Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Basis of Classification

Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Basis of Classification

அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 5 : வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 

1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது? 

அ) ஒற்றுமை 

ஆ) வேறுபாடு

இ) இரண்டும் 

ஈ) எதுவும் இல்லை

விடை : இ) இரண்டும் 

2. ஏறுத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை 

அ) 8.7 மில்லியன் 

ஆ) 8.6 மில்லியன் 

இ) 8.5 மில்லியன் 

ஈ) 8.8 மில்லியன்

விடை : அ) 8.7 மில்லியன் 

3. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு 

அ) வரிசை 

ஆ) பேருலகம் 

இ) தொகுதி 

ஈ) குடும்பம்

விடை : ஆ) பேருலகம்

4. ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது? 

அ) அரிஸ்டாட்டில் 

ஆ) லின்னேயஸ் 

இ) விட்டேக்கர் 

ஈ) பிளேட்டோ

விடை : இ) விட்டேக்கர் 

5. புறாவின் இருசொற் பெயர் 

அ) ஹோமோ செப்பியன்

ஆ) ராட்டஸ் ராட்டஸ் 

இ) மாஞ்சிபெரா இண்டிகா

ஈ). கொலம்பா லிவியா

விடை : ஈ) கொலம்பா லிவியா 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக 

1. __________ 1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார் 

விடை : காஸ்பார்டு பா ஹீன்

2. சிற்றினம் என்பது __________ வகைப்பாட்டின் நிலை ஆகும்.

விடை : உயிரின

3. __________ பச்சையமற்ற மற்றும் ஒளிச்சேர்க்கை தன்மையற்றது. 

விடை : புஞ்சை

4. வெங்காயத்தின் இரு சொற் பெயர் __________

விடை : அல்லியம் சட்டைவம்

5. __________ தந்தை , கரோலஸ் லின்னேயஸ் ஆவார்

விடை : நவீன வகைப்பாட்டிலின் 

III. சரியா அல்லது தவறா கூறு – தவறான பதிலுக்குச் சரியான பதிலைக் கொடுக்கவும் 

1. உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது.

விடை : சரி 

2. மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.

விடை : சரி 

3. 1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்ட

விடை : தவறு 

4. உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது.

விடை : தவறு  

உண்மையான உட்கரு யுகேரியோட்டின் செல்களில் காணப்படுகிறது.

5. விலங்கு செல்கள் செல்சுவர் பெற்றவை. 

விடை : தவறு 

விலங்கு செல்கள் செல்சுவர் அற்றவை. 

IV. பொருத்துக.

1. மொனிரா – அ. மோல்டுகள் 

2. புரோடிஸ்டா – ஆ. பாக்டீரியா 

3. பூஞ்சை – இ. வேம்பு 

4. ப்ளாண்டே – ஈ. வண்ணத்துப் பூச்சி

5. அனிமேலியா – உ. யூக்ளினா 

விடைகள் :

1. மொனிரா – ஆ. பாக்டீரியா 

2. புரோடிஸ்டா – உ. யூக்ளினா

3. பூஞ்சை – அ. மோல்டுகள் 

4. ப்ளாண்டே – இ. வேம்பு 

5. அனிமேலியா – ஈ. வண்ணத்துப் பூச்சி

V. கூற்று மற்றும் காரணங்காணல் வினாக்கள்

1. கூற்று : இரு சொல் பெயர் என்பது உலகளாகிய பெயராகும். இது இரு பெயர்களைக் கொண்டது. 

காரணம் : கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் முதன்முதலில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. 

 i. கூற்று சரி, காரணமும் சரி

 ii. கூற்று சரி, காரணம் தவறு 

 iii. கூற்று தவறு, காணரம் சரி 

 iv. கூற்று மற்றும் காரணம் தவறு

விடை : ii) கூற்று சரி, காரணம் தவறு 

2. கூற்று : அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், தொகுத்தல் ஆகியவை வகைப்பாட்டியலில் அவசியமானவை. 

காரணம் : இவை வகைப்பாட்டியலின் அடிப்படைப் படிநிலைகள். 

 i. கூற்று சரி, காரணமும் சரி

 ii. கூற்று சரி, காரணம் தவறு 

 iii. கூற்று தவறு, காரணம் சரி

 iv. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை : i) கூற்று சரி, காரணமும் சரி

VI. மிகக் குறுகிய விடையளி 

1. வகைப்பாட்டியல் என்றால் என்ன? 

வகைப்படுத்துதல் என்பது உயிரினங்களைக் கண்டறிந்து குழுக்களாகப் பிரித்தல் ஆகும். 

2. ஐந்துலக வகைப்பாட்டினைப் பட்டியலிடுக.

1. மொனிரா 

2. புரோடிஸ்டா 

3. பூஞ்சை 

4. தாவர உலகம்

5. விலங்கு உலகம்

3. இருபிளவு திறவுகோல் வரையறு?

உயரினங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல் ஆகும்.

4. மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக

1. பாக்டீரியா 

2. நீலப்பசும் பாசிகள்

5. இரு சொற்பெயரிடும் முறை என்பது யாது?

• இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு ‘உலக அளவில் பெயரிடும் முறை ஆகும்.

• ஒவ்வொரு உயிரினத்தையும் இரண்டு பெயர் கொண்ட பெயர்களோடு அழைப்பதை இருசொற்பெரிடும் முறை என்கிறோம்.  

6. இருசொற்பெயரைக் குறிப்பிடுக. 

அ. மனிதன் – ஹோமோ சேப்பிரியன்ஸ்

ஆ. நெல் – ஒரைசா சட்டைவா. 

7. புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.

• புரோட்டிஸ்டாவில் ஒரு சொல் உயிரிகளும் சில எளிய பல செல் யூகேரியயோட்டுகளும் அடங்கும் 

• தாவரவகை புரோட்டிஸ்டுகள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பவை

VII. குறுகிய விடையளி 

1. வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக. 

1. உலகம் 

2. தொகுதி 

3. வகுப்பு

4. வரிசை 

5. குடும்பம்

6. பேரினம்

7. சிற்றினம் 

2. தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக. 

தாவர உலகம்

1. ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன 

2. தாவர செல்லின் செல்சுவர் உண்டு எ.கா. பூக்கும் தாவரங்கள் 

விலங்கு உலகம்

பிற உயிரினங்களை உணவுக்காக சார்ந்துள்ளன 

விலங்கு செல்லில் செல்சுவர் இல்லை எ.கா. ஜெல்லி மீன்கள்

3. ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக. 

1. எளிமையான உயிரினத்தில் இருந்து சிக்கலான உயிரினம் வரை படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைவதை இது குறிக்கிறது. 

2.  இவ்வகைப்பாட்டின் அமைப்பானது அதிகமாக அறிவியல் நீதியாகவும் மற்றும் இயற்கையின் முறைப்படியும் அமைந்துள்ளது.

VIII. விரிவான விடையளி 

1. ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக.

2. இருசொற் பெயரிடும் முறை குறிப்பு வரைக. 

• காஸ்பார்டு பாஹீன் 1623 ல் உயரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார். 

• இதற்கு இருசொல் பெயரிடும் முறை என்று பெயர். 

• இதனை 1753 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார். 

• இவரே நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

• இம்முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப்பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இருக்கும். 

• ஆங்கிலத்தில் எழுதும்போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும் சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்படவேண்டும்.

எ.கா. வெங்காயத்தின் இருசொல் பெயர் அல்லியம் சட்டைவம். 

3. முதுகுநாணற்றவையின் வகைப்பாட்டினை அவற்றின் பொதுப்பண்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் எழுது. 

புரோட்டோசோவா : 

நுண்ணோக்கி மூலம் பார்க்கக்கூடிய ஒரு செல் உயிரி. 

இடப்பெயர்ச்சி

போலிக்கால்கள், கசையிழை, குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

துளையுடலிகள்: பல செல் உயிரிகள் உடல் முழுதும் துளைகள் நிறைந்து காணப்படும்.

குழியுடலிகள்

ஈரடுக்கு உயிரிகள் ஒட்டியோ, நீரில் நீந்தியோ மற்றும் தனித்து அல்லது கூட்டமாகக் காணப்படும்

தட்டைப்புழுக்கள்

உடற்குழயற்றவை ஒட்டுண்ணிகளாக விலங்குகள் மற்றும் மனிதர்களில் காணப்படுகிறது. இருபால் உயிரிகள் எ.டு. நாடாப்புழு

இனப்பெருக்கம்

பிளவு முறை அல்லது இணைவு முறை. 

பால் மற்றும் பாலிலாமுறை இனப்பெருக்கம் 

பாலின மற்றும் பாலிலா இனப்பெருக்கம் 

உடற்கண்டங்கள் அற்றவை நோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகள் பாலின முறை இனப்பெருக்கம்.

வளைத்தசைப் புழுக்கள் : மூவடுக்கு உயிரிகள் உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இருபால் உயிரிகள் 

எ.கா. மண்புழு 

கணுக்காலிகள் : கைட்டினால் ஆன புறச்சட்டகத்தை கொண்டுள்ளது. இணைக்கால்கள் மற்றும் இணையுறுப்புகளால் ஆனது. ஒருபால் உயிரிகள் 

எ.கா நண்டு. 

மெல்லுடலிகள் : கண்டங்களற்ற உடலமைப்பு மாண்டில் கால்சியத்தினால் ஆன ஓடு காணப்படுகிறது. பால் இனப்பெருக்கம். 

எ.கா. நத்தை 

முட்தொலிகள் : கடலில் மட்டுமே வாழ்பவை நீர்க்குழல் மண்டலமும், குழாய் கால்களும் உணவூட்டத்திற்கும் சுவாசத்திற்கும் இடப்பெயர்ச்சிக்கும் உதவுகிறது. 

எ.கா.கடல் வெள்ளரி.

IX. உயர்சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி 

1. சாறுண்ணி, ஒட்டுண்ணி மற்றும் கூட்டுயிரி உணவூட்டம் எந்தப் பேருலகத்தில் காணப்படுகிறது? ஏன்? 

• பூஞ்சைகள் சாறுண்ணிகளாகவும், சிதைப்பான்களாகவும் அல்லது ஒட்டுண்ணிகளாகவும் காணப்படுகிறது. 

• இவை தனக்கு தேவையான ஊட்டப் பொருள்களை உணவுப் பொருள்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து அவற்றைச் செரித்து உறிஞ்சுதல் மூலம் உணவாகப் பெறுகின்றன. 

• பூஞ்சைகள் கூட்டுயிரிகளாக ஒரு சில மரங்களின் வேர்களில் உள்ளது. பூஞ்சை மரங்களிலிருந்து உணவை உறிஞ்சுகின்றன. மேலும் தாது உப்புகளை உறிஞ்சி பூஞ்சை தாவரத்திற்கு கொடுக்கிறது.

X. பின்வரும் படங்களைப் பார்த்து உயிரினங்களின் உலகத்தின் பெயரை எழுதுக. 

1. சில உயிரினங்களின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உயிரினங்கள் எந்த உலகத்தைச் சார்ந்தவை என்பதை அடையாளம் கண்டு எழுதுக.

விடை :

தாவரம் , மொனிரா, புரோடிஸ்டா, விலங்கு, பூஞ்சை

2. ப்ளாண்ட்டே மற்றும் அனிமேலியா வேறுபடுத்துக. 

ப்ளாண்ட்டே

1. பல செல் உயிரினங்கள் யூகேரியோடிக்

2. உண்டு 

3. திசு மற்றும் உறுப்புகள் கொண்டவை 

4. தற்சார்பு ஊட்ட முறை 

5. சிறுசெடி, புதர்ச்செடி மற்றும் மரங்கள் 

அனிமேலியா

1. பல செல் உயிரினங்கள் யூகேரியோடிக்

   2. உண்டு

3. திசுக்கள், உறுப்பு, உறுப்பு மண்டலங்கள் கொண்டவை

4. பிற ஊட்ட முறை

5. புழு, பூச்சி, மீன், தவளை, பறவைகள், மனிதன்

மாணவர் செயல்பாடு

செயல்பாடு: 1

நோக்கம்: பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்களைப் பல்வேறுவகைகளாக வகைப்படுத்துதல். 

தேவையான பொருட்கள் : ஒரு பெட்டியில் நிரப்பப்பட்ட பல்வேறு வகையான பொத்தான்கள் 

செயல்முறை

1. பெட்டியில் நிரப்பப்பட்டுள்ள பொத்தான்களை எடுத்துக் கொள்ளவும்.

2. மாணவர்கள் மூன்று அல்லது நான்கு சிறிய குழுக்களாகப் பிரிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டின் விதிகளின் படி பொத்தான்களை வகைப்படுத்தவும். 

அ. வடிவம் 

ஆ. நான்கு துளைகளை உடைய பொத்தான்கள்

இ. இரண்டு துளைகளை உடைய பொத்தான்கள்

ஈ. நிறம்

இதைத் தவிர மற்ற சிறப்பு இயல்புகளையும் கண்டறியவும்

செயல்பாடு : 2

கொடுக்கப்பட்ட விலங்கினங்களில், பொருத்தமான விலங்கின பெயரை படங்களைப் பார்த்து கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. முதுகெலும்பு உடையவை மனிதன்நாய் மற்றும் புலி

2. முதுகெலும்பு அற்றவை மண்புழு, நண்டு மற்றும் நத்தை

3. இறக்கை கொண்ட முதுகெலும்பு உடைய உயிரி கிளி, கோழி

4. இறக்கை கொண்ட முதுகெலும்பு அற்ற உயிரி பட்டாம்பூச்சி, ஈ

5. முதுகெலும்பு அற்ற கண்டங்கள் உடைய உயிரி நண்டு, இறால்

6. முதுகெலும்பு அற்ற கணுக்கால்கள் உடைய உயிரி தேள், சிலந்தி

7. முதுகெலும்பு உடைய வெப்ப இரத்த பிராணி மனிதன், கரடி

8. முதுகெலும்பு உடைய குளிர் இரத்த பிராணி மீன், முதலை

9. நுரையீரல் மூலம் சுவாசம் மேற்கொள்ளும் முதுகெலும்பு உடைய உயிரி பெயரைக்குறிப்பிடுக ஆடு, நாய்

10. அலகு உடைய விலங்கு கொக்கு, கழுகு

செயல்பாடு : 3

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தொகுதியின் பெயரும், சிறப்புப் பண்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய தொகுதியைச் சார்ந்த விலங்குகளின் பெயரை எழுதுக

தொகுதி : பண்புகள் : உதாரணம்

துளையுடலிகள் : துளை தாங்கிகள் : கடற்பாசி

குழியுடலிகள் : இரைப்பை குருதிக் குழி : ஹைட்ரா

தட்டைப் புழுக்கள் : சுடர் செல்கள் : நாடாப்புழு

உருளைப் புழுக்கள் : நூல் போன்ற புழுக்கள் : அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்டுகள்

வளைத்தசை புழுக்கள் : உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன : மண்புழு

கணுக்காலிகள் : கால்கள் இணைப்புகளால் ஆனது. : நண்டு

மெல்லுடலிகள் : மென்மையான உடல் மற்றும் பாதுகாப்பு ஓடு : நத்தை

முட்தோலிகள் : உடற்சுவற்றில் முட்கள் காணப்படும் : நட்சத்திரமீன்

முதுகுநாணுள்ளவை : முதுகு நாண் உள்ளவை : மனிதன்

செயல்பாடு : 4

உங்கள் அருகில் உள்ள உயிரியல் பூங்காவை பார்வையிடவும் அங்குள்ள வெவ்வேறு விதமான தாவரங்களையும், விலங்குகளையும் மாணவர்கள் கண்டறியச் செய்யுங்கள். அங்கு விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் அறிவியல் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். – அவற்றைக் குறித்துக் கொண்டு வந்து உங்கள் வகுப்பு மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *