Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 2

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 2

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்

கவிதைப்பேழை: வயலும் வாழ்வும்

நுழையும்முன்

உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும். இவற்றைப் பற்றிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றை அறிவோம்.

ஓடை எல்லாம் தாண்டிப்போயிஏலேலங்கிடி ஏலேலோ 

ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்துஏலேலங்கிடி ஏலேலோ 

சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டிஏலேலங்கிடி ஏலேலோ 

சேத்துக்குள்ளே இறங்குறாங்கஏலேலங்கிடி ஏலேலோ

நாத்தெல்லாம் பிடுங்கையிலேஏலேலங்கிடி ஏலேலோ 

நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்கஏலேலங்கிடி ஏலேலோ 

ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான்ஏலேலங்கிடி ஏலேலோ 

ஓடியோடி நட்டோமையா – ஏலேலங்கிடி ஏலேலோ

மடமடன்னு மடைவழியேஏலேலங்கிடி ஏலேலோ 

மண்குளிரத் தண்ணீர்பாயஏலேலங்கிடி ஏலேலோ 

சாலுசாலாத் தாளுவிட்டுஏலேலங்கிடி ஏலேலோ 

நாலுநாலா வளருதம்மாஏலேலங்கிடி ஏலேலோ

மணிபோலப் பால்பிடித்துஏலேலங்கிடி ஏலேலோ 

மனதையெல்லாம் மயக்குதம்மாஏலேலங்கிடி ஏலேலோ 

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம்ஏலேலங்கிடி ஏலேலோ 

ஆளுபணம் கொடுத்துவாரான்ஏலேலங்கிடி ஏலேலோ

சும்மாடும் தேர்ந்தெடுத்துஏலேலங்கிடி ஏலேலோ 

சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார்ஏலேலங்கிடி ஏலேலோ 

கிழக்கத்தி மாடெல்லாம்ஏலேலங்கிடி ஏலேலோ 

கீழே பார்த்து மிதிக்குதையாஏலேலங்கிடி ஏலேலோ

கால்படவும் கதிருபூராஏலேலங்கிடி ஏலேலோ 

கழலுதையா மணிமணியாஏலேலங்கிடி ஏலேலோ

தொகுப்பாசிரியர்கி.வா.ஜகந்நாதன்

சொல்லும் பொருளும் 

குழி – நில அளவைப்பெயர் 

சாண் – நீட்டல் அளவைப்பெயர் 

மணி – முற்றிய நெல்

சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

சீலை – புடவை 

மடை – வயலுக்கு நீர் வரும் வழி 

கழலுதல் – உதிர்தல் 

தெரிந்து தெளிவோம்

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது

செந்நெல்லென்று

ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான

தென்மதுரை

(நாட்டுப்புறப்பாடல்)

பாடலின் பொருள் 

உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர். நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர். 

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

நூல் வெளி 

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர். பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்துள்ளார். அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. உழவர் சேற்று வயலில் ———- நடுவர். 

அ) செடி 

ஆ) பயிர் 

இ) மரம்

ஈ) நாற்று 

[விடை : ஈ. நாற்று] 

2. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ———- செய்வர்.

அ) அறுவடை 

ஆ) உழவு 

இ) நடவு 

ஈ) விற்பனை 

[விடை : அ. அறுவடை] 

3. “தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ——- 

அ) தேர் + எடுத்து

ஆ) தேர்ந்து + தெடுத்து 

இ) தேர்ந்தது + அடுத்து

ஈ) தேர்ந்து + எடுத்து

[விடை : ஈ. தேர்ந்து + எடுத்து] 

4. ‘ஓடை + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ——–

அ) ஓடைஎல்லாம்

ஆ) ஓடையெல்லாம் 

இ) ஓட்டையெல்லாம்

ஈ) ஓடெல்லாம்

[விடை : ஆ. ஓடையெல்லாம்]

பொருத்துக.

வினா 

1. நாற்று – பறித்தல்

2. நீர் – அறுத்தல்

3. கதிர் – நடுதல் 

4. களை – பாய்ச்சுதல்

விடை 

1. நாற்று – நடுதல்

2. நீர் – பாய்ச்சுதல்

3. கதிர் – அறுத்தல்

3. களை – பறித்தல்

வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களை எழுதுக. 

மோனைச் சொற்கள்

(முதல் எழுத்து ஒரே மாதிரியாக வருவது)

ஓடை – ஓடியோடி

மடமடன்னு – மண்குளிரத் 

நாத்தெல்லம் – நாலுநாலா

மணிபோலப் – மனதையெல்லாம்

சும்மாடும் – சுறுசுறுப்பும்

எதுகைச் சொற்கள் 

(இரண்டாவது எழுத்து ஒரே மாதிரியாக வருவது) 

சாலுசாலாத் – நாலுநாலா 

ஒண்ணரைக் குழி – மண்குளிர – நண்டும் 

சேத்துக்குள்ளே – நாத்தெல்லாம் 

கிழக்கத்தி – கழலுதையா 

பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக. 

(எ.கா.) போயி – போய் 

பிடிக்கிறாங்க – பிடிக்கிறார்கள் 

வளருது – வளர்கிறது 

இறங்குறாங்க – இறங்குகிறார்கள் 

வாரான் – வரமாட்டான் 

குறுவினா 

1. உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?

நாற்றுப் பறிக்கும் போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர். 

2. நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?

கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிரிலிருந்து நெல்மணியைப் பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர். 

சிறுவினா 

1. உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

சிந்தனை வினா 

உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.

ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில். விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர்பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளைப் பயன்படுத்தி இயற்கை எருக்களைக் கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.

கற்பவை கற்றபின்

1. வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

ஏர், மண்வெட்டி, உழவு இயந்திரம், விதைக்கலப்பை, களைவெட்டும் இயந்திரம், நீர் பாசன இயந்திரம், ஊசலாடும் கூடை, வேளாண் வானூர்தி, தாள்க்கத்தி, கதிரடி இயந்திரம், களம், படல், உமி நீக்கி, இணை அறுவடை இயந்திரம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *