Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 1

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 1

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும்

கவிதைப்பேழை: மூதுரை

I. சொல்லும் பொருளும்

  1. மசற – குறைஇல்லாமல்
  2. சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
  3. தேசம் – நாடு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும்.

  1. மேலோட்டமாக
  2. மாசற
  3. மாசுற
  4. மயக்கமுற

விடை : மாசற

2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

  1. இடம் + மெல்லாம்
  2. இடம் + எல்லாம்
  3. இட + எல்லாம்
  4. இட + மெல்லாம்

விடை : இடம் + எல்லாம்

3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

  1. மாச + அற
  2. மாசு + அற
  3. மாச + உற
  4. மாசு + உற

விடை : மாசு + அற

4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. குற்றமில்லாதவர்
  2. குற்றம்இல்லாதவர்
  3. குற்றமல்லாதவர்
  4. குற்றம் அல்லாதவர்

விடை : குற்றமில்லாதவர்

5. சிறப்பு + உடையார் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. சிறப்புஉடையார்
  2. சிறப்புடையார்
  3. சிறப்படையார்
  4. சிறப்பிடையார்

விடை : சிறப்புடையார்

III. குறுவினா

கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

மன்னனையும், குறையில்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனை விடக் கற்றவரே சிறந்தவர்.மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவருக்கு சென்ற இடெமல்லாம் சிறப்பு

IV. சிறுவினா

கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

அறிவியல், பொறியியல், பொருளியல் முதலியவற்றை வளர்ந்தோங்கச் செய்வது கல்வியே. கல்வியால் மனிதன் விண்ணையும் மண்ணையும்  அளக்க அறிநது கொண்டான்.இன்றைய உலகில் அறிவியலின் கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பெருகிய வண்ணமாக உள்ளன. ஒருவனுக்குள் புதைந்து கிடைக்கும் அறியாமையைத் தோண்டி எடுப்பதே கல்வியாகும்.உள்ளத்தை அறிவான் நிலப்பி ஒழுக்கத்தை வளர்த்திட, மனிதனாக வாழந்திட நூல்களைக் கற்பதே கல்வியாகும்.

V. சிந்தனை வினா

கல்லாதவர்க்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக

மனிதனுக்குக் கல்வி கண் போன்றது. கண் இல்லை என்றால் இவ்வுலகமே இருள் மயமாகி விடும். கற்றவரே கண்ணுடையவர். கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்கள உடையவர்கல்லாதவர் விலங்களுக்கும், மரத்துக்கும் ஒப்பாவார்கல்லாதவரால் நாட்டிற்கு பயனில்லாமல் போகும்கல்லாதவரை பெற்றோர்கள். உடன் பிறந்தோர், மனைவி, தம்மக்கள், உற்றார் உறவினர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், ஊரார் மதிக்கமாட்டார்கள்.

 மூதுரை – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. “ஆத்திச்சூடி” நூலின் ஆசிரியர் __________________

விடை : ஒளவையார்

2. “மன்னன்” என்ற சொல்லுக்கும் தமிழில் வழங்கும் வேறு பெயர்கள் __________________

விடை : கோ

3. மூதுரையில் __________________ பாடல்கள் உள்ளன.

விடை : 31

4. மன்னனை விடக் __________________ சிறந்தவர்.

விடை : கற்றவரே

5. இடம் + எல்லாம் = __________________

விடை : இடமெல்லாம்

II. இப்பாடலில் உள்ள எதுகை, மோனைச்சொற்களை எடுத்து எழுதுக

எதுகைச் சொற்கள்மோனைச் சொற்கள்
மன்னனும் – மன்னனின்மன்னனும் – மன்னனின்
கற்றோன் – கற்றோனும்கற்றோன் – கற்றோனும்
சிறப்புடையான் – சிறப்பில்லைசிறப்புடையான் – சிறப்பில்லை
கற்றோன் – கற்றோருக்குகற்றோன் – கற்றோருக்கு
மன்னற்குத் – தன்தேசம்

III. குறுவினா

1. “மூதுரை” என்னும் சொல்லின் பொருள் யாது?

“மூதுரை” என்னும் சொல்லின் பொருள் “மூத்தோர் கூறும் அறிவுரை” என்பதாகும்

2. ஒளவையார் – குறிப்பு வரைக

  • மூதுரையின் ஆசிரியர் ஒளவையார் ஆவார்
  • இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

3. மூதுரை – நூற்குறிப்பு வரைக

மூதுரை என்ற சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள் ஆகும்.சிறந்த அறிவுரைகளை கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.இந்த நூலில் 31 பாடல்கள் உள்ளன

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *