Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 6

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 6

தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

இலக்கணம்: யாப்பிலக்கணம்

I. பலவுள் தெரிக

காலத்தினால் செய்த நன்றி சிறிெதனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது

  1. நாள்
  2. மலர்
  3. காசு
  4. பிறப்பு

விடை : பிறப்பு

II. குறு வினா

அசை என்றால் என்ன? அசை எத்தனை வகைப்படும்?

  • எழுத்துக்களால் ஆனது அசை
  • நேரசை, நிரையசை என இரு வகைப்படும்

கூடுதல் வினாக்கள்

I. குறு வினா

1. யாப்பின் உறுப்புகள் எவை?

  • எழுத்து
  • அசை
  • சீர்
  • தளை
  • அடி
  • தொடை

2. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் குறில், நெடில், ஒற்று என மூன்று வகைப்படும்

3. சீர் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?

ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை அசை ஆகும்.

சீர் 4 வகைப்படும். அவை

  • ஓரசைச்சீர்
  • ஈரசைச்சீர்
  • மூவகைச்சீர்
  • நாலசைச்சீர்

5. ஈரசைச்சீர்களின் வாய்ப்பாடுகள் யாவை?

  • நேர் நேர் – தேமா
  • நிரை நேர் – புளிமா
  • நேர் நிரை – கூவிளம்
  • நிரை நிரை – கருவிளம்

II. சிறு வினா

1. மூவசைச்சீர்களின் வாய்ப்பாடுகள் யாவை?

நேர் நேர் நேர் – தேமாங்காய்நேர் நேர் நிரை – தேமாங்கனி
நிரை நேர் நேர் – புளிமாங்காய்நிரை நேர் நிரை – புளிமாங்கனி
நேர் நிரை நேர் – கூவிளங்காய்நேர் நிரை நிரை – கூவிளங்கனி
நிரை நிரை நேர் – கருவிளங்காய்நிரை நிரை நிரை – கருவிளங்கனி

2. அடி என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?

இரண்டும் இரண்டிற்கும் மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது அடியாகும்

  • குறளடி – இரு சீர்களை கொண்டது
  • சிந்தலடி – மூன்று சீர்களை கொண்டது
  • அளவடி – நான்கு சீர்களை கொண்டது
  • நெடிலடி- ஐந்து சீர்களை கொண்டது
  • கழிநெடிலடி – ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட சீர்களை கொண்டது

கற்பவை கற்றபின்

1. உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்ப்பாடு காண்க

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து

சீர்அசைவாய்ப்பாடு
பிறர்/நா/ணத்/நிரை நேர் நேர்புளிமாங்காய்
தக்/கது/நேர் நிரைகூவிளம்
தான்/நா/ணா/நேர் நேர் நேர்தேமாங்காய்
னா/யின்/நேர் நேர்தேமா
அறம்/நாண/த்/நிரை நேர் நேர்புளிமாங்காய்
தக்/கநேர் நேர்தேமா
துடைத்/துநிரைபுபிறப்பு

2. பாடல்களில் பயின்வரும் தாெடை நயங்களை எடுத்து எழுதுக

காெண்டல் காேபுரம் அண்டையில் கூடும்
காெடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் விளையாடும்
விண்ட பூமது வண்டலிட்டு ஓடும்
வெயில் வெய்யாேன் பாென்னெயில் வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே

மாேனை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்

  • காெண்டல் – காெடிகள்
  • கண்ட – கனக
  • அண்டர் – அழகர்
  • ஊர் – ஊரே

எதுகை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேனை ஆகும்

  • காெண்டல் – கண்ட
  • அண்டையில் – தண்டலை
  • விண்ட – வண்டலிட்டு
  • கனக – அனம்

இயைபு:-

செய்யுளின்  அடிகள் தோறும் இறுதி எழுத்தோ அல்லது சொல்லோ இயைந்து வருவது ஒன்றி வருவது இயைபு ஆகும்

  • கூடும் – மூடும்
  • பாடும் – ஆடும்
  • ஓடும் – வெடும்

வினாக்கள்

1. உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை நேர் – நிரை அசைகளாகப் பிரித்துப் பார்க்க

சாந்தாசாந் / தாநேர் நேர்
ஸ்ரீநிதிஸ்ரீ / நிதிநேர் நிரை
டேவிட்டே / விட்நேர் நேர்

2. மூவசை சீரில் அமைந்த பெயர்கள் நான்கினை குறிப்பிடுக

மீ / னாம் / பிகைஆ / னந் / தி
ஐ / யப் / பன்தமிழ் / மா / றன்

3. தம்பொருள் என்புதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் – இக்குறட்பாவில் பயின்றுவரும் மோனை, எதுகை ஆகியவற்றை கண்டறிக

மாேனை:-செய்யுளின்  அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்தம்பொருள் – தம்தம்

எதுகை:-செய்யுளின்  அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேனை ஆகும்தம்பொருள் – தம்தம்

4. தளையின் வகைகளை எழுதுக.

தளை ஏழு வகைப்படும்நேரொன்றாசிரியத்தளைநிரையொன்றாசிரியத்தளைஇயற்சீர் வெண்டளைவெண்சீர் வெண்டளைகலித்தளைஒன்றிய வஞ்சித்தளைஒன்றாத வஞ்சித்தளை

 மொழியை ஆள்வோம்… 

I. மாெழிபெயர்க்க.

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody justfinished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,” You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”

விடை:-

ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். அவர்கள் ஒரு ஏரியை அடைந்தார்கள். யாரோ ஒருவர் துணி துவைத்தபடியால் ஏரி கலங்கி சேறுடன் காணப்பட்டது. புத்தர் தனது சீடர்களிடம் மரத்தின் அருகே சிறிது ஓய்வு எடுக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழித்து சீடர்கள் தண்ணீர் மிகவும் தெளிவாக இருப்பதை கவனித்தனர். அழுக்குகள் ஒதுங்கி விட்டன. உங்கள் மனமும் அப்படித்தான். அது தொந்தரவு செய்யும்போது, அப்படியே இருக்கட்டும். சிறிது நேரம் கொடுங்கள். அது கரைந்து, மறைந்து அழிந்து போய்விடும். நாங்கள் அமைதியாக இருக்கும்போது நம் வாழ்க்கையின் சிறந்த முடிவுகளை நாங்கள் தீர்மானிக்கலாம் மற்றும் எடுக்கலாம். ” அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

II. சொற்றொடர்களை அடைப்புகுறிக்குள் உள்ளவாறு மாற்றுக

1. மறுநாள் வீட்டுக்கு வருவதாக  முரளி கூறினார் (நேர்கூற்றாக மாற்றுக)

  • “நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்

2. “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிேறாம்” என்று ஆசிரியர் கூறினார் (அயற்கூற்றாக மாற்றுக)

  • “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்

3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள்  ஹோட்டலில் சாப்பிடப்பட்டான் (பிற மொழிச் சொற்களைத் தமிழாக்குக)

  • காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்)

4. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் ( ஒலி மரபுப் பிழைகளை திருத்துக)

  • அகவும் மயிலும், அலறும்ஆந்தையும், கூவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்

5. கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளை திருத்துக)

  • கோழிக் குஞ்சுகளைப் பிடிக்க பூனைக் குட்டிகள் ஓடின

மொழியோடு விளையாடு

I. பொருத்தமான வாய்ப்பாடுகளை கூறுக

1. பகலவன் – காசு / கருவிளம் / கூவிளங்கனி

  • கருவிளம்

2. மலர்ச்சி – கூவிளம் / புளிமா / கருவிளம் –

  • புளிமா

3. தாவோவியம் – தேமாங்கனி / தேமா – பிறப்பு

  • தேமாங்கனி

4. வெற்றிடம் – நாள் / கூவிளம் / புளிமா

  • கூவிளம்

5. பூங்குட்டி – கருவிளங்கனி / மலர் / தேமாங்காய்

  • தேமாங்காய்

II. அகராதியில் காண்க

1. வயம்

  • வலிமை.
  • வெற்றி
  • வேட்கை

2. ஓதம் 

  • வெள்ளம்
  • கடல் அலை
  • ஒலி

3. பொலிதல்

  • செழித்தல்
  • பெருகுதல்
  • மிகுதல்

4. துலக்கல்

  • விளக்கம்
  • ஒளி
  • மெருகு
  • தெளிவு

5. நடலை

  • வஞ்சனை
  • துன்பம்
  • பொய்மை

III. வினைத்தொகைகளைப் பொருத்தி எழுதுக.

(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரை விளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர் பூ)

  1. வளர்பிறை நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது
  2. தளிர்பூங்கொடிகளும், விளைநிலங்களும், மனதைக் கொள்ளையடிக்கின்றன.
  3. நீள்வீதிகள் அனைத்தும் மூடுபனியில் மூழ்கிக் கிடக்கின்றன
  4. மெல்ல வீசும் குளிர்காற்றும் வளர்தமிழ் புகழ்பாடுகிறது
  5. தொலைவில் கலங்கரை விளக்கின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது

IV. பொருத்துக

1. நேர் நேர் நிரைஅ. கூவிளங்காய்
2. நிரை நிரை நேர்ஆ. கூவிளம்
3. நேர் நிரைஇ. தேமாங்காய்
4. நிரை நிரைஈ. தேமாங்கனி
5. நேர் நேர் நேர்உ. கருவிளம்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ

கலைச்சாெல் அறிவாேம்

  1. எழுத்துச் சீர்திருத்தம்– Reforming the letters
  2. எழுத்துரு – Font
  3. மெய்யியல் (தத்துவம்) – Philosophy
  4. அசை – Syllable
  5. இயைபுத் தொடை – Rhyme

அறிவை விரிவு செய்

  • பெரியாரின் சிந்தனைகள் – வே.ஆனைமுத்து
  • அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி. சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு.சாம்பசிவன்)
  • தங்கைக்கு – மு. வரதராசன்
  • தம்பிக்கு – அறிஞர் அண்ணா
Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *