சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர்
அலகு 2
நீர்
நீங்கள் கற்க இருப்பவை
* மழையின் பயணம்
* நீர் ஆதாரங்கள்
மழையின் பயணம் – மழைத்துளிகள்
சட சடவென மழைத்துளி
பட படவென பெருகுதே
பெருகி வந்த நீரெல்லாம்
பூமியைத்தான் நனைக்குதே
நனைந்த பூமி உற்சாகமாய்
நீரை எல்லாம் உறிஞ்சுதே
உறிஞ்ச நீரை தேக்கிவைத்து
உயிர்களுக்கு கொடுக்குதே
நிலத்து நீரை சூரியனும்
உறிஞ்சி எடுத்துச் செல்லுதே
சென்ற நீரும் கருமேகமாய்
மாறி மீண்டும் பொழியுதே
நம்மை மகிழ்வாக வைக்குதே….
படக்குறிப்புகளைப் பயன்படுத்தி தொடர்களை முழுமையாக்குக.
(மழைக்காலம், சூரியன், விளையாட, வாளி, நீர், மகிழ்ச்சி, தாவரங்கள்)
1. இது ஒரு மழைக்காலம்
2. அதனால் என்னால் வெளியில் சென்று விளையாட முடியவில்லை.
3. நான் மழை நீரைச் சேகரிக்க வாளி யை வைத்தேன்.
4. சிறிது நேரத்திற்குப் பின் சூரியன் மீண்டும் ஒளி வீசத் தொடங்கியது.
5. இப்பொழுது அந்த வாளியில் நீர் நிரம்பியிருந்தது.
6. நான் அதை தாவரங் களுக்கு ஊற்றினேன்.
7. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
பனிப்பாறையிலிருந்து நீர்
பனிப்பாறை என்பது மெதுவாக நகரும் பனிக்கட்டி.
நான் பனிமலைகளில் இருந்து வரும் ஒரு நீர்த்துளி, வெப்பம் அதிகரிக்கும் போது நான் பனிப்பாறையிலிருந்து உருகி வருவேன்.
பனிப்பாறையில் இருந்து என் போன்ற நீர்த்துளிகள் ஒன்றாக இணைந்து நாங்கள் சிறு ஓடைகள் ஆவோம்.
மலையிலிருந்து பல ஓடைகளாக வரும் நான் ஒன்றாக இணைந்து ஆறாக மாறுவேன்.
ஆறு அல்லது ஓடையாக மலையிலிருந்து விழும் போது நான் நீர்வீழ்ச்சியாக அருவியாக மாறுவேன்.
நான் ஆறாக என் பயணத்தைக் காடு, கிராமம் மற்றும் நகரத்தின் வழியாகத் தொடர்வேன். மக்கள் என்னை விவசாயம், குடிநீர், சமையல் போன்றவற்றிற்குப் பயன்படுத்துகின்றனர். இறுதியில் நான் கடலைச் சென்றடைவேன்.
என் நீர்க்குடுவையில் மீதம் உள்ள நீரை நான் இவ்வாறு பயன்படுத்துவேன்.
கொடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் படங்களுக்கு எண்களை எழுதுக.
(பனிப்பாறை – 1 ஓடை – 2 ஆறு – 3 கடல் – 4)
நீர் ஆதாரங்கள்
நான் ஒரு மழைத்துளி. நான் பூமியில் விழுந்து ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றை நிரப்புவேன். ஆறு என்பது ஓடும் நீராகவும் ஏரி மற்றும் குளம் தேங்கி நிற்கும் நீராகவும் உள்ளது. ஏரிகள், குளங்களை விடப் பெரியவை.
நான் நிலத்தின் மீது விழுந்தவுடன் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராக மாறுவேன். மக்கள் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி நிலத்தடி நீரான என்னைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் அடி குழாய் மூலம் என்னை நிலத்தடியிலிருந்து மேலே எடுத்து தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
சிந்திக்க: கோடைக்காலத்தில் ஏரிகளிலும், குளங்களிலும் நீர் குறைந்து காணப்படுகிறது. ஏன்? கலந்துரையாடுக.
நீர்: ஆற்றிலிருந்து வீடு வரை…
ஆறு / ஏரி / அணை → பெரிய குழாய்கள் → மேல்நிலைத்தொட்டி → கீழ்நிலைத்தொட்டி → வீட்டு நீர்த் தொட்டி → குழாய்
உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்குக் காய்ச்சலாக இருக்கும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அது காய்ச்சலைக் குறைக்க உதவும்.
கலந்துரையாடுவோமா!
உங்கள் வீட்டிற்குத் தேவைப்படும் நீரை – எங்கிருந்து பெறுகிறீர்கள்?
நீர், பழச்சாறு செல்லும் திசையை அம்புக்குறியிட்டுக் காட்டுக.
மதிப்பீடு
1. படத்திற்கு ஏற்ற பெயர் எழுதுக.
(ஆறு, நீர்வீழ்ச்சி, ஏரி, குளம், பனிப்பாறை, கடல், ஓடை, கிணறு, அடி குழாய்)
2. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(கடல், மழை, அடி குழாய், பனிப்பாறை, அருவி)
1. மழை நீரின் முதன்மை ஆதாரம்.
2. ஆறு மலையில் இருந்து விழும் போது அருவி யாக மாறுகிறது.
3. பனிப்பாறை ஒரு பனிக்கட்டி.
4. ஆறு இறுதியில் கடலைச் சென்றடைகிறது.
5. நீரை, பூமிக்கு மேலே கொண்டு வரப் பயன்படுவது அடி குழாய்
3. படங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் குறுக்கெழுத்துப் புதிரில் கண்டறிந்து வட்டமிடுக.
தன் மதிப்பீடு
* நான் மழையின் பயணம் பற்றி அறிவேன்.
* நான் நீரின் பல்வேறு ஆதாரங்களைப் பற்றி அறிவேன்.
* என்னுடைய சுற்றுப்புறத்திற்கு நீர் கிடைக்கும் இடங்களை என்னால் அடையாளம் காண முடியும்.