சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல்
அலகு 5
அன்றாட வாழ்வில் அறிவியல்
கற்றல் நோக்கங்கள்
கற்போர்
❖ பலவிதமான ஆடைகளின் பெயர்களை அறிதல்
❖ ஆடையின் அவசியத்தை அறிதல்
❖ வெவ்வேறு பருவ காலங்களுக்கு ஏற்ற ஆடைகளை அடையாளம் காணுதல்
சலீம் : பர்வீன்! என்ன பார்க்கிறாய்?
பர்வீன் : அங்கிருக்கும் ஆடைகளைத் தான்.
சலீம் : உனக்குப் பிடித்த ஆடை எது?
பர்வீன் : எனக்கு பாவாடை, சட்டை மிகவும் பிடிக்கும். உனக்கு என்ன பிடிக்கும்?
சலீம் : எனக்கு மேல் சட்டையும் கால்சட்டையும் ரொம்ப பிடிக்கும்.
அப்பா : வாருங்கள்! இங்கிருக்கும் பல வகையான ஆடைகளைப் பார்த்த பின் நமக்குப் பிடித்தவற்றை வாங்கலாம்.
துணி
ஆடை, துண்டு, படுக்கை விரிப்பு போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படும். பொருளே துணி.
ஆடை
நாம் உடுத்தும் தைத்த (எ.கா. மேல் சட்டை, பாவாடை) அல்லது தைக்காத துணியே (எ.கா. வேட்டி, சேலை) ஆடை.
துணிகளின் பயன்கள்
துணியைப் பயன்படுத்தி பின்வருவனவற்றைத் தயாரிக்கலாம்.
● பை
● கைக்குட்டை
● படுக்கை விரிப்பு
● திரைச்சீலை
● கட்டுகட்டும் துணி
● சுத்தம் செய்யும் துணி
● துண்டு
தொடர்புள்ள இணைகளைப் பொருத்துவோமா!
ஆடையின் கதை
ஆதிமனிதன் இலைகள், தோலால் ஆன ஆடைகளைப் பயன்படுத்தினான்.
இன்று நாம் அணியும் ஆடைகள் பலவகைகளில் உள்ளன. அவை பருத்தி, கம்பளி, பட்டு போன்றவற்றால் ஆனவை.
பருத்திச் செடியிலிருந்து பஞ்சு கிடைக்கிறது. அதிலிருந்து நாம் பருத்தி ஆடைகளைத் தயாரிக்கிறோம்.
செம்மறி ஆட்டின் உரோமத்திலிருந்து கம்பளி ஆடைகளைத் தயாரிக்கிறோம்.
பட்டுப்புழுவிலிருந்து பெறப்படும் இழையிலிருந்து பட்டாடைகளைத் தயாரிக்கிறோம்.
பொருத்துவோமா!
பருவ காலங்களுக்கு ஏற்ற ஆடைகள்
நாம் ஏன் ஆடைகளை அணிகிறோம்?
நாம் நமது உடலை வெப்பம், குளிர், மழை, தூசு, பூச்சிகள், கிருமிகள், சிறு காயங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க ஆடைகளை அணிகிறோம். எனவேதான் நாம் பல்வேறு பருவ காலங்களுக்கு ஏற்ப வெவ்வேறு ஆடைகளை அணிகிறோம்.
கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது நம் உடலை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பருத்தி ஆடைகளை அணிகிறோம்.
குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். அப்போது நம் உடலை கதகதப்பாக வைக்க கம்பளி ஆடைகளை அணிகிறோம்.
வருடத்தில் சில நாள்கள் மழை பொழியும். இக்காலத்தில் நீர்புகா மேலாடை மற்றும் குடையைப் பயன்படுத்துகிறோம்.
குளிர்கால உடைக்கு ”கு‘ என்றும் கோடைக்கால உடைக்கு ‘கோ” என்றும் எழுதுவோமா!
குளிரான மலைப்பகுதிக்கு செல்லுமபோது தேவைப்படும் சிறப்பு ஆடைகளுக் குறியிட்டுக் காட்டுவோமா!
சீருடைகள்
அப்பா : சலீம், நீ இந்த ஆடையில் மிக அழகாக இருக்கிறாய்.
சலீம் : நன்றி அப்பா! இது என் புதிய சீருடை. பள்ளிக்குச் செல்லும் அனைத்து மாணவர்களும் சீருடைதான் அணிவார்கள்.
அப்பா : சீருடை அணியும் வேறு யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா?
ஆடைகளைத் துவைக்கும் முறை
நமது அடைகள் கத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். சுத்தமான ஆடைகளை நாம் அனணியும்போது அழகாகத் தெரிவோம்.
சொற்களை உரிய படங்களுடன் இணைப்போமா!
சிறப்பு உடைகள்
நாடகம் மற்றும் நடனத்தில் பங்கேற்கும்போது நாம் சிறப்பு உடைகளை அணிகிறோம்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் வெவ்வேறு விதமான ஆடைகளை அணிகிறார்கள்.
துண்டைப் பயன்படுத்தி என்னென்ன செய்ய முடியும்? செய்வோமா!
எ.கா. துடைத்தல், வேட்டியாக அணிதல், தலைப்பாகை கட்டுதல் இன்ன பிற.
மதிப்பீடு
1. சரியான விடைக்கு (✔) குறியிடுக.
அ) ஆடை நமது உடலை பாதுகாக்கிறது✔ / தீங்கிழைக்கிறது.
ஆ) கோடைக்காலத்தில் நாம் பருத்தி✔ / கம்பளி ஆடையை அணிகிறோம்.
இ) நாம் அழுக்கான / சுத்தமான✔ ஆடையை அணிய வேண்டும்.
ஈ) மேரி பள்ளி செல்லும் போது சீருடை✔ / கவுன் அணிகிறாள்.
2. பொருந்தாததை வட்டமிடுக.
3. படத்தைப் பார். கொடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கண்டுபிடித்து வட்டமிடுக. (சட்டை, கையுறை, தொப்பி, பாவாடை, புடவை).
தன் மதிப்பீடு
❖ என்னால் பலவிதமான ஆடைகளின் பெயர்களைக் கூற முடியும்.
❖ எனக்கு ஆடையின் அவசியம் பற்றித் தெரியும்.
❖ என்னால் பல்வேறு பருவ காலங்களுக்கு ஏற்ற ஆடைகளை அடையாளம் காண முடியும்.