Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Weather and Climate

Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Weather and Climate

சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலையும் காலநிலையும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. புவியின் வளிமண்டலம் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அளவைக் கொண்டுள்ளது.

  1. 78% மற்றும் 21%
  2. 22% மற்றும் 1%
  3. 21% மற்றும் 0.97%
  4. 10 மற்றும் 20%

விடை : 78% மற்றும் 21%

2. ____________________________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

  1. புவி
  2. வளிமண்டலம்
  3. காலநிலை
  4. சூரியன்

விடை : காலநிலை

3. புவி பெறும் ஆற்றல் ______________

  1. நீரோட்டம்
  2. மின்காந்த அலைகள்
  3. அலைகள்
  4. வெப்பம்

விடை : வெப்பம்

4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

  1. சமவெப்பக்கோடு
  2. சம சூரிய வெளிச்சக் கோடு
  3. சம காற்றழுத்தக் கோடு
  4. சம மழையளவுக் கோடு

விடை : சம மழையளவுக் கோடு

5. ________________ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.

  1. காற்றுமானி
  2. அழுத்த மானி
  3. ஈரநிலை மானி
  4.  வெப்ப மானி

விடை : ஈரநிலை மானி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  ______________ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.

விடை : வானிலை

2.  வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு ______________

விடை : வானிலையியல்

3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ______________ 

விடை : கீரின்லாந்து

4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _____________________

விடை : ஒப்பு ஈரப்பதம்

5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _____________________ மற்றும் _____________________ ஆகியவை அளக்கப்படுகின்றன.

விடை : காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை

6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு _____________________

விடை : சமவெப்பக்கோடு

III.பொருத்துக

1. காலநிலைபுயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது
2. ஐசோநிப்சூறாவளி
3. ஈரநிலைமானிசம அளவுள்ள பனிபொழிவு
4. ரேடார்நீண்ட நாளைய மாற்றங்கள்
5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்த மண்டலம்)ஈரப்பதம்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

IV. சரியா, தவறா?

1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.

விடை : சரி

2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.

விடை : தவறு

3.  சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.

விடை : சரி

4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.

விடை : தவறு

V குறுகிய விடையளி

1. காலநிலை – வரையறு

  • காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்.
  • இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்.

2. “வெயிற் காய்வு” என்றால் என்ன?

  • புவியும் அதன் வளி மண்டலமும் சூரியனின் வெப்ப கதிர்வீசலால் வெப்பம் அடைகின்றன.
  • வெயிற்காய்வு ஆனது புவியை வந்தடையும் கதிர்வீச்சின் காலத்தை பொறுத்தும் புவி வெப்ப கதிர்வீச்சலின் அளவை பொறுத்தும் வெப்பம் இடத்திற்கு இடம் மாறபடுகிறது.

3. “வளிமண்டலக் காற்றழுத்தம்” என்றால் என்ன?

  • புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள உள்ள காற்றின் எடையே வளிமண்டல அழுத்தம் அல்லது காற்றழுத்தம் எனப்படும்.
  • காற்றின் அழுத்தம் காற்றழுத்த மானியால் அளவிடப்படுகிறது.

4. சிறு குறிப்பு வரைக: கோள் காற்று / நிரந்தரக்காற்று

ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.

  • வியாபாரக் காற்று
  • மேலைக்காற்று
  • துருவக்காற்று

5. சம அளவுக் கோடுகள் – “ஐசோலைன்ஸ்” என்றால் என்ன?

  • சம அளவுக் கோடு என்பது சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும்.
  • இக்கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

VI வேறுபடுத்துக

1. காலநிலை மற்றும் வானிலை

காலநிலைவானிலை
காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும். இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்.வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின் திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிற கூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும்.

2. முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்பு ஈரப்பதம்

முழுமையான ஈரப்பதம்ஒப்பு ஈரப்பதம்
ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் உள்ள நீராவியின் எடைக்கு உண்மையான ஈரப்பதம் என்று பெயர்.ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் எவ்வளவு நீராவி இருக்க முடியுமோ அந்த அளவிற்கும், அதேசமயம் அக்காற்றில் தற்போது எவ்வளவு நீராவி உள்ளதோ அந்த அளவிற்கும் உள்ள விகிதம் ஒப்பு ஈரப்பதம் எனப்படும்.

3. கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்

கோள் காற்றுபருவகாலக் காற்றுகள்
ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.பருவக்காலக் காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும்.
எ.கா. வியாபாரக் காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று.எ.கா. தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்று

VII காரணம் கூறுக 

1.  காலநிலையும் வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.

  • காலநிலையும், வானிலையும் தீர்மானிக்கும் காரணிகள் இடத்திற்க இடம் வேறுபடுவதால் காலநிலையும், வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன

2. உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.

  • உயரம் அதிகமுள்ள இடங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்.
  • காற்றிலுள்ள மூலக்கூறுகளின் அளவு குறைவதால் வெப்பமும் குறைகிறது.

3. மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.

  • மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்ஸிஜன் அளவும் காற்றின் அழுத்தமும் மிகவும் குறைவாக உள்ளது.
  • இதனால் மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துக் செல்கின்றன

VIII ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

1. வெப்பநிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?

  • வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது. இது செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுதாகும்.
  • வானிலை ஆய்வாளர்கள் வெப்பநிலையை அளக்க வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி, மற்றும் குறைந்தபட்ச – அதிகபட்ச வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள்.
  • சூரியக் கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது.
  • வளிமண்டலம் புவிகதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் அதிக வெப்பமடைகிறது.
  • ஆகையால் நாள்தோறும் அதிக பட்ச வெப்பநிலை பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை அதிகாலை 4.00 மணிமுதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.

2. காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.

கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர். செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர். காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும்.

காற்றின் வகைகள்

கோள் காற்றுகள்

  • ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.
  • எ.கா. வியாபாரக் காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று.

பருவக்காலக் காற்று

  • பருவக்காலக் காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும்.
  • இக்காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.

தலக்காற்றுகள்

  • தலக்காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள் என்பது ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறியபகுதியில் வீசும். எ.கா. நிலக்காற்று, கடல் காற்று.

3. வானிலைக் கூறுகளையும் அதை அளக்க உதவும் கருவிகளையும் பட்டியலிடுக.

வானிலைக் கூறுகள்அளக்க உதவும் கருவிகள்
1. வெப்பநிலைவெப்பமானி (தெர்மோ மீட்டர்
2. மழைப்பொழிவுமழைமானி
3. காற்றழுத்தம்காற்றழுத்தமானி (அனிராய்டு)
4. ஈரப்பதம்ஈரநிலைமானி (ஹைக்ரோமீட்டர்)
5. காற்றுகாற்றுமானி (அனிமாமீட்டர்)
Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *