Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 5

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 5

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம்

இலக்கணம்: மொழிமுதல், இறுதி எழுத்துகள்

I. வினாக்கள்

1. மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?

க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது.ஞ – வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான் கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ , யெள ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

2. மொழி இறுதியில் வராத மெய்கள் என்னென்ன?

க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

3. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?

ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்

கூடுதல் வினாக்கள்

1. மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பற்றி எழுதுக.

  • மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது.
  • ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
  • ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
  • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள்ச சொல்லின் முதலில் வராது.

2. மொழி இறுதி எழுத்துகள் என்றால் என்ன?

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.

3. மொழி இறுதி எழுத்துகள் எவையெவை விளக்குக

  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே
    மொழி இறுதியில் வரும்.
  • ஞ், ண், ந், ம், ய் ,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின்
    இறுதியில் வரும். (உரிஞ்)

4. மொழி இடையில் வரும் எழுத்துகளை விவரி

  • மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
  • உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
  • ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.

மொழியை ஆள்வோம்!

I. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

அது 1921 ஆம் ஆண்டு. மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.

ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா?அவர்தான் சர். சி. வி. இராமன்.

1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?

சர். சி. வி. இராமன்

2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?

  1. கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
  2. கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
  3. கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
  4. கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?

விடை : கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

3. தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது ? ஏன்?

“இராமன் விளைவு” கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்

4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.

தேசிய அறிவியல் நாள்

II. பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

விடை : கணினி

2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.

விடை : அழைப்பு மணி

3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின்களைக் கண்டுபிடித்தனர்.

விடை : எந்திரம்

4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது

விடை : அடிமை

III. கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்துக.

1. விகண்லம்

விண்ம்

2. மத்ருதும்வ

ருத்தும்

3. அவிறில்ய

றிவில்

4. ணினிக

ணினி

5. எலால்ம்

ல்லாம்

6. அப்ழைபு

ழைப்பு

வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக

ம்துல்லாப்

எழுத்துகளை வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டுபிடியுங்கள்

ப்துல்லாம்

IV. வாக்கியத்தை நீட்டி எழுதுக.

1. நான் படிப்பேன். (அறிவியல், பாடம், நன்றாக)

  1. நான் பாடம் படிப்பேன்.
  2. நான் அறிவியல் பாடம் படிப்பேன்.
  3. நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்.

2. அறிந்து கொள்ள விரும்பு. (எதையும், காரணத்துடன், தெளிவாக)

  1. எதையும் அறிந்து கொள்ள விரும்பு
  2. காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு
  3. தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு

3. நான் சென்றேன். (ஊருக்கு, நேற்று, பேருந்தில்)

  1. நான் ஊருக்கு சென்றேன்
  2. நான் நேற்று சென்றேன்
  3. நான் பேருந்தில் சென்றேன்

V. அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

1. அறி

  • அறிக
  • அறிந்து
  • அறிஞர்
  • அறிவியல்
  • அறிவிப்பு

2. பார்

  • பார்க்க
  • பார்த்தல்
  • பார்வை
  • பார்த்து

3. செய்

  • செய்தல்
  • செய்தி
  • செய்வினை
  • செய்யும்

4. தெளி

  • தெளிதல்
  • தெளிவு
  • தெளித்தல்
  • தெளியும்

5. படி

  • படித்தல்
  • படிப்பு
  • படியேறுதல்
  • படியேறு

VI. மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்க

கம்பு, வம்பு, நம்பு ,நம்பி, கம்பி, தம்பி

VII. குறுக்கெழுத்துப் புதிர்.

இடமிருந்து வலம்:-

1. அப்துல்கலாமின் சுயசரிதை _______________________

விடை : அக்னிச்சிறகுகள்

3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி __________________________

விடை : எந்திரமனிதன்

10. எந்திரமனிதனுக்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு _______________

விடை : சவுதி அரேபியா

வலமிருந்து இடம்:-

2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல். 

விடை : ஆய்வு

6. சதுரங்கப் ________________யில் டீப்புளூ வெற்றி பெற்றது.

விடை : போட்டி

8. “மருந்து” என்னும் பொருள் தரும் சொல். 

விடை : ஒளடதம்

மேலிருந்து கீழ்:-

1. ‘ரோபோ’ என்னும் சொல்லின் பொருள் 

விடை : அடிமை

2. “அகர” வரிசையில் அமையும் இலக்கியம்

விடை : ஆத்திச்சூடி

7. ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டம் பெற்ற ரோபோ

விடை : சோபியா

கீழிருந்து மேல்:-

4. இந்தியா செலுத்திய ஏவுகணை.

விடை : அக்னி

5. தானாகச் செயல்படும் எந்திரம்.

விடை : தானியங்கி

9. அப்துல்கலாம் வகித்த _______________ குடியரசுத் தலைவர்

விடை : பதவி

VIII. கலைச்சொல் அறிவோம்.

  1. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
  2. ஆய்வு – Research
  3. மீத்திறன் கணினி – Super Computer
  4. கோள் – Planet
  5. ஔடதம் – Medicine
  6. எந்திர மனிதன்  – Robot
  7. செயற்கைக் கோள் – Satellite
  8. நுண்ணறிவு – Intelligence

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *