Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 4

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 4

தமிழ் : இயல் 7 : விதைநெல்

கவிதைப்பேழை: சிலப்பதிகாரம்

I. சொல்லும் பொருளும்

  • சுண்ணம் – நறுமணப்பொடி,
  • காருகர் – நெய்பவர் (சாலியர்),
  • தூசு – பட்டு
  • துகிர் – பவளம்
  • வெறுக்கை – செல்வம்
  • நொடை – விலை
  • பாசவர் – வெற்றிலை விற்போர்
  • ஓசுநர் – எண்ணெய் விற்போர்
  • மண்ணுள் வினைஞர் – ஓவியர்
  • மண்ணீட்டாளர் – சிற்பி
  • கிழி – துணி

II. இலக்கணக் குறிப்பு

  • வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
  • பயில்தொழில் – வினைத்தொகை

III. பகுபத உறுப்பிலக்கணம்

மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ

  • மயங்கு – பகுதி
  • இ(ன்) – இறந்த கால இடைநிலை
  • ‘ன்’ – புணர்ந்து கெட்டது.
  • ய் – உடம்படு மெய்
  • அ – பெயரெச்ச விகுதி

IV. சிறு வினா

பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்உமணர் – உப்பு விற்பவர்

III. குறு வினா

“பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம்

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

பகர்வனர் – பட்டினும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

பட்டினும் – சுட்டு

ஈ) காருகர் – பொருள் தருக.

நெய்பவர் (நெசவாளர்)

உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

சந்தனமும் அகிலும்

III. நெடு வினா

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக  வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழும்பு, சுண்ணப்பொடி விற்பது போல இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.

குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப் பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன, விற்கப்படுகின்றன.

பொன், மணி, முத்து, பவளம், ஆகியவை மருவூர்ப்காக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம் விற்கப்படுகிறது,

வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்து தானிய வகைகள்.

இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடை போட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.

மரூவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.

வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிளிலும் விற்கப்படுகின்றது.

வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.

மருவூர்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பல திறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.

அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இளங்கோவடிகள் ____________ சேர்ந்தவர்

விடை : சேர மரபைச்

2. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று ____________

விடை : சிலப்பதிகாரம்

3. சிலப்பதிகாரத்தில் ____________, ____________ உள்ளன

விடை : மூன்று காண்டங்கள், முப்பது காதைகள்

4. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ____________

விடை : மணிமேகலை

5. சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ____________

விடை : காண்டம்

6. சிலப்பதிகாரம் ____________ பற்றிய செய்திகளைக் கூறுகிறது

விடை : மூவேந்தர்களின்

II. சிறு வினா

1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? அவை யாவை?

சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் மூன்று.அவைபுகார்க்காண்டம்மதுரைக்காண்டம்வஞ்சிக்காண்டம்

2. இரட்டைக் காப்பியங்கள் எவை? அவ்வாறு அழைக்கப்படக் காரணம் யாது?

இரட்டைக் காப்பியங்கள் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகும்காரணம்:-கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன

3. சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள் யாவை?

  • முத்தமிழ்காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்

4. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் (உரைபாட்டு மடை) விளக்குக

உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு

சிலப்பதிகாரம் – பாடல் வரிகள்

மருவூர்ப் பாக்கம்வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந் துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்,
மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்ம லி இருக்கை யும்;கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்ன ரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொ டுமறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
இந்திரவிழா ஊரெடுத்த காதை ( அடி 13-39)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *