சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1 உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
- அமைச்சரவை
- தலைமை இயக்குநர்
- துணை தலைமை இயக்குநர்
- இவற்றில் எதுவுமில்லை
விடை : தலைமை இயக்குநர்
2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை
- போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
- டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
- போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்
- டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு
விடை : போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
3. காட் -இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்
- டோக்கியோ
- உருகுவே
- டார்குவே
- ஜெனீவா
விடை : ஜெனீவா
4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
- 1984
- 1976
- 1950
- 1994
விடை : 1994
5. 1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?
- ஜஹாங்கீர்
- கோல்கொண்டா சுல்தான்
- அக்பர்
- ஔரங்கசீப்
விடை : கோல்கொண்டா சுல்தான்
6. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு
- சூன் 1991
- சூலை 1991
- சூலை-ஆகஸ்ட் 1991
- ஆகஸ்ட் 1991
விடை : சூலை-ஆகஸ்ட் 1991
7. இந்திய அரசாங்கம் 1991இல் ஐ அறிமுகப்படுத்தியது
- உலகமயமாக்கல்
- உலக வர்த்த அமைப்பு
- புதிய பொருளாதார கொள்கை
- இவற்றில் எதுவுமில்லை
விடை : உலகமயமாக்கல்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ஒரு நல்ல பொருளாதாரம் ____________________ யின் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
விடை : மூலதன சந்தை
2. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் __________________ இருந்து அமுலுக்கு வந்தது
விடை : 1995 ஜனவரி – 1
3. ___________________________ ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
விடை : பேராசிரியர் தியோடோர் லெவிட்
III. பொருத்துக
1. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் | 1947 |
2. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC) | அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல் |
3. சுங்கவரி, வாணிபம் குறித்த போது உடன்பாடு (GATT) | உற்பத்தி செலவு குறைத்தல் |
4. 8வது உருகுவே சுற்று | இன்ஃபோசிஸ் |
5. உலக வர்த்தக அமைப்பு (WTO) | 1986 |
விடை:- 1-ஈ, 2-இ, 3-அ , 4-உ, 5-ஆ
IV கீழ்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி
1. உலகமயமாக்கல் என்றால் என்ன?
உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.
2. உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.
- தொன்மையான உலகமயமாக்கல்
- இடைப்பட்ட உலகமயமாக்கல்
- நவீன உலகமயமாக்கல்
3. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
- நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.
- பன்னாட்டு நிறுவனங்களை சர்வதேச நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு அமைப்பு எனவும் கூறலாம்
- எ.கா. பெப்சி நிறுவனம், பஜாஜ், பாரத ஸ்டேட் வங்கி
4. உலகமயமாக்கலை சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக?
- சில தொழிற்சாலைகளைத் தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
- பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
- இந்தியாவின் பொருள்களின் ஏற்றுமதி பரிமாற்றத்தில் நிலையான பணத்தின் மாற்று வீதத்தை சரி செய்தது.
- வெளிநாட்டு தனியார் துறை நடப்பு கணக்கில் இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் வர்த்தகத்தில் ரூபாய் மாற்றத்தை உருவாக்கியது.
- அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
- இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்ட ரீதியான நீர்மை விகிதம் (SLR) அதிகரிக்கப்பட்டது.
5. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழி முறையாகும்.
6. “நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.
- பொருளாதார ரீதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
- வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.
- நியாயமான வர்த்தக/ நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
- குழந்தை தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
- பாகுபாடின்மை பாலின சமத்துவம் சமபங்கு மற்றும் கூட்டமைப்பு சுதந்திரம் ஆகியவற்றுக்கு அர்ப்பணித்தல்.
- திறனை வளர்த்தல் மற்றும் நியாயமான அமைப்பினை மேம்படுத்துதல்.
- சுற்றுசூழலுக்கு மதிப்பளித்தல் ஆகியனவாகும்.
7. “உலக வர்த்தக அமைப்பின்” முக்கிய நோக்கம் யாது?
- அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
- வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
- வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
- நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
- உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
- முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
- முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.
8. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
- மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
- வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
- உலகமயமாக்கல் வர்த்தகத்தை வேகமாக அதிகரித்து, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
- புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
- உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்
- இது பண்டங்களை தடையற்றதாகவும் தாராளமாக அதிகரிக்கவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிக்கவும் உதவுகிறது.
V. கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி
1. பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள்
- பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருள்களைதரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள்
- பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுசூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
- ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினைதிருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
2. ‘உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
உலக வர்த்தக அமைப்பு (WTO):
- 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் போது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது. WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.
உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள்:
- அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
- வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
- வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
- நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
- உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
- முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
- முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.
3. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக
- உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
- வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
- உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
- இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
- உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
- மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
- உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.