்ளவற்றை ஒன்று என்ற எண்ணுடனும் இணைப்போமா! முகபாவனைகளை வரைவோமா? உங்களுக்குத் தெரியுமா ● ஒட்டகச்சிவிங்கிக்கு நீளமான கழுத்து உண்டு. ● யானைக்கு நீளமான தும்பிக்கை உண்டு.

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium MY Wonderful Body Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Living and Non-living Things

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 1 : உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் அலகு 1 உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் கற்றல் நோக்கங்கள்: ❖ உயிருள்ள, உயிரற்ற பொருள்களை அடையாளம் கண்டு. அவற்றின் வேறுபாடுகளை அறிதல் ❖ உயிருள்ள, உயிரற்ற பொருள்களுக்கு இடையேயான தொடர்பினை புரிந்து கொள்ளுதல் என் பெயர் அரசி. என்னிடம் ஒரு நாய்க்குட்டி உள்ளது. நான் அதை சுட்டி என அழைப்பேன். நான் அதனுடன் விளையாடுவேன். அது என் மீது குதிக்கும். நான் அதற்கு உணவு தருவேன், அது உணவை வேகமாக சாப்பிடும். எனக்கு அதனை மிகவும் பிடிக்கும். என்னிடம் ஒரு பொம்மை உள்ளது. நான் அதை அம்மு என அழைப்பேன். நான் அதற்கு உணவளிக்க முயற்சித்தேன். அது சாப்பிடவில்லை. நான் அதன் சாவியைத் திருகினால் மட்டுமே. அதனால் நகர முடியும். எனக்கு என் பொம்மையை மிகவும் பிடிக்கும். அரசி. தன் நாய்க்குட்டி மட்டும் உணவு சாப்பிட்டது ஆனால், தன் பொம்மையால் ஏன் சாப்பிட முடியவில்லை என வியந்தாள்! அது ஏன் என உனக்குத் தெரியுமா? அதை நாம் அறிவோமா! உயிருள்ள பொருள்கள் உயிருள்ள பொருள்கள் உணவு உண்ணும், வளரும், நகரும் மற்றும் இளம் உயிரிகளைப் பெற்றிருக்கும். இவற்றால் சுவாசிக்கவும், உணரவும் முடியும். நான் சாப்பிடுகிறேன்  நான் வளர்கிறேன் நான் விளையாடுகிறேன். நான் ஓர் உயிருள்ள மனிதன் ❖ உயிருள்ளவை உணவு உண்ணும். ❖ உயிருள்ளவை வளரும். ❖ ஒரு விதையை விதைத்து அதன் வளர்ச்சியைக் கவனிப்போமா! ❖ படங்களை வரிசைப்படுத்துவோமா! ❖ உயிர் வாழ உணவு தேவைப்படுபவைகளுக்கு (✔) குறியிட்டுக் காட்டலாமா! உயிருள்ளவைகள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்.  உயிருள்ளவைகளுக்கு இளம் உயிரிகள் உண்டு. சிந்தனைப் பகுதி படகு நகருமே! அது உயிருள்ள பொருளா? விடை : இல்லை  உயிருள்ளவைகளுக்கு உணர்ச்சிகள் உண்டு. உயிருள்ளவைகள் சுவாசிக்கும். இப்பூனை பசியாக உள்ளது. பால் இருக்கும் இடத்தை அடைய பூனைக்கு உதவுங்களேன். இளம் உயிரியை அதன் தாயுடன்கோடிட்டுச் சேர்ப்போமா! உயிரற்ற பொருள்கள் நாம் பேசுவோமா! உயிரற்ற பொருள் நகராது வளராது சுவாசிக்காது உணவு உண்ணாது இளம் உயிரிகள் கிடையாது படத்தில் உள்ளவற்றின் பெயர்களின் முதல் எழுத்தைப் பயன்படுத்தி அரசி, காது என்ற வார்த்தைகளைப் பெறவும். படத்தைப் பார். படத்தில் மலை, ஆறு, குளம், ஏரியை உங்களால் பார்க்க முடிகிறதா? மலை என்பது பாறைகள் மற்றும் மண்ணால் ஆனது. ஆறு.குளம் மற்றும் ஏரி போன்றவை நீரால் நிரம்பி உள்ளன. மண் மற்றும் நீர் போன்றவை தாவரங்கள் வளர உதவுகின்றன. தாவரங்களிலிருந்து நாம் உணவைப் பெறுகிறோம். நாம் காற்றைச் சுவாசிக்கிறோம். காற்று, நீர் மற்றும் மண் போன்றவை உயிரற்றவை. இவையின்றி நம்மால் உயிர் வாழ முடியுமா? சொற்களஞ்சியம்

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Living and Non-living Things Read More »