Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Science in Everyday Life

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல் அலகு 5 அன்றாட வாழ்வில் அறிவியல் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ பலவிதமான ஆடைகளின் பெயர்களை அறிதல் ❖ ஆடையின் அவசியத்தை அறிதல் ❖ வெவ்வேறு பருவ காலங்களுக்கு ஏற்ற ஆடைகளை அடையாளம் காணுதல் சலீம் : பர்வீன்! என்ன பார்க்கிறாய்? பர்வீன் : அங்கிருக்கும் ஆடைகளைத் தான். சலீம் : உனக்குப் பிடித்த ஆடை எது? பர்வீன் : எனக்கு பாவாடை, சட்டை மிகவும் பிடிக்கும். உனக்கு என்ன பிடிக்கும்? சலீம் : எனக்கு மேல் சட்டையும் கால்சட்டையும் ரொம்ப பிடிக்கும். அப்பா : வாருங்கள்! இங்கிருக்கும் பல வகையான ஆடைகளைப் பார்த்த பின் நமக்குப் பிடித்தவற்றை வாங்கலாம். துணி ஆடை, துண்டு, படுக்கை விரிப்பு போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படும். பொருளே துணி. ஆடை நாம் உடுத்தும் தைத்த (எ.கா. மேல் சட்டை, பாவாடை) அல்லது தைக்காத துணியே (எ.கா. வேட்டி, சேலை) ஆடை. துணிகளின் பயன்கள் துணியைப் பயன்படுத்தி பின்வருவனவற்றைத் தயாரிக்கலாம். ● பை ● கைக்குட்டை ● படுக்கை விரிப்பு ● திரைச்சீலை ● கட்டுகட்டும் துணி ● சுத்தம் செய்யும் துணி ● துண்டு தொடர்புள்ள இணைகளைப் பொருத்துவோமா! ஆடையின் கதை ஆதிமனிதன் இலைகள், தோலால் ஆன ஆடைகளைப் பயன்படுத்தினான். இன்று நாம் அணியும் ஆடைகள் பலவகைகளில் உள்ளன. அவை பருத்தி, கம்பளி, பட்டு போன்றவற்றால் ஆனவை. பருத்திச் செடியிலிருந்து பஞ்சு கிடைக்கிறது. அதிலிருந்து நாம் பருத்தி ஆடைகளைத் தயாரிக்கிறோம். செம்மறி ஆட்டின் உரோமத்திலிருந்து கம்பளி ஆடைகளைத் தயாரிக்கிறோம். பட்டுப்புழுவிலிருந்து பெறப்படும் இழையிலிருந்து பட்டாடைகளைத் தயாரிக்கிறோம். பொருத்துவோமா! பருவ காலங்களுக்கு ஏற்ற ஆடைகள் நாம் ஏன் ஆடைகளை அணிகிறோம்? நாம் நமது உடலை வெப்பம், குளிர், மழை, தூசு, பூச்சிகள், கிருமிகள், சிறு காயங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க ஆடைகளை அணிகிறோம். எனவேதான் நாம் பல்வேறு பருவ காலங்களுக்கு ஏற்ப வெவ்வேறு ஆடைகளை அணிகிறோம். கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது நம் உடலை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பருத்தி ஆடைகளை அணிகிறோம். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். அப்போது நம் உடலை கதகதப்பாக வைக்க கம்பளி ஆடைகளை அணிகிறோம். வருடத்தில் சில நாள்கள் மழை பொழியும். இக்காலத்தில் நீர்புகா மேலாடை மற்றும் குடையைப் பயன்படுத்துகிறோம். குளிர்கால உடைக்கு ”கு‘ என்றும் கோடைக்கால உடைக்கு ‘கோ” என்றும் எழுதுவோமா! குளிரான மலைப்பகுதிக்கு செல்லுமபோது தேவைப்படும் சிறப்பு ஆடைகளுக் குறியிட்டுக் காட்டுவோமா! சீருடைகள் அப்பா : சலீம், நீ இந்த ஆடையில் மிக அழகாக இருக்கிறாய்.

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Science in Everyday Life Read More »

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Day and Night

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும் அலகு 4 பகலும் இரவும் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖  பகலுக்கும் இரவுக்கும் இடையேயான வேறுபாட்டை அறிதல் ❖ சூரியன்,நிலா, நட்சத்திரம், மின்னல், இடி போன்றவற்றை விவரித்தல் பகல் அம்மா : கண்மணி, கண்ணன் எழுந்திருங்கள் வானத்தில் சூரிய உதயம் எவ்வளவு  அழகாக இருக்கிறது பாருங்களேன்! கண்ணன் மற்றும் கண்மணி : “ ஆம் அம்மா”. அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துக் கூறுகிறீர்களா? சூரியன் ஒரு நட்சத்திரம். சூரியனிடமிருந்து ஒளியும் வெப்பமும் நமக்குக் கிடைக்கிறது. பூமியில் சூரிய ஒளி இல்லாமல் எந்த உயிரினங்களும் வாழ இயலாது. உங்களுக்குத் தெரியுமா சூரியகாந்தியின் மொட்டுகள் சூரியனை நோக்கி தரும் சூரிய உதயத்திற்கு சற்றுமுன் உள்ள அதிகாலை நேரமே விடியல். இந்த நேரத்தில் விழிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சொற்களஞ்சியம் சூரியன், பூமி, ஒளி, வெப்பம், விடியல், காலை, நண்பகல், பிற்பகல், மாலை, அந்திப்பொழுது வானம், பகல் விடியலைத் தொடர்ந்து வருவது காலை. காலை வேளையில் பல் துலக்கி, குளித்து, சாப்பிட்டபின் பள்ளிக்கு கிளம்ப வேண்டும். மதிய உணவு உண்ணும் வேளை நண்பகல். அதைத் தொடர்ந்து வரும் நேரம் பிற்பகல். சூரியன் மறையும் நேரமே மாலை நேரம். அந்நேரத்தில் குழந்தைகள் விளையாடுவர். மாலை நேரச் செயல்பாடுகள் பறவைகள் கூட்டிற்கு திரும்புதல் பசுக்கள் கொட்டகைக்குத் திரும்புதல் குழந்தைகள் வெளியில் விளையாடுதல் சூரியன் மறைந்து இரவு துவங்குவதற்கு முன் உள்ள நேரமே அந்திப்பொழுது. விடியலுக்கும் சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட நேரத்தையும் கூட அந்திப்பொழுது என்கிறோம். இரவு நேரம் என்பது தூங்கும் நேரம். காலைச் செயல்பாடுகளுக்கு “கா” எனவும் மாலைச் செயல்பாடுகளுக்கு “மா” எனவும் எழுதுவோமா! இரவு அம்மா: இது அழகிய குளிர்ந்த இரவு நேரம். இந்த நேரத்தில் வெளியில் அமர்ந்து நிலவொளியில் இரவு உணவை உண்போமா! சொற்களஞ்சியம் நிலா (சந்திரன்), விண்மீன் (நட்சத்திரம்), குளிர்ச்சி, இரவு கண்ணன்: சூரியனைப் போல் நிலா வெளிச்சமாக இல்லையே ஏன் அம்மா? கண்மணி: ஏன் என்று எனக்குத் தெரியும். சூரியனைப் போல் நிலவிற்கு சுய ஒளி (வெளிச்சம்) இல்லை. அது சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெறுகிறது. நிலாவிற்கு சந்திரன் என்ற பெயரும் உண்டு. கண்ணன்: அங்கே பார். வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் (விண்மீன்) தெரிகின்றன. விண்மீனிற்கு சுய ஒளி உள்ளதால் இரவில் மின்னுகிறது. இது அளவில் பெரியதாக இருந்தாலும் வெகு தொலைவில் இருப்பதால் சிறியதாகத் தெரிகிறது. உங்களுக்குத் தெரயுமா ஆந்தை மற்றும் வௌவால் இரவில் செயல்படும் விலங்குகள். அம்மா : வாருங்கள் நேரமாகிறது அனைவரும் சென்று தூங்கலாம். நேரத்தோடு தூங்கி எழுவது நல்ல பழக்கம். பொருந்தாதைக் கண்டுபிடித்து.( ✔) குறியிடுவோமா!; மழை,  இடி, மின்னல் சொற்களஞ்சியம் மழை, மழை மேகங்கள், மின்னல், இடி, வானவில் கண்ணனுக்கும் கண்மணிக்கும் வானத்தைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். கண்மணி: இன்று வானம் முழுவதும் மழை மேகங்களாகத் தெரிகிறதே! கண்ணன்: மழை வர ஆரம்பிக்கிறது. இருவரும் திடீரென வானத்தில் தோன்றிய வெளிச்சத்தை பார்த்துக்  கொண்டிருக்கும் போதே அதைத் தொடர்து வந்த பெருத்த சத்தத்தையும் கேட்டு, அது என்ன அம்மா?  என்றனர்.

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Day and Night Read More »