Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 1

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 1

தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை

பாடல் : கடல்

இயல் மூன்று

இயற்கை

கற்றல் நோக்கங்கள்

❖ இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறுவர்.

❖ பழமொழிகள் உணர்த்தும் ஆழமான பொருளை அறிந்து பயன்படுத்துவர்

❖ புதிர்கள், விடுகதைகள் உருவாக்கும் திறன் பெறுவர்

❖ எழுவாய், செயப்படு பொருள், பயனிலை அறிந்துகொள்வர்

பாடல்

கடல்

எல்லை அறியாய் பெருங்கடலே – நீதான்

இரவும் உறங்காயோகடலே

அல்லும் பகலும் அலைகடலே – உனக்கு

அலுப்பும் இலையோ கருங்கடலே

பொங்கு திரைகளோகடலே – அவை

புரவி நிரைதாமோகடலே

எங்கும் உனதொலியோகடலே – அன்றி

இடியின் முழக்கமோகடலே!

மலையை வயிற்றடக்கம் கடலே! – எண்ணில்

மகர மீனுலவும் கடலே!

விலைகொள் முத்தளிக்கும் கடலே! – சிப்பி

விளையாடற் குதவும் கடலே!

மழைக்கு மூலமும் நீ கடலே! – அதை

வாங்கி வைப்பதும் நீகடலே!

வழுத்து மகிமையெலாம் கடலே! – எவர்

மதித்து முடிக்கவலார் கடலே!

– கவிமணி தேசிக விநாயகம்

சொல் பொருள்

அலுப்பு – களைப்பு

மகரம் – மீன்

மகிமை – பெருமை

புரவி – குதிரை

திரைகள் – அலைகள்

பாடல் பொருள்

எல்லையின்றிப் பரந்து விரிந்திருக்கும் பெருங்கடலே! நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய். உனக்கு ஓய்வு என்பதே இல்லை. பொங்கி வருகின்ற உன் அலைகள், பார்ப்பதற்குக் குதிரைகள் அணிவகுத்து வருவதைப்போல் காட்சியளிக்கின்றன. எங்கும் ஒலிக்கின்ற உன் ஒலி, அலையோசையால் எழுந்ததா அல்லது இடியோசையால் எழுந்ததா என்று எங்களுக்கு ஐயம் எழுகிறது. உன்னுள் உயர்ந்த மலையும் அடங்கிக் கிடக்கிறது. எண்ணில்லாத மீன் வளங்களையும் விலை மதிப்புடைய முத்துகளையும் கொண்டுள்ள நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும் உதவுகிறாய். இப்பூமியில் மழை பெய்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய், அந்த மழைநீரைச் சேமித்து வைக்கும் வைக்கும் பெரிய கலனாகவும் விளங்குகிறாய். ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைக்க வல்லவர்கள் இங்கு எவரும் இலர்.

ஆசிரியர் குறிப்பு

இப்பாடலைப் பாடியவர், கவிமணி தேசிக விநாயகம். இவர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். இவர், இனிமையும் எளிமையும் மிக்க பாடல்களை எழுதியமையால், கவிமணி என்று போற்றப்பெற்றார். நம் பாடப்பகுதியிலுள்ள பாடல், குழந்தைப்பாடல்கள் என்னும் தலைப்பில் முதற்பாடலாக அமைந்துள்ளது.

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) பெருமைகடல்

ஆ) பெருங்கடல்

இ) பெரியகடல்

ஈ) பெருமைக்கடல்

[விடை : ஆ) பெருங்கடல்]

2. கருங்கடலே என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கருமை + கடலே

ஆ) கருங் + கடலே

இ) கரும் + கடலே

ஈ) கரு + கடலே

[விடை : அ) கருமை + கடலே]

3திரை‘ என்ற சொல்லின் பொருள்.

அ) மலை

ஆ) அலை

இ) வலை

ஈ) சிலை

[விடை : ஆ) அலை]

4. மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது

அ) வானம்

ஆ) பூமி

இ) கடல்

ஈ) நெருப்பு

[விடை : இ) கடல்]

ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. எல்லை – அல்லும்

விடை

பொங்கு – எங்கும்

மலையை – விலைகொள்

கடலே – கடலே

திரைகளோ – நிரைதாமோ?

இ. முதலெழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. அல்லும் – அலுப்பும்

விடை

மலையை – மகர

விலைகொள் – விளையாடற்

மழைக்கு – மதித்து

கடலே – கடலே

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?

விடை

மீன்கள், முத்துகள், சிப்பிகள்.

2. பாடலின் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.

விடை

● பெருங்கடலே! நீ இரவு பகல் உறங்காது அலைவீசி, ஓய்வில்லாமல் இருக்கின்றாய்.

● அலைகள் குதிரைகள் அணிவகுத்து வருவது போல் உள்ளது.

● அலையோசையா? இடியோசையா? என ஐயம் எழுகின்றது.

● அலைகள், மீன்கள், சிப்பிகள், முத்துகள் ஆகியவற்றைக் கொண்டது கடல்.

● பூமியில் மழை பெய்யவும், மழைநீரைத் தேக்கும் கலமாகவும் கடல் விளங்குகின்றது. ஆகவே, உன் பெருமைகளைச் சொல்ல வல்லவர்கள் யாரும் இல்லை.

உ. சிந்தனை வினா

எல்லையறியாய் பெருங்கடல் என்று கூறக் காரணம் என்னவகுப்பறையில் கலந்துரையாடுக.

விடை

கடல் எல்லையற்றது. அதற்கு இதுதான் முடிவு என்று கூறமுடியாது. அது விரிந்து பரந்துள்ளது. எனவே எல்லையறியாய் பெருங்கடல் என்று கவிஞர் கூறியிருக்கின்றார்.

கற்பவை கற்றபின்

 பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.

 கடலைப் பற்றி இப்பாடல் மூலம் நீ அறிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறுக.

விடை

கடல் மிகவும் அழகாக இருக்கும். கடலில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் கப்பல்கள் செல்லும். சங்கு, முத்து, மீன்கள் ஆகிய எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் அலை வீசிக் கொண்டே இருக்கும். மழையாக பெய்யும் நீரான இறுதியில் கடலையேச் சென்றடையும்.

 கடலைப் பற்றி நீ அறிந்த பாடல்களை வகுப்பறையில் பாடி மகிழ்க.

விடை

கடல்

அலைவதால் உனக்கு அலைகடல் பேரோ? நிலையிலா

உலகின் நிகழ்வுகளைக் காட்டிடவே அலைகிறாய்

போலும் அங்குமிங்கும்! ஆட்டமிட்டு விலையிலா

பொருள்களை விளைத்திடும் கடல் தாய்!

முத்துடன் பவளமெனக் கத்துகடல் அளித்திடுமே!

சத்தமிடும் சங்கீதக் கடலுக்கு வந்தனமே!

முத்தமிடும் தரைதனையே முழுதாடை கடலென்பார்

வித்தகரின் பாடலைப் போல் விலையேது கடலுக்கே!

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *