தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே
உரைநடை: பெரியாரின் சிந்தனைகள்
I. பலவுள் தெரிக
கூற்று – பெரியார் உயிர் எழுத்துக்களில் “ஐ” என்பதனை “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார்
காரணம் – சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாக தமிழ் எதுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று, காரணம் இரண்டும் சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
விடை : கூற்று சரி, காரணம் தவறு
II. குறு வினா
‘பகுத்தறிவு’ எனறால் என்ன?
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.
III. சிறு வினா
சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
விழாக்கள் மற்றும் சடங்குகளால் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற விழாக்கள் மற்றும் சடங்குளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
திருமணத்தை எளிமையாக சீர்திருத்த முறையில் நடத்த வேண்டும் என்றார்.
விழாக்கள், திருமணங்கள் மற்றும் சடங்குகள் நடத்த கடன் வாங்கி செலவு செய்து கடன்காரர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
பெரியார் சொன்னதைக் கடைபிடித்திருந்தால் இந்நிலை வராது.
IV. நெடு வினா
மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக
இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்க வேண்டும்.மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.மதம், கடவுள் தொடரபற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான அறிவைத் தரும் இலக்கியம், அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலமே மொழியும் இலக்கியமும் மேன்மை அடையும்.திருக்குறளைப் பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதுகிறார்.இந்நூலில் அறிவியல் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்திருப்பதே காரணம் என்றார் பெரியார்.தமிழில் “ஐ” என்பத “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார். |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. _____________ பெண்ணினப் போர்முரசு என்று புகழப்பட்டார்
விடை : தந்தை பெரியார்
2. பெரியாருக்குத் _____________ என்ற பட்டம் கொடுத்த அமைப்பு யுனெஸ்கோ
விடை : தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
3. பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செயத உயிரெழுத்துகள் _____________ ஆகும்
விடை : ஐ, ஒள
4. _____________ பெரியார் தோற்றுவித்தார்
விடை : சுயமரியாதை இயக்கத்தை
5. அறிவியல் அடிப்படையில் _____________ அமைந்தவை
விடை : பெரியாரின் சிந்தனைகள்
6. _____________ என்பது மனித சமூகத்தின் வாழக்கை நலத்திற்கு ஏற்படுத்தப்பட்டன.
விடை : மதங்கள்
7. சமூக வளர்ச்சிக்குக் _____________ மிகச்சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.
விடை : கல்வியை
8. ஒரு மொழியின் தேவை அதன்_____________ கொண்டே அமைகிறது.
விடை : பயன்பாட்டு முறையை
9. 1938-ல் சென்னை பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு _____________ பட்டம் வழங்கியது.
விடை : பெரியார்
II. குறு வினா
1. பெரியாரின் சிறப்பு பெயர்கள் யாவை?
- வெண்தாடி வேந்தர்
- சுயமரியாதைச் சுடர்
- பகுத்தறிவுப் பகலவன்
- வைக்கம் வீரர்
- ஈரோட்டுச் சிங்கம்
- தெற்காசியாவின் சாக்ரடீஸ்
- பெண்ணினப் போர்முரசு
- புத்துலகத் தொலைநோக்காளர்
2. எது மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்துகிறார் பெரியார்?
சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப்போவதில்லை. அதனால் சண்டைகளும், குழப்பங்களும் தான் மேலோங்கிறது.
அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தினார் பெரியார்.
3. பெரியாரின் தன் சிந்தனையால் புரட்சியை ஏற்படுத்திய துறைகள் எவை?
- சமூகம்
- பண்பாடு
- மொழி
- கல்வி
- பொருளாதாரம்
4. தந்தை பெரியார் எதிர்த்தவை எவை?
- இந்தி திணிப்பு
- குலக்கல்வித் திட்டம்
- தேவதாசி முறை
- எள்ளுண்ணல்
- குழந்தைத் திருமணம்
- மணக்கொடை
5. பெரியார் சுய மரியாதை இயக்கத்தை எப்போது தோற்றுவித்தார்?
பெரியார் சுய மரியாதை இயக்கத்தை 1925 தோற்றுவித்தார்
6. பெரியார் எந்தெந்த இதழ்களை நடத்தினார்?
குடியரசு, உண்மை, விடுதலை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
7. பகுத்தறிவு என்பது யாது?
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.
8. பெரியாரின் சிந்தனை எந்தெந்த துறைகளிலெல்லாம் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது?
சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அவரின் சிந்தனை புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.
9. பெரியார் விதைத்த விதைகள் என்று எவற்றையெல்லாம் குறிப்பிடலாம்?
- கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு சொத்துரிமை
- குடும்ப நலத் திட்டம்
- கலப்புத் திருமணம்
- சீர்திருத்தத் திருமணச் சட்டம்
10. மொழி குறித்த பெரியாரின் வரையறை கூறுக.
“மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றார்.
11. பெரியார் பெண் விடுதலை முதன்மையானது என கூறக்காரணம் யாது?
அக்காலத்தில் சென்னை அனைத்துத் துறைகளிலும் ஒடுகப்பட்டிருந்தனர். எனவே, நாட்டு விடுதலையை விட, பெண் விடுதலை தான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்
12. பெரியார் இயக்கமும் இதழ்களும் பற்றிய குறிப்பு வரைக
- தோற்றுவித்த இயக்கம் – சுயமரியாதை இயக்கம்
- தோற்றுவிக்கபட்ட ஆண்டு -1925
- நடத்திய இதழ்கள் – குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)