Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Water

Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Water

அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்

மதிப்பீடு

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____________________ ஆகும்.

  1. நன்னீர்
  2. தூயநீர்
  3. உப்பு நீர்
  4. மாசடைந்த நீர்

விடை : உப்பு நீர்

2. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

  1. ஆவியாதல்
  2. ஆவி சுருங்குதல்
  3. மழை பொழிதல்
  4. காய்ச்சி வடித்தல்

விடை : காய்ச்சி வடித்தல்

3. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

I. நீராவிப்போக்கு II. மழைபொழிதல்
III. ஆவி சுருங்குதல் IV. ஆவியாதல்
  1. II மற்றும் III
  2. II மற்றும் IV
  3. I மற்றும் IV
  4. I மற்றும் II

விடை : I மற்றும் IV

4. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

  1.  பனி ஆறுகள்
  2. நிலத்தடி நீர்
  3. மற்ற நீர் ஆதாரங்கள்
  4. மேற்பரப்பு நீர்

விடை : நிலத்தடி நீர்

5. வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் ________________ .

  1. வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
  2. அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.
  3. வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
  4. அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

விடை : அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

II. சரியா? தவறா? 

1. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.

விடை : சரி

2. நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

விடை : தவறு

சரியான விடை : நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் நிலத்தடி நீர் ஆகும்.

3. சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.

விடை : சரி

4. குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

விடை :  சரி

5. கடல் நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

விடை : தவறு

சரியான விடை : மேற்பரப்பு நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இயற்கையாகக் கிடைக்கும் நீரில் _________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.

விடை : 1%

2. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு _________ என்று பெயர். 

விடை : ஆவியாதல்

3. நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் __________________ குறுக்கே கட்டப்படுகிறது. 

விடை : அணை

4. ஆறுகளில் பாயும் நீரின் அளவு ________________ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்.

விடை : மழை

5. நீர் சுழற்சியினை ___________ என்றும் அழைக்கலாம். 

விடை :ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி

IV.பொருத்துக

1. வெள்ளம்ஏரிகள்
2. மேற்பரப்பு நீர்ஆவியாதல்
3. சூரிய ஒளிநீராவி
4. மேகங்கள்துருவங்கள்
5. உறைந்த நீர்அதிகளவு மழை

விடை : 1 – உ, 2 – அ, 3 – ஆ, 4 – இ, 5 – ஈ

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக

1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த் துளிகளாக ஆகிறது.

2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்

8. தூசுப் பொருள்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை :-

3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

8. தூசுப் பொருள்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்

1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த் துளிகளாக ஆகிறது.

2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக

1. மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : ________________

விடை : நீர்மேலாண்மை

2. நிலத்தடி நீர் : ________________ :: மேற்பரப்பு நீர் : ஏரிகள்.

விடை : நன்னீர்

VII. மிகக் குறுகிய விடையளி

1. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  1. ஆழ்துளை கிணறுகள்
  2. ஆறுகள்
  3. குளம்
  4. ஏரிகள்
  5. நிலத்தடிநீர்

2. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?

நாம் நம்மை சற்றியுள்ள பல்வேறு மூலங்களில் இருந்து நீரினைப் பெறுகிறோம். கிணறுகள், கால்வாய்கள், நீர்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீர் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவை கிராமங்களுக்கம் நகரங்களுக்கும் நீர் ஆதாராங்களாக விளங்குகின்றன.

3. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?

பனிக்கட்டிகளைக் கொண்ட நீரின் குளிர்ந்த பகுதியானது அதை சுற்றியுள்ள காற்றினை குளிரச் செய்கிறது. அதன் மூலம் காற்றிலுள்ள நீராவி சுருங்கி குவளையின் வெளிப்பகுதியில் நீர்த்திவரைகள் உருவாகியுள்ளது. இதன் மூலம் வளிமண்டலத்தில் நீராவி உள்ளதனை நாம் அறியலாம்.

4. அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை. ஏன்?

இலட்சக்கணக்கான மிக நுண்ணிய நீர்திவலைகள் ஒன்றோடொன்று மோதி பெரிய நீர் திவலைகளாக மாறுகின்றன. மேகங்களைச் சுற்றியுள்ள காற்றானது குளிர்ச்சியடையும்போது இந்த நீர் மழையாகவோ அல்லது பனியாகவோ புவியை வந்தடைகின்றது.

5. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

துருவங்களில் உள்ள பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளில் நீர் உறைந்த நிலையில் காணப்படும். பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவு, அதாவது 68.7% உறைந்த நிலையில் காணப்படுகிறது.

6. ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நீர்வாழ் விலங்குகள் எவ்வாறு உயிர் வாழ்கின்றன?

பனிப்படலத்திற்கு கீழ் வசிக்கும் நீர்வாழ் விலங்குகள் இறப்பதில்லை. ஏனெனில் மிதக்கும் பனிப்படலமானது ஒரு பாதுகாப்புப் படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதனை அனுமதிப்பதில்லை. எனவே நீரின் மேற்பரப்பு மட்டுமே குளிர்ச்சியடைந்து பனியாக மாறுகின்றது. இக்காரணங்கள் நீர்வாழ் விலங்குகளுக்கு சாதகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றன.

7. மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?

மழைநீரினை நேரடியாகச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதலே மழைநீர் சேகரிப்பு எனப்படும்.

மழைநீர் சேகரிப்பில் இரண்டு முறைகள் காணப்படுகின்றன.

அ. மழை எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்.

உதாரணமாக கட்டிடங்களின் மேல்தளத்திலிருந்து வரும் மழை நீரினை சேகரித்தல்.

ஓடும் மழைநீரினை சேகரித்தல்

உதாரணமாக மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

VIII. குறுகிய விடையளி

1. மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.

மேற்பரப்பு நீர்

புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீர் மேற்பரப்பு நீர் எனப்படும். ஆறு, ஏரி, நன்னீர், சதுப்புநில நீர் போன்றவை மேற்பரப்பு நீர் ஆதாரங்களாகும்

நிலத்தடி நீர்

புவிப்பரப்பின் கீழே மண்ணில் நிறைந்திருக்கும் அல்லது மண்ணில் செறிந்திருக்கும் நீர் நிலத்தடி நீர் எனப்படும். நீரூற்றுகள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், அடிகுழாய்கள் போன்றவை மூலம் நாம் நிலத்தடி நீரினைப் பெறுகிறோம்.

2. “நீர் சேமிப்பு” என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.

  • மழைநீர் உயிர் நீர்
  • நீரை சேமிப்போம், வாழ்வை காப்போம்
  • நீர் இல்லையெனில் நாளை நீ இல்லை

3. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.

சாத்தியமில்லை

காரணம்

புவியில் காணப்படும் நீரின் அளவு மாற்றத்திற்கு உட்படாமல் எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளது. ஆனால் அந்நீரினை உபயோகிக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனை நாம் நீர்ப் பற்றாக்குறை என அழைக்கிறோம்.

4. கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.

கழிவு நீரில் உள்ள கழிவுப்பொருட்கள் அனைத்தையும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் முறையில் நீக்குதல் வேண்டும். ஏனென்றால் அப்பொழுதான் மீண்டும் உபயோகமுள்ள நீராக மாறும். இல்லையென்றால் நீரில் வாழும் உயிரினங்கள் அழிந்தவிடும் சூழ்நிலை ஏற்படும்.

5. இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுப்படுத்தவும்.

  1. மக்கள் தொகைப் பெருக்கம்
  2. சீரான மழை பொழிவின்மை
  3. நிலத்தடி நீர்மட்டம் குறைதல்
  4. நீர் மாசுபடுதல்
  5. நீரினை கவனக்குறைவாக கையாளுதல்

IX. விரிவான விடையளி

1. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.

குடிநீர் என்பது மனிதர்களால் உட்கொள்ளப்பட்டால் எவ்வகை பாதிப்பையும் ஏற்படுத்தாத நீர் ஆகும், வளர்ந்த நாடுகளில் குடிநீர் குழாய்நீராக உணவு தயாரிக்க பயன்படத்தப்ட்டாலும் வணிகம் மற்றும் தொழில்துறையிலேயே குழாய் நீர் அதிகம் பயன்படுகிறது. இவற்றி்கு அளிக்கப்படும் நீர் தரக்கட்டுபாடுகளின் வரையறைகள் எட்டியிருக்க வேண்டும்.

குடிநீரின் பண்புகள்

  • தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் இல்லாது இருத்தல். மேலும் குளோரின், புளுரைடு, உலோகங்கள், பாக்டிரியா இது போனற் பொருட்கள் இல்லாது இருத்தல்
  • இயற்கையான கனிம பொருட்களால் நிரப்பப்பட்டது
  • pH அமிலகாரத் தன்மையானது சரியான அளவில் காணப்படும்
  • இயற்கையான நீர் சுவையில் நீரானது இருத்தல்

2. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

மழைநீரினை நேரடியாகச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதலே மழைநீர் சேகரிப்பு எனப்படும்.

மழைநீர் சேகரிப்பில் இரண்டு முறைகள் காணப்படுகின்றன.

அ. மழை எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்.

உதாரணமாக கட்டிடங்களின் மேல்தளத்திலிருந்து வரும் மழை நீரினை சேகரித்தல்.

ஓடும் மழைநீரினை சேகரித்தல்

உதாரணமாக மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *