Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 3

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 3

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்

கவிதைப்பேழை: பெரியபுராணம்

I. சொல்லும் பொருளும்

  • மா – வண்டு
  • மது – தேன்
  • வாவி – பொய்கை
  • வளர் முதல் – நெற்பயிர்
  • தரளம் – முத்து
  • பணிலம் – சங்கு
  • வரம்பு – வரப்பு
  • கழை – கரும்பு
  • கா – சோலை
  • குழை – சிறு கிளை
  • அரும்பு – மலர் மொட்டு
  • மாடு – பக்கம்
  • நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள்
  • கோடு – குளக்கரை
  • ஆடும் – நீராடும்
  • மேதி – எருமை
  • துதைந்து எழும் – கலக்கி எழும்
  • கன்னி வாளை – இளமையான வாளைமீன்
  • சூடு – நெல் அரிக்கட்டு
  • சுரிவளை – சங்கு
  • வேரி – தேன்
  • பகடு – எருமைக்கடா
  • பாண்டில் – வட்டம்
  • சிமயம் – மலையுச்சி
  • நாளிகேரம் – தென்னை
  • நரந்தம் – நாரத்தை
  • கோளி – அரசமரம்
  • சாலம் – ஆச்சா மரம்
  • தமாலம் – பச்சிலை மரங்கள்
  • இரும்போந்து – பருத்த பனைமரம்
  • சந்து – சந்தன மரம்
  • நாகம் – நாகமரம்
  • காஞ்சி – ஆற்றுப்பூவரசு

II. இலக்கணக்குறிப்பு

  • விரிமலர் – வினைத்தொகை
  • தடவரை – உரிச்சொல் தொடர்
  • கருங்குவளை – பண்புத்தொகை
  • செந்நெல் – பண்புத்தொகை

III. பகுபத உறுப்பிலக்கம்

பகாய்வன – பகாய் + வ + அன் + அ

  • பகாய் – பகுதி
  • வ – எதிர்கால இடைநிலை
  • அன் – சாரியை
  • அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

I. சிறு வினா

நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லுக்கும் பெரியபுராணம் ஒப்பிடுகின்றது.

II. நெடு வினா

பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக

காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்து ஆரவாரம் செய்கின்றன. நாட்டுக்கு வளம் தரம் காவிரி கால்வாய்களில் எங்கும் ஓடுகின்றது.நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலைச்சுருள் விருந்தது. இதனைக் கண்ட உழவர் இதுதான் களைப் பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.கரை எங்கும் இளைய அன்னங்கள் உள்ளன.அதனால் நாடு நீர் நாடு என்ற சொல்லத்தக்கதாய் உள்ளது.அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளதுசெந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள், முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றை திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.தென்னை, செருந்தி, நரந்தரம், அரசமரம், கடம்பமரம், பச்சிலை மரம், குராமரம், பனை, சந்தனம், நாகம், வஞ்சி – காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் வளர்ந்துள்ளன.இவையே பெரியபுராணம் திருநாட்டுச் சிறப்பு ஆகும்.

பெரியபுராணம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. பெரியபுராணத்தை இயற்றியவர் _____________

விடை : சேக்கிழார்

2. நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்டது _____________

விடை : திருத்தொண்டர் திருவந்தாதி

3. சேக்கிழார் _____________  சேர்ந்தவர்

விடை : 12-ம் நூற்றாண்டை

4. சேக்கிழாரின் இயற்பெயர் _____________

விடை : அருண்மொழித்தேவர்

5. _____________ வளத்தை பெரியபுராணம் எடுத்துரைக்கிறது.

விடை : சோழ நாட்டு

II. குறு வினா

1. எதனை உழவர் களைப் பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்?

நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலைச்சுருள் விருந்தது. இதனைக் கண்ட உழவர் இதுதான் களைப் பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

2. திருநாட்டில் எவற்றையெல்லாம் குவித்து வைத்திருந்தனர்?

  • செந்நெல்லின் சூடுகள்
  • பலவகைப்பட்ட மீன்கள்
  • முத்துக்கள், மலர்த் தொகுதிகள்

III. குறு வினா

1. திருநாட்டு நீர் வளச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக

காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.கரை எங்கும் இளைய அன்னங்கள் உள்ளன.அதனால் நாடு நீர் நாடு என்ற சொல்லத்தக்கதாய் உள்ளது.

2. திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளவையாக பெரியபுராணம் குறிப்பிடுவன எவை?

தென்னைசெருந்திநரந்தரம்அரசமரம்கடம்பமரம்பச்சிலை மரம்குராமரம்பனைசந்தனம்நாகம்வஞ்சி – காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்குமுதலியன திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளவையாக பெரியபுராணம் குறிப்பிடுவன

சேக்கிழார் – குறிப்பு வரைக

சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்சேக்கிழார் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவர்பெரியபுராணம், திருத்தொண்டர் புராணச்சாரம், திருப்பதிகக் கோவை இவரது படைப்புகளாகும்இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர்பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.

3. பெரியபுராணம் – குறிப்பு வரைக

பெரியபுராணத்தை சேக்கிழார் பெருமாள் இயற்றினார்சைவ அடிகளாரின் வாழக்கை வரலாற்றை கூறுவதால் இது சைவ காப்பியமாகும்சேக்கிழார் இந்நூலுக்கு இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்சைவ அடியார்கள் வரலாறு கூறுவதனால் பெரியபுராணம் என ஆயிற்றுஇருகாண்டங்களையும், 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது.

பெரியபுராணம் – பாடல் வரிகள்

மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்(பா.எ.59)
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்(பா.எ.63)
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்(பா.எ.67)
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்(பா.எ.69)
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்(பா.எ.73)
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
போல்வலங் கொண்டு சூழும் காட்சியின் மிக்க தன்றே.(பா.எ.74)
நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளிசா லந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.(பா.எ.78)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *