Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 1

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 1

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே

உரைநடை: விரிவாகும் ஆளுமை

I. பலவுள் தெரிக

1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?

  1. கொம்பு
  2. மலையுச்சி
  3. சங்கு
  4. மேடு

விடை : மலையுச்சி

2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை?

  1. நிலையற்ற வாழ்க்கை
  2. பிறருக்காக வாழ்தல்
  3. இம்மை மறுமை
  4. ஒன்றே உலகம்

விடை : ஒன்றே உலகம்

II. குறு வினா

1. தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?

தமிழ்ச்சான்றோன் சமுதாயத்திலேயே வாழ்ந்து தன்னால் இயன்ற வரை சமுதாயத்திற்குப் பல நன்மைகள் செய்வான்.ஆனால், உரோமையரின் சான்றோர் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்க்க வேண்டும்.

III. சிறு வினா

1. உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளைக் ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?

மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.

2. கோர்டன் ஆல்பர்ட கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.

முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமைதான என்கிறார் கோர்டன் ஆல்பர்ட்முதலாவது மனிதன், தன் ஈடுபாடுகளை வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய நலத்திற்கும், இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப் படுத்த வேண்டும்.இரண்டாவது ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்து ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையத் தரும் தத்துவத்தை கடைபிடித்து நடத்தல் வேண்டும்.

IV. நெடு வினா

தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துக்களைத் தனிநாயக அடிகளாரின் வழி நிறுவுக.

உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி பாராட்டுவது நம் இயல்புஅதனையே“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு வரிகளையும்,“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்சாந்துணையும் கல்லாத வாறு” – என்னும் குறட்பா வரிகளும் கூறுகின்றன.மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.

கூடுதல் வினாக்கள்… 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி நம் இயல்பு.

விடை : அன்பு பாராட்டுவது

2. குறிக்கோள் இல்லாத வீழ்ச்சி அடையும்

விடை : சமுதாயம்

3. தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் _____________ குறிப்பிடத்தக்கவர்.

விடை : தனிநாயகம் அடிகள்

4. திருவள்ளுவரை _____________ உலகப்புலவர் என்று போற்றினார்

விடை : ஜி.யு.பாேப்

II. குறு வினா

1. சீன அறிஞர்கள் யாவர்?

வாவோட்சு, கன்பூசியசு

2. கிரேக்க அறிஞர்கள் யாவர்

பிளேட்டா, அரிஸ்டாட்டில்

3. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை புறநானூற்றில் ஆலந்துகிழார் எப்படி கூறுகிறார்?

குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை “பூட்கையில்லோன் யாக்கை போல” என்று புறநானூற்றில் ஆலந்துகிழார் கூறுகிறார்.

4. எப்போது ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கையாகிறது?

பிறருக்காகப் பணி செய்யும் போது ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கையாகிறது.

5. சான்றோன் பற்றி இலக்கணம் வகுத்தவர் யார்?

சான்றோன் பற்றி இலக்கணம் வகுத்தவர் இத்தாலி நாட்டினர் உரோமையர்.

6. பிறர் நலக்கொள்கையும், பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன் முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் யார்?

  • தமிழ்நாட்டுப் பாணர்
  • புலவர்

7. தனிநாயகம் அடிகள் எவற்றை உருவாக்க காரணமாய் இருந்தார்?

தனிநாயகம் அடிகள் அகில உலகத் தமிழாய்வு மன்றம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக்க காரணமாய் இருந்தார்.

8. திருக்குறள் எதற்காக எழுதப்பட்ட நூல்?

மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்.

9. பண்புடமை பற்றி பரிப்பெருமாள் கூறியன யாவை?

பண்புடைமையாவது யாவர்மாட்டம் அன்பினராய் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்ததிறகுப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை

10. பரந்த ஆளுமையும், மனித நலக் கோட்பாடும் புலவர் தெறென்ஸ் கூறிய கூற்றுடன் ஒப்பிடத்தக்க கூற்றினை கூறுக

“நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று”

11. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் நிலைநாட்ட ஆலந்தூர் கிழார் பாடிய பாடல் வரிகளை எழுதுக

குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப்

“பூட்கையில்லோன் யாக்கை போல” (புறம். 69)

என்னும் அடியில் புலவர் ஆலத்தூர்கிழார் நிலைநாட்டுகிறார்.

12. பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும் என்பதை புறப்பாட்டு வரிகள் எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது?

பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும்.

“உண்டாலம்ம இவ்வுலகம்”

என்ற புறப்பாட்டு இந்தப் பண்பை அழகாக எடுத்துக்காட்டுகின்றது.

13. திருக்குறள் எதற்காக எழுதப்பட்ட நூல்?

மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது.

14. ஜி.யு.போப் திருவள்ளுவரை எவ்வாறு போற்றுகிறார்?

ஜி.யு.போப் திருவள்ளுவரை உலகப்புலவர் என்று போற்றுகிறார்.

II. சிறு வினா

1. முதிர்ந்த ஆளுமைக்கு இன்றியமையாதவை என கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று இலக்கணங்களை எழுதுக.

முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்கிறார் கோர்டன் ஆல்போர்ட் (Gordon Allport) என்னும் உளநூல் வல்லுநர்.

  • முதலாவதாக மனிதன், தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவ னாக இருத்தல் வேண்டும்; பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.
  • இரண்டாவதாக, ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும் (self objectification).
  • மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குத் தன் ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும் (unifying philosophy of life-self-unification).

2. இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடுகள் இடம், ஆண்டுகளை எழுதுக

1. முதலாவது உலகத்தமிழ் மாநாடு

  • ஆண்டு – 1966
  • இடம் – கோலாம்பூர், மலேசியா

2. இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு

  • ஆண்டு – 1968
  • இடம் – சென்னை, இந்தியா

3. மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு

  • ஆண்டு – 1970
  • இடம் – பிரான்சு, பாரீசு

4. நான்காவது உலகத்தமிழ் மாநாடு

  • ஆண்டு – 1974
  • இடம் – யாழ்ப்பாணம், இலங்கை

5. ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு

  • ஆண்டு – 1981
  • இடம் – மதுரை, இந்தியா

6. ஆறாவது உலகத்தமிழ் மாநாடு

  • ஆண்டு – 1968
  • இடம் – கோலாம்பூர், மலேசியா

7. ஏழாவது உலகத்தமிழ் மாநாடு

  • ஆண்டு – 1989
  • இடம் – மொரீசியசு, மொரீசியசு

8. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு

  • ஆண்டு – 1995
  • இடம் -தஞ்சாவூர், இந்தியா

செந்தமிழ் மாநாடு 2010-ல் கோவையில் நடைபெற்றது.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *