Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Resources

Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Resources

TNPSC Group 1 Best Books to Buy

சமூக அறிவியல் : புவியியல் : இரண்டாம் பருவம் அலகு -1 : வளங்கள்

TNPSC Group 4 Best Books to Buy

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்துதெடுக்க 

1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் 

அ) தங்கம்

ஆ) இரும்பு 

இ) பெட்ரோல்

ஈ) சூரிய ஆற்றல் 

விடை: ஈ) சூரிய ஆற்றல் 

2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது? 

அ) கமுதி

ஆ) ஆரல்வாய்மொழி 

இ) முப்பந்தல்

ஈ) நெய்வேலி

விடை : அ) கமுதி 

3. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று 

அ) இரும்பு

ஆ) தாமிரம் 

இ) தங்கம்

ஈ) வெள்ளி

விடை: ஆ) தாமிரம் 

4. —— மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று. 

அ) சுண்ணாம்புக்கல்

ஆ) மைக்கா 

இ) மாங்கனீசு

ஈ) வெள்ளி

விடை: ஆ) மைக்கா 

5. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 

அ) வெப்பசக்தி

ஆ) அணுசக்தி 

இ) சூரிய சக்தி

ஈ) நீர் ஆற்றல் 

விடை: ஆ) அணுசக்தி 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர்.

விடை: சீனா 

2. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம்.

விடை: கஞ்சமலை 

3. பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம்

விடை: அலுமினியம் 

4. மின்சார பேட்டரிகள் தயாரிக்க பயன்படுகிறது.

விடை: மாங்கனீசு 

5. பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை _ என அழைக்கப்படுகிறது. 

விடை: கருப்புத் தங்கம்

III. பொருத்துக 

அ ஆ

1. புதுப்பிக்கக்கூடிய வளம் – அ. இரும்பு

2. உலோக வளம் – ஆ. மைக்கா

3. அலோக வளம் – இ. காற்றாற்றல் 

4. புதை படிம எரிபொருள் – ஈ. படிவுப்பாறை 

5. சுண்ணாம்புக்கல் – பெட்ரோலியம் 

விடைகள் 

1. புதுப்பிக்கக்கூடிய வளம் – இ. காற்றாற்றல் 

2. உலோக வளம் – அ. இரும்பு 

3. அலோக வளம் – ஆ. மைக்கா

4. புதை படிம எரிபொருள் – உ. பெட்ரோலியம்

5. சுண்ணாம்புக்கல் – ஈ. படிவுப்பாறை

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல் 

காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது 

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது 

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று தவறு, காரணம் சரி –

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு 

விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது 

2. கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது

காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் . 

அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது 

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று தவறு, காரணம் சரி 

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு 

விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும் 

1. வளங்கள் – வரையறு

மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன. 

2. இரும்பின் பயன்கள் யாவை?

* இயந்திர கட்டுமானப்பணி 

* இயந்திர கருவிகள்

* ஆட்டோமொபைல்ஸ் 

* கப்பல் கட்டுமானப் பணி, பாலம் மற்றும் கட்டட கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

3. உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?

* இந்தியா 

* சீனா 

* ஜப்பான் 

* இத்தாலி 

* அமெரிக்க ஐக்கிய நாடு 

4. கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு 

* ஆந்த்ரசைட் 

* பிட்டுமினஸ்

* லிக்னைட்

* பீட் 

5. துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.

அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைச் சேர்ப்பதன் மூலம், இது தூய அலுமினியத்தைவிட உயர்ரக (அலாயினை) உலோகக் கலவையை உருவாக்குகிறது. எ.கா.: துராலுமின் 

VI. பின்வருவனவற்றை வேறுபடுத்தி எழுதுக 

1. உயிருள்ள வளங்கள் – உயிரற்ற வளங்கள் 

உயிருள்ள வளங்கள்

உயிரியல் வளங்கள் என்பவை காடுகள், பயிர்கள், பறவைகள், விலங்குகள், மனிதன் அடங்கிய உயிர்க் கோளத்திலிருந்து பெறப்பட்ட வளங்கள் ஆகும். .கா.: நிலக்கரி, பெட்ரோலியம்.

உயிரற்ற வளங்கள் 

உயிரற்ற பொருள்களிலிருந்து பெறப்பட்ட ஒரு வகை வளங்கள் உயிரற்ற வளங்கள் ஆகும். எ.கா: நிலம், நீர், சூரிய ஒளி.

2. புதுப்பிக்கக் கூடிய வளங்கள் – புதுப்பிக்க இயலா வளங்கள் 

புதுப்பிக்கக் கூடிய வளங்கள்

இயற்கையான செயல்பாடுகளாலோ காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாகவோ அமையும் வளங்களாகும். எ.கா.: சூரிய ஆற்றல், காற்றாற்றல், நீர் ஆற்றல்.

புதுப்பிக்க இயலா வளங்கள் 

இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் ஆகும்.  எ.கா.: நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை 

3. உலோக வளங்கள் – அலோக வளங்கள் 

உலோக வளங்கள்

1. உலோகத்தால் ஆன வளங்கள் ஆகும். 

2. வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்தும் கடினப் பொருள்களாகும். எ.கா.: இரும்பு, தாமிரம், தங்கம், பாக்ஸைட், வெள்ளி மற்றும் மாங்கனீசு.

அலோக வளங்கள் 

1. உலோகத்தினை கொண்டிராத வளங்கள் ஆகும். 

2. இவை கடினமானதோ, மின்சாரத்தையும், வெப்பத்தையும் எளிதில் கடத்துபவையும் அல்ல. எ.கா.: மைக்கா, சுண்ணாம்புக்கல், ஜிப்சம். 

VII. காரணம் கூறுக 

1. அலுமினியம் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது பரவலான பயன்பாட்டினைக் கொண்டுள்ளது. 

* அலுமினியம் எடை குறைந்தது. 

* கடினமான மற்றும் விலை குறைந்தது. 

* அலுமினியம் மின்சாரம் மற்றும் வெப்பத்தினை எளிதில் கடத்தக்கூடியது.

* அரித்தல் செயலினை அதிகரிக்க தாங்கிக் கொள்ளக்கூடியது. 

2. நீர் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது. 

* நீரானது ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாகக் கருதப்படுகிறது. 

* நீர் மின்சக்தியானது மலிவானதாகவும் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். 

* இது புதுப்பிக்கக் கூடிய வளமாகும்.

VIII. விரிவாக விடையளிக்க 

1. புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக

புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இயற்கையான செயல்பாடுகளாலோ, காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாகவோ அமையும். 

* சூரிய ஆற்றல் * காற்றாற்றல் * நீர் ஆற்றல் 

சூரிய ஆற்றல்: 

* சூரியன் தனது ஆற்றலை வெப்பமாகவும், ஒளியாகவும் வெளிவிடுகிறது. 

* சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. 

* சூரியகலமானது நேரடியாக சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடியது. 

* இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை உலகிலேயே மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது. 

* எ.கா.: கமுதி, சூரிய ஒளி மின்திட்டம்.

காற்றாற்றல்: 

* காற்றாற்றல் என்பது ஒரு துய்மையான ஆற்றலாகும். – 

* சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.

* இந்தியாவின் முக்கிய காற்றாலைப் பண்ணைகள் உள்ளது.

* எ.கா.: முப்பந்தல், கன்னியாகுமரி, தமிழ்நாடு 

* காற்றாலை பண்ணைகள் காணப்படும் நாடுகள்: அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேசில் 

நீர்மின் சக்தி: 

* நீரானது நீர்மின்சக்தி உற்பத்திக்குப் பயன்படுகிறது. 

* நீர்மின்சக்தி மலிவானதாகவும் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. 

* சீனா, கனடா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, நார்வே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நீர்மின்சக்தி உற்பத்தி செய்கிறது. 

* எ.கா.: அதிக அளவில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு சீனா ஆகும். 

2. புதுப்பிக்க இயலா வளங்கள் – குறித்து விரிவாக எழுதுக. 

* புதுப்பிக்க இயலா வளங்கள் என்பவை இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் ஆகும். 

* எ.கா.: புதைபடிம எரிப்பொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் தாது வளங்களான இரும்பு, தாமிரம், பாக்ஸைட், தங்கம், வெள்ளி. 

நிலக்கரி: 

* தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும். 

* நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது அனல் மின்சக்தி எனப்படுகிறது. 

* கார்பன் அளவினைக் கொண்டு ஆந்த்ரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், பீட் என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. 

* உலகில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு சீனா ஆகும். இந்தியாவில் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், தமிழகத்தில் நெய்வேலியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

பெட்ரோலியம்: 

* பாறை அடுக்குகளுக்கு இடையேயும், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது. 

* பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் “கருப்புத் தங்கம்” என அழைக்கப்படுகிறது. 

* மும்பை டெல்டாப் பகுதிகள் இந்தியாவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பகுதியாகும். 

இயற்கை வாயு: 

* பெட்ரோலியப் படிவுகளுடன் காணப்படுகிறது. 

* உலக அளவில் 50%க்கும் அதிகமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது.  

* இந்தியாவில் கிருஷ்ணா மற்றம் கோதாவரி மற்றும் மும்பை கடலோரப் பகுதியில் இயற்கை வாயு வளம் உள்ளது. 

3. புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக,

* புதை படிம எரிபொருள் வளங்களானது இறந்து போன தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து உருவானவை.

* புதை படிம எரிபொருள்கள் ஹைட்ரோ கார்பனிலிருந்து உண்டானவை எனப் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. 

* இவை எரிக்கப்படும்போது வெப்ப ஆற்றலுக்கான ஒரு சிறந்த ஆதாரமாகிறது. 

* நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை புதை படிம எரிபொருள்கள் ஆகும்.

IX. செயல்பாடு 

1. கொடுக்கப்பட்டுள்ள உலக நில வரைபடத்தில் உலோக வளங்கள் பரவிக் கிடைக்கும் இடங்களைக் குறித்திடுக. (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்) 

2. குறுக்கெழுத்துப் புதிர் 

இடமிருந்து வலம்: 

2. உலகின் முன்னணி உற்பத்தியாளர்கள் 

4. ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது 

5. தங்கம் போன்ற விலை மதிப்பற்ற உலோகம் 

6. மின்தொழிற்சாலைகளில் காப்புப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது 

மேலிருந்து கீழ்: 

1. மின்சார பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகிறது 

3. வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்துவது 

7. இந்தியாவில் தங்கம் அளவு உற்பத்தி செய்யப்படும் இடம் 

8. ஆற்றலை வெப்பம் மற்றும் ஒளியாக உற்பத்தி செய்வது

விடைகள்

TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *