தமிழ் : பருவம் 1 இயல் 3 : தனித்திறமை
3. தனித்திறமை
காட்டின் ராஜாவான சிங்கம் சில நாள்கள் வெளியூர் சென்றபோது புலிக்குத் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றது. புலியும் சில நாள்கள் ராஜாவாகப் பதவி ஏற்று கொண்டது. படைத்தளபதியாகச் சிங்கக் குட்டி பொறுப்பேற்றது.
சிங்கக் குட்டிதான் நமது படைத்தளபதி.
சிங்கக்குட்டியே….. பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி மன்னா ! உடனே பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆந்தையாரே நீங்கள் தாம் இரவுக்காவல் அமைச்சர்.
சரிங்க அரசே! நான் என் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.
கழுதையாரே ……. உமக்கு உரிய …… பதவி
ராஜாவே..! ராஜாவே..! இந்தக் கழுதை ஒரு முட்டாள். கழுதையால் எந்த ஒரு பயனும் இல்லை.
அப்படியா….!
இதே போல் முயல், ஆமை இரண்டும் எதற்கும் பயன்படாது.
ஆமை ஒரு சோம்பேறி. அது எப்போதும் மிக மெதுவாகச் செல்லும். முயல் எதைப் பார்த்தாலும் மிரண்டு , மிரண்டு ஓடும்.
கரடியாரே, வாயை மூடும். ஆமை பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிக்கும். அதனால் சமையல் வேலை செய்யட்டும்.
முயல் அதிவேகமாக ஓடும் எனவே, தேவையான பொருள்களைச் சேகரித்து, விரைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையைச் செய்யட்டும்.
கழுதை, பகைவர்கள் வரும்போது தனது உரத்த குரலில் எச்சரிக்கும் பணியைக் கவனிக்கட்டும், என்று கூறினார், புலி ராஜா.
“யாரையும் குறைவாக எடைபோடக் கூடாது. அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணவேண்டும்”.
நீங்க சொல்வது சரிதான் அரசே, இப்போது நான் தெரிந்து கொண்டேன்.
பண்புகளை வளர்த்தல்
நீதிக் கருத்து:
ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. அதை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும்.
மொழியோடு விளையாடு
.
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவேண்டும் முதல் குழுவினருக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர் எழுதப்பட்ட அட்டையினை ஒவ்வொரு மாணவனுக்கும் ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். ஆசிரியர் ஒலிப்பான் மூலம் ஒலி எழுப்பியவுடன் முதல் குழுவில் இருந்து ஒரு மாணவன் தனது அட்டையில் எழுதப்பட்டு உள்ள விலங்கு (அ) பறவை போல நடித்து (அ) ஒலி எழுப்பிக் காட்ட வேண்டும். நடிக்கும் விதத்தை (அ) ஒலியைக் கேட்டு அது என்ன விலங்கு? (அ) பறவை? என்பதனை இரண்டாவது குழுவினர் கண்டறிந்து கூறவேண்டும். இவ்வாறே அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
எழுத்துகளின் வகைகள் அறிவோமா?
குழந்தைகளே! நமக்கெல்லாம் பெயர் இருக்கிறது அல்லவா… அதுபோல எழுத்துகளுக்கும் பெயர் வைக்கலாமா..
தமிழில் உள்ள உயிரெழுத்துகள் மொத்தம் – 12
இந்த ஐந்து எழுத்துகளும் ஓசையில் குறுகி ஒலிக்கின்றன எனவே இவற்றிற்குக் குறில் அல்லது குற்றெழுத்துகள் என்று பெயரிடுவோம்.
இந்த ஏழு எழுத்துகளும் ஓசையில் நீண்டு ஒலிக்கின்றன இவற்றிற்கு நெடில் அல்லது நெட்டெழுத்துகள் என்று பெயரிடுவோம்..
இப்பொழுது மெய்யெழுத்துகளுக்குப் பெயரிடுவோமா…
தமிழில் உள்ள மெய்யெழுத்துகள் மொத்தம் – 18.
இவை ஒலிக்கும் தன்மையை வைத்து மூன்று வகைகளாகப் பிரித்துப் பெயரிடுவோம்.
வல்லினம்
யானைகள் எப்படி வலிமையாக இருக்கின்றனவோ அப்படியே க், ச், ட், த், ப், ற் – என்ற எழுத்துகளும் வலிய ஓசை உடையவை, எனவே இவற்றுக்கு வல்லினம் என்று பெயரிடுவோம்.
மெல்லினம்
முயல்கள் எப்படி மென்மையாக இருக்கின்றனவோ அப்படியே ங், ஞ், ண், ந், ம், ன் – என்ற எழுத்துகளும் மெல்லிய ஓசை உடையவை. எனவே இவற்றுக்கு மெல்லினம் என்று பெயரிடுவோம்.
இடையினம்
மான்கள் யானையைப் போன்று வலிமையாகவும் இல்லை, முயலைப் போன்று மென்மையாகவும் இல்லை, இடைப்பட்ட நிலையில் இருக்கின்றன.
அது போல ய், ர், ல், வ், ழ், ள் – என்ற எழுத்துகளும், வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஓசை உடையதால் இவற்றுக்கு இடையினம் என்று பெயரிடுவோம்.
ஃ என்பது ஆய்த எழுத்து அல்லது தனிநிலை எனப்படும். எழுத்துகளின் பெயர்கள் இனிமையாக இருக்கின்றன அப்படித்தானே.
உங்கள் பெயரிலும் உங்கள் நண்பர்களின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள மெய்யெழுத்துக்களை வட்டமிட்டுக் காட்டுக
பயிற்சி
வாங்க பேசலாம்
1. காட்டின் அரசனாக சிங்கமே இருக்க வேண்டுமா? புலி காட்டுக்கு அரசனாக இருப்பது குறித்து உனது கருத்து என்ன? வகுப்பறையில் விவாதிக்க.
ஈஸ்வரன் : புலி தான் சிங்கத்தைக் காட்டிலும் வீரம் மிகுந்தது. வேட்டையாடுதலில் புலி தான் சிறந்தது.
அருண் : சிங்கம் தான் ராசா! சிங்கத்தின் கர்ஜனை கேட்டிருக்கிறாயா?
அய்யனார் : வண்டலூர் பூங்காவில் கேட்டிருக்கிறேன்.
கோமளா : நான் நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். புலி ஒன்று மானை வேட்டையாடியது. ஒரே பாய்ச்சல்தான் ஆனால் சிங்கமோ பாவம் பாய்ந்தோடி விட்டது.
யூசப் : ஆண் சிங்கம் நடந்து வரும் கம்பீரத்துக்கு புலி இணையாகுமா!
லஷ்மணன் : காட்டுக்கு ராஜா என்றால் சிங்கம் தான்!
இசக்கிமுத்து : நம்ம ஊர் காட்டுப் பகுதிகளில் தான் சிங்கம் கிடையாதே.
மாயாண்டி : அப்ப நம்ம ஊர் காடுகளில் அரசன் புலி தான்.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் ___________.
அ) தரம்
ஆ) மரம்
இ) கரம்
ஈ) வரம்
விடை : அ) தரம்
2. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் ____________.
அ) நண்பர்கள்
ஆ) எதிரிகள்
இ) அயலவர்கள்
ஈ) சகோதரர்கள்
விடை : அ) நண்பர்கள்
3. பணி இச்சொல் உணர்த்தும் பொருள்
அ) வாழை
ஆ) வேளை
இ) வேலை
ஈ) வாளை
விடை : இ) வேலை
4. படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) படைத் + தளபதி
ஆ) படை + தளபதி
இ) படையின் + தளபதி
ஈ) படைத்த + தளபதி
விடை : ஆ) படை + தளபதி
5. எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதைபார்த்தாலும்
ஆ) எதபார்த்தாலும்
இ) எதைப்பார்த்தாலும்
ஈ) எதைபார்த்தாலும்
விடை : இ) எதைப்பார்த்தாலும்
வினாக்களுக்கு விடையளி
1. காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
காட்டில் விலங்குகளின் கூட்டம் புலியின் தலைமையில் நடைபெற்றது.
2. புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை யாருக்குக் கொடுத்தார்?
புலிராஜா, சிங்கக்குட்டிக்கு படைத்தளபதி பொறுப்பைக் கொடுத்தார்.
3. ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?
ஆந்தைக்கு இரவுக்காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
4. கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?
கரடி ஆமை, முயல், கழுதை போன்ற விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது.
5. இந்தக் கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?
“யாரையும் குறைவாக எடை போடக் கூடாது.
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
1. பதுங்கிச் செல்வேன். பாய்ந்து இரையைப் பிடிப்பேன்.
நான் யார்? புலி
2. இரவில் விழித்தும் பகலில் தூங்கியும் வாழ்வேன், என் கண்களை எல்லாத்திசையிலும் திருப்புவேன்,
நான் யார்? ஆந்தை
3. என் காதுகள் நீண்டிருக்கும் வேகமாக ஓடுவேன், கேரட் எனக்கு மிகவும் பிடிக்கும்,
நான் யார்? முயல்
முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக
1. காட்டில் விலங்குகள் நடந்தது கூட்டம்
காட்டில் விலங்குகள் கூட்டம் நடந்தது.
2. இரவுக்காவல் நீங்கள்தாம் அமைச்சர் ஆந்தையாரே
ஆந்தையாரே நீங்கள்தாம் இரவுக்காவல் அமைச்சர்
3. முயல் ஓடும் வேகமாக அதி
முயல் அதிவேகமாக ஓடும்
4. கூடாது யாரையும் போடக் எடை குறைவாக
யாரையும் குறைவாக எடை போடக் கூடாது
எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?
விடை :
விலங்குகள் | பணிகள்
1. சிங்கம் : படைத்தளபதி
2. ஆந்தை : இரவுக்காவல்
3. ஆமை : சமையல் வேலை
4. முயல் : பொருள்களைச் சேகரிக்கும் வேலை
5. கழுதை : எச்சரிக்கைப் பணி
பெயர் எது? செயல் எது?
பெயர் : செயல்
1. குழலி பாடம் படித்தாள் குழலி : படித்தாள்
பாடம்
2. அமுதன் பந்து விளையாடினான் அமுதன் : விளையாடினான்
பந்து
3. மரம் செழித்து வளர்ந்தது மரம் : செழித்து
வளர்ந்தது
உங்கள் பெயரிலும் உங்கள் நண்பர்களின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள மெய்யெழுத்துகளை வட்டமிட்டுக் காட்டுக.
தமயந்தி
சடகோபன்
செல்வன்
ரம்யா
செல்வி
கயல் விழி
சத்யா
ரஞ்சிதா