சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நமது சமுதாயம்
அலகு 3
நமது சமுதாயம்
கற்றல் நோக்கங்கள்
கற்போர்
❖ பல்வேறு திருவிழாக்களை அடையாளம் கண்டு அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல்
❖ சமூகத்தில் காணப்படும் மக்களின் பல்வேறு பணிகளை அறிதல்
திருவிழாக்கள்
நாம் பல திருவிழாக்களைக் கொண்டாடுகிறோம். அவற்றுள் சில திருவிழாக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தவும் சில உள்ளூர் விழாக்களாகவும் கொண்டாடப்படுகின்றன. அனைத்து திருவிழாக்களும் நம் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன.
பாரம்பரிய திருவிழாக்கள்
பொங்கல்
நாம் ஏன் பொங்கலைக் கொண்டாடுகிறோம் தெரியுமா? பொங்கல் என்பது அறுவடைத் திருநாளாகும். இவ்விழா நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
நாம் பொங்கல் திருநாளை நான்கு நாள்கள் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு நாளும் தனித்துவம் வாய்ந்தது.
முதல் நாள் – போகி
இந்நாளில் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைச் சுத்தம் செய்வர்.
வீட்டிற்குப் புது வண்ணம் பூசுவர். வீட்டின் முன் அழகிய வண்ணக் கோலமிடுவர்.
இந்நாளில் பழைய சேதமடைந்த பொருள்களை எரிப்பர்.
டயர் மற்றும் நெகிழிப் பொருள்களை எரிக்கும்போது காற்று மாசடைகிறது. எனவே இவற்றை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இரண்டாம் நாள் – தைப்பொங்கல்
தைப்பொங்கல் நாளில் மக்கள் சூரியனுக்கு நன்றிசெலுத்தும் விதமாக அறுவடை செய்த புது அரிசியைக் கொண்டு புதுப்பாளையில் பொங்கலிட்டு வழிபடுவர்.
மூன்றாம் நாள் – மாட்டுப் பொங்கல்
இந்நாளில் உழவில் உறுதுனையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவற்றை அலங்கரித்து வணங்கிக் கொண்டாடுவர்.
நான்காம்நாள் – காணும் பொங்கல் (உழவர் திருநாள்)
இந்நாள் உழவர்களுக்காக கொண்டாடப்படும் நாள் ஆகும். இந்நாளில் மக்கள் உறவினர்களையும் நண்பர்களையும் கண்டு மகிழ்வர், கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வர். அனைவரும் சேர்ந்து உணவு உண்டு மகிழ்வர்.
இனிப்புப் பொங்கல் செய்யத் தேவையான பொருள்களை (✔) குறியிட்டுக் காட்டுவோமா!
உள்ளூர் திருவிழாக்கள்
வான்மதி தன் தாத்தாவுடன் ஊரில் நடக்கும் திருவிழாவைக் காணச் சென்றாள். இப்படங்களை உற்றுநோக்கி அங்கு என்ன நடந்தது என்று அறிவோமா!
வான்மதி குடை இராட்டினத்தின் குதிரை மீது அமர்ந்து சுற்றி மகிழ்ந்தாள்.
அவள் அங்கு கரகாட்டம், புலியாட்டத்தைக் கண்டு இரசித்தாள்.
பின்பு வண்ண வண்ண வளையல்கள், பலூன்கள் மற்றும் பொம்மைகள் வாங்கினாள்.
தேரில் உள்ள அமைப்புகளைப் பூர்த்தி செய்து, அலங்கரித்து வண்ணமிடுவோமா!
திருநாள்கள்
தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ் போன்ற திருநான்கள் மகிழ்ச்சியையும் பகிர்தலையும் உணர்த்தும் நாள்கள் ஆகும். இத்திருநாள்களின் போது வீடுகளை அலங்கரித்தும் புத்தாடை அணிந்தும் இறைவழிபாடு செய்தும் மகிழ்வர். அந்நாளில் சிறப்பு உணவு வகைகள் செய்து அவற்றை அனைவருக்கும் அளித்து மகிழ்வர்.
சிறப்பு உணவு வகைகள்
பட்டாசைச் சரியாக வெடிக்கும் முறைகளுக்கு (✔) குறியிட்டுக் காட்டுவோமா!
வான்மதிக்கும் டேவிட்டுக்கும் பிரியாணியை வழங்க அப்துலுக்கு வழிகாட்டுங்களேன்.
நம் நண்பர்கள்
வான்மதி தன் தோழிக்கு கடிதம் எழுதினாள். அதனை அஞ்சல் பெட்டியில் சேர்ப்பதற்கு யாரையெல்லாம் சந்தித்தான் எனப் பார்ப்போமா!
நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா?
இல்லை. நான் ஆசிரியர். எனக்கு குழந்தைகளைப் பிடிக்கும் நான் மாணவர்களுக்கு பாடங்களையும் நன்னெறியையும் கற்பிக்கிறேன்.
நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா?
இல்லை. நான் காவலர். நான் பொது இடங்களையும் பொதுமக்களையும் பாதுகாக்கிறேன்.
நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா?
இல்லை. நான் மருத்துவர். நான் நோயாளிகள் நலமடைய உதவுகிறேன்.
நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா?
இல்லை. நான் செவிலியர். நான் நோயாளிகளிடம் அன்புடனும் அக்கறையுடனும் இருக்கிறேன். நான் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டு கட்டி. ஊசியும் போடுவேன்.
நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா?
இல்லை. நான் கடைக்காரர். நான் பொருள்களை மக்களின் தேவைக்கேற்ப எடையிட்டு விற்பனை செய்கிறேன்.
நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரா?
இல்லை நான் காய்கறி விற்பவர். நான் காய்கறிகளை வாங்கி என் வண்டியில் வைத்து வீதிகளில் விற்கிறேன்.
நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரார்
இல்லை. நான் பால்காரர். நான் பசுக்கள் மற்றும் எருமைகளைப் பராமரித்து, பால் கறந்து மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று கொடுக்கிறேன்.
நீங்கள் தான் உரியவரிடம் கடிதத்தைக் கொண்டு சேர்ப்பவரார்
ஆம்! ஏனெனில் நான் தான் அஞ்சல்காரர்.
நான் அஞ்சல் பெட்டியிலிருந்து கடிதங்களைச் சேகரித்து முகவரிக்கு ஏற்ப பிரித்து உரியவரின் வீடுகளுக்குச் சென்று அனிப்பேன்.
நம் நண்பர்களை அவர்களின் பணி இடங்களுடன் பொருத்துவோமா!
படங்களை 1 முதல் 5 வரை எண்களிட்டு சரியாக வரிசைப்படுத்துவோமா!
மதிப்பீடு
1. வான்மதி திருவிழாவில் பார்த்தவற்றை (✔) குறியிட்டுக் காட்டுக.
2. பொங்கல் திருநாளில் வீட்டை அலங்கரிக்கப் பயன்படும் பொருள்களை வட்டமிடுக.
3. ரமலான் திருநாளுடன் தொடர்புடைய பொருள்களை வட்டமிடுக.
4. கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பொருள்களை வட்டமிடுக.
5. பொங்கல் திருநாளுடன் நான்கு நாள்களை 1 முதல் 4 வரை எண்களிட்டு வரிசைப்படுத்துக.
6. நோயாளிக்கு சிகிச்சை அளிப்பவர் யார் என்பதை () குறியிட்டுக் காட்டுக.
7. நீங்கள் பென்சில் வாங்க வேண்டுமென்றால் எங்கு செல்வீர்கள் என்பதை (✔) குறியீட்டுக் காட்டுக.
8. உரிய இணையுடன் பொருத்துக.
9. ஒவ்வொரு வரிசையிலும் மையப் படத்திற்கு தொடர்புடையவரை கோடிட்டு இணைக்க
தன் மதிப்பீடு
❖ பல்வேறு திருவிழாக்களின் முக்கியத்துவத்தினை நான் அறிவேன்
❖ சமுதாயத்தில் உள்ள மக்களின் பல்வேறு வகையான தொழில்களை நான் மதிப்பேன்