Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Social Science Books Tamil Medium Educational Rights

Samacheer Kalvi 5th Social Science Books Tamil Medium Educational Rights

சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள்

அலகு 3

கல்வி உரிமைகள்

கற்றல் நோக்கங்கள்

மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,

❖ கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரிப்பர்.

❖ பல்வேறு வகையான கல்வித்திட்டங்கள் பற்றி விவரிப்பர்.

❖ கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகளைப் பட்டியலிடுவர்.

அறிமுகம்

மக்களுக்கும், தேசத்திற்கும் கல்வி மிகவும் முக்கியமானது. குழந்தையின் வளர்ச்சிக்கான முதல் படி கல்வியாகும். கல்வி ஒருவரின் அறிவு, திறன்கள், மதிப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. இது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.

கல்வியின் முக்கியத்துவம்

கல்வி என்பது, ஒருவர் பெற்ற எழுத்தறிவை மட்டும் குறிப்பதன்று; இது எழுத்தறிவைவிட மேம்பட்டதாகும். கல்வியின் மூலம்,

• காரணத்தை ஆய்ந்து அறிதல்.

• வாழ்வியல் திறன்களை வளர்த்தல்.

• எது சரி, எது தவறு என்பதனை அறிதல்.

• ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழ்தல்.

“கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் | பெறுவது அல்ல. எழுத்தறிவு பெறுவது மட்டுமே கல்வியின் நோக்கமும் அல்ல.” “உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணர்வதே கல்வியின் உன்னத நோக்கம்.”

-மகாத்மா காந்தி

ஒருவர் பரந்த மனப்பான்மையைப் பெற கல்வி உதவுகிறது. இது மூடநம்பிக்கைகளை (Superstitions) நீக்குகிறது. சமூகம், சூழ்நிலை மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது. இது ஞானத்தை வளர்க்கிறது.

நாம் அறிந்து கொள்வோம் 

“அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே’

என்று தொடங்கிய தனது சொற்பொழிவால் சுவாமி விவேகானந்தர் பரவலாக அனைவராலும் அறியப்படுகின்றார்.

“கல்வி என்பது மனிதனுள் ஏற்கெனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு.

-சுவாமி விவேகானந்தர்

நாம் அறிந்து கொள்வோம்.

குருகுலம் என்பது பண்டைய இந்தியாவில், பின்பற்றிக் கொண்டிருந்த கல்வி முறையாகும். குரு (ஆசிரியர்) மற்றும் ஷிஷ்யா (மாணவர்) ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.

கல்வி உரிமைகள்

ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு. இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்வதற்கு (Ensure) கல்வி உரிமைச் சட்டம் (RTE) உள்ளூர் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெவ்வேறு பொறுப்புகளை அளித்துள்ளது.

6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச | மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கல்வி உரிமைச் சட்டம் (2009) விவரிக்கிறது.

கல்வி அனைவருக்கும் பாகுபாடின்றி எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். கல்வி தேவை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். இது குழந்தையின் ஆளுமையை வடிவமைக்க வேண்டும் கல்வி முறையின்படி கல்வியானது குழந்தையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

செயல்பாடு நாம் செய்வோம்.

புதிருக்கு விடை காண்க.

குறிப்புகள்

1 நான் அழுக்காக இருக்கும் பொழுது வெண்மையாகவும், தூய்மையாக இருக்கும் பொழுது கருப்பாகவும் இருப்பேன். நான் யார்?

2 நான் இளம் வயதில் உயரமாகவும், வயதாகும் போது குட்டையாகவும் இருப்பேன். நான் யார்?

3 உலர்ந்திருக்கும்பொழுது நான் ஈரமாக்கப்படுவேன். நான் யார்?

4 எனக்குக் கழுத்து உண்டு. ஆனால், தலை இல்லை. நான் யார்?

சட்டமன்றப் பிரிவு மூன்று பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் ஆகும். கல்வி, பொதுப் பட்டியல் பிரிவின் கீழ் வருகிறது.

கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகள்

•  தொடக்கக் கல்வி நிறைவடையும்வரை, எந்த மாணவரும் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுவதில்லை.

•  அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு இருபத்தைந்து சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

•  கல்வியின் தரத்தில் முன்னேற்றம்.

•  ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.

•  மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிதி பகிரப்படும்.

தேசிய கல்வி கொள்கை

இந்திய மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 2019ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசிய கல்வி கொள்கையை (NPE) வடிவமைத்துள்ளது. தேசிய கல்வி கொள்கை தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலான அனைத்துக் கல்வி முறைகளையும் உள்ளடக்கியது.

நாம் அறிந்து கொள்வோம்.

முதல் தேசிய கல்வி கொள்கை 1968 இல் செயல்படுத்தப்பட்டது, இரண்டாவதாக  1986 இல் செயல்படுத்தப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர் முறை நமது நாட்டில் அனுமதிக்கப்படவில்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி கிடைக்க உரிமை உண்டு.

கல்வித் திட்டங்கள்

முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசரால் செயல்படுத்தப்பட்ட இலவச மதிய உணவு திட்டம் இன்றியமையாத கல்வித் திட்டமாக விளங்குகின்றது.

இந்தியக் கல்வி முறை முக்கியமாக நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

❖ தொடக்க நிலை

❖ நடுநிலை

❖ உயர்நிலை

❖ மேல்நிலை

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), கல்வி உரிமைச் சட்டம் (RTE) போன்றவற்றால் கல்வியில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம்

❖ தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்.

❖ 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறச்செய்தல்.

❖ கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) மற்றும் ஆசிரியர் கல்வி (TE) ஆகிய முந்தைய (Erstwhile) மூன்று திட்டங்களை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (SS) ஏற்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் நோக்கம்

❖ குறைந்தபட்ச கல்வியின் அளவைப் பத்தாம் வகுப்புக்கு உயர்த்துதல்.

பின்னர் 2018ஆம் ஆண்டில், இந்திய அரசு மழலையர் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை பள்ளிக் கல்வியை இணைத்து ஒரே திட்டமாக வழங்க விரும்பியது. இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (SS) என்று அழைக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (SS) குறிக்கோள்கள்

❖ தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.

❖ கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஆதரித்தல்.

❖ பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.

❖ மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

நாம் அறிந்து, கொள்வோம்.

பெருந்தலைவர் கு.காமராசர் கல்விக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த நாள் (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது

கலைச்சொற்கள்

1. Ensure : உறுதிப்படுத்துதல்

2. Erstwhile : முந்தைய

3. Superstitions : மூடநம்பிக்கைகள்.

மீள்பார்வை

❖ ஒவ்வொரு தனிநபருக்கும் கல்வி மிகவும் முக்கியமானது.

❖ ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெற உரிமை உண்டு.

❖ கல்வி அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

❖ 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கல்வி உரிமைச் சட்டம் (2009) விவரிக்கிறது.

❖ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (SS) குறிக்கோள் தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல் ஆகும்.

வினா விடை

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1) —————— என்பது, குழந்தையின் வளர்ச்சிக்கான முதல் படியாகும்.

அ) கல்வி

ஆ) ஆய்வு

இ) அகழ்வாராய்ச்சி

விடை: அ) கல்வி

2) கல்வி —————- விட மேம்பட்டதாகும்.

அ) எண் கணிதம்

ஆ) எழுத்தறிவு

இ) மேலே உள்ள அனைத்தும்

விடை: இ) மேலே உள்ள அனைத்தும்

3) ‘கல்வி என்பது மனிதனுள் ஏற்கெனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு” என்பது ——————– இன் பிரபலமான கூற்று ஆகும்.

அ) மகாத்மா காந்தி

இ) சுவாமி விவேகானந்தர்

ஆ) முனைவர். இராதாகிருஷ்ணன்

விடை : இ) சுவாமி விவேகானந்தர்

4) ————- குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.

அ) எழுத்தறிவு உரிமைச் சட்டம்

ஆ) கல்வி உரிமைச் சட்டம்

இ) பள்ளி உரிமைச் சட்டம்

விடை : ஆ) கல்வி உரிமைச் சட்டம்

5) கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு —————— வடிவமைத்துள்ளது.

அ) தேசிய கல்வி கொள்கை.

ஆ) தொடக்கக் கல்வி தொடர்பான தேசிய கொள்கை

இ) எழுத்தறிவுக்கான தேசிய கொள்கை

விடை: அ) தேசியக் கல்விக் கொள்கை

II. பொருத்துக.

1 குருகுலம் – 2009

2 கு.காமராசர் – 2018

3 கல்வி உரிமைச் சட்டம் – ஞானத்தை உருவாக்குகிறது

4 கல்வி- பண்டைய இந்தியக் கல்வி முறை

5 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்  – இலவச மதிய உணவு

விடை :

1 குருகுலம் – பண்டைய இந்தியக் கல்வி முறை

2 கு.காமராசர் – 2 இலவச மதிய உணவு

3 கல்வி உரிமைச் சட்டம் – 2009

4 கல்வி – ஞானத்தை உருவாக்குகிறது

5 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்  – 2018

III. சரியா தவறா?

1. ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்க உரிமை உண்டு. (விடை: சரி)

2.  விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது. (விடை: சரி)

3. பள்ளி உரிமை சட்டம் குழந்தைகளுக்கு இலவச மற்றும் விவரிக்கிறது. (விடை: சரி)

4. ஒருவரைக் கல்வி அறிவு உடையவராக மாற்றுவதற்கான முதல்படியாக எண் கணிதம் விளங்குகிறது. (விடை: தவறு)

5. முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசரால் செயல்படுத்தப்பட்டத் திட்டம் இலவச மதிய உணவுத் திட்டமாகும் (விடை: சரி)

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

1. கல்வியின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

• காரணத்தை ஆய்ந்து அறிதல்.

• வாழ்வியல் திறன்களை வளர்த்தல்.

• எது சரி, எது தவறு என்பதனை அறிதல். 

• ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ்தல்.

2. கல்வி உரிமைகள் குறித்துச் சிறு குறிப்பு வரைக.

• 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்கச் செய்தல்.

• பாகுபாடின்றி எளிதில் கிடைத்தல்.

• கல்வி தேவை அடிப்படையிலானதாக இருத்தல் வேண்டும். • குழந்தையை மையமானதாக இருத்தல் வேண்டும்.

3. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பங்கு என்ன?

• 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறச் செய்தல்.

• கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.

• ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்.

4. தேசிய கல்வி கொள்கை பற்றிச் சிறு குறிப்பு வரைக,

• இந்திய மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 2019-ஆம் ஆண்டில், இந்திய அரசு தேசிய கல்வி கொள்கையை (NPE) வடிவமைத்துள்ளது.

• இது தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலானது.

5. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் இரண்டு கூறுகளைப் பற்றி எழுதுக.

• தரமான கல்வியை வழங்கி, மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.

• பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.

• மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.

V விரிவான விடையளிக்க.

1. இந்தியக் கல்வி முறை பற்றி எழுதுக,

• இந்தியாவில் குருகுலக் கல்வியே நடைமுறையில் இருந்துள்ளது.

• குரு என்பவர் ஆசிரியர், ஷிஷ்யா என்பவர் மாணவர்.

• ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கச் சென்று கல்வி பயின்றுள்ளனர்.

• மனதை விரிவுபடுத்துவதற்கு உதவியது.

• சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது.

• மேலும் இது ஞானத்தை வளர்க்கிறது.

2. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விரிவாக எழுதுக.

• ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு.

• 6 முதல் 14 வயது வரையிலானது.

• கல்வி உரிமைச் சட்டம் 2009 இதை விவரிக்கின்றது.

முக்கியக் கூறுகளாவன:

• தொடக்கக் கல்வி முடியும் வரை எந்த மாணவரும் பள்ளியிலிருந்து இடை நில்லாமை.

• பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களின் குழந்தைகளுக்கு, அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு.

• ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

• மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கும் நிதி பகிரப்படும்.

3. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பற்றி விரிவாக எழுதுக.

2018-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு, மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக் கல்வியை இணைத்து ஒரே திட்டமாக வழங்க முனைவது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டமாகும்.

இதன் குறிக்கோள்கள்:

• தரமான கல்வியை வழங்கி, மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல். 

• கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.

• மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.

செயல்பாடு

செயல் திட்டம்

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *