Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 2

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 2

தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

கவிதைப்பேழை: ஒளியின் அழைப்பு

I. சாெல்லும் பாெருளும்

  • விண் – வானம்
  • ரவி – கதிரவன்
  • கமுகு – பாக்கு

II. இலக்கணக் குறிப்பு

  • பிறவி இருள் – உருவகம்
  • ஒளியமுது – உருவகம்
  • வாழ்க்கைப்போர் – உருவகம்

III.பகுபத உறுப்பிலக்கணம்

1. வேண்டி – வேண்டு + இ

  • வேண்டு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. போகிறது – போ + கிறு + அ +து

  • போ – பகுதி
  • கிறு – நிகழ்கால இடைநிலை
  • அ – சாரியை
  • து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

3. மலர்ச்சி – மலர் + ச் + சி

  • மலர் – பகுதி
  • ச் – இடைநிலை
  • சி – தொழிற்பெயர் விகுதி

IV. பலவுள் தெரிக

முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது

  1. மகிழ்ச்சி
  2. வியப்பு
  3. துணிவு
  4. மருட்சி

விடை : துணிவு

V. குறு வினா

கமுகு மரம் எதனைத் தேடியது?

கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது

VI. சிறு வினா

அது வாழ்க்கைப் போர் – எது?

கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும். இதுவே வாழ்க்கைப் போர்.

VII. நெடு வினா

மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக

கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும்.இதுவே வாழ்க்கைப் போர்கமுகு மரம் பெருமரத்துடன் முட்டி மோதி துணிச்சல், முயற்சி, நம்பிக்கைக் கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராணி வென்றது.பெரு மரத்தை விஞ்சி வளர்ச்சி பெற்றி நடை போடுகிறது.அதுபோலவே வாழ்க்கைப் போரில் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்கின்ற வழியைக் கழுகமரம் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகிறார்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ந,பிச்சமூர்த்தி ____________ ஆவார்

விடை : புதுக்கவிதையின் தந்தை

2. ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை _______________ வெளியிட்டவர்.

விடை : ந.பிச்சமூர்த்தி

3. புவிஈர்ப்பு விசையை எதிர்த்து _______________  தாவரத்தின் தனித்துவமாகும்.

விடை : விண்ணோக்கி விரைவது

4. _______________, தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.

விடை : கமுகு மரம்

5. கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் _______________ தேடியது.

விடை : கதிரவன் உயிர்ப்பைத்

6. ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை _______________ என்பதாகும்

விடை : ஸயன்ஸூக்பலி

7. 1932-ல் _______________ வழங்கிய பரிசை பெற்றவர் ந.பிச்சமூர்த்தி

விடை : கலைமகள் இதழ்

II. குறு வினா

1. புதுக்கவிதைகள் என்றால் என்ன?

புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.

2. ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதைகளின் தந்தையென போற்றப்பட காரணம் யாது?

பாரதியின் வசனக் கவிதையைத் தொடந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டார்.

3. ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதைக்கு குறிப்பிடும் வேறு பெயர்கள் யாவை?

  • இலகு கவிதை
  • கட்டற்ற கவிதை
  • விலங்குகள் இலாக் கவிதை
  • கட்டுக்குள் அடங்காக் கவிதை

4. ந.பிச்சமூர்த்தி படைத்த இலக்கிய வகைமைகளைக் கூறுக

  • புதுக்கவிதை
  • சிறுகதை
  • ஓரங்க நாடகங்கள்
  • கட்டுரைகள்

5. ந.பிச்சமூர்த்தி எந்த இதழ்களின் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?

ந.பிச்சமூர்த்தி ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசியராக பணியாற்றி உள்ளார்.

6. ந.பிச்சமூர்த்தியினை குறித்து வல்லிக்கண்ணன் கூறியவை யாவை?

இயற்கையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மையும் காணும் முயற்சிகளே பிச்சமூத்தியின் கவிதைகள் – “புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலில் வல்லிக்கண்ணன் ந.பிச்சமூர்த்தியினை குறிப்பிட்டுள்ளார்.

ஒளியின் அழைப்பு – பாடல் வரிகள்

பிறவி இருளைத் துளைத்து
சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி
எப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது
ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி
எப்படி உடலை நெளித்து நீட்டி, வளைத் து வளருகிறது
எப்படி அமிருதத்தை நம்பி, ஒளியை வேண்டி
பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது
அதுவே வாழ்க்கைப் போர்
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *