சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 1 : சங்க கால வள்ளல்கள்
அலகு 1
சங்க கால வள்ளல்கள்
கற்றல் நோக்கங்கள்
❖ சங்க கால வள்ளல்களின் பெயர்களை அறிந்து கொள்ளல்.
❖ சங்க கால வள்ளல்கள் ஆட்சி செய்த பகுதிகளின் பெயர்களை அறிந்து கொள்ளல்.
❖ இரக்க குணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளல்.
❖ சங்க கால வள்ளல்கள் அவர்களுடைய பகுதிகளை எவ்வாறு ஆட்சி செய்தனர் என்பதனை விவரித்தல்,
கோடை விடுமுறையில், கீதா தன்னுடைய தாத்தாவுடன் தமிழகத்தில் உள்ள மலைவாழிடமான கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தாள். செங்குத்தான மலைப்பகுதிக்கு, பேருந்தில் செல்வது கீதாவிற்கு இதுவே முதல்முறை ஆகும்.
சென்னையைவிட இந்த மலைப்பகுதியில் மட்டும் ஏன் அதிக மரங்கள் காணப்படுகின்றன?
பொதுவாக மலைகள் அதிக மரங்களைக் கொண்டிருக்கும். அவற்றைப் பாதுகாப்பது மக்களின் முக்கிய கடமையாகும்.
தாத்தா,பேருந்துகளும், மகிழுந்துகளும் [கார்கள் பயன்படுத்துவதற்கு முன்பு இத்தகைய மலைகளுக்கு மக்கள் எப்படி வந்தனர்?
மலைகளில் ஏறுவதற்கு, குதிரைகளையும் கழுதைகளையும் மக்கள் பயன்படுத்தினர்.
இந்த மலைப்பகுதிகளை யார் ஆட்சி செய்தனர்?
சங்க காலத்தில் வள்ளல்கள் பலர் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர். ஆனால் அவர்களுள் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர்கள், ஏழு வள்ளல்கள் ஆவர்.
ஏழு வள்ளல்களா? ஏன் அவர்கள் மட்டும் அவ்வளவு. புகழ்பெற்று இருந்தனர்? அவர்கள் யார் யார்?
உங்களுக்குத் தெரியுமா?
பல்வேறு இலக்கியநயம் வாய்ந்த செவ்வியல் (classical) பாடல்களைக் கொண்டுள்ள சங்க இலக்கியங்களே, சங்க காலம் பற்றி அறிவதற்கான முக்கிய ஆதாரமாகும்.
பேகன், பாரி, நெடுமுடிக் காரி, ஆய், அதியமான், நள்ளி மற்றும் வல்வில் ஓரி ஆகியோரே அந்த கடையெழு வள்ளல்கள் ஆவர். அவர்கள் சங்க காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர். அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும் அன்பானவர்களாகவும் இயற்கையின் மீதும் மக்களின் மீதும் பற்று கொண்டவர்களாகவும் இருந்தனர்.
அந்த வள்ளல்களும் மக்களும் இயற்கையை எவ்வாறு பாதுகாத்தனர் என்பது பற்றியும் இயற்கை அவர்களை எவ்வாறு பாதுகாத்தது என்பது பற்றியும் சில கதைகளை நான் சொல்லட்டுமா?
கதைகளைக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
விடையளிக்க முயற்சி செய்க.
1) மூன்று வள்ளல்களின் பெயர்களைக் கூறுக.
2) கடையெழு வள்ளல்கள் எந்தக் காலகட்டத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்?
முதல் கதையைக் கேட்பதற்கு நீ தயாராக இருக்கிறாயா?
ஆம்!
சரி, இது பேகனைப் பற்றிய கதை பேகன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையை ஆட்சி செய்தார். அந்த மலையைத்தான், நாம் இப்பொழுது பார்க்கிறோம். இது மிகச் சிறிய மலைத் தொடராகும். இங்குக் குளிராக இருக்கிறது. அல்லவா?
ஆம் தாத்தா, அதனால்தான் அம்மா நமக்கு கம்பளி ஆடையை பெட்டியில் வைத்துள்ளார்கள்.
சரி பேகன் ஒரு நாள் தமது நடைப்பயணத்தின் போது, வழியில் ஒரு மயில் நடுங்குவதைக் கண்டார் குளிர் காரணமாக, மயில் நடுங்கிக் கொண்டிருப்பதாக அவர் கருதினார். அதனால், அந்த மயிலின் மீது போர்வையைக் கொண்டு போர்த்தினார்.
மயில் எப்படிப் போர்வையைப் பயன்படுத்தும்?
ஒருவேளை பயன்படுத்தாமல்கூட இருக்கலாம். ஆனால், பேகன் மயிலைத் தமது சொந்தக் குழந்தையைப் போலவே கருதினார் என்பதுதான் இதன் கருத்து. இப்போதெல்லாம் எத்தனைபேர் விலங்குகளிடம் இத்தகைய கருணையைக் காட்டுகின்றனர்?
தாத்தா ஒரு நாள், சிறுவன் ஒருவன் நாயின் மீது கற்கள் வீசுவதை நான் பார்த்தேன். அவன் செய்வதை நான் தடுத்து நிறுத்தினேன். பேகனைப் பற்றி அவன் அறிந்திருந்தால், அவன் விலங்குகளை நேசிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்திருப்பான்.
உண்மை. இது மரங்கள் மற்றும் விலங்குகளிடம் கருணை கொள்வது மட்டுமல்ல, மக்களை மதிப்பிடுவதும் ஆகும் நாம் அனைத்து உயிரினங்களையும் சமமாக நடத்தவேண்டும்.
விடையளிக்க முயற்சி செய்க.
1) பேகன் ஆட்சி செய்த மலைப்பகுதி எது?
2) பேகன், தமது நடைப்பயணத்தின் போது எதைக் கண்டார்?
3) நடுங்கிக் கொண்டிருந்த மயிலைக் கண்டு, பேகன் என்ன செய்தார்?
pppppppppppppppppppppppppppppppppppp
பாரி
சரி. அடுத்த கதை ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அறிவுக் கூர்மையும், கருணை உள்ளமும் உடைய பாரி வள்ளல், பறம்பு நாட்டை ஆட்சி செய்தார். பறம்பு மலையில் அமைந்துள்ளது இப்பறம்பு மலைத்தொடர் தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி, கேரளாவிலுள்ள பாலக்காடு வரை நீண்டுள்ளது. மூவேந்தர்களாகிய சேர, சோழ மற்றும் பாண்டியர்கள்
பறம்பு நாட்டை அவர்கள் முடியரசின் ஒரு பகுதியாக்க விரும்பினர் பாரி மற்றும் அவரது படைகளுக்கு எதிராகத் தனித்தனியாகப் போரிட்டு அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே, பறம்பு நாட்டை மூவரும் ஒன்று சேர்ந்து தாக்கினர்.
மலைகளுக்குள் அமைந்த அடர்ந்த காடுகளிலிருந்த பாரியின் படைகளை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை. அதனால் பறம்பு நாட்டின் மலையடிவாரங்களிலிருந்து தண்ணீர் மற்றும் உணவுப் பொருள்களை மலையின் மேற்பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்தனர். உணவு மற்றும் நீருக்காக மலையைவிட்டு வெளியில் வரும்போது பாரி சரணடைவார் என மூவேந்தர்கள் நினைக்கனர்
தாத்தா, பாரி சரணடைந்தாரா?
இல்லை, பாரி சரணடையவில்லை. சில மாதங்கள் சென்றன, பலாப்பழம், உண்ணக்கூடிய மூங்கில் மற்றும் கொட்டைகளை அந்தக் காடுகள் அதிக அளவில் அம்மக்களுக்கு வழங்கின. அந்த மலையில் இருந்த ஏராளமான நீரோடைகள் சுத்தமான நீரை அவர்களுக்கு வழங்கின. அதனால், பறம்பு மலையில் உள்ள காடுகள், மிகவும் வளமிக்கதாக இருப்பதை மூவேந்தர்களும் பின்னர்தான் உணர்ந்தனர்.
அதனால்தான் அம்மலையில் இருந்தவர்களுக்கு உணவோ, தண்ணீரோ மற்ற இடங்களிலிருந்து தேவைப்படவில்லை.
ஆம். பாரியும் அவனுடைய மக்களும் இயற்கையைப் பாதுகாத்ததைப் போலவே அந்தக்காடுகளும் அவர்களைப் பாதுகாதீதன. அவரின் பெருந்தன்மையைக் கூறக்கூடிய ஒரு பிரபலமான கதைகூட உள்ளது. ஒரு நாள், பாரி தம் தேரில் செல்லும்போது வழியில் முல்லைக்கொடி ஒன்றைக் கண்டார். அந்தக் கொடி பற்றிப்படர்வதற்கேற்ப ஒரு மரம் கூட சங்க இல்லை என்பதை அவர் உணர்ந்தார். அக்கொடி படர ஆதரவாகத் தம்முடைய தேரினை வழங்கினார்.
இக்கதை மிகவும் அருமையாக உள்ளது. எங்கள் பள்ளியில் நாங்கள் சில மரங்களை நட்டோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாரி வளர்த்ததைப் போலவே, அந்த மரங்கள் நன்றாக வளர்கின்றனவா என்பதை நானும் உறுதி செய்வேன்.
மேலும், வள்ளல்கள் சிலரின் கதைகளை நீ கேட்க விரும்புகிறாயா?
ஆம்!
விடையளிக்க முயற்சி செய்க.
1) பாரி ஆட்சி செய்த பகுதி எது?
2) மலையடிவாரங்களிலிருந்து பறம்பு நாட்டிற்குச் செல்லவிடாமல் நிறுத்தப்பட்டவை எவை?
3) முல்லைக் கொடிக்கு ஆதரவாக, பாரி எதைக் கொடுத்தார்?
அதியமான்
அதியமான் என்றழைக்கப்பட்ட மற்றொரு வள்ளல் இருந்தார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகடூர் என்ற மலைப்பாங்கான பகுதியை அவர் ஆட்சி செய்தார் ஒரு நாள் அவருக்கு அரியவகை நெல்லிக்கனி ஒன்று வழங்கட்டட்டது அந்த அரிய வகை பழத்தைச் சாப்பிட்டவர் எவரும் சாகாவரம் பெறுவர் என்று அவரிடம் கூறப்பட்டது. அவர் என்ன செய்தார் என்று உனக்குத் தெரியுமா? பழம்பெரும் புலவரான ஒளவையாருக்கு அப்பழத்தை வழங்கினார்.
அப்படியா?
ஆமாம். ஆனால், ஒளவையார் அதிர்ச்சியடைந்து, தனக்கு நெல்லிக்கனியை வழங்கக்காரணம் என்ன என்று அதியமானிடம் கேட்டார் மேலும், அதியமான் குறுநில மன்னராக இருப்பதால் அப்பழத்தை அவர்தாம் சாப்பிட வேண்டும் என்று ஒளவை கூறினார். ஆனால் அதியமானோ, தமக்குப் பின் குறுநில மன்னர்கள் பலரி வருவர். ஆனால், வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ் வேண்டும் என்று மக்களுக்குக் கற்பிக்கக்கூடிய உங்களைப் போன்ற புலவர்கள் பலர் இருக்கமாட்டார்கள் என்று ஒளவையாரிடம் கூறினார்.
அத்தகைய மதிப்பு மிக்க ஒரு பரிசை ஒரு குறுநில மன்னர், ஒரு பெண்பாற் புலவருக்கு வழங்குவதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? சங்க காலத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு மதித்தனர் என்பதை து காட்டுகிறது. நீ இதை ஒப்புக் கொள்கிறாயா?
ஆமாம் தாத்தா. நாம் எப்பொழுதும் நம்மைச் சுற்றியுள்ள மக்களை மதிக்க வேண்டும்.
விடையளிக்க முயற்சி செய்க.
1) அதியமானுக்குப் பரிசாக என்ன கிடைத்தது?
2) ஔவையார் என்பவர் யார்?
3) ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனியைக் கொடுக்கக் காரணம்
என்ன?
செயல்பாடு,
வள்ளல்கள் கொடுத்த பொருள்களைப் பட்டியலிடுக.
1) பாரி ——————————–
2) பேகன் ————————————————-
3) அதியமான் ——————————————-
வல்வில் ஓரி
நான் உனக்கு மற்றொரு வள்ளலான வல்வில் ஒரியைப் பற்றிக் கூறுகிறேன். ஓரி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.
வல்வில் என்றால் என்ன பொருள்?
வல்வில் என்றால் வலிமையான வில்லையுடையவன்/ வில்லாற்றல் மிக்கவன் என்பது பொருள். ஓரி, சிறந்த வில்லாளன் என்பதனால் அப்பெயரைப் பெற்றார்
அற்புதம்! அவர் மக்களுக்காக என்ன செய்தார்?
ஓரி தமது வில் ஆற்றலால் மட்டும் மக்களால் அறியப்படவில்லை; பண்பான ஓர் ஆட்சியாளராகவும் பாராட்டப்பட்டார். அவர் கவிஞர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் இதர கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு வெகுமதி அளித்தார்.
தாத்தா, எனக்கு வல்வில் ஓரியைப் பிடித்திருக்கிறது மற்ற மூன்று வள்ளல்களைப் பற்றியும் சொல்லுங்கள்.
மதுரையின் தெற்கே அமைந்துள்ள பொதிகை மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆய் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்தார்.
திருக்கோவிலூரில் உள்ள தொண்டை மண்டலப் பகுதியை நெடுமுடிக் காரி என்பவர் ஆட்சி செய்தார். சேர அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட தோட்டிமலைப் பகுதியை நள்ளி என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்தார்.
கடையெழு வள்ளல்கள் அவர்களுடைய அனைவரும் பண்புகளின் அடிப்படையிலேயே அனைவராலும் அறியப்பட்டனர். அதனால்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் நம்மால் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.
ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கதைகளைக் கூறியமைக்கு மிக்க நன்றி தாத்தா. இக்கதைகளை நான் என்னுடைய நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்..
செயல்பாடு பின்வருவனவற்றைப் பொருத்துக,
1. பாரி – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – கைவினைக்கலைஞர்களைப் பெருமைப்படுத்துதல்
3. அதியமான் – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
4. வல்வில் ஓரி – – மக்களை மதித்தல்
விடையளிக்க முயற்சி செய்க.
1) வல்வில் ஓரி எந்த மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தநார்?
2) “வல்வில்” என்பதன் பொருள் என்ன?
சொற்களஞ்சியம்
1. சங்க காலம் – பண்டைய தமிழக வரலாற்றின் ஒரு காலகட்டம்
2. வள்ளல் – பிறரது நலனைப் மேம்படுத்துவதில் ஆர்வம் உடையவர்கள்
3. செங்குத்தான மலை – மிக உயரமான மலை
4. சாகாவரம் – என்றென்றும் வாழ்தல்
5. கவிஞர் – பாடல்களை எழுதுபவர்
6. கைவினைக் கலைஞர்- திறன் சார்ந்த தொழில் செய்பவர்
நினைவு கூர்க
❖ சங்க காலத்தில் வள்ளல்கள் பலர் இருந்தனர். அவர்களில் ஏழு வள்ளல்கள் புகழ்பெற்று இருந்தனர்.
❖ மூவேந்தர்கள் என்பவர்கள் சேரர், சோழர் மற்றும் பாண்டியர் ஆவர்.
❖ மக்களுடனும் இயற்கையுடனும் கருணை காட்டுபவர்கள் வள்ளல்களாக அறியப்படுகின்றனர்.
❖ கடையெழு வள்ளல்கள் என்பவர்கள் பேகன், பாரி, நெடுமுடிக் காரி, ஆய், அதியமான், நள்ளி மற்றும் வல்வில் ஓரி ஆவர்.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. ———————– மூவேந்தர்களுள் ஒருவர் ஆவார்.
அ) ஆய்
ஆ) பாரி
இ) சேரன்
ஈ) நள்ளி
விடை: இ) சேரன்
2. சங்க காலத்தில் கடையெழு வள்ளல்கள் —————- களை ஆட்சி செய்தனர்.
அ) சமவெளி
ஆ) பாலைவனம்
இ) ஆறு
ஈ) மலைப்பகுதி
விடை: ஈ) மலைப்பகுதி
3. —————— மாவட்டத்தில் பறம்பு நாடு அமைந்துள்ளது.
அ) தருமபுரி
ஆ) திண்டுக்கல்
இ) சிவகங்கை
ஈ) நாமக்கல்
விடை: இ) சிவகங்கை
4. பேகன் ————– மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தார்.
அ) பழனி
ஆ) கொடைக்கானல்
இ) பொதிகை
ஈ) கொல்லி
விடை: அ) பழனி
5. அதியமான் ஒரு —————– யை ஒளவையாருக்குக் கொடுத்தார்
அ) போர்வை
ஆ) நெல்லிக்கனி
இ) பரிசு
ஈ) தேர்
விடை: ஆ) நெல்லிக்கனி
II. பொருத்துக
1.ஆய் – தருமபுரி மாவட்டம்
2. அதியமான் – பொதிகை மலை
3. வல்வில் ஓரி – சிவகங்கை மாவட்டம்
4. பாரி – கொல்லிமலை
விடை:
1. ஆய் – பொதிகை மலை
2. அதியமான் – தருமபுரி மாவட்டம்
3. வல்வில் ஓரி – கொல்லிமலை
4. பாரி – சிவகங்கை மாவட்டம்
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.
1. பாரி இயற்கையைப் பாதுகாக்கவில்லை. விடை : தவறு
2. சங்க காலத்தில் ஏழு புகழ் பெற்ற வள்ளல்கள் இருந்தனர். விடை : சரி
3. நாம் மக்களுக்கும், விலங்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். விடை : சரி
4. நெடுமுடிக் காரி தோட்டிமலைப் பகுதியை ஆட்சி செய்தார். விடை ; தவறு
IV. பின்வரும் கள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.
1. சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதுக
• சங்க இலக்கியங்கள் இலக்கிய நயம் வாய்ந்த செவ்வியல் பாடல்களைக் கொண்டுள்ளன.
• இவை சங்ககாலம் பற்றி அறிய முக்கிய ஆதாரமாகும்
2. பாரியை எதிர்த்து வெற்றியடைய இயலாதபோது மூவேந்தர்கள் என்ன செய்தனர்?
• பறம்பு நாட்டின் மலையடிவாரங்களில் இருந்து தண்ணீர் மற்றும் உணவுப் பொருள்களை மலையின் மேற்பகுதிக்குச் செல்லவிடாமல் செய்தனர்.
• பாரி உணவு மற்றும் நீருக்காக மலையைவிட்டு வெளியே வந்து சரணடைவார் என மூவேந்தரும் நினைத்தனர்.
3. அதியமான் ஏன் ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தார்?
அதியமானுக்குப் பின்வரும் குறுநில மன்னர்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்று கற்பிப்பதற்காக, ஔவையார் நெடுங்காலம் வாழவேண்டும் என்று கருதி, அதியமான் ஔவையாரிடம் நெல்லிக்கனியை வழங்கினார்.
4. வல்வில் ஓரி எதனால் புகழடைந்தார்?
• வல்வில் ஓரி ஒரு சிறந்த வில்லாளன்.
• பண்பான ஆட்சியாளராகப் பாராட்டப்பட்டார். கவிஞர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் மற்றும் இதரக் கைவினைக்
• கலைஞர்களின் திறமைக்கு ஏற்ப வெகுமதி அளித்தார். அதனால் புகழடைந்தார்.
செயல்திட்டம்
உனக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒரு வள்ளலின் படத்தைச் சேகரித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டவும். நீங்கள் அவரை ஏன் விரும்புகிறீர்கள் என்பதை விவரிக்கவும்.
குறுநில மன்னன் ஆய் :
• பொதிகை மலையை ஆண்டவன்.• இவர் பாடல் பாடி இசைக்கும் பாணர் மற்றும் ஆடி மகிழ்விக்கும் கூத்தர் ஆகியயோருக்கு பொன், குதிரை மற்றும் யானை பரிசளித்துக் கௌரவித்தான்.