சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
பயிற்சி வினா விடை
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
அ) தாதாஜி கொண்ட தேவ்
ஆ) கவிகலாஷ்
இ) ஜீஜாபாய்
ஈ) ராம்தாஸ்
விடை : அ) தாதாஜி கொண்ட தேவ்
2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
அ) தேஷ்முக்
ஆ) பேஷ்வா
இ) பண்டிட்ராவ்
ஈ) பட்டீல்
விடை : ஆ) பேஷ்வா
3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
அ) ஷாகு
ஆ) அனாஜி தத்தா
இ) தாதாஜி கொண்ட தேவ்
ஈ) கவிகலாஷ்
விடை : ஈ) கவிகலாஷ்
4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.
அ) பீரங்கிப்படை
ஆ) குதிரைப்படை
இ) காலட்படை
ஈ) யானைப்படை
விடை : இ) காலட்படை
5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) ஷாகு
விடை : ஆ) பாஜிராவ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மகாராஷ்டிராவில் பரவிய …… ………… இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
விடை : பக்தி
2. பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் ……….
விடை : காமவிஸ்தார்
3. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு இடத்தில் சோகமாய் முடிந்தது.
விடை :பானிபட்
4. அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ……….
விடை : சுமந்த் / துபிர்
5. சிவாஜியைத் தொடர்ந்து ……….. வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
விடை : அனாஜி தத்தோ
III. பொருத்துக
அ ஆ
1. ஷாஜி போன்ஸ்லே – அ. சிவாஜியின் தாய்
2. சாம்பாஜி – ஆ. பீஜப்பூர் தளபதி
3. ஷாகு – இ. சிவாஜியின் தந்தை
4. ஜீஜாபாய் – ஈ. சிவாஜியின் மகன்
5. அப்சல்கான் – உ. சிவாஜியின் பேரன்
விடைகள்
1. ஷாஜி போன்ஸ்லே – இ. சிவாஜியின் தந்தை
2. சாம்பாஜி – ஈ. சிவாஜியின் மகன்
3. ஷாகு – உ. சிவாஜியின் பேரன்
4. ஜீஜாபாய் – அ. சிவாஜியின் தாய்
5. அப்சல்கான் – ஆ. பீஜப்பூர் தளபதி
IV. சரியா? தவறா?
1. மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
விடை : சரி
2. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
விடை : தவறு
3. சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
விடை : சரி
4. தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
விடை : சரி
5. அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார்
விடை : தவறு
V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (V) டிக் இட்டுக் காட்டவும்
1. கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்றிற்கான காரணம் சரி
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை : ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
2. வாக்கியம் -I : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் -II : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.
அ) I சரி
– ஆ) II சரி
இ) 1 மற்றும் ii சரி
ஈ) 1 மற்றும் II தவறு
விடை : அ) I சரி
3. பொருந்தாததைக் கண்டுபிடிக்க
ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே , சிவாஜி, சாம்பாஜி, ஷாகு
விடை : ரகுஜி, போன்ஸ்லே
VII. கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்
1. மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.
* சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
* முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துண்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
* இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை.
* கொள்ளையடிக்கப் படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை செலுத்த வேண்டும்.
* மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
* கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வாகிக்கப்பட்டது.
* ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத்தலைவர் இருந்தார். அவருக்கு உதவ கணக்கரும், ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார்.
* மைய அரசு இல்லாத நேரத்தில் உள்ளூர் சமுதாய அளவிலான அதிகாரிகள் உண்மையான அரசாய்ச் செயல்பட்டனர்.
VIII. உயர் சிந்தனை வினா
1. பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக. –
* கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4) பாதுகாப்பு கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்தவேண்டும்.
* பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ, வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார்.
* வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆவணங்களைப் பீஷ்வா அலுவலகம் அங்கொன்று இங்கொன்றாகச் சரி பார்த்தது. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன.
* குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பீஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும், நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.
* எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதிவரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்கு கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.
.IX. வரைபடம்
1. மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக. (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)
X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)
1. பொருத்துக
அ ஆ
1. அமத்தியா – வெளியுறவுத்துறை அமைச்சர்
2. வாக்கிய நாவிஸ் – தலைமை தளபதி
3. சுமந்த் – நிதி அமைச்சர்
4. சேனாதிபதி – உள்துறை அமைச்சர்
விடைகள்:
1. அமத்தியா – நிதி அமைச்சர்
2. வாக்கிய நாவிஸ்- உள்துறை அமைச்சர்
3. சுமந்த் – வெளியுறவுத்துறை அமைச்சர்
4. சேனாதிபதி – தலைமை தளபதி
2. குழுச் செயல்பாடு
தஞ்சாவூர் மராத்தியர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் குறிப்பாக அவர்கள் கல்வி, கலை மற்றும் கட்டடக் கலைக்கு ஆற்றிய பங்களிப்புகள்.