Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 7

தமிழ் : பருவம் 3 இயல் 7 : நீதிநெறி விளக்கம் 7. நீதிநெறி விளக்கம் அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் – நவையஞ்சி ஈத்துணாச் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும் பூத்தலின் பூவாமை நன்று – குமரகுருபரர் பாடல் பொருள் பலர் நிறைந்த அவையிலே, உடல் நடுங்கித் தம் கருத்தை எடுத்துக்கூற முடியாமல் தடுமாறுபவர் பெற்ற கல்வியும், அவையினர்முன் கல்வியறிவில்லாதவர் பேசும் பொருளற்ற ஆரவாரச் சொல்லும், செய்யத் தக்கவற்றைச் செய்யாமையால் ஏற்படும் குற்றத்துக்கு அஞ்சிப் பிறருக்குக் கொடுத்து […]

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 7 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 6

தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும் 6. மலையும் எதிரொலியும் தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று மகன் கீழே விழுந்து அடிபட்டு, ” ஆஆஆஆஆஆஆ!!!” என்று கத்தினான். என்ன ஆச்சரியம்! அவனுடைய சத்தம் அவனுக்கே திருப்பிக் கேட்டது, ஆஆஆஆஆஆஆ!!!” அவன் ஆவலுடன் “யார் நீ” என்று கேட்டான். திரும்ப அவனுக்கு “யார் நீ” என்ற சத்தம் கேட்டது. “உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது” என்று மலையைப் பார்த்து அவன்

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 6 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 5

தமிழ் : பருவம் 3 இயல் 5 : கணினி உலகம் 5. கணினி உலகம் மதி, பூவிழி இருவரும் நல்ல தோழிகள். இருவரும் கோடை விடுமுறைக்கு வெளியூருக்குச் சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும்முன் இருவரும் சந்திக்கின்றனர். அப்போது…. பூவிழி : தோழி! நலமாக இருக்கிறாயா? மதி : ஓ! நலமாக இருக்கிறேனே. விடுமுறையை எப்படிக் கழித்தாய்? எங்கேயாவது வெளியூருக்குச் சென்றாயா? பூவிழி : ஆமாம், மதி. என் மாமாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றதால், நான் அங்குச் சென்றிருந்தேன். மதி : அப்படியா! சென்னையில் சுற்றிப் பார்ப்பதற்கு

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 5 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 4

தமிழ் : பருவம் 3 இயல் 4 : ஆனந்தம் விளையும் பூமியடி 4. ஆனந்தம் விளையும் பூமியடி கும்மியடி பெண்ணே கும்மியடி – சுகம் கோடி விளைந்திடக் கும்மியடி நமது இன்னல் போனதடி – என்று நெஞ்சம் நெகிழ்ந்தே கும்மியடி பாவலர் புகழும் பூமியடி- நம் பாரதம் என்னும் தேசமடி ஆனந்தம் விளையும் பூமியடி- புகழ் ஆரம் கொண்ட தேசமடி அறிவில் சிறந்த தேசமடி-நல் அறிஞர்கள் வாழும் பூமியடி மலையாய் உயர்ந்த தேசமடி- பெரும் வளமும் கொண்ட

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 4 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 3

தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 3. காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி காடே அமைதியாய் இருந்தது. வீசிய காற்றில் மரக்கிளைகள் அசைந்தன. இலைகள் உரசும் சத்தம் தவிர மற்றபடி எங்கும் ஒரேஅமைதி. சேவல் ஒன்று தயங்கியபடி வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தது. மெதுவாய் நடந்து செடிகொடிகளின் மறைவிற்கு வந்தது. ‘யாராவது பார்க்கிறார்களா..?’ என நோட்டமிட்டது. யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த சேவல்,”கொக்… கொக்… கொக்… கொக்கரக்கோ..!” மெலிதாய் குரல் எழுப்பியது. வானத்தைப் பார்த்து, தலையை

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 3 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : மாசில்லாத உலகம் படைப்போம் 2. மாசில்லாத உலகம் படைப்போம் ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். அவரது கைகளில் ஓர் அழைப்பிதழ் இருந்தது. அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் மாணவர்களின் முகத்தில் பளிச்சிட்டது. மெல்ல எழுந்த முகிலன், “அது என்ன அழைப்பிதழ் ஐயா? என்று  கேட்டான். மாணவர்களே! நமது மாவட்டக் கல்வித்துறை சார்பில் அறிவியல் திருவிழா நடைபெறவுள்ளது. உங்களுடைய புதுமையான படைப்புகளை அவ்விழாவில் காட்சிப்படுத்தலாம்.சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் உண்டு. நம்

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 2 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 1

தமிழ் : பருவம் 3 இயல் 1 : உலா வரும் செயற்கைக்கோள் 1. உலா வரும் செயற்கைக்கோள் பட்டுக் குழந்தைகள் வாருங்கள் பறவைக் கப்பல் பாருங்கள் விட்டுச் சிறகை விரித்தபடி விண்ணில் பறக்குது பாருங்கள் உலகைச் சுற்றி வந்திடுமே உயர உயரப் பறந்திடுமே எல்லை இல்லா நற்பயனை எவர்க்கும் தந்து விளங்கிடுமே விண்வெளி ஆய்வு செய்திடவே விண்ணில் சீறிப் பாய்ந்திடுமே மண்ணிலுள்ள வளத்தை யெல்லாம் உண்மை யாகச் சொல்லிடுமே தகவல் தொடர்பில் உதவிடுமே தன்னிச்சை யாக இயங்கிடுமே

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 1 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 9

தமிழ் : பருவம் 2 இயல் 9 : வேலைக்கேற்ற கூலி 9. வேலைக்கேற்ற கூலி அழகாபுரி மன்னர், சிறந்த முறையில் ஆட்சி செய்துவந்தார். அவரது நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். மன்னரின் புகழ், அண்டை நாடுகளுக்கும் பரவியது. அண்டை நாடுகளுள் ஒன்றான இரத்தினபுரி மன்னரும் இதனைக் கேள்விப்பட்டார். தம் நாட்டு அமைச்சர்களிடம் இதைப்பற்றி ஆலோசனை நடத்தினார். “நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை? என்று அமைச்சர்களிடம் வினவினார். அமைச்சர்கள் விடை கூறத் தெரியாமல் விழித்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் எழுந்தார். “மன்னா, உங்கள் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால்….” என்று மெல்லிய குரலில் கூறி, நிறுத்தினார் அந்த அமைச்சர். “என்ன ஆனால். சொல்லுங்கள் அமைச்சரே, நான் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லையா? நான் வேறென்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டான் மன்னன். “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். அழகாபுரி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்கவேண்டும். அவர், தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றார் என்று அறிந்துகொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா” என்று ஒரே மூச்சில் கூறி முடித்தார் அந்த அமைச்சர். மற்ற அமைச்சர்களும், ஆமாம் மன்னா, இவர் சொல்வதும் நல்ல யோசனைதான். அதுமட்டுமின்றி, அழகாபுரி மன்னர், உங்களிடம் மிகுந்த நட்பு பாராட்டுபவர். ஆகையால், நட்பின் நிமித்தமாக நீங்கள் ஒருநாள் அங்குச் செல்லவேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து என்று கூறினர். “அப்படியா? சரி, சரி. நான் நாளைக்கே புறப்படுகிறேன். எனக்கும் அழகாபுரி மன்னரின் ஆட்சிமுறையை நேரடியாகக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமல்லவா?” என்று கூறிய இரத்தினபுரி மன்னர், தம் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டார். நட்பின் நிமித்தமாகத் தம் நாட்டிற்கு வருகை புரிந்த இரத்தினபுரி மன்னரை ஆரத்தழுவி வரவேற்றார் அழகாபுரி மன்னர். இருவரும் தத்தமது நாட்டைப் பற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், “நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நான் அரசவைக்குச் சென்று வருகிறேன்” என்று கூறியவாறே எழுந்தார் அழகாபுரி மன்னர். “இருங்கள், மன்னா. நானும் உங்களுடனே அரசவைக்கு வர விரும்புகிறேன்” என்று துள்ளிக் குதித்து எழுந்தார் இரத்தினபுரி மன்னர். “அப்படியா, மிக்க மகிழ்ச்சி. வாருங்கள், இருவரும் சேர்ந்தே போகலாம்” என்று கூறிய அழகாபுரி மன்னர், அவரையும் உடன் அழைத்துக்கொண்டு அரசவைக்குச் சென்றார். அரசவையில் இரத்தினபுரி மன்னரை அனைவருக்கும் அறிமுகம் செய்து, அவரைத் தமக்குச் சமமான இருக்கையில் அமர்த்தினார் அழகாபுரி மன்னர். அப்போது, ஒருவன், தன் கைகளைக் கட்டிக்கொண்டு அவர்முன்பு பணிவாக வந்துநின்றான். அவனைப் பார்த்ததும் அழகாபுரி மன்னர், “யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த ஆள், “மன்னா, நான் ஒரு விறகுவெட்டி. என் மனத்தில் சிறியதாக ஒரு குறை. உங்களிடம் கூறினால், எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என்று பயமாக இருந்தது. இருந்தாலும் உங்களிடம் கேட்டுவிடலாம் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன்” என்றான் அந்த விறகுவெட்டி. “அடடா, நாம் இதை. … இதைத்தானே எதிர்பார்த்தோம். இந்த அழகாபுரி மன்னர் இந்த விறகுவெட்டியின் குறையை எப்படித் தீர்த்து வைக்கிறார் என்று பார்ப்போம்” என்று ஆவலுடன் உற்றுநோக்கத் தொடங்கினார் இரத்தினபுரி மன்னர். ‘ஐயா, விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்தஅளவு தீர்த்து வைக்கிறேன்” என்ற அழகாபுரி மன்னர். “மன்னா, எங்களைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலி கொடுக்கிறீர்கள். ஆனால், உங்களிடம் பணிபுரியும் அமைச்சர்களுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்களே, இது எந்த வகையில் நியாயமாகும்? இதுதான் உங்களின் சிறந்த ஆட்சிமுறையா? எங்களைச் சமமாக நடத்தாதது மிகப்பெரிய குறையாக உங்களுக்குத் தோன்றவில்லையா? என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டான் அந்த விறகுவெட்டி. அழகாபுரி மன்னர் புன்முறுவலுடன், “என் ஆட்சியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாகத்தான் இருக்கிறேன். ஆனால், உங்கள் மனக்குறையின்படி உங்களையும் அமைச்சர்களையும் நான் சமமாக நடத்தவில்லை என்று எண்ணுகிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். உங்கள் ஐயத்தை இப்போதே தீர்த்து வைக்கிறேன்’ என்று கூறிய மன்னர், அமைச்சர்களுள் ஒருவரை அழைத்தார். பின்னர், அவர்களிருவரையும் பார்த்து, அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பார்த்துவிட்டு வாருங்கள்” என்று கூறினார். இரத்தினபுரி மன்னர் அரசவையில் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். வெளியில் சென்ற விறகுவெட்டி, உடனே திரும்பி வந்து, “ஆம். மன்னா, அரண்மனைக்கு வெளியே ஒரு வண்டி செல்கிறது” என்றான். “அந்த வண்டியில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார், மன்னர். “இருங்கள், மன்னா. இதோ பார்த்துவிட்டு வருகிறேன்” என்று வெளியில் ஓடினான் அந்த விறகுவெட்டி. “மன்னா, அந்த வண்டியில் நெல்மூட்டைகள் இருக்கின்றன” என்றான் அவன். “அப்படியா? அந்த வண்டி எந்த ஊரிலிருந்து வருகிறது?” என்று கேட்ட மன்னரிடம்,”அடடா, அதைக் கேட்காமல் வந்துவிட்டேனே, சற்றுப் பொறுங்கள். இதோ வருகிறேன்” என்று கூறியவாறே ஓடத் தொடங்கினான் அந்த விறகுவெட்டி. வெளியில் சென்றிருந்த அமைச்சர் அப்போது அரசவையினுள் நுழைந்தார். அவரைப் பார்த்த மன்னர்,”ஐயா, விறகுவெட்டி. சற்று நில்லுங்கள். இதோ அமைச்சர் வந்துவிட்டார். உங்களிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடமும் கேட்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்” என்று கூறிய மன்னர், “அமைச்சரே, நீங்கள் என்ன பார்த்தீர்கள்? சொல்லுங்கள்” என்றார். அமைச்சரும் மன்னரைப் பார்த்து, “மன்னா, அரண்மனைக்கு வெளியே முப்பது நெல்மூட்டைகள் ஏற்றிய வண்டியொன்று, வளவனூரிலிருந்து அண்டை நாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டில் தயாரான தரமான நெல்வகைகள் அந்த மூட்டைகளில் உள்ளன. வண்டியில் வண்டியோட்டியும் அவரின் பத்து வயது மகனும் உள்ளனர். மழை வருவதற்குள் நெல்மூட்டைகளைப் பாதுகாப்பாக இறக்கிவிட்டு, இன்று இரவுக்குள் மீண்டும் வளவனூர் திரும்பிவிட வேண்டுமென விரைந்து செல்கின்றனர்” என்று கூறி முடித்தார் அமைச்சர். அமைச்சர் கூறியதைக் கேட்டு, வாய் பிளந்து நின்றான் அந்த விறகுவெட்டி. அழகாபுரி மன்னர், விறகுவெட்டியைப் பார்த்து, “ஐயா, விறகுவெட்டி, உங்கள் மனத்திலிருந்த சந்தேகம் இப்போது நீங்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். அமைச்சருக்கு நான் கொடுக்கும் கூலி சரியானதுதானே? இப்போது சொல்லுங்கள்” என்று கூறினார். மன்னா என் மனக்குறை நீங்கிவிட்டது. உங்களைப்பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். அமைச்சரின் அறிவுக்கூர்மையையும் அவருடைய திறமையையும் கண்டுவியக்கிறேன். அவருடன் ஒப்பிடும்போது, என் அறியாமையையும் நான்உணர்ந்து கொண்டேன். நான், நான்தான். அமைச்சர், அமைச்சர்தாம். அவரவர் திறமைக்கேற்ற, வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்றான் அந்த விறகுவெட்டி. இவ்வளவு நேரமாக அரசவையில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த இரத்தினபுரி மன்னர் தம் மனத்துக்குள், “அடடா நாம்கூட இந்த மன்னருக்குக் கிடைத்த பேரும்புகழும் எண்ணிப் பொறாமை கொண்டோமே, இப்போது உண்மையை உணர்ந்துகொள்ள நமக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது” என்று அழகாபுரி மன்னர் தம் குடிமக்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறையை எண்ணி வியப்பெய்தினார். தாமும் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டார். வாங்க பேசலாம் ● கதையை உம் சொந்த நடையில் கூறுக விடை புகழ்ந்து பேசுவர். இரத்தினபுரி மன்னர் இதனைக் கேள்விப்பட்டார். அவர் தன்னுடைய அமைச்சர்களிடம் “நானும் நன்றாக ஆட்சி புரிகிறேன். நம் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். ஆனால், என்னை யாரும் புகழவில்லையே” என்று கேட்டார். அமைச்சர் ஒருவர் கொஞ்சம் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் அழகாபுரி மன்னருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவர் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொண்டால் அதனை நாமும் பின்பற்றலாம்” என்று கூறினார். அதன்படி இரத்தினபுரி மன்னர் அழகாபுரி நாட்டுச் சென்றார். இருமன்னர்களும் நலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு இருவரும் அரசவைக்குச் சென்றனர். அழகாபுரி மன்னர் தனக்குச் சமமான இருக்கையில் அம்மன்னரை அமரச் செய்தார். அப்போது விறகுவெட்டி ஒருவன் அரசவைக்கு வந்து தன் குறையைத் தீர்க்கும்படிக் கேட்டான். “ஐயா, விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்கிறேன்” என்றார் மன்னர். விறகுவெட்டி “தன்னைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும், மன்னரிடம் பணிபுரிபவருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினான். மன்னர் “இதுபோல் எக்குறையும் வரக்கூடாது என்பதில் நான் கவனமாகத்தான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், உங்கள் ஐயத்தைத் தீர்த்து வைக்கிறேன்” என்றார். மன்னர் அமைச்சர்களுள் ஒருவரையும் விறகு வெட்டியையும் பார்த்து “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பார்த்துவிட்டு வாருங்கள்” என்று கூறினார். விறகுவெட்டி வெளியில் சென்று உடனே திரும்பி வந்து “ஒரு வண்டி செல்கிறது” என்று கூறினான்.

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 9 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 8

தமிழ் : பருவம் 2 இயல் 8 : பசுவுக்குக் கிடைத்த நீதி 8. பசுவுக்குக் கிடைத்த நீதி (நாடகம்) முன்கதைச் சுருக்கம் சோழமன்னர்களுள் ஒருவன் மனுநீதி முறைமை தவறாது ஆட்சி புரிவதையே தன் நோக்கமாகக் கொண்டவன். ஆயினும், அவன் ஆட்சிக்காலத்தில் வாயில்லாப் பசுவுக்கு ஏற்பட்டது ஒரு பேரிழப்பு, அதற்குக் காரணமானவன் வேறுயாருமல்லன், அரசனின் மகனே. இப்போது, அரசன் என்ன செய்வான்? தன் மகன் என்று அவனைக்காப்பாற்றுவானா? அல்லது தன்கன்றை இழந்து வாடும் அந்தப் பசுவுக்கு உரிய நீதியை வழங்குவானா? வாருங்கள் தெரிந்துகொள்ள அரங்கத்துக்குள் நுழைவோம். காட்சி – 1 இடம் : அரசவை மண்டபம் காலம் : நண்பகல் உறுப்பினர்கள் : அரசர் மனுநீதிச் சோழர், அமைச்சர் பெருமக்கள் (அவையில் மன்னரும் அமைச்சர் பெருமக்களும் வீற்றிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த தச்சர் ஒருவர், மன்னரை வணங்கிப் பணிகிறார். இனி….) அரசர் : வாருங்கள், தச்சரே, நேற்று உம்மிடம் ஒரு வேலையைக் கொடுத்தேனே, முடித்துவிட்டீரா? தச்சர் : ஓ, முடித்துவிட்டேன் மன்னா. நீங்கள் நேரிலேயே வந்து பார்வையிடலாம் மன்னா, அரசர் : அப்படியா? மிக்க மகிழ்ச்சி, அமைச்சர் பெருமக்களே, ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது உலகோர் அறிந்த செய்தி. அதுமட்டுமா? நம் சோழர் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு செய்தி, நீதி தவறாத ஆட்சிமுறை அல்லவா? அதனால்தான், என் ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தேன். அதற்காக நான் ஏற்படுத்திய ஓர் அமைப்பே ஆராய்ச்சிமணி. அதைத்தான் இந்தத் தச்சர் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார். அமைச்சர் : ஆராய்ச்சி மணியா? : மணியா? அது எதற்கு மன்னா? அதைக்கொண்டு நீங்கள் எப்படி நீதி வழங்குவீர்கள்? அரசர் : சொல்கிறேன், அமைச்சரே. நம் நம் அரண்மனை வாயிலிலே கோவில் மணிபோல் பெரியதொரு மணியைக் கட்டச் செய்துள்ளேன். குடிமக்கள், தங்களுக்கு ஏற்படும் குறைகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள இந்த ஆராய்ச்சிமணியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அமைச்சர் : அரசே, இதிலென்ன புதுமை? நீங்கள்தாம் எந்தக் குறையும் மக்களுக்கு வைப்பதில்லையே. அரசர் : நீங்கள்சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், தங்கள் குறைகளை வெளிப்படையாகச் சொல்வதற்குச் சிலர் தயங்கலாம் அல்லவா? மேலும், இந்த ஆராய்ச்சிமணியின்நோக்கமே, உடனுக்குடன் நீதி வழங்குவதில்தான் உள்ளது. அதுமட்டுமா? குடிமக்கள் எப்போது ஆராய்ச்சிமணியை ஒலித்தாலும், அவர்கள் முன் நானே ஓடோடிச் சென்று நிற்பேன். அவர்களின் மனக்குறையையும் உடனடியாகத் தீர்த்துவைப்பேன், அமைச்சர்கள் : ஆஹா, நீங்கள்தாம் சிறந்த மன்னர். இந்நிலவுலகம் உள்ளவரை உங்கள் புகழ் ஓங்கும். (அரசவை கலைகிறது. சில மாதங்களாக ஆராய்ச்சிமணியின் ஓசையை அரசர் கேட்கவேயில்லை. இந்நிலையில் ஒருநாள் வழக்கம்போல் அமைச்சர்கள் சூழ மன்னர் அமர்ந்திருக்கிறார். அப்போது, ஆராய்ச்சிமணி ஒலிக்கத் தொடங்குகிறது. இனி….) காட்சி – 2 இடம் : அரசவை காலம் : மாலை உறுப்பினர்கள் : அரசர், அமைச்சர் பெருமக்கள், அரண்மனைக் காவலாளி காவலாளி : மன்னா …… மன்னா ……..  (என்றழைத்தவாறே பதற்றத்துடன் ஓடி வருகிறான், அரண்மனைக் காவலாளி.) அரசர் : என்ன ஆயிற்று? ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடிவருகிறாய்? பதறாமல் சொல். காவலாளி : : மன்னா, இதுவரை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. அதனால்தான் எப்படிச் சொல்வது என்று தயங்குகிறேன். அரசர் : என்ன ஆனாலும் பரவாயில்லை. சொல்ல வந்த செய்தியைத் தயங்காமல் உடனே சொல். காவலாளி : மன்னா, அதுவந்து அதுவந்து. நம் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சிமணி …. அரசர் : என்ன? ஆராய்ச்சிமணியை யாராவது அடிக்கிறார்களா? இவ்வளவு மாதங்களாக யாருக்கும் எந்தக் குறையும் இல்லையென்று நினைத்தேனே. பரவாயில்லை. இதோ நானே வருகிறேன். (அரசர் அரண்மனை வாயிலுக்கு விரைய அமைச்சர்களும் பின்தொடர்ந்து செல்கின்றனர்.) அரசர் : ஐயகோ, என்ன ஆயிற்று? பசுவொன்று ஆராய்ச்சிமணியை அடித்துக் கொண்டிருக்கிறதே? என் ஆட்சியில் வாயில்லாத பசுவுக்குக் குறை நேர்ந்ததா? இதை நான் எங்ஙனம் பொறுத்துக்கொள்வேன்? அதன் கண்களில் வழியும் கண்ணீரைப் பாருங்கள். தாங்கமுடியாத துயரத்தில் அது துன்பப்படுவதுபோல் இருக்கிறதே? ஐந்தறிவு விலங்குகளின் துயர் நீக்க மறுத்தான் என்று இந்த வியனுலகம் என்னைப்பழிக்குமோ? இனிஎன்வாழ்நாளெல்லாம் பழிச்சொல்லைச் சுமந்து திரிவேனோ? எனக்கொன்றும் விளங்கவில்லையே, கதறும் அந்தப் பசுவின் கண்ணீரைத் துடைக்க இதோ புறப்பட்டான் இந்த மன்னன் என்று பிறர் அறியட்டும். யாரங்கே? உடனே சென்று அந்தப் பசுவுக்கு ஏற்பட்ட இன்னலை அறிந்து வாருங்கள். காவலாளிகள் : உத்தரவு மன்னா. இதோ சென்று விரைவில் செய்தியுடன் மீள்கிறோம். (அரசனின் மகன், தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறக்கிறது. தன் கன்றைக் காணாது தேடியலைந்த பசு, அதன் இறந்த உடலைக் கண்டு கண்ணீர் விடுகிறது. அதன் ஆற்றொணாத் துயரே ஆராய்ச்சிமணி வடிவில் ஒலிக்கத் தொடங்கியது. காட்சி – 3 இடம் : அரசவை காலம் : காலை உறுப்பினர்கள் : அரசர், அமைச்சர் பெருமக்கள் அமைச்சர் : மன்னா தங்கள் முடிவை அருள்கூர்ந்து மாற்றிக்கொள்ளுங்கள். அரசர் : என்ன சொல்கிறீர் அமைச்சரே? மண்ணுயிர் காக்கும் மன்னன், நீதி வழங்கும் நெறிமுறையாளன் என்று மக்கள் என்னைப் போற்றுகிறார்களே, அதற்கு இழுக்கு நேரிட ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன், பசுவின் கதறலுக்குச் செவிசாய்க்காக் கொடியோன் என்னும் அவச்சொல்லுக்கு நான் ஆளாக விரும்பவில்லை. கண்ணுக்கு கண். பல்லுக்குப் பல் என்பதுதான் நான் எடுத்த முடிவு. இதில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர்: மன்னா, சற்றுப்பொறுங்கள். உங்களுக்கு இருப்பதோ ஒரேஒரு மகன். பசுவின் கன்றை அவன் வேண்டுமென்றே கொல்லவில்லையே, அவன் அறியாமல் செய்த தவறுதானே அது? அதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமா? அரசர் : ஆம். அதுதான் சரி. கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற அந்த பசுவின் முகம் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? அதன் கண்ணில் வழியும் கண்ணீர்,”நீயும் ஒருமன்னனா? உனக்கு மகன் எப்படியோ அப்படியே எனக்கு என் கன்று அல்லவா? அந்தச் சின்னஞ்சிறு கன்று என்ன பாவம் செய்தது? அதன் உயிரைப் போக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? கன்றை இழந்து தவிக்கும் எனக்கு யார் ஆறுதல் தருவார்? இனி என் வாழ்நாளெல்லாம் வீண்தானோ என்று என்னைக் கேட்பதுபோல் இருக்கிறதே, ஆகவே, நான் எடுத்த முடிவிலிருந்து சற்றும் பின்வாங்கமாட்டேன்.

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 8 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 7

தமிழ் : பருவம் 2 இயல் 7 : திருக்குறள் கதைகள் 7. திருக்குறள் கதைகள் பொறுமையும் பொறுப்பும் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், புகழ்பெற்ற அறிவியலறிஞர். இவர், பல முறை தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின் விளக்கைக் கண்டுபிடித்தார். நண்பர்களுக்கும், மற்ற அறிவியலறிஞர்களுக்கும் தம் கண்டுபிடிப்பைச் செய்துகாட்ட எடிசன் விரும்பினார். அதற்காக, நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவழைத்தார். அவரது ஆய்வகத்தின் மேல்தளத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது. எடிசன் தம் உதவியாளரை அழைத்து மின் விளக்கை மேல் தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னார். உதவியாளர், அதனைக் கொண்டு வரும்போது, திடீரெனக் கைதவறி விழுந்தது. ஆயினும், சற்றும் மனம் கலங்காத எடிசன், உடனே மற்றொரு மின் விளக்கை உருவாக்கினார். அதனை மீண்டும் அதே உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச் செய்தார். “மின் விளக்கைக் கீழே போட்டு உடைத்தவரிடம் மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? ‘என்று சிலர் எடிசனிடம் கேட்டனர். அதற்கு எடிசன், உடைந்த பொருளை மீண்டும் உருவாக்க என்னால் முடிந்தது. ஆனால், உதவியாளரின் மனத்தைக் காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? அதுமட்டுமன்று, மீண்டும் அதே பணியை அவரிடமே கொடுக்கும்போது, தமது பொறுப்பை உணர்ந்து கவனமுடன் பணிபுரிவார். அதனால்தான் அப்படிச் செய்தேன்” என்றார். எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமைக் குணத்தை, அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர். குறள் நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். பொறையுடைமை, குறள்.154 விளக்கம் நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். மெய்ப்பொருள் காண்போம். மாட்டுவண்டி ஒன்றில், தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தார் ஒருவர். வழியில், குறுக்குப்பாதை ஒன்று வந்தது. அங்கே சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். “தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?” என்று கேட்டார் வண்டிக்காரர். “ஓவருமே என்றான் சிறுவன். “போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?” *மெதுவாகக் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம்”. “வேகமாகச் சென்றால்…” “அரை மணி நேரம் ஆகும்”. சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டுக் குதிரை வண்டிக்காரருக்குக் கோபம், “என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?” என்று கேட்டார். போய்த்தான் பாருங்களேன்” என்று சிறுவன் சொன்னதும், அவர் வண்டியை வேகமாக விரட்டிச் சென்றார். சிறிது தூரம் போனதுமே சாலையில் அங்கங்கே கற்கள் நிறைந்து இருந்தன. அதனால், வண்டி தடுமாறிக் தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியைத் தூக்கி நிறுத்திக் கீழே சிதறிய தேங்காய்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரருக்குச் சிறுவன் சொன்னதன் பொருள் புரிந்தது. குறள் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அறிவுடைமை, குறள். 423 விளக்கம் எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். குற்றமும் குறையும் கதிரவனிடம் வேண்டாத குணமொன்று இருந்தது, அதாவது, எப்போது பார்த்தாலும் யாரைப் பற்றியாவது எதைப்பற்றியாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பான். அதனால், அவனைப் பார்த்தாலே போதும். எல்லா நண்பர்களும் ஓடத் தொடங்கிவிடுவர். தமிழ் அழகன் ஒருவன்தான் இப்போது அவனுடன் பேசுகிறான். வேறு எவரும் பேசுவதில்லை. அன்று தமிழ் அழகன் நான்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டான் கதிரவன். ஆர்வத்துடன் அவர்கள் அருகில் வந்தான். கதிரவனைப் பார்த்ததும் எல்லாரும் ஒதுங்கிச் செல்ல, தமிழ் அழகன் மட்டுமே தனியாக நின்றான். கதிரவனின் முகம் வாடியது. “என்ன கதிர்? ஏன், என்னவோ போல் இருக்கிறாய்?” என்று கேட்டான் தமிழ் அழகன். ‘ஆமாம் தமிழ். என்னைப் பார்த்தாலே எல்லாரும் ஓடிப்போறாங்களே….” என்றான் கதிரவன். ‘எல்லாம் யாரால? உன்னாலதானே!’ என்றான் தமிழ் அழகன். “நான் என்ன தப்பு பண்ணினேன்? பிறர்கிட்ட உள்ள குற்றம் குறையைத்தானே பேசினேன்” என்றான் கதிரவன், கதிர், குற்றம்குறை யார்கிட்டேதான் இல்லை. உன்னோட குறை என்னன்னு உனக்குத் தெரியுமா? நீ பிறரைப் புறம் பேசறதுதான் உன்னோட குறை, உன்னோட நாக்கை அடக்கு. எல்லாரும் உன்கிட்ட பேசுவாங்க’என்றான் தமிழ் அழகன் . கதிரவன் தன்னைத் திருத்திக் கொண்டான். எல்லாரும் அவனுடன் மெள்ள மெள்ளப் பேசத் தொடங்கினர். குறள் யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு அடக்கமுடைமை, குறள்.127 விளக்கம்

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 7 Read More »