அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர்
அலகு 2
நீர்
![](https://www.brainkart.in/media/tamimg45/loJ504C.png)
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ நீரின் மூன்று நிலைகளைப் புரிந்துகொள்ளல்.
❖ நீர் சுழற்சியை விவரித்தல்.
❖ நீர் சுழற்சியின் அவசியத்தை விளக்குதல்.
❖ மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் பயன்களைத் தொகுத்தளித்தல்
அறிமுகம்
நாம் வாழும் பூமியில் மிகுதியான மற்றும் விலைமதிப்புள்ள வளமாக நீர் இருக்கின்றது. பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நிலத்தடியிலும் நீர் காணப்படுகிறது. அனைத்து உயிரினங்களும் உயிர் வாழவும், அவற்றின் பிற செயல்பாடுகளுக்கும் நீர் அவசியமாகிறது. இத்தகைய நீரைப்பற்றி நாம் முந்தைய வகுப்புகளில் படித்திருக்கின்றோம். இப்பாடத்தில் நீரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
I. நீரின் நிலை மாற்றங்கள்
செய்து கற்போம்
கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து அப்பொருள்களின் நிலையை எழுதுக.
(திண்மம், திரவம், வாயு)
![](https://www.brainkart.in/media/tamimg45/nJSwCTh.png)
இயற்கையில் நீர் மூன்று நிலைகளில் உள்ளது. அவை பனிக்கட்டி, நீர் மற்றும் நீராவி ஆகும். பனிக்கட்டி திண்ம (திட) நிலையிலும், நீர் திரவ நிலையிலும், நீராவி வாயு நிலையிலும் உள்ளன.
மேலும் அறிந்து கொள்வோம்.
மனித உடலின் நிறையானது 75% நீரைக் கொண்டுள்ளது.
வெப்பநிலை மாற்றத்தினால் நீர் இத்தகைய நிலைகளை அடைகின்றது. குளிர்ப்பிரேதசங்களில் நீரானது பனிக்கட்டியாகவும், கடல் மற்றும் ஆறுகளில் திரவமாகவும் உள்ளது. இது சூரிய வெட்பத்தினால் நிராவியாக மாறுகிறது.
![](https://www.brainkart.in/media/tamimg45/SGHOh4s.png)
செய்து கற்போம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக.
(திரவம், திண்மம், உருகதல், உறைதல், குளிர்தல், வெப்பப்படுத்துதல், வாயு
![](https://www.brainkart.in/media/tamimg45/RDyzq0a.png)
திட நிலை (பனிக்கட்டி)
பனிக்கட்டி நீரின் திடநிலை ஆகும். வெப்பநிலை O°C க்கு கீழே குறையும்போது நீரானது பனிக்கட்டியாகிறது. இம்முறைக்கு உறைதல் என்று பெயர்.
![](https://www.brainkart.in/media/tamimg45/Ubrytrm.png)
திரவநிலை (நீர்)
பெருங்கடல்கள், ஆறுகள், அருவிகள் போன்ற நீர்நிலைகளில் நீர் திரவநிலையில் காணப்படுகிறது.
உனது ஊரிலுள்ள எவையேனும் இரண்டு நீர்நிலைகளின் பெயரை எழுது ஆறு, கண்மாய்
வாயுநிலை (நீராவி
வெப்பநிலை அதிகரிப்பதால் நீர் நீராவியாகிறது. வெப்பமானது நீரை பனிப்போன்ற மிகச்சிறிய நீர்த்துளிகளாக மாற்றுகிறது. இதுவே நீராவியாகும்.
![](https://www.brainkart.in/media/tamimg45/DuC3ZiY.png)
விடையளிப்போம்
1. பொருள்களின் மூன்று நிலைகளுக்கும் நீர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது ஏன்?
விடை:
இது பூமியில் திண்ம நிலையில் பனிக்கட்டியாகவும், திரவநிலையில் நீராகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது.
பூமியில் பனிக்கட்டி ஆர்ட்டிக் பகுதிகளிலும், நீர் அனைத்து நீர் நிலைகளிலும், நீராவி மேகங்களிலும் உள்ளது. இதனால் நீர் பூமியில் மூன்று நிலைகளிலும் உள்ளது என்பது தெளிவாகிறது.
2. கீழ்க்காண்பனவற்றுள் எது திரவ நிலையில் உள்ளது?
மழை / பனிக்கட்டி / பனித்துளி
விடை : மழை
செய்து கற்போம்
❖ ஒரு தட்டில் நீரை ஊற்றி, அதை உறையவைப்பானில் (freezer) வைக்கவும். சில மணி நேரத்திற்குப் பின் வெளியே எடுக்கவும் நீரில் என்ன மாற்றம் நடைபெற்றிருக்கும்?
விடை:
நீர் பனிக்கட்டி எனும் திண்மமாக உறைந்திருக்கும்.
❖ இப்பொழுது அந்த பனிக்கட்டியை அப்படியே மேசையின் மீது சிறிது நேரம் வைக்கவும். பனிக்கட்டிக்கு என்ன நிகழ்கிறது?
விடை:
பனிக்கட்டி உருகி நீர் எனப்படும் திரவமாக மாறிவிடுகிறது.
❖ அந்தத் தட்டிலுள்ள நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். வீட்டிலுள்ள பெரியவர்களின் உதவியுடன் அந்தப் பாத்திரத்தை வெப்பப்படுத்தவும். நீர் கொதிக்கும்போது பாத்திரத்தின் வாய்ப்பகுதியை உற்றுநோக்கவும் நீங்கள் காண்பது என்ன?
விடை:
நீர் வெப்பத்தால் நீராவியாக மாறி வாயுவாக வெளி வருகிறது.
II. நீர் சுழற்சி
இயற்கையில் நீரானது தனது நிலையில் மாறிக் கொண்டே இருக்கிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை இப்போது நாம் பார்ப்போம். சூரியனின் வெப்பத்தினால் ஆறுகள் மற்றும் பெருங்கடல்களிலுள்ள நீரானது நீராவியாக மாறி மேலே செல்கிறது.
நிரானது வெப்பத்தினால் நீராவியாக மாறுவது ஆவியாதல் எனப்படுகிறது. இந்நீராவியின் மீது குளிர்ச்சியான காற்று படும்போது அது நீர்த் திவலைகளாக மாறுகின்றது. இந்நிகழ்வு சுருங்குதல் எனப்படுகிறது. நீர்த்திவலைகள் ஒன்றுகூடி மேகங்களை உருவாக்குகின்றன. நீர்த்திவலைகள் தொடர்ந்து ஒன்று சேர்ந்து அளவில் பெரிதாகின்றன. பிறகு, இந்த நீர்த் திவலைகள் கீழே மழையாகப் பொழிகின்றன. இது வீழ்படிவாதல் எனப்படுகிறது. குளிர்ப் பிரதேசங்களில் நீர்த் திவலைகள் ஒன்றுசேர்ந்து பனித்துளியாகவோ அல்லது ஆலங்கட்டி மழையாகவோ பொழிகின்றன. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நீர் மாற்றமடைகின்ற தொடர்ச்சியான இத்தகைய நிகழ்வே நீர் சுழற்சி எனப்படுகிறது.
ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற முறைகளினால் நீரில் ஏற்படும் தொடர்ச்சியான சுழற்சியே நீர் சுழற்சி எனப்படுகிறது.
![](https://www.brainkart.in/media/tamimg45/Qidk3GZ.png)
மேலும் அறிந்து கொள்வோம்
மூச்சு விடுவதால் ஒவ்வொரு நாளும் நாம் ஒரு குவளை நீரிற்குமேல் இழக்கிறோம்.
சிந்தித்து விடையளி
ஈரமான துணியை உலர்த்தும்போது அதிலுள்ள நீர் என்னவாகிறது?
விடை:
அது வெளியில் உள்ள வெப்பத்தால் ஆவியாகி வெளியேறுகிறது.
விடையளிப்போம்
சரியான விடையைத் தேர்வு செய்க.
நீர் சுழற்சியில் ———–
அ) ஆவியாதல் மட்டும் நிகழ்கிறது
ஆ) உறைதல் மட்டும் நிகழ்கிறது
இ) ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் நிகழ்கின்றன.
விடை : இ) ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் நிகழ்கின்றன.
நீர் சுழற்சியின் முக்கியத்துவம்
● நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கிறது.
● பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது.
● தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நீர் கிடைக்கச் செய்கிறது.
● பூமியில் தொடர்ந்து நீர் இருப்பதை உறுதிசெய்ய நீர் சுழற்சி அவசியமாகிறது.
விடையளிப்போம்
1. சொற்களிலுள்ள எழுத்துகளைச் சரியாக முறைப்படுத்தி, கோடிட்ட இடங்களில் எழுதுக. (தருங்கல்கு,ஆல்வியாத, டிவீபழ்ல்தா
விடை:
சுருங்குதல், ஆவியாதல், வீழ்படிவாதல்
2. வேளாண்மைக்கு நீர் சுழற்சி அவசியமானதா?
விடை: ஆம்
3. மனிதர்களுக்கு நீர் சுழற்சி ஏன் அவசியமாகிறது? .
விடை:
நீர் சுழற்சியால் மனிதர்கள் உயிர் வாழத் தேவையான நீர் கிடைக்கிறது.
4. குளிர்ந்த நீர் உள்ள குவளைகளின் வெளிப்பரப்பில் நீர்த்திவலைகள் தோன்றும் நிகழ்வின் பெயர் என்ன?
விடை: சுருங்குதல்
உங்களுக்குத் தெரியுமா
மனித மூளை அதன் நிறையில் 73% நீரைக் கொண்டுள்ளது. உலகின் நன்னீரில் 70% க்கு (மேல் | அண்டார்டிக் பகுதியில் உள்ளது.
III. மழைநீர் சேகரிப்பு
எதிர்காலப் பயன்பாட்டிற்காக மழைநீரைச் சேகரித்து, சேமித்து வைக்கும் முறைக்கு மழைநீர் சேகரிப்பு என்று பெயர் இயற்கையான நீர்நிலைகள் அல்லது செயற்கையான தொட்டியில் மழைநீரானது கட்டடங்களின் சேகரிக்கப்படுகிறது. மேற்கூரையிலிருந்து மழைநீரைச் சேகரிப்பதும் ஒரு வகையான மழைநீர் சேகரிப்பாகும். மேற்கூரையிலிருந்து மழைநீரானது குழாய்களின் வழியாக பூமிக்குள் செலுத்தப்படுகிறது. நீரானது குழாய்களின் வழியாக கற்களாலும், பெருமணலாலும் நிரப்பப்பட்டுள்ள குழிகளுக்குள் செல்கிறது. இவ்வாறு செல்லும்போது நீரிலுள்ள அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு அது நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.
![](https://www.brainkart.in/media/tamimg45/q6nqdij.png)
மேலும் அறிந்து கொள்வோம்
நீரின் மூலக்கூறு வாய்பாடு H2O ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா
2000 சதுர அடியுள்ள மேற்கூரையிலிருந்து விழுகின்ற ஒரு அங்குல (inch) அளவுள்ள மழைநீரானது 4800 லிட்டர் நீருக்குச் சமமாகும்
மழைநீர் சேகரிப்பின் பயன்கள்
● நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.
● வேளாண்மைக்குப் பயன்படுகிறது.
● வாழும் உயிரினங்களுக்கு நீர் கிடைக்க வழிவகுக்கிறது.
மழைநீர் சேகரிப்பு ஒன்றே
மழைநிரைப் சேமிக்கும் முறையாகும்.
மேலும் அறிந்து கொள்வோம்
● மழைநீர் சேகரிப்பு முறையானது 2001ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது.
● மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
விடையளிப்போம்
1. மழைநீர் சேகரிப்பின் இதர பயன்களைப் பட்டியலிடுக.
விடை:
● கோடை காலங்களில் நமக்கு நீர் கிடைக்கிறது.
● தாவரங்கள், பிற உயிரினங்கள் வாழத் தேவையான நீர் தொடர்ந்து கிடைக்கிறது.
2. உமது பள்ளியில் மழைநீரைச் சேமிக்க சில வழிமுறைகளைக் கூறுக.
விடை:
● மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.
● பள்ளிக் கூரையிலிருந்து விழுகின்ற மழை நீரை வீணாக்காமல் தொட்டிக்குள் செலுத்த வேண்டும்.
செய்து கற்போம்
பள்ளி / வீட்டில் மழைநீர் சேகரிக்கும் குழி அமைத்திட சில வழிகாட்டுதல்கள்.
ஏதேனும் ஓர் அளவு மற்றும் வடிவத்தில் மழைநீர் சேகரிப்புக் கழியை அமைக்கலாம். பொதுவாக 1 – 2 மீட்டர் அகலம் மற்றும் 2 – 3 மீட்டர் ஆழம் கொண்டதாக அது அமைக்கப்படலாம். இந்தக் குழிகளை, கற்கள் மற்றும் பெருமணல் கொண்டு நிரப்பவேண்டும்.
![](https://www.brainkart.in/media/tamimg45/M2XKQ87.png)
அடிப்பகுதியில் பெருங்கற்களையும், நடுவில் சிறுகற்களையும், மேற்புறத்தில் மணலையும் இட்டு நிரப்பவேண்டும்.
விவாதிப்போம்
நமது சுற்றுப்புறத்தைக் காட்பதில் மழைநீர் சேகரிட்பானது முக்கியப் பங்காற்றுவது குறித்து உனது நண்பர்களுடன் விவாதிக்கவும்.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பூமியில் நீர் மிகவும் ———– வளமாகும்.
அ) விலை மதிப்புள்ள
ஆ) திட
இ) வாயு
[விடை : அ) விலை மதிப்புள்ள]
2. நீரானது ———– நிலைகளில் காணப்படுகிறது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
[விடை : ஆ) மூன்று]
3. நீரானது ———— வெப்பநிலைக்குக் கீழ் உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது.
அ) 10°C
ஆ) 100°C
இ) 0°C
[விடை : இ) 0°C]
4. நீரானது நீராவியாக மாறும் முறை ———- ஆகும்.
அ) சுருங்ககல்
ஆ) ஆவியாதல்
இ) உறைதல்
[விடை : ஆ) ஆவியாதல்]
5. சுற்றுப்புறத்திலுள்ள உயிரினங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது எது?
அ) மிதிவண்டி
ஆ) நீர் சுழற்சி
இ) நீரின் மறுசுழற்சி
[விடை : ஆ) நீர் சுழற்சி]
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நீரானது வெப்பப்படுத்தப்படும்போது ————– [பனிக்கட்டி / நீராவி) ஆக மாறுகிறது.
விடை : நீராவி
2. நீரானது ——— (வெப்பப்படுத்துவதால் / உறைவதால்) பனிக்கட்டியாக மாறுகிறது.
விடை : உறைவதால்
3. நீர்த் திவலைகள் இணைவதால் ——— (மழை / மேகம்) உருவாகிறது.
விடை : மேகம்
4. நீர் சுழற்சியானது ———- (நீர்த்தொட்டி / நிலத்தடிநீர்) அளவை அதிகரிக்கிறது.
விடை : நிலத்தடிநீர்
5. ———– (மேற்கூரை நீர் சேகரிப்பு / நீர் சுழற்சி) மழைநீர் சேகரிப்பு முறைகளுள் ஒன்றாகும்.
விடை : மேற்கூரை நீர் சேகரிப்பு
III. சரியா அல்லது தவறா என எழுதுக.
1. பொருள்களின் அனைத்து நிலைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது நீர் ஆகும்.
விடை : சரி
2. பூமியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது நீர் சுழற்சி ஆகும்.
விடை : சரி
3. வெப்பப்படுத்துவதால் நீர் நீராவியாக மாறுவது ஆவியாதல் எனப்படும்.
விடை : சரி
4. நமது மூளை தனது நிறையில் 37% நீரைக் கொண்டுள்ளது.
விடை : தவறு
5. மேற்கூரை நீர்சேகரிப்புமுறை வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
விடை : தவறு
IV. சுருக்கமாக விடையளி.
1. நீரின் நிலைகளை எழுதுக.
விடை:
பனிக்கட்டி (திண்மம்), நீர் (திரவம்), நீராவி (வாயு)
2. உறைதல் என்றால் என்ன?
விடை:
ஒரு திரவப் பொருள் குளிர்ச்சியினால் திண்மப் பொருளாக மாறுவது உறைதல் எனப்படுகிறது.
3. நீர் சுழற்சியில் உள்ள முறைகளை எழுதுக.
விடை:
● ஆவியாதல்
● சுருங்குதல்
● வீழ்படிவாதல்
● மீண்டும் கடலை அடைதல்
4. 2001ஆம் ஆண்டில் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய மாநிலம் எது?
விடை:
தமிழ்நாடு
5. மழைநீர் சேகரிப்புக் குழி அமைக்கத் தேவையானவை எவை?
விடை:
சிறிய கற்கள், பெருமணல்.
V. விரிவாக விடையளி.
1. நீர் சுழற்சி என்றால் என்ன? நீர் சுழற்சியின்முக்கியத்துவங்களுள் எவையேனும் மூன்றினை எழுதுக.
விடை:
● “ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற முறைகளினால் நீரில் ஏற்படும் தொடர்ச்சியான சுழற்சியே நீர் சுழற்சி எனப்படுகிறது.” நீர் சுழற்சியின் முக்கியத்துவம்
● நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கிறது.
● பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது.
● தாவரங்கள் மற்றும் விலங்குகள் முக்கியமாக மனிதர்களுக்கு நீர் கிடைக்கச் செய்கிறது.
● பூமியில் தொடர்ந்து நீர் காணப்படுவதை உறுதிசெய்ய நீர் சுழற்சி அவசியமாகிறது.
2. மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன? மழைநீர் சேகரிப்பின் நன்மைகளை எழுதுக.
விடை:
எதிர்காலப் பயன்பாட்டிற்காக மழைநீரைச் சேகரித்து, சேமித்து வைக்கும் முறைக்கு மழைநீர் சேகரிப்பு என்று பெயர். இயற்கையான நீர்நிலைகள் அல்லது செயற்கையான தொட்டியில் மழை நீரானது சேகரிக்கப்படு கிறது. கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து மழைநீரைச் சேகரிப்பதும் ஒரு வகையான மழைநீர் சேகரிப்பாகும்.
மேற்கூரையிலிருந்து மழைநீரானது குழாய்களின் வழியாகப் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. நீரானது குழாய்களின் வழியாக கற்களாலும், பெருமணலாலும் நிரப்பப்பட்டுள்ள குழிகளுக்குள் செல்கிறது. இவ்வாறு செல்லும்போது அதிலுள்ள அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பின் பயன்கள்
● நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.
● வேளாண்மைக்குப் பயன்படுகிறது.
● வாழும் உயிரினங்களுக்கு நீர் கிடைக்க வழிவகுக்கிறது.
VI. கீழே தரப்பட்டுள்ள படத்திற்கு வண்ணம் தீட்டி தேவையான இடத்தில் கீழ்க்காணும் பெயர்களை எழுதுக.
(சுருங்குதல், ஆவியாதல், நீர் நிலைகள், வீழ்படிவாதல்)
![](https://www.brainkart.in/media/tamimg45/Eio0gCt.jpg)
![](https://www.brainkart.in/media/tamimg45/wF1rUO2.png)
VII. செயல்திட்டம்.
மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைந்துள்ள வீட்டு மாதிரியைச் செய்து வருக.