தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
2. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒரு காட்டில் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் விவாதம் நடந்தது
நாங்கதான் எல்லாருக்கும் அதிகமாகப் பயன்படுகிறோம். ஆகவே, உங்களைவிட நாங்கள்தான் உயர்ந்தவர்கள்
எங்களால்தான் நீங்கள் பாதுகாப்பாக வளர்கிறீர்கள்! ஆகவே, நாங்கள்தான் உயர்ந்தவர்கள்
யார் உயர்ந்தவர் என ஒரு போட்டி வைத்துப் பார்த்துவிடுவோமா?
ஓ! நாங்கள் தயார். என்ன போட்டி? சொல்லுங்கள்.
ஒரு மாதத்திற்கு நீங்கள் எல்லாம் இந்தக் காட்டைவிட்டு வெளியே சென்று வசிக்கவேண்டும்.
சரி, இப்போட்டிக்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்
எல்லா விலங்குகளும் பாலைவனம் நோக்கிச் சென்றன.
.மரங்கள் இல்லாமல் குளிர்ச்சி இல்லையே ஒரே வெப்பமாக இருக்கிறதே
எனக்கும் எந்தக் கிழங்கும் காயும் கிடைக்கவில்லையே
திடீரென ஒருநாள் பாலைவனத்தில் வேட்டைக்காரர்கள் வந்து விலங்குகளை
வேட்டையாடுகின்றனர்.
ஐயோ! நாங்கள் எப்படி தப்பிப்பது?
வேட்டைக்காரர்கள் வேட்டையாடிய விலங்குகளைத் தூக்கிச்செல்கின்றனர்
மீதி விலங்குகள் ஒன்று கூடின. நாம் பாதுகாப்பான காட்டை விட்டு வந்தது தவறு மீண்டும் காட்டுக்குச் செல்வோம் என்று முடிவெடுத்தன
விலங்குகள் இல்லாத நேரத்தில் காட்டுக்குள் புகுந்த மனிதர்கள் மரங்களை வெட்டினர்
வெட்டிய மரங்களை எடுத்துச்சென்றனர்
வெட்டப்பட்ட மரங்களைப் பார்த்து திரும்பி வந்த விலங்குகள் அதிர்ச்சி அடைந்தன
மரங்களே, உங்களுக்கு என்னவாயிற்று?
நீங்கள் இல்லாத நேரத்தில் சில மரங்களை மனிதர்கள் வெட்டி எடுத்துச்
சென்றுவிட்டனர்
எங்கே சில நண்பர்களை காணோம்
பாலைவனத்தில் இருந்தபோது எங்களுள் சிலரை வேட்டையாடிச் சென்றுவிட்டனர்
எங்களுக்கு உணவு தண்ணீர் பாதுகாப்பு எல்லாமும் காட்டில்தான் கிடைக்கிறது
ஆமாம் நண்பர்களே நீங்கள் இருந்தால்தான் எங்களுக்கும் பாதுகாப்பு
இங்கு யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. அனைவரும் சமமானவர்களே! எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம்
திறன்: பண்புகளை வளர்த்தல்
நீதிக் கருத்து : ஒற்றுமையே வலிமை
படம் பார்ப்போம்! பேசி மகிழ்வோம்!
பறவைகள், விலங்குகள், மரங்கள் ஆகியவற்றின் படங்களை வகுப்பின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து அட்டைகளில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அந்த அட்டைகளை மேசையின் மேல் கவிழ்த்து வைக்கவேண்டும். வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவரையும் அழைத்து ஓர் அட்டையை எடுக்கச் செய்யவேண்டும். அந்த அட்டையில் என்ன படம் வருகிறதோ, அதனைப்பற்றி மூன்று தொடராவது பேசச் சொல்லவேண்டும். அவரை வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் பாராட்ட வேண்டும்.
பயிற்சி
வாங்க பேசலாம்
1. மரங்கள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் பயன்தருகின்றன. எப்படி? உம் கருத்தை வெளிப்படுத்துக.
• மரங்கள் நமக்கு மழைப்பொழிவு பெற உதவுகின்றன
• தூய காற்றைத் தருவதில் மரங்களின் பங்கு அதிகம்.
• மரங்கள் மூலம் பழங்கள், காய்கறிகள் போன்றவை உணவாக நமக்குக் கிடைக்கின்றன.
• மரங்களின் உறுப்புகள் நோய் தீர்க்கும் மருந்தாகவும் நமக்குப் பயன்படுகின்றன.
• மரங்கள் இயற்கை அரணாகவும் நமக்கு விளங்குகின்றன.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஒத்துக்கொள்கிறோம் – இச்சொல்லின் பொருள் ______________.
அ) விலகிக் கொள்கிறோம்
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்
இ) காத்துக் கொள்கிறோம்
ஈ) நடந்து கொள்கிறோம்
விடை : ஆ) ஏற்றுக் கொள்கிறோம்
2. வேட்டை + ஆட – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________
அ) வேட்டையட
ஆ) வேட்டையாட
இ) வேட்டைஆடு
ஈ)வெட்டையாட
விடை : ஆ) வேட்டையாட
3. மரங்களிடையே – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) மரம் + இடையே
ஆ) மரங்கள் + இடையே
இ) மரங்கள் + கிடையே
ஈ) மரங்கல் + இடையே
விடை : ஆ) மரங்கள் + இடையே
4. அங்குமிங்கும் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.
அ) அங்கு + மிங்கும்
ஆ) அங்கும் + இங்கும்
இ) அங்கு + இங்கும்
ஈ) அங்கும் + இங்கு
விடை. : ஆ) அங்கும் + இங்கும்
5. ‘மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்’ என்று கூறியது __________.
அ) சிங்கம்
ஆ) புலி
இ) முயல்
ஈ) மான்
விடை : ஈ) மான்
வினாக்களுக்கு விடையளி
1. மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன.
2. காட்டைவிட்டு எவை வெளியேறின?
காட்டை விட்டு விலங்குகள் வெளியேறின
3. விலங்குகளுக்கும் மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?
யார் உயர்ந்தவர் என்ற எண்ணம் தோன்றியதால் போட்டி வந்தது.
4. கதையின் மூலம் நீ அறிந்து கொண்டதை எழுதுக.
இயற்கையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதில்லை. அனைவரும் சமமானவர்கள், ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை இக்கதை மூலம் அறிந்து கொண்டேன்.
புதிர்களைப் படித்து, விடையைக் கண்டறிக.
காட்டின் அரசன் ஆவான்; நெருப்பு போன்ற கண்கள் உடையவன்; முழக்கமிடுவான் – அவன் யார்?
விடை : சிங்கம்
என் உடலில் புள்ளிகள் உண்டு. நான் துள்ளித்துள்ளி ஓடுவேன். நான் யார்?
விடை : மான்
வேர்பிடித்து வளர்ந்திடுவேன்; தண்ணீரை உறிஞ்சிடுவேன்; மழைபெற உதவிடுவேன். நான் யார்?
விடை : மரம்
எந்த மரத்திலிருந்து என்ன பொருள்? பொருத்துவோமா?
குழுவில் சேராததை வட்டமிடுக.
1. மயில், கிளி, புறா, புலி, கோழி
2. ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
3. தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மட்டைப்பந்து
4. வெண்மை , கருமை, மென்மை, பசுமை, செம்மை
5. கத்தரி, வெண்டை , தக்காளி, தென்னை , மிளகாய்
சொல் விளையாட்டு
1. பாலம்
2. பாரம்
3. பாடம்
4. பாதம்
5. பாசம்
படம் பார்ப்போம்! பேசி மகிழ்வோம்!
பறவைகள், விலங்குகள், மரங்கள் ஆகியவற்றின் படங்களை வகுப்பின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து அட்டைகளில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அந்த அட்டைகளை மேசையின் மேல் கவிழ்த்து வைக்கவேண்டும். வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவரையும் அழைத்து ஓர் அட்டையை எடுக்கச் செய்யவேண்டும். அந்த அட்டையில் என்ன படம் வருகிறதோ, அதனைப்பற்றி மூன்று தொடராவது பேசச் சொல்லவேண்டும். அவரை வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் பாராட்ட வேண்டும்.
சிந்திக்கலாமா
விலங்குகளின் இருப்பிடம் காடுகள். காடுகளை அழித்து, அடுக்குமாடிகளும் தொழிற்சாலைகளும் கட்டினால், விலங்குகள் எங்குச் செல்லும்? உணவுக்கு என்ன செய்யும்? இதற்கென்ன தீர்வு?
காடுகளை அழிப்பதால் தான் விலங்குகள் இரையைத் தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. ஊருக்குள் யானை புகுந்தது; ஊருக்குள் சிறுத்தை பதுங்கல்; கரும்புக் காட்டிற்குள் யானைகள் தஞ்சம் என்று செய்திகள் வருகின்றன. காடுகளில் விலங்குகளின் வழித்தடங்களை அழித்து தங்கும் விடுதிகளையும் குடியிருப்புகளையும் உருவாக்கினால் அவை என்ன செய்யும்? ஊருக்குள் விலங்குகள் புகுந்து வயல்வெளிகளையும், வாழைத் தோப்புகளையும் நாசம் செய்யத்தான் செய்யும்.
அதிகமான விலங்குகள் வாழும் காட்டுப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தங்கும் விடுதிகள் அமைப்பதை தடுக்க வேண்டும். காட்டுப் பகுதிகளில் விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏதுவாக குட்டைகளை உருவாக்க வேண்டும். காடு செழித்தால் தான் நாடு செழிக்கும். ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அடர்ந்த காட்டுப் பகுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் விலங்குகள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.