Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Chemistry in Everyday Life

Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Chemistry in Everyday Life

அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்

மதிப்பீடு

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  சோப்புக்களின் முதன்மை மூலம் ___________ ஆகும்.

  1. புரதங்கள்
  2. விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
  3. மண்
  4. நுரை உருவாக்க

விடை : விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

2. வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு ___________ கரைசல் பயன்படுகிறது. 

  1. அம்மோனியம் ஹைட்ராக்சைடு
  2. சோடியம் ஹைட்ராக்சைடு
  3. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  4. சோடியம் குளோரைடு

விடை : சோடியம் ஹைட்ராக்சைடு

3. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் ___________ ஆகும்

  1. விரைவாக கெட்டித்தன்மையடைய
  2. கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
  3. கடினமாக்க
  4. கலவையை உருவாக்க

விடை : கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

4. பீனால் என்பது ______________________

  1. கார்பாலிக் அமிலம்
  2. அசிட்டிக் அமிலம்
  3. பென்சோயிக் அமிலம்
  4. ஹைட்ரோகுளோரிக் அமிலம்

விடை : கார்பாலிக் அமிலம்

5. இயற்கை ஒட்டும்பொருள் ________________ .

  1. புரதங்களில்
  2. கொழுப்புகளில்
  3. ஸ்டார்ச்சில்
  4. வைட்டமின்களில்

விடை : ஸ்டார்ச்சில்

II. சரியா? தவறா? 

1. செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.

விடை : சரி

2. ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

விடை : தவறு

சரியான விடை : எப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது

3. ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.

விடை : சரி

4. ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடொன்று பிரிக்கப் பயன்படுகின்றது.

விடை : தவறு

சரியான விடை : ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடொன்று சேர்க்கப் பயன்படுகின்றது.

5. NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.

விடை : சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு
_________ ஆகும்

விடை : புரோப்பேன்தயால் S-ஆக்ஸைடு

2. சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணைய் மற்றும் _________ தேவைப்படுகின்றது.

விடை :சோடியம் ஹைட்ராக்ஸைடு

3. உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது __________________ ஆகும். 

விடை : மண்புழு

4. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ________________ உரங்கள் ஆகும் 

விடை : இயற்கை

5. இயற்கை பசைக்கு உதாரணம் ___________ ஆகும்.

விடை : ஸ்டார்ச்

IV.பொருத்துக

1. சோப்புC6H5 OH
2. சிமெண்ட்CaSO2.2H2O
3. உரங்கள்NaOH
4. ஜிப்சம்RCC
5. பீனால்NPK

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – அ

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக

1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.

3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.

4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து குளிர வைக்கவும்.

5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையைத் துவைக்க முயற்சிக்கவும்.

6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

விடை :-

6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.

4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து குளிர வைக்கவும்.

3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.

1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையைத் துவைக்க முயற்சிக்கவும்.

VI. ஒப்புமை தருக

1. யூரியா: கனிம உரம் : : மண்புழு உரம்: ________________

விடை :இயற்கை உரம்

2. ________________ : இயற்கை ஒட்டும்பொருள் : : செலோ டேப் : செயற்கை ஒட்டும்பொருள்:

விடை : ஸ்டார்ச்

VII. மிகக் குறுகிய விடையளி

1. சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?

சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணைய் மற்றும் சோடியம் ஹைட்ராக்ஸைடு தேவைப்படுகின்றது.

2. சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?

சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.

நீர் விரும்பும் பகுதி

  • நீர் விரும்பிகள் நீர் மூலக்கூறுகளை நோக்கியும் செல்கின்றன.

நீர் வெறுக்கும் பகுதி

  • நீர்வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும்,

3. கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.

மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் என அழைக்கப்படுகின்றன.

எ.கா:-

  • யூரியா, சூப்பர் பாஸ்பேட்
  • அம்மோனியம் சல்பேட்
  • பொட்டாசியம் நைட்ரேட்.

4. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும். பீனாலின் மூலக்கூறு வாய்பாடு – C6H5OH. இது வீரியம் குறைந்த அமிலமாகும். இது ஆவியாகும் தன்மையுள்ள, வெண்மை நிறப் படிக திண்மமாகும்.

பினாலின் கரைசல் நிறமற்றதாக இருப்பினும், மாசு காரணமாக இளம் சிவப்பு நிறக் கரைசலாக மாற்றமடைகிறது.

5. பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.

  • கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க பயன்படுகின்றது.
  • அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகின்றது.
  • சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகின்றது.
  • கட்டுமானத்துறையில் பயன்படுகின்றது.

6. சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?

இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

7. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?

சிமெண்டுடன் நீர் சேர்க்கும்பொழுது சில நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது. சிமெண்ட் தயாரிக்கும்போது இறுதியாக அத்துடன் சிறிதளவு ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது. ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது.

VIII. குறுகிய விடையளி

1. மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றது?

மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு செரித்து வெளியேற்றுகின்றன. இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.

இவ்வாறு மண்புழு விவசாயத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவுவதால் இது உழவனின் நண்பன் எனவும் அழைக்கப்படுகிறது.

2. சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.

  • பண்டைய காலத்தில் வீடுகளைக் கட்ட சுண்ணாம்புக் கலவைகளும், மண் மற்றும் மரக்கட்டைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது வீடுகள் முதல் பெரிய அணைக்கட்டுகள், மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு சிமெண்ட் பயன்படுகிறது.
  • இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
  • சிமெண்டுடன் நீர் சேர்க்கும்பொழுது சில நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது. சிமெண்ட் தயாரிக்கும்போது இறுதியாக அத்துடன் சிறிதளவு ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது.
  • ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது.

3. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

  • உரமாகப் பயன்படுகிறது.
  • சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
  • பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது.

IX. விரிவான விடையளி

1. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

அன்றாட வாழ்வில் வேதியியல் பாட விடைகள் 2021
  • இரும்புக்கம்பிகள் அல்லது எஃகு வலைகளைக் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரையாகும்.
  • இந்தக் காரை மிகவும் வலுவானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும்.
  • இது அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.
  • இதைக்கொண்டு பெரிய குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்களையும் அமைக்கின்றார்கள்.

2. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

தேவைப்படும் பொருள்கள் :

35 மி.லி நீர், 10 கி. சோடியம் ஹைட்ராக்சைடு, 60 மி.லி. தேங்காய் எண்ணெய்.

செய்முறை

  • சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்.
  • கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பு.
  • அதனுடன் 10 கி. சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
  • பின் அதனுடன் 60மி.லி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  • பின் இதனை சிறிய காலித் தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *