Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Transport

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Transport

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 3 : போக்குவரத்து

அலகு 3

போக்குவரத்து

கற்றல் நோக்கங்கள்

கற்போர்

❖ பல்வேறு காலங்களில் வளர்ச்சி அடைந்த போக்குவரத்தின் வகைகளை அறிந்து கொள்ளுதல்

❖ சாலைப் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளுதல்

நாம் கலந்துரையாடுவோமா!

நீங்கள் எந்தெந்த வகையான வாகனங்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

பள்ளிக்கு எவ்வாறு வருகிறீர்கள்?

போக்குவரத்து என்பது மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கும் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் உதவுவது ஆகும்.

இன்று நாம் சாலைகளில் பயணம் செய்வதற்கு துள்ளுந்து, மூவுருளி, மகிழுந்து, பேருந்து, சிற்றூர்தி, தொடர்வண்டி போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். பேருந்து மற்றும் சிற்றூர்தியை விட தொடர்வண்டியில் அதிக மக்கள் பயணம் செய்யலாம். ஆகாயத்தில் பயணம் செய்ய வானூர்தி மற்றும் உலங்கு வானூர்தியும் ( ஹெலிகாப்டர் ) நீரில் பயணம் செய்ய கப்பல், படகு போன்றவற்றையும் பயன்படுத்துகிறோம்.

இந்த வாகனங்களைப் பயன்படுத்தி நீண்ட தூரத்திலுள்ள இடத்தைக் குறுகிய காலத்தில் அடையவாம். இவை எரிபொருள் (பெட்ரோல், மசல்) மூலம் இயங்குகின்றன.

தீயணைப்பு மற்றும் மீட்பு வண்டியும் அவசர ஊர்தியும் முக்கியத்துவம் வாய்ந்த வாகனங்களாகும். தீயணைப்பு வண்டி தீயை அணைக்கவும் அவசர ஊர்தி ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் பயன்படுகின்றன.

இவ்வாகனங்களுக்கு எப்பொழுதும் முதலில் வழி விட வேண்டும்

தீயணைப்பு மற்றும் மீட்பு வண்டி

அவசர ஊர்தி

எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்குக் (குறியிடுவோமா!

போக்குவரத்தின் கதை

முந்தைய காலங்களில் மனிதர்கள் நடந்தும் பல்லக்குகளைப் பயன்படுத்தியும் யானை மற்றும் குதிரை போன்ற விலங்குகளைப் பயன்படுத்தியும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணம் செய்தனர்.

மக்கள் அடர்ந்தகாடுகளில் பயணம் செய்வதற்கும் பொருள்களைச் சுமந்து செல்வதற்கும் யானைகள் பழக்கப்படுத்தப்பட்டன.

பிறகு மனிதனால் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. சாலையில் எந்த ஒரு வாகனமும் சக்கரம் இல்லாமல் நகராது. மனிதன் சக்கரத்தைப் பயன்படுத்தி வண்டியை உருவாக்கினான். பின்னர் மக்கன் குதிரை; காளை காளை மற்றும் கழுதை ஆகிய விலங்குகளை வண்டிகளில் பூட்டி சுமை ஏற்றிச் செல்லவும் பயணம் மேற்கொள்ளவும் பயன்படுத்தினர்.

சக்கரத்தைப் பயன்படுத்தி தேர், மிதிவண்டி போன்றவை உருவாக்கப்பட்டன. பிறகு இன்று நாம் பார்க்கக்கூடிய வாகனங்களான மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி, மூவுருளி போன்றவை உருவாக்கப்பட்டன.

இரண்டு சக்கர வாகனங்களுக்கு நீல வண்ணமும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிவப்பு வண்ணமும் இடலாமா?

மிதிவண்டி

அனைவருக்குமே இந்த வண்டியை ஓட்டப் பிடிக்கும். உங்களால் அதை ஊகிக்க முடிகிறதா? ஆம்! அதுதான் மிதிவண்டி. மிதிவண்டி முந்தைய காலத்திலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு தற்பொழுது உள்ள நிலையை அடைந்துள்ளது.

மிதிவண்டியின் பெயர்களை அதன் பாகங்களுடன் இணைப்போமா!

சாலைப் பாதுகாப்பு

நாம் சாலையைக் கடக்கும் போது சாலை விதிகளைப் பின்பற்றுவது பாதுகாப்பானது.

1. போக்குவரத்து சமிக்ஞைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

❖ சிவப்பு – நில்

❖ மஞ்சள் – தயாராக இரு

❖ பச்சை – செல்

2எப்பொழுதும் நடைபாதையில் நடக்க வேண்டும்.

3. சாலையைக் கடக்க பாதசாரிகள் கடக்கும் கோட்டினைப் (Zebra crossing) பயன்படுத்த வேண்டும்பச்சை விளக்கில் மனித உருவம் தெரியும் போது மனிதர்கள் சாலையைக் கடக்க வேண்டும்.

4. ஒருபோதும் வாகனங்களுக்குப் பின் ஒளிந்து கொள்ளக் கூடாது.

5. ஒருபோதும் சாலையில் ஓடவோவிளையாடவோ கூடாது.

சிந்தித்து விடையளி.

பாதசாரிகள் கடக்கும் கோட்டினை ஆங்கிலத்தில் “Zebra crassin;” என அழைக்கிறோம். ஏன்?

சரியான விடையை (குறியிட்டுக் காட்டுவோமா!

1. சாலையில் மஞ்சள் / பச்சைவிளக்கு எரியும் பொழுது வாகனங்கள் செல்ல வேண்டும்.

2. நடந்து செல்வதற்கு நடைபாதைசாலையைப் பயன்படுத்த வேண்டும்.

2. சாலையைப் பாதசாரிகள் கடக்கும் கோட்டில் மட்டுமே கடக்க வேண்டும்எந்த இடத்தில் வேண்டுமானாலும் கடக்கலாம்.

மதிப்பீடு

1. சரியானதை (குறியிட்டுக் காட்டுக.

2. பயணம் செய்யும் மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனங்களுக்கு ஒன்று (குறைவான ) முதல் நான்கு (அதிகமான ) வரை எண்கள் இடுக.

3. வாகனங்களின் பெயர்களை உரிய படத்துடன் பொருத்துக.

4. முந்தைய கால வாகனங்களுக்கு மட்டும் ()குறியிடுக.

5. சரியான செயல்களுக்கு (குறியிட்டுக் காட்டுக.

தன் மதிப்பீடு

❖ என்னால் பழைய, புதிய போக்குவரத்து வாகனங்களை அடையாளம் காண முடியும்.

❖ என்னால் சாலை விதிகளைப் பின்பற்றி நடக்க முடியும்.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *