Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Hydrologic Cycle

Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Hydrologic Cycle

TNPSC Group 1 Best Books to Buy

சமூக அறிவியல் : புவியியல் : அலகு 3 : நீரியல் சுழற்சி

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

TNPSC Group 4 Best Books to Buy

1. நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.

  1. ஆற்றின் சுழற்சி
  2. நீரின் சுழற்சி
  3. பாறைச் சுழற்சி
  4. வாழ்க்கைச் சுழற்சி

விடை : நீரின் சுழற்சி

2. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் __________.

  1. 71%
  2. 97%
  3. 28%
  4. 0.6%

விடை : 28%

3. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு __________ என்று பெயர்.

  1. ஆவி சுருங்குதல்
  2. ஆவியாதல்
  3. பதங்கமாதல்
  4. மழை

விடை : ஆவி சுருங்குதல்

4. நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின்மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு __________.

  1. ஆவி சுருங்குதல்
  2. ஆவியாதல்
  3. நீர் உட்கசிந்து வெளியிடுதல்
  4. நீர் வழிந்தோடல்

விடை : நீர் வழிந்தோடல்

5. நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.

  1. நீர் உட்கசிந்து வெளியிடுதல்
  2. நீர் சுருங்குதல்
  3. நீராவி சுருங்குதல்
  4. பொழிவு

விடை : நீர் உட்கசிந்து வெளியிடுதல்

6. குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.

  1. நிலத்தடி நீர்
  2. மேற்பரப்பு நீர்
  3. நன்னீர்
  4. ஆர்ட்டீசியன் நீர்

விடை : நன்னீர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது.

விடை : ஈரப்பதம்

2. நீர்ச் சுழற்சியில் __________ நிலைகள் உள்ளன.

விடை : மூன்று

3. வளிமண்டலத்திற்கு புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் __________ என்று பெயர்.

விடை : நீர் சுருங்குதல்

4. மழைத்துளியின் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் __________.

விடை : தூரல்

5. மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.

விடை : அடர் மூடுபனி

III.பொருத்துக

1. தாவரங்கள்மேகங்கள்
2. நீர் சுருங்குதல்கல்மழை
3. பனித்துளி மற்றும் மழைத்துளிபுவியின் மேற்பரப்பு
4. நீர் ஊடுருவுதல்நீர் உட்கசிந்து வெளியிடுதல்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. நீராவியாதல் என்பது

i) நீராவி நீராக மாறும் செயலாக்கம்

ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம்

iii) நீர் 100°C. வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.

iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.

  1. i, iv சரி
  2. ii சரி
  3. ii, iii சரி
  4. அனைத்தும் சரி

விடை : ii சரி

V. சரியா, தவறா?

1. 212 °F வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32 °F வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.

விடை : தவறு

2. மூடிபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளைப் பெற்றிருப்பதில்லை.

விடை : தவறு

3.  அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடைநீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.

விடை : சரி

VI குறுகிய விடையளி

1. நீர் சுழற்சி – வரையறு.

  • நீரியல் சுழற்சி  என்பது உலகளாவிய நிகழ்வு.
  • நீர் கடலிலிருந்து ஆவியாதல் மூலம் வளி மண்டலத்திற்கும் வளி மண்டலத்திலிருந்து நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு சுழற்சி ஆகும்.

2. பனி உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?

  • நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும்பொழுது பனி உருவாகிறது.
  • பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும்பொழுது பனி உருவாகிறது.

3. “மேல் மட்ட நீர் வழிந்தோடல்” குறிப்பு வரைக

  • நிலநீர் ஓட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் இது மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.
  • இது மழைப்பொழிவு அதிகமாவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும்பொழுதும் ஏற்படுகிறது.

VII. காரணம் கூறுக.

1. நீர் புகாத இடங்களில் நீரின் ஊடுருவல் குறைவாக உள்ளது.

  • நிலத்தில் நீர் உடருவ மண்துகள்கள் மற்றும் பாறைகளுக்கிடையே இடைவெளி அவசியமாகிறது.
  • இவ்விடைவெளி குறைவாக மற்றும் நீர் புகாத இடங்களில் நீரின் ஊடுருவல் குறைவாக உள்ளது.

2. புவியில் நன்னீர் குறைவாக உள்ளது.

புவியில் உள்ள மொத்த நீரில் 97.2% உவர்ப்பு நீராகவும் மற்றும் 2.8% நன்னீராகவும் உள்ளது.

3. துருவப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பனிப்பொழிவு பொதுவான நிகழ்வாக உள்ளது.

துருவப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் மேகத்திலுள்ள வெப்பம் குறைவதன் காரணமாக பனிப்பொழிவு பொதுவான நிகழ்வாக உள்ளது.

VIII. பத்தியளவில் விடையளிக்கவும்

1. நீர்ச் சுழற்சி யின்பல்வேறு படிநிலைகளைப் படத்துடன் விவரி.

நீரியல் சுழற்சி

ஆவியீர்ப்பு

ஆவியீர்ப்பு என்பது புவியின் மேற்பரப்பு நீர் நிலைகளில் இருந்து ஆவியாதல் வழியாகவும் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாகவும் நிகழும் புவியின் மொத்த நீர் இழப்பாகும்.

நீர் ஆவியாதல்

நீர், திரவநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறுவதற்கு ஆவியாதல் என்று பெயர்.

நீர் உட்கசிந்து வெளியிடுதல்

நீர் உட்கசிந்து வெளியிடுதல் என்பது தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்லும் செயலாக்கமே நீர் உட்கசிந்து வெளியிடுதல் ஆகும்.

நீர் சுருங்குதல்

நீராவி, நீராக மாறும் செயல்முறைக்கு நீர் சுருங்குதல் என்று பெயர்.

மழைப் பொழிவு

மழைப்பொழிவு என்பது மேகங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு ஆகும்.

நீர் ஊடுருவல்

புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர்ப் புகுவதற்கு நீர் ஊடுருவல் என்று பெயர்

நீர் உட்கசிதல்

நீர் உட்கசிவு என்பது மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதாகும்.

நீர் வழிந்தோடல்

நீர் வழிந்தோடல் என்பது ஓடும் நீர், ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வதாகும்.

2. தாவரங்களின் நீர் உட்கசிந்து வெளியேறுதலுக்கும் ஆவியாதலுக்கும் உள்ளவேறுபாட்டைக் கூறு.

நீர் உட்கசிந்து வெளியிடுதல்ஆவியாதல்
1. நீர் உட்கசிந்து வெளியிடுதல் என்பது தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்லும் செயலாக்கமே நீர் உட்கசிந்து வெளியிடுதல் ஆகும்.நீர், திரவநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறுவதற்கு ஆவியாதல் என்று பெயர்.
2. வெப்பநிலை, காற்று, ஈரப்பதம் ஆகியவை நீர் உட்கசிந்து வெளியாகும் விதத்தை நிர்ணயிக்கின்றன.ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக வெப்ப நிலை உள்ளது.
3. பயிர்களின் தன்மை, பயிர்களின் பண்புகள், அதன் சூழல் மற்றும் பயிர் சாகுபடி முறைகள் நீர் உட்கசிந்து வெளியேறும் செயலைத் தீர்மானிக்கின்றன.புவியில் மேற்பரப்பில் உள்ள பரந்த நீர்ப்பரப்பு, காற்று, வளிமண்டல ஈரப்பதம் போன்ற காரணிகள் ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கின்றன

3. மழைபொழிவின் பல வகைகளை விவரி.

மழை

  • நீர்த் துளிகள் 0.5 மி.மீ விட்டத்திற்கு அதிகமாக இருந்தால் மழைப் பொழிவு எனவும் 0.5  .மீட்டருக்கு குறைவாக இருப்பதால் அதைத் தூறல் எனவும் அழைக்கபடுகிறது.
  • பொதுவாக மழைத் தூறல் படை மேகங்களிலிருந்து உருவாகிறது

கல்மழை

  • நீர்த்துளிகளும், 5 மி.மீ விட்டத்திற்கு மேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு கல்மழை என்று பெயர்.
  • சிலநேரங்களில் வளிமண்டல வெப்பநிலை 0° Cக்கும் குறைவாக இருக்கும் அடுக்குகளில் மழைத்துளி விழும் பொழுது நீர் உறைநிலைக்குச் சென்றுவிடுகிறது.
  • அது புவியை நோக்கி வரும் பொழுது பனிக்கட்டிகளாக மாறுகிறது.
  • ஆதலால், பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் சேர்ந்து புவியின் மீது கல்மழையாக பொழிகிறது.

உறைபனி மழை

  • மழைத்துளிகள், சில நேரங்களில் புவிப்பரப்பிற்கு அருகாமையில் குளிர்ந்த காற்றுவழியாக விழும்பொழுது உறைவதில்லை.
  • மாறாக குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும்பொழுது அம்மழைத்துளிகள் உறைந்து விடுகின்றன. இவையே உறைபனி எனப்படுகிறது.
  • இம்மழையில் உள்ள துளியின் விட்டத்தின் அளவு 0.5 மி.மீ விட அதிகமாக இருக்கும்.

ஆலங்கட்டி மழை

  • மழைபொழிவானது 5 மி.மீ விட்டத்தை விட பெரிய உருண்டையான பனிக்கட்டிகளைக் கொண்டிருந்தால் ஆலங்கட்டி மழை என்று பெயர்.
  • இது கார்திரள் மேகங்களிலிருந்து (Cumulonimbus Clouds) இடியுடன் கூடிய மழையாக உருவாகிறது.
  • மேகத்தின் குளிர்ந்த பகுதியிலிருந்து ஒரு சிறிய பனிக்கட்டியாக ஆலங்கட்டி உருவாகிறது.
  • மேகத்தில் ஏற்படும் கடும் செங்குத்து சலனமானது ஆலங்கட்டியைக் குளிர்ந்த பகுதியினூடே மேலும் கீழுமாக பலமுறை எடுத்துச் செல்கிறது.

பனி 

  • மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின் காரணமாக நீராவி அடிக்கடி நேரடியாக பனிக்கட்டிகளாக மாற்றப்படுகிறது.
  • இது துகள் போன்று பனியின் நுண்துகள்களைத் திரளாகக்கொண்டு காணப்படுகிறது.
  • இந்தப் பனித்திரள்துகள்கள் பொழிவதைப் பனிப்பொழிவு என அழைக்கிறோம்.
  • இது துருவப்பகுதிகளிலும், உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது

4. நீர் வழிந்தோடல் மற்றும் அதன் வகைகளை விவரி.

மேல்மட்ட மழை நீர் வழிந்தோடல்:

  • மழைப் பொழிந்ததவுடன் மழை நீரின் ஒரு பகுதி நீரோடையோடு கலந்து விடுகிறது.
  • இது மழைப்பொழிவு அதிகமாவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும்பொழுதும் ஏற்படுகிறது.
  • இந்நிலையில் அதிக நீரானது நிலப்பரப்பில் செரிவடைவதால் அது நிலச்சரிவின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதால் நிலநீர் ஓட்டம் எனவும் அறியப்படுகிறது.
  • இந்த நிலநீர் ஓட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் இது மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.

அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்

  • நீரானது அடிமண் அடுக்கினுள் நுழைந்து நிலத்தடி நீரில் கலக்காமல் பக்கவாட்டு திசையில் நகர்ந்து ஓடைகள், ஆறுகள் மற்றும் கடலுடன் கலப்பதால் இதற்கு அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் என்று பெயர்.
  • அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் இடைநீர் ஓட்டம் எனவும் பொதுவாக் குறிப்பிடப்படுகிறது.

அடி மட்ட நீர் ஓட்டம்

  • செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர் பாதை வழியாக நிலத்தடி நீராக ஓடுவதே அடிமட்ட நீர் ஓட்டமாகும்.
  • நிலத்தடி நீர் மட்டத்தை விட நீர் பாதையின் உயரம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே இது காணப்படும்.
  • இவை வறண்ட மழையற்ற காலங்களில் நிலத்தடி நீரால் நீரூட்டப்படுகின்றன.
TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *