சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : உள்ளாட்சி அமைப்புகள்
I. பயிற்சிகள்
1. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
- பல்வந்ராய் மேத்தா குழு
- அசோக் மேத்தா குழு
- GVK ராவ் மேத்தா குழு
- LM சிங்வி மேத்தா குழு
விடை : GVK ராவ் மேத்தா குழு
2. _______காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
- சோழர்
- சேரர்
- பாண்டியர்
- பல்லவர்
விடை : சோழர்
3. 73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
- 1992
- 1995
- 1997
- 1990
விடை : 1992
4. ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர்_______ ஆவார்.
- ஆணையர்
- மாவட்ட ஆட்சியர்
- பகுதி உறுப்பினர்
- மாநகரத் தலைவர்
விடை : மாவட்ட ஆட்சியர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ‘உள்ளாட்சி அமைப்புகளின்’ தந்தை என அழைக்கப்படுபவர்__________.
விடை : ரிப்பன் பிரபு
2. நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது__________ஆக விளங்கியது.
விடை : பஞ்சாயத்து
3. சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை__________ என்றழைக்கப்பட்டது.
விடை : குடவோலை முறை
4. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு__________ஆகும்.
விடை : கிராம ஊராட்சி
5. பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர்__________ஆவார்.
விடை : செயல் அலுவலர்
III. பொருத்துக
1. மாவட்ட ஊராட்சி | கிராமங்கள் |
2. கிராம சபைகள் | மாநகரத் தலைவர் |
3. பகுதி குழுக்கள் | பெருந்தலைவர் |
4. ஊராட்சி ஒன்றியம் | மாவட்ட ஆட்சியர் |
5. மாநகராட்சி | நகராட்சிகள் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ
IV. தவறுகளைக் கண்டறிந்து பிழை திருத்தி எழுதவும்
1. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
ஊராட்சி ஒன்றியம் பல கிராமங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
3. நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.
மாநகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.
4. ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்த்நெடுக்கப்படுகின்றனர்.
ஆம் சரியான கூற்று
V. சுருக்கமான விடையளி:
1. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
- சொத்து வரி
- தொழில் வரி
- வீட்டு வரி
- குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
- நில வரி
- கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
- மூன்று அடுக்கு அமைப்பு
- கிராம சபை
- தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்
- நிதி ஆணையத்தினை நிறுவுதல்
- மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு
- மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.
3. கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?
- குடிநீர் வழங்குதல்
- தெருவிளக்குகளைப் பராமரித்தல்
- சாலைகளைப் பராமரித்தல்
- கிராம நூலகங்களைப் பராமரித்தல்
- சிறிய பாலங்களைப் பராமரித்தல்
- வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
- வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்
- தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
- தெருக்களைச் சுத்தம் செய்தல்
- இடுகாடுகளைப் பராமரித்தல்
- பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல
4. உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப்பணிகள் யாவை?
- கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்
- சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்
- மரங்களை நடுதல்
- விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்
- வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்
- பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்
5. மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?
பகுதி உறுப்பினர்கள மக்களால் நேரடியாகத் தேர்ந்கதடுக்கப்படுகின்றனர். இவ்வுறுப்பினர்கள் தங்களில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.
6. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
- பேரூராட்சி – 10,000 அதிகமான மக்கள் வாழும் பகுதி
- நகராட்சி – ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி
- மாநகராட்சி – பல லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரும் நகரப் பகுதி
VI. ஒரு பத்தியில் விடையளி
1. 1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
- ஊராட்சி மற்றும் நகராட்சிகள் ‘உள்ளாட்சி அமைப்பு’ நிறுவனங்களாகச் செயல்படும்.
- குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன.
- கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன. இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் ரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.
- நேரடித் தேர்தலின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
- அனைத்து அளவு நிலைகளில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடங்களில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
- பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் பெண்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. எல்லா அளவு நிலைகளிலும் தலைவர்கள் பதவிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் மற்றும் பதவிக்காலம் நிறைவடையும் முன்பாகவே தேர்தல்கள் நடத்தப்பெற்று, புதிய அமைப்புகள் உருவாக்கப்படுதல் வேண்டும். ஆட்சி கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
2. உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?
- உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.
- நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதீப்பீடு ஒத்துப்போவதில்லை.
- உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன.
- மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்ததெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.