Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 5

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 5

TNPSC Group 1 Best Books to Buy

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற

இலக்கணம்: பெயர்ச்சொல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

TNPSC Group 4 Best Books to Buy

1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக

  1. பறவை
  2. மண்
  3. முக்காலி
  4. மரங்கொத்தி

விடை : மண்

2. காரணப்பெயரை வட்டமிடுக

  1. மரம்
  2. வளையல்
  3. சுவர்
  4. யானை

விடை : வளையல்

3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக

  1. வயல்
  2. வாழை
  3. மீன்கொத்தி
  4. பறவை

விடை : வாழை

II. குறுவினா

1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

பெயர்ச் சாெல் ஆறு வகைப்படும். அவையாவன

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. பண்புப்பெயர்
  6. தாெழிற்பெயர்

2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன?

ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மா, கருவேலங்காடு.

3. காரணப்பெயர் என்றால் என்ன?

நம் முன்னாேர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தாேடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காணப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நாற்காலி, கரும்பலகை

III. சிறுவினா

அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.

பொருட்பெயர்

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.

(எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

இடப்பெயர்

ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.

(எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

காலப்பெயர்

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

சினைப்பெயர்

பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.

(எ.கா.) கண், கை, இலை, கிளை.

பண்புப்பெயர்

பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

தாெழிற்பெயர்

தாெழிலைக் குறிக்கும் பெயர் தாெழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

மொழியை ஆள்வோம்

1. இடுகுறிப்பெயர் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி

நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.

(எ.கா.) மண், மரம், காற்று

  • இடுகுறிப் பொதுப்பெயர்
  • இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

இடுகுறிப் பொதுப்பெயர்:-

ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மரம், காடு.

இடுகுறிச் சிறப்புப்பெயர்:-

ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மா, கருவேலங்காடு.

2. காரணப்பெயர் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி

நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நாற்காலி, கரும்பலகை

  • காரணப் பொதுப்பெயர்
  • காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.

காரணப் பொதுப்பெயர்

காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா.) பறவை, அணி

காரணச் சிறப்புப்பெயர்

குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.

(எ.கா.) வளையல், மரங்கொத்தி

மொழியை ஆள்வோம்

I. அகராதியை பயன்படுத்தி பொருள் எழுதுக

1. கருணை

  • உயிர்களிடத்தில் கொள்ளும் ஒருவகை பரிவு உணர்வு

2. அச்சம்

  • பயம், மனதில் ஏற்படும் ஓர் உணர்வு, தைரியத்தை இழக்கும் நிலைமை

3. ஆசை

  • வேண்டும் பொருள் மீது செல்லும் விருப்பம்

II. பெயர்ச்சாெற்களை அகரவரிசையில் எழுதுக.

பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை :

ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம்,  பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால்

III. அறுவகைப் பெயர்களை எழுதுக.

1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவுவதே எனச் சான்றோர்கள் கருதினர்

சினைப்பெயர்பண்புப்பெயர்தொழிற்பெயர்
கைகள்இரண்டுமே,  சான்றோர்உதவவே, கருதினர்

2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.

பொருட்பெயர்தொழிற்பெயர்
அறம், பொருள், இன்பம், வீடு, நூல்அடைதல்

3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.

பொருட்பெயர்பண்புப்பெயர்தொழிற்பெயர்
அறிஞர்அழகுகற்றுணர்ந்து, அடங்கல்

4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.

பொருட்பெயர்தொழிற்பெயர்
நீதிநூல், பாரதியார்பயில்

5. மாலை முழுவதும் விளையாட்டு.

காலப்பெயர்தொழிற்பெயர்
மாலைவிளையாட்டு

6. அன்பு நிறைய உடையவர்கள் மேலாேர்

பண்புப்பெயர்பொருட்பெயர்
அன்பு, மேலாேர்உடையவர்கள்

IV. அடிக்கோடிட்ட சாெல் எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதை எழுதுக.

1. விடியலில் துயில் எழுந்தவன்.

விடை : துயில் – காலப்பெயர்

2. இறைவனைக் கை தாெழுதேன்.

விடை : கை – சினைப்பெயர்

3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன்

விடை : மதுரைக்குச் – இடப்பெயர்

4. புத்தகம் வாங்கி வந்தேன்

விடை : புத்தகம் – பொருட்பெயர்

5. கற்றலைத் தாெடர்வாேம் இனி

விடை : கற்றலைத் – தொழிற்பெயர்

6. நன்மைகள் பெருகும் நனி

விடை : நன்மைகள் – பண்புப்பெயர்

மொழியோடு விளையாடு

I. தொடர்களை அமைக்க

வெல்லும்கேளிர்தீதும்
வாராநன்றும்யாவரும்
யாதும் ஊரேபிறர்தரவாய்மையே
  1. வாய்மையே வெல்லும்
  2. யாதும் ஊரே யாவரும் கேளிர்
  3. தீதும் நன்றும் பிறர்தர வாரா

II. சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

  1. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்
  2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
  3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
  4. அமுதசுரபியைப் பெற்றாள்
  5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்

விடை :-

  1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
  2. அமுதசுரபியைப் பெற்றாள்
  3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
  4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
  5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்

III. ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமை

அரம் – அறம்

  1. அரம் – மரத்தை அறுக்க அரம் பயன்பட்டது
  2. அறம் – உதவி என்று வருபவருக்கு அறம் செய்ய வேண்டும்

மனம் – மணம்

  1. மனம் – என் தவறினை எண்ணி மனம் நொந்துவிட்டேன்
  2. மணம் – என் தோட்டத்தில பூக்களின் மணம் வீசியது

IV. இருபொருள் தருக

1. ஆறு – நதி
ஆறு – எண்

2. திங்கள் – சந்திரன்
திங்கள் – வாரத்தின் இரண்டாம் நாள்

3. ஓடு – வீட்டின் கூரையில் அமைப்பது
ஓடு – வேகமாக ஓடுதல்

4. நகை – சிரி
நகை – அணிகலன்

V. புதிர்ச்சொல் கண்டுபிடி

இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துக்கள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள் தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொலின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?

விடை – அறம்

VI. தொடர்கள் உருவாக்கு

மாலையில் பிறருக்கு உதவி பெரியோரை நூல் பல உடற்பயிற்சி அதிகாலையில்கற்போம் எழுவோம் விளையாடுவோம் செய்வோம் புரிவோம் வணங்குவோம்
  • மாலையில் விளையாடுவோம்
  • பிறருக்கு உதவி புரிவோம்
  • பெரியோரை வணங்குவோம்
  • நூல் பல கற்போம்
  • உடற்பயிற்சி செய்வோம்
  • அதிகாலையில் எழுவோம்

நிற்க அதற்குத் தக…

I. கலைச்சாெல் அறிவாேம்

  1. அறக்கட்டளை – Trust
  2. தன்னார்வலர் – Volunteer
  3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
  4. சாரண சாரணியர் – Scouts & Guides
  5. சமூகப்பணியாளர் – Social Worker
TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *