அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 6 : கணினி வரைகலை
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
அ) வண்ணம் தீட்ட
ஆ) நிரல் அமைக்க
இ) வருட
ஈ) ஆக மாற்ற
விடை : அ) வண்ணம் தீட்ட
2. Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?
அ) இடப்பக்க கருவிப்பட்டை
ஆ) வலப்பக்க கருவிப்பட்டை
இ) நடுப்பகுதி கருவிப்பட்டை
ஈ) அடிப்பகுதி கருவிப்பட்டை
விடை : அ) இடப்பக்க கருவிப்பட்டை
3. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
அ) Ctrl + Z
ஆ) Ctrl + R
இ) Ctrl + Y
ஈ) Ctrl + N
விடை : அ) Ctrl + Z
4. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
அ) வண்ணம் தீட்ட
ஆ) கணிதம் கற்க
இ) நிரல் பற்றி அறிய
ஈ) வரைகலையைக் கற்க
விடை : ஆ) கணிதம் கற்க
5. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
அ) எளிய கூட்டல்
ஆ) வகுத்தல்
இ) படம் வரைதல்
ஈ) பெருக்கல்
விடை : அ) எளிய கூட்டல்
II. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க
1. Tux Paint என்றால் என்ன?
• Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப்பயிற்சி செயலியாகும்
• இச்செயலியானது மகிழ்ச்சி தரும் ஒலிகளோடு, எளிமையா பயன்படுத்தும் வகையில், மாணவர்களை வழிநடத்தும், உற்சாக மூட்டும் கேலிச் சித்திரங்களோடு உருவாக்கப்பட்டது.
2. பனுவல் கருவியின் (Textool) பயன் என்ன?
பனுவல் கருவியைப் (Textool) பயன்படுத்தி
3. சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
சேமிக்கப் பயன்படும் குறுக்கு வழி விசை Ctrl + S.
4. Tux Math என்றால் என்ன?
• ‘Tux Math’ என்பது கணிதம் கற்பதற்கான காணொளி விளையாட்டாகும்.
• இது ஒரு மாற்றியமைக்கக் கூடிய இலவச மென்பொருளாகும்.
• கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
5. ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?
ரேஞ்சர் விளையாட்டின் பயன் – 10 வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்.