Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium Disaster Management Responding to Disasters

Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium Disaster Management Responding to Disasters

TNPSC Group 1 Best Books to Buy

சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர் கொள்ளுதல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

TNPSC Group 4 Best Books to Buy

1. கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.

  1. காவலர்கள்
  2. தீயணைப்புப் படையினர்
  3. காப்பீட்டு முகவர்கள்
  4. அவசர மருத்துவக் குழு

விடை : காப்பீட்டு முகவர்கள்

2. ‘விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்! என்பது எதற்கான ஒத்திகை?

  1. தீ
  2. நிலநடுக்கம்
  3. சுனாமி
  4. கலவரம்

விடை : நிலநடுக்கம்

3. தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.

  1. 114
  2. 112
  3. 115
  4. 118

விடை : 112

4. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?

  1. தீ விபத்திலிருந்து தப்பிக்க “ நில்! விழு! உருள்!
  2. விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்! என்பது நிலநடுக்க தயார் நிலை
  3. “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.
  4. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்ளவும்.

விடை : “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.

5. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு தொடர்புடையது?

  1. “காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.
  2. “கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.
  3. “கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
  4. “கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேண்டாம்.

விடை : “கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.

II. குறுகிய விடையளி

1. பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர் யாவர்?

  • காவலர்கள்
  • தீயணைப்புத் துறையினர்
  • அவசர மருத்துவ குழுக்கள்

2. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?

  • தடுத்தல்
  • தணித்தல்
  • தயார் நிலை
  • எதிர் கொள்ளல்
  • மீட்டல்
  • புணர் வாழ்வு
  • மறு சீரமைப்பு

3. ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க வலை காணப்பட்டாலும் இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஏன்?

ஜப்பானில் விட அதிக பரப்பளவை இந்தோனிசியா கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன

4. இந்தியாவில் ஒவ்வொருநாளும் எத்தனை ஆண்கள் பெண்கள் தீவிபத்தினால் இறக்கின்றனர்?

  • இந்தியாவில், தீ மற்றும் தீ சார்ந்த விபத்துகளால் சுமார் 25,000 பேர் இறக்கின்றனர்.
  • இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 42 சதவீதம் பெண்களும் 21 சதவீதம் ஆண்களும் தீவிபத்தினால் இறக்கின்றனர்.

5. சுனாமிக்குப் பிறகு என்னசெய்யவேண்டும்?

  • உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் முதலுதவி பெறவும்.
  • காயமடைந்த, சிக்கிகொண்ட நபர்களுக்கு உதவி செய்யவும்.
  • கட்டிடம் நீர் சூழ்ந்து காணப்பட்டால் விலகி இருக்கவும்.
  • எரிவாயு மணம் வந்தால் சன்னலைத் திறந்து விட்டு அனைவரையும் வெளியேறச் செய்ய வேண்டும்.
  • அண்மைச் செய்திகளை வானொலி அல்லது தொலைக்காட்சி மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

III. குறுகிய விடையளி

1. ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

  • ஆழிப் பேரலை உயிர்ச் சேதத்தையும் பொருட்சேததத்தையும் ஏற்படுத்துகிறது.
  • கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப் பேரலையாகும்.
  • ஆழிப் பேரலையானது 10 – 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 – 800 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கும்.
  • இது மின்சாரம், தகவல் தொடர்பு, நீர் அளிப்பு போன்றவற்றைப் பாதிக்கின்றது.

2. நிலநடுக்கத்தின்போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

  1. மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒருகையால் பிடித்துக்கொண்டு ஒரு கையால் தலையை மூடிக் கொள்ளவும். அறையில் எந்த மரச்சாமான்களும் இல்லையெனில், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
  2. அறையின் மூலையில், மேசையின் அடியில் அல்லது கட்டிலுக்கு அடியில் அமர்ந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும்.
  3. கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
  4. நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும். அதன்பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.

3. ஆழிப் பேரலையை எவ்வாறு எதிர்கொள்வாய்?

  • 1. முதலில் நீங்கள் இருக்கும் வீடு, பள்ளி, பணிபுரியுமிடம், அடிக்கடி சென்று வருமிடம் போன்றவை கடலோர ஆழிப் பேரலை பாதிப்பிற்குட்பட்ட இடங்களா எனக் கண்டறிவேன்.
  • ஆழிப் பேரலை பாதிப்புக்குள்ளாகும் உங்கள் வீடு, பள்ளி , பணிபுரியுமிடம், அடிக்கடி சென்று வருமிடம் போன்றவற்றிலிருந்து வெளியேறும் வழியைத் திட்டமிடவுடுவேன்.
  • ஆழிப்பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்துகொள்ள உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காண்பேன்.
  • ஆழிப் பேரலையைப் பற்றி குடும்பத்துடன் கலந்துரையாடவும். ஆழிப் பேரலையின்போது என்ன செய்யவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இது ஆழிப் பேரலையைப் பற்றிய பயத்தைக் குறைக்க உதவுவேன்.

4. கலவரத்தின் போது வாகனத்தில் சிக்கிக் கொண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • நீங்கள் கலவரத்தில் சிக்கியிருந்தால் கூட்டத்தின் விளிம்பு பகுதிக்குப் பாதுகாப்பாகச் செல்லவேன். முதல் முயற்சியில் கூட்டத்திலிருந்து வெளியேறி அருகில் உள்ள கட்டடம் அல்லது சரியான வெளியேறும் வழி அல்லது சந்து வழியே செல்வேன் அல்லது கூட்டம் கலைந்து செல்லும் வரை தங்குமிடத்தில் அடைக்கலம் புகுவேன்.
  • கலவரத்தின்போது காவல்துறை அல்லது பாதுகாப்புப் படை என்னை கைது செய்தால் அவர்களைத் தடுக்க முயல மாட்டேன். மாறாக, அமைதியாக அவர்களுடன் சென்று சட்ட ஆலோசகரைத் தொடர்பு கொண்டு இக்கட்டான நிலைக்கானத் தீர்வைப் பெறுவேன்.
  • நீங்கள் கூட்டத்தில் சிக்கியிருந்தால் கண்ணாடியிலான கடை முகப்பிலிருந்து விலகியிருக்கவும். மேலும் கூட்டத்துடன் நகர்ந்து செல்வேன்.
  • துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாக படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்வேன்.

5. தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் என மூன்று வாக்கியங்களில் எழுது.

  1. அமைதியாக இருப்பேன்.
  2. அருகில் உள்ள தீ அபாயச்சங்குப் பொத்தானை அழுத்தவேன் அல்லது 112-ஐ அழைப்பேன்
  3. அவர்களிடம் என் பெயரையும் நான் இருக்குமிடத்தையும் தெரிவித்து நான் என்ன செய்யவேண்டும் எனக் காவலர் கூறும்வரை தொடர்ந்து இணைப்பில் இருப்பேன்.
  4. கட்டடத்தை விட்டு உடனடியாக வெளியேறுவேன்.
  5. மற்றவர்களையும் உடனடியாக வெளியேறச் சொல்லுவேன்.
  6. தீ விபத்தின் போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்வேன்.
  7. மின்தூக்கிகள் பழுதடைந்திருக்கலாம் எனவே அதைப் பயன்படுத்த மாட்டேன்.

IV. விரிவான விடையளி

கீழ்க்காணும் படங்களைப் பார்த்து கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி

1. நிலநடுக்கத்தின்போது மேசைக்கு அடியில் அமர்ந்து ஒரு கையால் தலையை மூடிக்கொண்டு மற்றொரு கையால் மேசையின் காலைப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது ஏன்?

  • மேசையின் அடியில் அமர்ந்து கொண்டால், நிலநடுக்கத்தால் உடைந்து விழும் பொருட்கள் உங்கள் மீது விழாமல் தடுக்கப்படும்.
  • மேசையின் காலைப்பிடித்துக் கொள்வதன் மூலம், நிலநடுக்க அசைவின் போது நீங்கள் அசையாமல் பிடித்துக் கொள்ள மேசையின் கால்கள் உதவும்.

2. நில நடுக்கத்தின் போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்?

நில நடுக்கத்தின் போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. காரணம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நீங்கள் இடையில் மாட்டிக் கொள்வீர்கள்.

3. நிலநடுக்கம் ஏற்படும்போது நீங்கள் ஒருவேளை எந்த மரச்சாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?

மரச்சாமான்களும் இல்லாத அறையில் இருந்தால், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து, இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.

4. நிலநடுக்கத்தின்போது கண்ணாடிச் சில்லுகளுடன் கூடிய கட்டடங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஏன்?

நிலநடுக்கத்தின் போது உடைபடும் கண்ணாடிச் சில்லுகள் உடைந்து, உங்கள் மீது விழலாம். அவ்வாறு ஏற்படும் ஆபத்தை தடுக்க கண்ணாடிச் சில்லுகளுடன் கூடிய கட்டிடங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *