Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 4

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 4

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம்

துணைப்பாடம்: ஒளி பிறந்தது

I. குறுவினா

1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததுள்ளோம்.தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம்.எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம்.நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ‘அக்னி’ மற்றும் ‘பிரித்வி’ ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்இவையெல்லாம் சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்

2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?

போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக்கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன்.பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையை’ கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை அளித்ததாக கூறுகிறார்.

II. சிந்தனை வினா

நீங்கள் அப்துல்கலாமிடம் கேட்க விரும்பும் வினாக்களை ஒரு கடிதமாக எழுதுக.

மேதகு அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

நான் தங்களிடம் சில வினாக்களை கேட்க ஆவலாக உள்ளேன். அவற்றிற்கு தாங்கள் பதில் தாருங்கள்

  1. இந்தியா வல்லரசாக வளர்ந்து வரும் சூழலில் தொழில்நுட்பத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் பல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் நாம் எந்திரமனிதர்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றோம்?
  2. இந்தியாவில் எல்லா வளங்களும் செறிந்துள்ளபோதும் நாம் ஏன் இன்னும் பிற நாட்டினை எதிர்பாத்து இருக்கின்றாேம்?
  3. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என பலரும் கூறுகையில்  ஏன் இன்னும் முழு ஒற்றுமையுடன் நம்மால் வாழ முடியவில்லை?
  4. உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் இந்தியாவில் தான் உள்ளது. அப்படி இருக்க தண்ணீர் பஞ்சம்  இருந்து கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?
  5. மனிதன் சுயநலத்திற்காக இயற்கையைச் சுரண்டி அழித்துக் கொண்டிருக்கிறான். இப்படியே போனால் எதிர்கால சந்ததியினரின் நிலைதான் என்ன? இதற்கு வழியே இல்லையா?
  6. மாணவர்கள் , ஓழுக்கத்தில் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் விளங்கவும் சில அறிவுரைகள் கூறுங்கள்.

இவற்றிற்கெல்லாம் நீங்கள் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி ஐயா!

ஒளி பிறந்தது – கூடுதல் வினாக்கள்

I. குறுவினா

1. அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல் எது?

அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் திருக்குறள் மிகவும் பிடித்த நூலாகும்.

2. அப்துல்கலாம் அவர்களுக்கு பிடித்த நூல் எது?

அப்துல்கலாம் அவர்களுக்கு ‘லிலியன் வாட்சன் ’ எழுதிய, ‘விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps) என்னும் நூலை மிகவும் பிடிக்கும்

3. அப்துல்கலாம் ‘விளக்குகள் பல தந்த ஒளி’ என்ற நூலை படித்தபோது எதை பெற்றதாக குறிப்பிடுகிறார்?

அப்துல்கலாம் ‘விளக்குகள் பல தந்த ஒளி’ என்ற நூலை படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை , மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன்.

4. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்த்த திருக்குறள் எது?

‘அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்’

5. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் என அப்துல்கலாம் அவர்கள் நினைக்கிறீர்கள்?

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும் நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.

6. அறிவியலின் அடிப்படை என அப்துல்கலாம் அவர்கள் எதைக் கூறுகிறார்?

அறிவியலின் அடிப்படை, கேள்வி கேட்கின்ற மனப்பான்மைதான். அறிவியல் பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாம் இந்தக் கேள்வி கேட்கும் திறனால்தான்.

7. அப்துல்கலாம் அவர்கள் வெற்றியை அடையும் வழி  எதுவென்று கூறினார் ?

  • அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனித்தல்
  • வியர்வை! வியர்வை! வியர்வை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *