Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Tourism

Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Tourism

சமூக அறிவியல் : புவியியல் : இரண்டாம் பருவம் அலகு -2 : சுற்றுலா

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க 

1. சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது – 

அ) சமயச் சுற்றுலா

ஆ) வரலாற்றுச் சுற்றுலா 

இ) சாகசச் சுற்றுலா

ஈ) பொழுதுபோக்குச் சுற்றுலா

விடை: அ) சமயச் சுற்றுலா 

2. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது? 

அ) இராஜஸ்தான்

ஆ) மேற்கு வங்காளம் 

இ) அசாம்

ஈ) குஜராத்

விடை: இ) அசாம் 

3. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது? 

அ) கோவா

ஆ) கொச்சி 

இ) கோவளம்

ஈ) மியாமி

விடை ஈ) மியாமி 

4. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

அ) குஜராத்திலுள்ள நல்சரோவர் 

ஆ) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம் 

இ) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர் 

ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

விடை: ஈ) மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா 

5. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது? 

அ) தருமபுரி

ஆ) திருநெல்வேலி 

இ) நாமக்கல்

ஈ) தேனி 

விடை: ஆ) திருநெல்வேலி 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு — என  அழைக்கப்படுகின்றது. 

விடை: A3

2. ‘காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் —– அம்சத்தை குறிக்கின்றது 

விடை:  கலாச்சார

3. சுருளி நீர்வீழ்ச்சி, —– என்றும் அழைக்கப்படுகிறது

விடை:  நிலநீர்வீழ்ச்சி / மேகமலை நீர்வீழ்ச்சி 

4. இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ——

விடை: மெரினா கடற்கரை 

5. TAAI என்பதன் விரிவாக்கம் _

விடை: இந்திய பயண முகவர்கள் சங்கம்

III. பொருந்தாததை வட்டமிடுக 

1. போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்

விடை: போக்குவரத்து 

2. நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா

விடை: திகா 

3. கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி

விடை: மயானி 

4. ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு

விடை: களக்காடு 

5. ரிஷிகேஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி

விடை: கோத்தகிரி

IV. பொருத்துக

அ      ஆ

1. ஆனைமலை வாழிடம் – அ. மேற்கு வங்காளம் 

2. குரங்கு அருவி – ஆ. கோவா

3. டார்ஜிலிங் – இ. கோயம்புத்தூர் 

4. இயற்கையின் சொர்க்கம் – ஈ. உயர் விளிம்பு 

5. அகுதா கடற்கரை – உ. ஜவ்வாது 

விடைகள்

1. ஆனைமலை வாழிடம் – ஈ. உயர் விளிம்பு 

2. குரங்கு அருவி – இ. கோயம்புத்தூர் 

3. டார்ஜிலிங் – அ. மேற்கு வங்காளம்

4. இயற்கையின் சொர்க்கம் – உ. ஜவ்வாது

5. அகுதா கடற்கரை – ஆ. கோவா

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை () டிக் செய்யவும் 

1. கூற்று : சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது.

காரணம் : சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது 

ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை 

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை 

விடை: அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது 

2. கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.

காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள் 

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது 

ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை 

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை 

விடை: அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

VI. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளிக்கவும். 

1. சுற்றுலா வரையறுக்க. 

* சுற்றுலா என்பது மகிழ்ச்சி, மனநிறைவு, பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டது. 

* இது கேளிக்கை மற்றும் வேடிக்கை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவது.

2. சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக. 

தாது 

* இயற்கைச் சூழலில் செழித்து வளரும் தாவரங்களும், விலங்குகளும் உள்ள இடங்களுக்குச் செல்வது “சூழல் சுற்றுலா” எனப்படுகிறது. 

* (எ.கா) அமேசான் மழைக்காடுகள், இமயமலை சிகரங்களில் மலையேற்றம். 

3. சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?

* ஈர்ப்புத் தலங்கள் 

* எளிதில் அணுகும் தன்மை 

* சேவை வசதிகள் 

4. இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக 

1) கொடைக்கானல் – தமிழ்நாடு 

2) நைனிடால் – உத்திரகாண்ட் 

3) டார்ஜிலிங் – மேற்கு வங்காளம் 

4) ஸ்ரீநகர் – ஜம்மு காஷ்மீர் 

5) ஷில்லாங் – மேகாலயா 

5. தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக. 

1) மெரினா கடற்கரை – சென்னை 

2) இராமேஸ்வரம் கடற்கரை – இராமேஸ்வரம் 

3) மகாபலிபுரம் கடற்கரை – மகாபலிபுரம் 

4) முட்டம் கடற்கரை – கன்னியாகுமரி 

5) கன்னியாகுமரி கடற்கரை – கன்னியாகுமரி

VII. வேறுபடுத்துக 

1. பன்னாட்டுச் சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சுற்றுலா 

பன்னாட்டுச் சுற்றுலா

சர்வதேச முக்கியத்துவமான இடங்களைப் பார்வையிடவும் அவற்றின் பண்பாடு பழக்கவழக்கங்கள் அறியவும், சேகரிக்கவும் பன்னாட்டுச் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.

வரலாற்றுச் சுற்றுலா 

அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆராய்ச்சிப்பகுதிகள், கோட்டைகள், கோவில்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றை பார்வையிடுவதை மையமாக கொண்டுள்ளது. 

(எ.கா) கம்போடியா – அங்கோர் வாட், இந்தியா – தாஜ்மஹால் 

2. சமயச் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலா 

சமயச் சுற்றுலா

1. மிகப் பழமையானது.

மக்கள் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ, புனித யாத்திரையாகக் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற புனித ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்வர்.

2. (எ.கா) காசி – இந்துக்கள். ஜெருசலம் – கிறிஸ்தவர்கள், மெக்கா – முஸ்லிம்கள்

சாகசச் சுற்றுலா 

1. நெடுந்தொலைவில்/அந்நிய இடங்களிலுள்ள வெளிப்புறச் செயல்பாடுகளில் கலந்து கொள்வதற்காகப் பயணப்படுவதே சாகசச் சுற்றுலா எனப்படும்.

2.  (எ.கா) ஆஸ்திரேலியா – விண்வெளி விளையாட்டு, இமயமலை – மலையேறுதல்

3. ஈர்ப்புத் தலங்கள் மற்றும் எளிதில் அணுகும் தன்மை 

ஈர்ப்புத் தலங்கள்

1. இரு முக்கிய வகைகளைக் கொண்டது.

1) இயற்கை ஈர்ப்புத் தலங்கள்.

2) கலாச்சார ஈர்ப்புத் தலங்கள்.

2. இயற்கை ஈர்ப்புத் தலங்கள் என்பவை நிலம் மற்றும் கடல் அமைப்பு, கடற்கரைகள், காலநிலை மற்றும் காடுகள் ஆகியவை அடங்கும்.

3. கலாச்சார ஈர்ப்புத் தலங்கள் என்பவை வரலாற்று நினைவுச் சின்னங்களையும் அறிவார்ந்த படைப்புகளையும் உள்ளடக்கியது.

எளிதில் அணுகும் தன்மை 

1. சாலை, இரயில் மற்றும் வான்வழி 1போன்ற பல்வேறு வகையான போக்குவரத்தின் மூலம் குறிப்பிட்ட ஓர் ஈர்ப்புத் தலத்தை எளிதில் அடைவதாகும். 

2. இதற்கான பயணச் செலவையும், நேரத்தையும் போக்குவரத்து தீர்மானிக்கிறது.

VIII. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும் 

1. சுற்றுலாவின் புவியியல் காரணிகளை விளக்குக 

1. நிலத்தோற்றம்: மலைகள், பீடபூமிகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பள்ளத்தாக்குகள், குகைகள், மணல் குன்றுகள், பனியாற்று நாற்காலி பவளப்பாறைகள், ஓங்கல்கள். 

2. நீர்நிலைகள்: ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் வெந்நீர் மற்றும் கொதிநீர் ஊற்றுகள், பனி மற்றும் பனியாறுகள், நீரோட்டங்கள் ஓதங்கள் மற்றும் அலைகள். 

3. தாவரங்கள்: காடுகள், புல்வெளிகள், பெருவெளிகள், பாலை வனங்கள். 

4. காலநிலை: சூரியஒளி, மேகங்கள். சிறந்த வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் பனி. 

5. விலங்குகள்: வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம், மிருகக்காட்சி சாலை, வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல் 

6. குடியிருப்புக் காரணிகள்: நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமங்கள், வரலாற்று அழிவு எச்சங்கள், நினைவுச் சின்னங்கள் 

7. கலாச்சாரம்: மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம், நாட்டுப்புற வழக்கங்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் 

2. தமிழ்நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

தமிழ்நாட்டில் மலைகளும் ஆறுகளும் இணைந்து பல அருமையான நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி உள்ளன. அடர்த்தியான பச்சை மரங்களுக்கிடையில் செங்குத்தான குன்றுகளில் மலையேற்றம் செய்வதும் மலைகளிலிருந்து பாயும் நீரில் குளிப்பதும் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது. 

வ.எண் / நீர்வீழ்ச்சிகள் / புவியியல் தல அமைவிடம் 

1. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி / தருமபுரி மாவட்டத்தில் ஓர் அழகான நீர்வீழ்ச்சி 

2. கும்பக்கரை நீர்வீழ்ச்சி /  பாம்பார் ஆற்றில் சிற்றருவிகளாக உருவாகி, கொடைக்கானல் மலை அடிவாரத்தில் வீழ்கின்ற இந்நீர்வீழ்ச்சி தேனி மாவட்டத்தில் உள்ளது. 

3. குரங்கு நீர்வீழ்ச்சி / பசுமை மாறாக் காடுகள் சூழ்ந்த இந்நீர்வீழ்ச்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனை மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

4. கிளியூர் நீர்வீழ்ச்சி / கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் குன்றுப் பகுதியில் அமைந்துள்ளது.

5. குற்றாலம் / திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவி, மருத்துவம் ஆரோக்கியத்திற்குப் பெயர் பெற்றது.

6. ஆகாய கங்கை / கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கொல்லிமலையில் புளியசோலை என்னுமிடத்தில் விழும் இந்நீர்வீழ்ச்சி நாமக்கல் மாவட்டத்திலுள்ளது 

7. சுருளி நீர்வீழ்ச்சி / நிலநீர்வீழ்ச்சி அல்லது மேகமலை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் இது தேனி மாவட்டத்தில் உள்ளது.

3. சுற்றுலாவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை விவரிக்கவும்

சுற்றுலாவிற்குச் சுற்றுச்சூழலின் தரம் மிக அவசியமாகும். 

நேர்மறையான தாக்கம்: 

* நேரடியான நிதி பங்களிப்பு

* அரசாங்க நிதிக்குப் பங்களிப்பு 

* மேம்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்  

* சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரித்தல் 

* பாதுகாப்பு மற்றும் பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் 

எதிர்மறை தாக்கம்: 

1. இயற்கை வளங்கள் சிதைவுறுதல்: 

* நீர் வளங்கள்

* உள்ளூர் வளங்கள் 

* நிலச்சீரழிவு 

2. மாசுபடுதல்: 

* காற்று மற்றும் ஒலி மாசு

* திடக்கழிவு மற்றும் குப்பைகள் 

* கழிவுநீர் 

சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு மற்றும் மாற்றம்:

* காற்று 

* நீர்

* மண் 

IX. சிந்தனை வினா (HOTS) 

1. இயற்கைக் காட்சிகளைப் பார்வையிடுவதை நாம் ஏன் விரும்புகிறோம்? 

* நாம் அனைத்து முக்கியமான இடங்களையும் பார்க்க விரும்புகிறோம். ஏனெனில் அதைப்பற்றி நாம் பள்ளியில் படிக்கும் போதே அறிந்திருக்கிறோம். 

* அது நமக்கு உண்மையான அனுபவத்தை கொடுக்கிறது. 

* மலைகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாட்டை அறிய முடிகிறது. 

* இயற்கை காட்சியை பார்வையிடுவதால் மகிழ்வு அடைகிறோம். 

2. சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை?

* சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகளை பாதுகாக்கவும் உயிரோடு வாழவிடவும் உதவுகிறது. 

* காடுகளையும், தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும்.

* மரங்களையும், செடிகளையும் பாதுகாக்க வேண்டும்.

* அழிவை ஏற்படுத்தும் பயங்கரமான விலங்குகளை அது இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க விடுதல் மிகச்சிறந்த வழியாகும். 

3. பயணம் செய்வதற்கான ஐந்து காரணங்களைப் பட்டியலிடுக. 

* வேலை தேடுவதற்காக

* மேற்படிப்புக்காக 

* பிற கலாச்சாரத்தை பயில்வதற்காக 

* விடுமுறை காலத்தை செலவழிப்பதற்காக 

* சாதனை புரிய, ஓய்வு எடுப்பதற்காக 

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

இந்தச் செயல்பாடு, பாட ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களால் செய்யப்பட வேண்டும், 

1. ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழுவாக மாணவர்களைப் பிரிக்க வேண்டும் 

2. ஒவ்வொரு மாணவரும் தங்கள் கடைசி சுற்றுப் பயணத்தைப் பற்றிக் குழுவில் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு குழுவும் புகைப்படங்களையும் தகவல்களையும், சேகரிக்க வேண்டும். 

3. சுற்றுப் பயணத் தகவல்களை அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல், வகுப்பு அறையில் அறிவிப்புப் பலகையில் தகவல்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *