Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Food Security and Nutrition

Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Food Security and Nutrition

சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. _________________ என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.

  1. உணவு கிடைப்பது
  2. உணவுக்கான அணுகல்
  3. உணவின் முழு ஈடுபாடு
  4. இவை ஏதுமில்லை

விடை : உணவு கிடைப்பது

2. தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை ________________ மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது

  1. FCI
  2. நுகர்வோர் கூட்டுறவு
  3. ICICI
  4. IFCI2.

விடை : FCI

3. எது சரியானது?

i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
iii) PDS – பொது விநியோக முறைiv) FCI – இந்திய உணவுக் கழகம்
  1. i மற்றும் ii சரியானவை
  2. iii மற்றும் iv சரியானவை
  3. ii மற்றும் iii சரியானவை
  4. மேற்கூறிய அனைத்தும் சரி

விடை : மேற்கூறிய அனைத்தும் சரி

4. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு _________________ .

  1. அமெரிக்கா
  2. இந்தியா
  3. சிங்கப்பூர்
  4. இங்கிலாந்து

விடை :  அமெரிக்கா

5. _________________ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது

  1. நீலப் புரட்சி
  2. வெள்ளைப் புரட்சி
  3. பசுமைப் புரட்சி
  4. சாம்பல் புரட்சி

விடை : பசுமைப் புரட்சி

6. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் _________________

  1. கேரளா
  2. ஆந்திரபிரதேசம்
  3. தமிழ்நாடு
  4. கர்நாடகா

விடை : தமிழ்நாடு

7. __________ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.

  1. ஆரோக்கியம்
  2. ஊட்டச்சத்து
  3. சுகாதாரம்
  4. பாதுகாப்பு

விடை : ஊட்டச்சத்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. __________________ ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.

விடை : எடை குறைவு

3. ________________ ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது

விடை : 2013

3. பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் _______________________ முக்கியப் பங்கு வகிக்கிறது

விடை : நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள்

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

1. நுகர்வோர் கூட்டுறவுமானிய விகிதங்கள்
2. பொது விநியோக முறை2013
3. UNDPகுறைந்த ஏழ்மை உள்ள பகுதி
4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்தரமான பொருட்களை வழங்குதல்
5. கேரளாஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்

விடை :- 1- ஈ, 2-இ, 3-அ, 4-உ, 5-ஆ

IV. சரியான கூற்றை தேர்வு செய்க

1. கூற்று : வாங்கும் சக்தி அதிகரித்தால், விலை குறைகிறது மற்றும் இது நேர்மாறானது

காரணம் : பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது

  1. கூற்று சரியானது, காரணம் தவறானது
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது
  3. கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
  4. கூற்று சரியானது, காரணம் என்பது கூற்றின் சரியான விளக்கம்

விடை : கூற்று சரியானது, காரணம் என்பது கூற்றின் சரியான விளக்கம்

V குறுகிய விடையளிக்கவும்

1. FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.

“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது.” (FAO, 2009).

2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் :

  • கிடைத்தல்
  • அணுகல்
  • உறிஞ்சுதல்

1. உணவு கிடைத்தல்

உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.

2. உணவுக்கான அணுகல்

உணவுக்கான அணுகல் என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும். எனவே, இது ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. திறன்களும், வாய்ப்புகளும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையது.

3. உணவினை உறிஞ்சுதல்

உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.

3. பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகததின் (FCI) யின் பங்கு என்ன?

  • பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) பருவ காலத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட தானியங்களை இந்திய உணவுக் கழகம் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது.
  • இந்திய உணவுக் கழகம் மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கினை அமைத்து அறுவடை காலத்தில் உணவு தானியங்களைப் பெற்று இருப்பில் வைத்து அதனை ஆண்டு முழுவதும் வழங்குகிறது.

4. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?

  • உணவு தானிய உற்பத்தியல் தன்னிறைவு பெற வழிவகுத்தது.
  • உயர் ரக விதைகளான அரிசி மற்றும் கோதுமை போன்ற  உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது.
  • முக்கிய தானிய பயிர்களின் விளைச்சலும் அதிகரித்தது.

5. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.

  1. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.
  2. ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
  3. பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (General ICDS Projects and World Bank Assisted Integrated Child Development Services).
  4. பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
  5. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
  6. மதிய உணவுத் திட்டம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

1. பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.

  • சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.
  • விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்டதொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது. இருப்பினும், அப்பொழுது இருந்த அந்நிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்லை.
  • பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது. 1960 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L. 480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
  • அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது. எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான (High Yielding Varieties) திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
  • இவ்வாறு, பசுமைப்புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது. உயர் ரக விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது.

2. குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.

  • குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும்.
  • எனினும், அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளை பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றால் திறந்தவெளி சந்தையில் விற்க இயலும்.
  • மறுபுறம், திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் (MSP) பெறுவார்கள

3. பொது விநியோக முறையை விவரிக்கவும்.

பொது வழங்கல் முறை (Public Distribution System) தமிழ்நாடு “உலகளாவிய பொது வழங்கல் முறை”யை (Universal PDS) ஏற்றுக் கொண்டது.

இலக்கு பொது வழங்கல் முறை

  • இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் “இலக்கு பொது வழங்கல் முறை” (Targeted PDS) செயல்பாட்டில் இருந்தது. உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
  • ஆனால், இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது,

மானியம்

  • மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் பொருள்களுக்கு மானியம் அளிக்கின்றன.
  • மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்

  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
  • இந்த குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் (Priority Households) என அழைக்கப்படுகின்றன. இந்த முன்னுரிமை குடும்பங்களுக்கு தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை பெறும் உரிமை உண்டு.
  • மத்திய அரசினால் அரிசி கிலோவிற்கு `3 என்ற விகிதத்திலும், கோதுமை கிலோவிற்கு `2 என்ற விகிதத்திலும், திணை கிலோவிற்கு `1 என்ற விகிதத்திலும் NFSA கீழ் வழங்கப்படுகிறது.
  • தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.

4. வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.

1. அதிக மக்கள் தொகை

  • இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்
    1000க்கு 1.7 ஆக உள்ளது.
  • அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை.
  • எனவே சாதாரண விலை நிலை அதிகமாக இருக்கும். எனவே இது குறிப்பாக கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.

2.  அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்தல்

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சியும், இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சி வாய்ப்புகளும் இருந்த போதிலும், அத்தியாவசிய பொருள்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
  • விலைகளின் தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது.

3.  பொருள்களுக்கான தேவை

  • பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.

4.  பொருள்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது

  • விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது.

5.  பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு

  • பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருள்களின் விலை அதிகரிக்கிறது. ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

6.  வறுமை மற்றும் சமத்துவமின்மை

  • இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றதாழ்வு உள்ளது.
  • 10% இந்தியர்களுக்கு சொந்தமான வருமானம் மற்றும் சொத்துக்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
  • வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

5. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?

1. உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல்

இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கிய நோக்கமானது வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.

2. ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை

வேளாண் கொள்கையானது பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.

3. ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல்

ஏழை விவசாயிகளுக்கு நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றும் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே விவசாயக் கொள்கையாகும்.

4. விவசாயத் துறையை நவீனமயமாக்குதல்

விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் உயர் ரக விதைகள் (HYV) விதைகள், உரங்கள் போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

5. சுற்றுச்சூழல் சீரழிவு

இந்தியாவின் விவசாயக் கொள்கை இந்திய விவசாயத்தின் அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரி செய்யும் மற்றொரு நோக்கத்தையும் கொண்டுள்ளது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

6. அதிகாரத்துவ தடைகளை நீக்குதல்

விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது, இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *