தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை
உரைநடை : படம் இங்கே! பழமொழி எங்கே?
இயல் மூன்று
உரைநடை
படம் இங்கே! பழமொழி எங்கே?
பழையனூர் மாந்தோப்பில் கிளி ஒன்று இருந்தது. அதன் பெயர் செல்லம்மா. அந்த ஊரில் அதை அவ்வாறுதான் பெயர் சொல்லி அழைப்பார்கள். மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப் பொந்திலிருந்து எடுத்துக் காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால், அதைப் ‘பழமொழிக் கிளி’ என்றும் ஆசையாக அழைப்பார்கள்.
மரத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டு, சிறுவர்கள் ஒவ்வொருவரும் தோப்புக்கு வரத் தொடங்கினர்.
பழமொழிகள் என்பவை, நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகள். பழங்காலம் முதற்கொண்டே பழமொழிகள் வழக்கிலிருந்து வருகின்றன. பழமொழி நானூறு என்னும் பெயரிலேயே நீதிநூல் ஒன்றும் உள்ளது.
சொற்களஞ்சியப் பெருக்கமும் சொல்லாட்சித் திறனும்
செல்லம்மா, நான் பிரபு வந்திருக்கிறேன்.
ஓ! பிரபுவா ! நன்றாக இருக்கிறாயா?
நான் நன்றாக இருக்கிறேன். உன்னைப் பார்த்துவிட்டு மாங்காய் பறித்துச் செல்லலாம் என வந்தேன்.
மிக்க மகிழ்ச்சி! நான் காட்டும் படத்திற்குரிய பழமொழியைக் கூறினால் நானே உனக்கு மாங்காய் பறித்துத் தருகிறேன் என்று கூறியவாறு கிளி ஒரு படத்தை எடுத்துக்காட்டியது
இந்தப் படம் உணர்த்தும் பழமொழி என்ன?
யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
சரியாகக் கூறினாய். இதோ, உனக்கு மாங்காய் பறித்துத் தருகிறேன்.
ஐ….! ரொம்ப நன்றி செல்லம்மா.
எப்படி இருக்கிறாய் செல்லம்மா?
யார் வந்திருப்பது?
வின்சென்ட் வந்திருக்கிறேன் செல்லம்மா. எனக்கும் மாங்காய் வேண்டும்.
இந்தப் படம் உணர்த்தும் பழமொழி என்ன என்று சொல். மாங்காய் தருகிறேன்..
இக்கரைக்கு அக்கரை பச்சை
நன்று, சீக்கிரமாக விடை கண்டுபிடித்து
விட்டாயே! இதோ உனக்கு மாங்காய்!
எனக்கு மாங்காய் கிடைத்துவிட்டது.
நன்றி செல்லம்மா!
கனிமொழி ஏன் அமைதியாக நிற்கிறாய்?
உனக்கு மாங்காய் வேண்டாமா?
வேண்டும் செல்லம்மா!
இந்தப்படம் உணர்த்தும் பழமொழி
என்னவென்று சொல் பார்க்கலாம்.
சூறைக்காற்று வீசுது.
இல்லையே கனிமொழி இன்னும் கொஞ்சம் யோசி.
ஆங்….. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.
அழகாகக் கூறினாய் இதோ மாங்காய்
வாங்கிக் கொள்.
உண்மையாகவே நான் அழகாகக்
கூறினேனா? நன்றி செல்லம்மா!
என் நண்பன் முகமது
வந்திருக்கிறான் செல்லம்மா!
அப்படியா, இதிலுள்ள பழமொழி என்ன என்று கூறச்சொல், மாங்காய் தருகிறேன்.
எனக்குத் தெரியும் கூறுகிறேன்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
மிகவும் அருமை! நான் உனக்கு
மாம்பழமே தேடிப் பறித்துத் தருகிறேன்.
நன்றி செல்லம்மா!
செல்லம்மா! எனக்கு?
தேனிசையா? இதில் என்ன பழமொழி இருக்கு சொல்லேன். உடனே பறித்துத் தருகிறேன்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
கண்ணிமைக்கும் நேரத்தில் கூறிவிட்டாயே! இதோ மாங்காய் வாங்கிக்கொள்.
மாங்காய் சாப்பிட மிகவும் பிடிக்கும் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது செல்லம்மா, நன்றி!
பழமொழிக்கிளி! எனக்கு மாங்காய் இல்லையா?
யாரு என் செல்லப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது? கதிரவனா? இதன் பழமொழியைக் கூறு தருகிறேன்.
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
மிக்க மகிழ்ச்சி! இதோ உனக்கு மாங்காய், பெற்றுக்கொள்.
ரொம்ப நன்றி பழமொழிக் கிளி!
சிறுவர்கள் அனைவரும் செல்லம்மா! நாங்கள் இன்னும் நிறைய பழமொழிகளைத் தெரிந்து கொண்டு மீண்டும் நாளைக்கு வருகிறோம், எனக் கூறிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றனர்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. மரப்பொந்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) மரம் + பொந்து
ஆ) மர + பொந்து
இ) மரப் + பொந்து
ஈ) மரப்பு + பொந்து
விடை : அ) மரம் + பொந்து
2. அக்கரை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அக் + கரை
ஆ) அந்த + கரை
இ) அ + கரை
ஈ) அ + அரை
[விடை : இ) அ + கரை]
3. சூறை + காற்று இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சூறைகாற்று
ஆ) சூற்காற்று
இ) சூறக்காற்று
ஈ) சூறைக்காற்று
[விடை : ஈ) சூறைக்காற்று]
4. கண் + இமைக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கண்ணிமைக்கும்
ஆ) கண் இமைக்கும்
இ) கண்மைக்கும்
ஈ) கண்ண மைக்கும்
[விடை : அ) கண்ணிமைக்கும்]
5. நானூறு இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நான்கு + நூறு
ஆ) நா + நூறு
இ) நான்கு + னூறு
ஈ) நான் + நூறு
[விடை : அ) நான்கு + நூறு]
ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) மணியோசை – மணி + ஓசை
ஆ) தேனிசை – தேன் + இசை
இ. பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க:
புத்தி, அடி, காலை, பயிர், வளையாதது
1. யானைக்கும் அடி சறுக்கும்.
2. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
3. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
4. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
5. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஈ. சொல்லை இடம் மாற்றிப் பழமொழியைக் கண்டுபிடிக்க.
1. உழுவதை அகல விட உழு ஆழ……………………………..
விடை
அகல உழுவதை விட ஆழ உழு. வளையாதது
2. வளையாது ஐம்பதில் ஐந்தில்……………………………
விடை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
3. மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு அமிழ்தமும்……………………………..
விடை
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.
4. குற்றம் சுற்றம் பார்க்கின் இல்லை……………………………..
விடை
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
5. கற்பவர் கரையில் கல்வி நாள்சில……………………………..
விடை
கல்வி கரையில கற்பவர் நாள்சில.
உ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. பழமொழி என்பது யாது?
விடை
நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய வார்த்தைகளே பழமொழிகள் ஆகும்.
2. கிளி, யாருக்கு மாம்பழம் தருவதாகக் கூறியது?
விடை
செல்லம்மாவுக்கு மாம்பழம் தருவதாகக் கிளி கூறியது.
3. கிளியைப் ‘பழமொழிக் கிளி‘ என அழைக்கக் காரணம் என்ன?
விடை
மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப்பொந்திலிருந்து எடுத்துக்காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால் அதைப் ‘பழமொழிக் கிளி’ என்று அழைக்கின்றனர்.
4. இப்பாடத்தில் நீ அறிந்து கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடு.
விடை
● யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
● இக்கரைக்கு அக்கரை பச்சை.
● ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
● ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி.
● காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
● அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்.
சிந்தனை வினா
கிளியைப்போல், நீ பழமொழி கூறுவதாய் இருந்தால் என்ன பழமொழிக்கு எப்படிப் படம் வரைந்து விளக்குவாய்? வகுப்பறையில் செயல்படுத்து.
விடை
பழமொழி: அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.
கற்பவை கற்றபின்
1. உன் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி பேசும்போது பயன்படுத்தும் பழமொழிகளைத் தொகுத்து வருக. அவைபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
விடை
● சிறுதுளி பெருவெள்ளம்
● தனிமரம் தோப்பாகாது
● ஒற்றுமையே உயர்வு
● ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
● இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே
● தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
● விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை
ஆகிய பழமொழிகள் என் தாத்தா, பாட்டி பேசும் போது பயன்படுத்தும் பழமொழிகள் ஆகும்.
2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பழமொழிகளையும், அவற்றின் பொருள்களையும் உம் சொந்த நடையில் கூறுக.
விடை
(i) யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
முன்னெச்சரிக்கை அறிந்து செயல்படுதல்.
(ii) இக்கரைக்கு அக்கரை பச்சை.
இதற்கு அதுவே பரவாயில்லை.
(iii) ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
ஆடி மாதக் காற்றில் அம்மி கூடப் பறந்துவிடும்.
(iv) ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி.
திருக்குறளும், நாலடியாரும் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.
(v) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
வாய்ப்புகளைக் கிடைக்கும்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(vi) அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.
எந்தச் செயலையும் ஆழ்ந்து செய்ய வேண்டும்.
3. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள புதிர்களையும் அவற்றிற்கான விடைகளையும் உம் சொந்த நடையில் கூறுக.
விடை
4. பள்ளி நூலகத்தில் உள்ள பழமொழிக்கதைகள் புத்தகத்தைப் படித்து பழமொழிக்கான விளக்கத்தை வகுப்பறையில் கதையுடன் பகிர்ந்து கொள்க.
விடை
பள்ளி குளத்தின் அருகே வசித்து வந்த எலியும் தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் அந்தக் குளத்தில் கோடை காலம் என்பதால் நீர் வறண்டுவிட்டது. எலி அலைந்து, திரிந்து எப்படியே ஒரு நீருள்ள பெரிய குளத்தைக் கண்டுபிடித்தது. தனது நண்பன் தவளையே அழைத்துக் கொண்டு சென்றது.
வழியில் காணாமல் போய்விடுவோம். அதனால் எலியும் தவளையும் கயிற்றால் இருவரின் காலையும் இணைத்துக் கட்டிக் கொண்டன. நீண்ட பயணத்திற்குப் பிறகு குளம் வந்தது. குளத்தைக் கண்டவுடன் தன்னுடன் கயிற்றில் கட்டியுள்ள எலியை நினைக்காமல், நன்றி மறந்து குளத்துக்குள் குதித்து விளையாடியது.
கயிற்றால் கட்டப்பட்டிருந்த எலி பரிதாபமாக செத்தது. பருந்து ஒன்று எலியைத் தின்பதற்காகத் தூக்கிய போது எலியுடன் கட்டப்பட்ட தவளையும் மாட்டிக் கொண்டு, மாண்டு போனது.