Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Gross Domestic Product and its Growth

Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Gross Domestic Product and its Growth

சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. GNP யின் சமம்

  1. பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
  2. பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GD
  3. GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
  4. NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

விடை ; GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

2. நாட்டு வருமானம் அளவிடுவது

  1. பணத்தின் மொத்தமதிப்பு
  2. உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
  3. நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
  4. பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

விடை ; பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

3. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது

  1. வேளாண்மை
  2. தானியங்கிகள்
  3. வர்த்தகம்
  4. வங்கி

விடை ; வேளாண்மை

4. ______________________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.

  1. செலவு முறை
  2. மதிப்பு கூட்டு முறை
  3. வருமான முறை
  4. நாட்டு வருமானம்

விடை ; மதிப்பு கூட்டு முறை

5. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

  1. வேளாண் துறை
  2. தொழில்துறை
  3. பணிகள் துறை
  4. மேற்கண்ட எதுவுமில்லை

விடை ; பணிகள் துறை

6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 -19 ல் ________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது

  1. 91.06
  2. 92.26
  3. 80.0
  4. 98.29

விடை ; 92.26

7. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா________ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

  1. 1வது
  2. 3வது
  3. 4வது
  4. 2வது

விடை ; 2வது

8. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் ________ ஆண்டுகள் ஆகும்.

  1. 65
  2. 60
  3. 70
  4. 55

விடை ; 65

9. கீழ்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை

  1. நீர்பாசன கொள்கை
  2. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
  3. நில சீர்திருத்தக் கொள்கை
  4. கூலிக் கொள்கை

விடை ; இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

10. இந்திய பொருளாதாரம் என்பது

  1. வளர்ந்து வரும் பொருளாதாரம்
  2. தோன்றும் பொருளாதாரம்
  3. இணை பொருளாதாரம்
  4. அனைத்தும் சரி

விடை ; அனைத்தும் சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இந்தியாவில் மிகப்பெரிய துறை ______________ துறையாகும்

விடை ; பணிகள்

2. GDP ________________ பொருளாதாரத்தின் ஒரு குறியீடாகும்.

விடை ;வளரும்

3. இரண்டாம் துறையை வேறுவிதமான _________________ துறை என அழைக்கலாம்

விடை ; தொழில்

4. இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் _______________________ துறையாகும்.

விடை ; தொழில்

5. இந்தியா உலகத்தில் _____________ மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்.

விடை ; ஆறாவது

6. இந்தியா ______________ மிக வேகமாக வளரும் நாடாகும்

விடை ; ஐந்தாவது

7. GDP யின் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற நவீன மயமாக்கத்துடன் கூடிய விரைவான தொழிமயமாக்கல் என்று ___________________________ கொள்கை கூறுகிறது

விடை ; தொழில்துறை

IV. பொருத்துக

1. மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர்நாட்டு வருமானம் / மக்கள் தொகை
2. விலைக் கொள்கைமொத்த நாட்டு உற்பத்தி
3. GSTதொழில் துறை
4. தனி நபர் வருமானம்வேளாண்மை
5. C+I+G+(X-M)பண்ட மற்றும் பணிகள் மீதானவரி

விடை:- 1- இ, 2-ஈ, 3- உ, 4-அ, 5-ஆ

IV கீழ்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

1. நாட்டு வருமானம் – வரையறு.

நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும். பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

2. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.

GNP = C + I + G + (X – M) + NFIA

3. GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக

  • பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது..
  • பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  • உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  • பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகின்றது.
  • பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.

4. தனி நபர் வருமானம் என்றால் என்ன?

  • தனிநபர் (தலா வருமானம்) என்பது மக்களின் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் தனிநபர் வருமானம் பெறப்படுகிறது.
தனிநபர் வருமானம் = நாட்டு வருமானம்/மக்கள் தொகை

5. மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு

  • மதிப்புக் கூட்டு முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அடையலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது .

டீதூள் + பால் + சர்க்கரை = தேனீர்

இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு

6. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.

  • வேளாண் கொள்கை
  • தொழில்துறைக் கொள்கை
  • புதிய பொருளாதார  கொள்கை
  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கொள்கை (சர்வதேச வர்த்தகக் கொள்கை
  • உள்நாட்டு வர்த்தக் கொள்கை
  • வேலைவாய்ப்புக் கொள்கை
  • நாணய மற்றும் வங்கிக் கொள்கை
  • நிதி மற்றும் பணவியல் கொள்கை
  • கூலிக்கொள்கை

7. சிறு குறிப்பு வரைக.

1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

  • GNH என்ற வார்த்தையை 1972ல் உருவாக்கியவர் ஜிகமே சிங்கயே வாங்ணுக் என்ற பூட்டனார் அரசர்.
  • உளவியல் நலன், உடல்நலம், நேரப்பயன்பாடு, கல்வி, கலாச்சார பன்முகத்தன்மை, நல்ல ஆட்சித்திறன், சமூகத்தின் உயர்வு, சுற்றுச் சூழல் பன்முகத்தன்மை, வாழ்க்கைத்தரம் ஆகியவை GNH இன் 9 களங்களாக கருதப்படுகிறது

2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

  • மனித மேம்பாட்டுக்  குறியீடு என்பது 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப்-உல், ஹிக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத்தரம் GDP யின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.

V. கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி.

1. மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
GNP = C + I + G + (X – M) + NFIA
C – நுகர்வோர்I – முதலீட்டாளர்G – அரசு செலவுகள்X – M- ஏற்றுமதி – இறக்குமதிNFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்.

2. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

  • ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்) களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

3. நிகர நாட்டு உற்பத்தி (NNP)

  • மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) – தேய்மானம்.

4. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)

  • நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.

5.  தலா வருமானம் (PCI)

  • தலா வருமானம் என்பது மக்களின்வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும். நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
தலா வருமானம் = நாட்டு வருமானம் / மக்கள் தொகை

6. தனிப்பட்ட வருமானம் (PI)

  • நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

7. செலவிடத் தகுதியான வருமானம் (DI)

  • தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.

2. GDPஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.

GDPஐ கணக்கிடும் முறைகள்

செலவின முறைவருமான முறைமதிப்பு கூட்டு முறை

1. செலவின முறை

  • இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப் பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையேயாகும்.

Y = C + I +G + (X – M)

2. வருமான முறை

  • பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது.

வருமான முறையில் GDPஐ கணக்கிடும்போது

வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.

3. மதிப்பு கூட்டு முறை

  • மதிப்புக் கூட்டு முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அடையலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது .

டீதூள் + பால் + சர்க்கரை = தேனீர்

இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு

3. இந்தியாவில் GDPயில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி

இந்திய பொருளாதாரம் பரவலாக மூன்று துறைகளாகப் பிரிக்கப்படுகிறது.

1. முதன்மைத் துறை (வேளாண்துறை)

  • வேளாண்மைத் துறையை முதன்மைத் துறை எனவும் அழைக்கலாம்.
  • இதில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அடங்கும்.
  • எ.கா. கால்நடை பண்ணைகள், மீன் பிடித்தல், சுரங்கங்கள், காடுகள் வளர்த்தல், நிலக்கரி போன்ற மூலப் பொருள்களை உற்பத்தி செய்தல்.

2. இரண்டாம் துறை (தொழில்துறை)

  • தொழில் துறையை இரண்டாம் துறை எனவும் அழைக்கலாம்.
  • மூலப்பொருள்களை மாற்றியமைப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • எ.கா. இரும்பு மற்றும் எஃகு தொழில், ஜவுளித் தொழில், சணல், சர்க்கரை, சிமெண்ட், காகிதம், பெட்ரோலியம், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பிற சிறுதொழில்கள் ஆகும்.

3. மூன்றாம் துறை (பணிகள் துறை)

  • பணிகள் துறையை மூன்றாம் துறை எனவும் அழைக்கலாம்.
  • அவைகள் அரசு, அறிவியல் ஆராய்ச்சி, போக்குவரத்து, வர்த்தகம், தபால் மற்றும் தந்தி, வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவைகளாகும்.
  • 20 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நிபுணர்கள் பாரம்பரிய மூன்றாம் நிலை பணிகளை “நான்காம் நிலை” மற்றும் “ஐந்தாம் நிலை” பணிகள் துறைகளிலிருந்து மேலும் வேறுபடுத்திட முடியும் என்றனர்.

4. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக

பொருளாதார வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் ஒப்பீடுபொருளாதார வளர்ச்சிபொருளாதார முன்னேற்றம்
கருத்துபொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்துபொருளாதார முன்னேற்றம் ஒரு “பரந்த கருத்து”
வரையறை / பொருள்ஒரு குறிப்பிட்டகாலத்தில் பொருளாதாரத்தில் வெளியீட்டின் நேர்மறை அளவு மாற்றத்தைக் கொடுக்கும்.இது பொருளாதாரத்தில் வெளியீட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, HDIயின் குறியீட்டின் முன்னேற்றம் வாழ்க்கைக் தரத்தில் உயர்வு, தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீட்டைக் குறிக்கிறது.
அணுகுமுறை இயல்புஅளவின் இயல்புதரத்தின் இயல்பு
நோக்கம்GDP, GNP, FDI, FII, போன்ற அளவுகள் அதிகரிக்கும்வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதம், குழந்தை எழுத்தறிவு விகிதம் மற்றும் வறுமை விகிதத்தில் முன்னேற்றம்.
கால வரம்புஇயற்கையில் குறுகிய காலத்தை உடையதுஇயற்கையில் நீண்ட காலத்தை உடையது
பொருந்தும் தன்மைவளர்ந்த நாடுகள்வளர்ந்து வருகின்ற நாடுகள்
அளவீட்டு நுட்பங்கள்நாட்டு வருமானத்தை அதிகரித்தல்உண்மையான நாட்டு வருமானத்தை அதிகரித்தல் அதாவது, தனிநபர் வருமானம் போன்றவை
நிகழ்வின் அதிர்வெண்ஒரு குறிப்பிட்ட காலம்தொடர்ச்சியான செயல்முறை
அரசாங்க உதவிஇது ஒரு தானியங்கி செயல்முறையாகும். எனவே, அரசாங்க உதவி/ ஆதரவு அல்லது தலையீடு தேவைப்படாதுஅரசாங்க தலையீட்டை மிகவும் நம்பியுள்ளது. இது பரந்த கொள்கை மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, அரசாங்கத் தலையீடு இல்லாமல் அது சாத்தியமே இல்லை.

5. கீழ்காணும் பொருளாதார கொள்கைகளை விவரி

1. வேளாண் கொள்கை

  • உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருள்கள் பற்றிய அரசின் முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண் கொள்கையாகும்.
  • சில பரவலான கருப்பொருள்கள், இடர் மேலாண்மை மற்றும் சரிசெய்தல், பொருளாதார நிலைத் தன்மை, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத் தன்மையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு பொருள்களுக்கான சந்தை அணுகல் ஆகியவை வேளாண் கொள்கையில் அடங்கும்.
  • சில வேளாண் கொள்கைகள்:- விலைக் கொள்கை நில சீர்திருத்த கொள்கை, பசுமைப் புரட்சி, பாசனக் கொள்கை, உணவுக் கொள்கை, விவசாய தொழிலாளர் கொள்கை மற்றும் கூட்டுறவு கொள்கை போன்றவைகளாகும்.

2. தொழில்துறை கொள்கை

  • தொழில்துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமான அம்சமாகும்.
  • இது வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • இதனால் நவீனமயமாக்கலுக்கு வழிவகுக்கப்பட்டு இறுதியில் பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது. உண்மையில், தொழில் துறைவளர்ச்சி, விவசாயத்துறை (புதிய பண்ணை தொழில் நுட்பம்) மற்றும் பணிகள் துறை போன்ற துறைகளை ஊக்குவிக்கின்றன.
  • இது பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • 1948லிருந்து பல தொழில் துறைகொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது.
  • எடுத்துக்காட்டாக, சில தொழில் துறை கொள்கைகள்: ஜவுளித் தொழில் கொள்கை சர்க்கரை தொழில் கொள்கை, தொழில் துறை வளர்ச்சி விலைக் கொள்கை, சிறு தொழில் தொழிற்கொள்கை மற்றும் தொழில் துறை தொழிலாளர் கொள்கை போன்றவைகளாகும்.

3. புதிய பொருளாதாரக் கொள்கை

  • 1990களின் ஆரம்பத்தில் இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டது.
  • இந்த புதிய பொருளாதார சீர்திருத்தம் பொதுவாக, LPG அல்லது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என அழைக்கப்படுகிறது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத் தக்க வகையில் முன்னேற்றமடையச் செய்தது
Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *