அறிவியல் : அலகு 7 : காந்தவியல்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. பின்வருவனற்றுள் காந்தத்தால் கவரும் பொருள்…….
- மரப்பொருள்கள்
- ஏதேனும் ஓர் உலாேகம்
- தாமிரம்
- இரும்பு மற்றும் தகரம்
விடை : இரும்பு மற்றும் தகரம்
2. கீழ்க்கண்ட ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக் காட்டாகும்
- மின்காந்தம்
- மியூ மெட்டல்
- தேனிரும்பு
- நியாேடிமியம்
விடை : இரும்பு மற்றும் தகரம்
3. ஒரு சட்டக் காந்தத்தின தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் ——
- ஒன்றையாென்று சேரும்
- ஒன்றையாென்று விலக்கும்
- ஒன்றையாென்று கவரவோ விலக்கவோ செய்யாது
- மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை
விடை : ஒன்றையாென்று சேரும்
4. கற்பனையாக புவி காந்தப்புல வடித்தினை ஒத்த தாேற்றமுடையது……..
- U வடிவ காந்தம்
- மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி
- வரிசுருள்
- சட்டக் காந்தம்
விடை : சட்டக் காந்தம்
5. MRI என்பதன் விரிவாக்கம் ———–
- Magnetic Resonance Imaging
- Magnetic Running Image
- Magnetic Radio Imaging
- Magnetic Radar Imaging
விடை : Magnetic Resonance Imaging
6. காந்த ஊசி …………… பயன்படுகிறது.
- அ) காந்தவிசைக் காேடுகளை வரைய
- காந்தப்புலத்தின் திசையை அறிய
- கடல் பயணத்திற்கு
- மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கண்ட அனைத்தும்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. காந்த வலிமை முனைகளில் ………….
விடை : அதிகம்
2. ஒரு காந்தம் ……….. முனைகளைக் காெண்டது.
விடை : இரு
3. மின்சார உற்பத்திக்குப் பயன்டும் காந்தங்கள் ……….
விடை : டைனமோக்கள்
4. கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது ……
விடை : மின்காந்தம்
5. தடையின்றி தாெங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் ——— வட தென்
முனைகளை நாேக்கி இருக்கும்.
விடை : புவியின்
III. பொருத்துக
1. மேக்னடைட் | காந்த விசைக்காேடுகள் |
2. ஒரு சிறு சுழலும் காந்தம் | இயற்கைக் காந்தம் |
3. காேபால்ட் | காந்த ஊசிப்பெட்டி |
4. வளைபரப்புகள் | ஃபெர்ராே காந்தப் பொருள்கள் |
5. பிஸ்மத் | டயா காந்தப் பொருள்கள் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ, 5 – உ
IV. கூற்று மற்றும் காரணம்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
- கூற்று உண்மை ஆனால் காரணம் தவறானது.
- கூற்று தவறானது, ஆனால் காரணம் உண்மை
1. கூற்று: இரும்புத் துருவல்களின செறிவு துருவப் பகுதிகளில் அதிகம்
காரணம்: காந்தங்கள் மிகவும் கூர்மையானவை
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
2. கூற்று: புவியின காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினைால் உருவாகிறது.
காரணம்: உயர்வெப்பநிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப்பண்பினை
அல்லது காந்தவியலை இழக்கும்
விடை : கூற்று சரி, காரணம் தவறு
V. சுருக்கமாக விடையளி.
1. காந்தப்புலம் என்றால் என்ன?
காந்தப்புலம் என்பது காந்த்தினைச் சுற்றி காந்த விளைவு அல்லது காந்த விசை உணரப்படும் பகுி என வரையறுக்கப்படுகிறது
இதன் அலகு டெஸ்லா அல்லது காஸ்
ஒரு டெஸ்லா = 10000 காஸ்
2. செயற்கைக் காந்தம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக
ஆய்வகம் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களால் உருவாக்கப்படும் காந்தகளே செயற்கைக் காந்தங்கள் எனப்படுகின்றன
3. இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துக.
இயற்கைக் காந்தங்களை | செயற்கைக் காந்தங்களை |
1. இவை இயற்கையில் காணப்படுகின்றன. ஒழுங்கற்ற வடிவம் மற்றும் பரிமாணத்தை இவை கொண்டுள்ளளன | இவை மனிதர்களால் உருவாக்கப்படுபவை. வெவ்வேறு வடிவம் மற்றும் பரிமாணங்களில் உருவாக்கிட முடியும். |
2. இயற்கைக் காந்தத்தின் வலிமை நிலையானது. அதை மாற்றுவது கடினம் | தேவையான குறிப்பிட்ட வலிமையுடன் செயற்கைக் காந்தங்களை உருவாக்க முடியும். |
3. இவை நீண்ட காலம் காந்தப் பண்புகளை இழக்காதவை | இவற்றின் பண்புகள் குறிப்பிட்ட கால அளவு உடையவை |
4. இவை மிகக் குறைந்த பயன்பாடு உடையவை | இவை அன்றாட வாழ்வில் பெருமளவில் பயன்படக்கூடியவை |
4. புவியானது மிகப்பெரிய சட்டக் காந்தமாகும். ஏன் காரணங்களைத் தருக.
புவியின் ஒரு புள்ளியில் தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்த ஊசியானத புவியின் வட-தென் திசையில் தோராயமாக வந்து நிற்கும். பூமியானது மிகப்பெரிய காந்த இருமுனையாகச் செயல்படுகிறது என்பதையும் அதன் காந்த முனைகள் புவியியல் துருவங்களுக்கு அருகில் உள்ளன என்பதையும் இது காட்டுகிறது
5. காந்தத் தன்மையற்ற பொருள்களை எவ்வாறு அடையாளம் காணபாய்? காந்தத் தன்மையற்ற பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
காந்த்தத்தால் கவரப்படாத பொருள்கை காந்தம் அல்லாத பொருள் அல்லது காந்தத் தன்மையற்ற பொருள்கள் என அழைக்கிறோம்
எ.கா. இரப்பர், மரக்கட்டை
VI. விரிவான விடையளி.
1. காந்தத்தின் அன்றாட வாழ்வியல் பயன்களைப் பட்டியலிடுக.
- பழங்காலத்தில் கடலில் பயணம் செய்வோருக்கு திசையினை அறிவதற்கானை திசைகாட்டும் கல்லாக’ காந்தம் உதவி இருக்கிறது.
- தற்காலத்தில் டைனமோக்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு காந்தங்கள் பயன்படுகின்றன
- மின்காந்தஙகள் மிகவும் சிறப்பான முறையில் நமது அன்றாட வாழ்வில் பயன்டுகின்றன.
- மின்சார மணிகளிலும் மினமோட்டார்களிலும் காந்தங்கள் பயன்டுகின்றன
- மிகவும் திறன்மிக்க மினகாந்தங்களைப் பயன்படுத்தி தண்டவாளங்களுக்கு மேலா உயர்த்தி அதிவேகமான மேக்லிவ் தாெடர்வண்டியானது இயக்கப்படுகிறது.
- வங்கிகளில் கணினிகளைக் காெண்டு காசோலையில் அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்து காெள்வதற்கு காந்தங்கள் பயன்படுகின்றன.
- தாெழிற்சாலைகளில் காந்தப்பொருள்களாேடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுக் கூளப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் ‘காந்த கடத்தும் பட்டையாகப்’ (conveyor belts ) பயன்படுகிறது
- காந்தஙகள் , கணினியில் அதன் சேமிக்கும் சாதனங்களில் நிலைவட்டுக்களாக ( hard disks) பயன்படுத்தப்படுகின்றன
- திருகு ஆணி குறடுகளில் (screw drivers) அதன் முனைகளில் காணப்படும் சிறிய அளவிலான காந்தப் பண்பு திருகு ஆணிகளைப் பிடிக்க உதவுகிறது.
- மருத்துவ மனைகளில் வலிமையான மின்காந்தங்களைப் பயன்டுத்தி MRI Magnetic Resonance Imaging (காந்த ஒத்ததிர்வு நிழலுரு படம்) மூலம் குறிப்பிட்ட உள்ளுறுப்பின் நிழலுருக்களை உருவாக்கி்ட உதவுகிறது.
2. ஓர் ஆணியை எவ்வாறு தற்காலிக காந்தமாக மாற்றுவாய்?
தற்காலிக காந்தஙகள், புலக்காந்தப் புலத்தின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.
புலக் காந்தப்புலம் நீக்கப்படும் போது இவை வெகுவிரைவில் காந்தப் பண்புகணள இழக்கும்
- ஆணி மற்றும் சட்டக் காந்தத்தை எடுத்துக் கெளாள்வும்
- சட்டக்காந்தத்தின் ஒரு முனையினால் ஆணியின் ஒரு முனையினை தொடவும்
- மெதுவாக ஆணியின் மீது காந்த்தினை ஒரே திசையில் மறுமுனை வரை நகர்த்தவும்
- படத்தில் காட்டியவாறு இதே போன்று மீண்டும் 20 அல்லது 30 முறை நகர்த்தவும்
- ஆணியின் மீது முன்னும் பின்னும் நகர்த்தாமல் ஒரே திசையிலேயே நகரத்த வேண்டும்
- ஒரு மரப்பலகையின் மீது குண்டூசிகளைப் பர்பபி வைத்து அவற்றினருகே இரும்பு ஆணியை கொண்டு செல்லவும்
- இரும்பு ஆணி தற்காலிக காந்தமாக மாறுவதால் குண்டூசிகள் ஆணியின் மீது ஒட்டிக் கொள்வதைக் காணலாம்