Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 6

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 6

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

வாழ்வியல்: திருக்குறள்

17. அழுக்காறாமை

1. ஒழுக்காறாக் கொள்க  ஒருவன்தன் நெஞ்சத்து

 அழுக்காறு இலாத இயல்பு.

2. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும்

 அழுக்காற்றின் அன்மை பெறின்.

3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

 பேணாது அழுக்கறுப் பான்.

4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

 ஏதம் படுபாக்கு அறிந்து.

5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

 வழுக்கியும் கேடீன் பது.

6. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

 உண்பதூஉம் இன்றிக் கெடும்.

7. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 

 தவ்வையைக் காட்டி விடும்.

8. அழுக்காறு எனஒரு பாவி திருச்சேற்றுத்

 தீயுழி உயத்து விடும்.

9. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

 கேடும் நினைக்கப் படும்.

10. அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்

 பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

19. புறங்கூறாமை

1. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

 புறம்கூறான் என்றல் இனிது.

2. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

 புறனழீஇப் பொய்த்து நகை .

3. புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 

 அறம்கூறும் ஆக்கம் தரும்.

4. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க 

 முன்இன்று பின்நோக்காச் சொல்.

5. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை  புறஞ்சொல்லும்

 புன்மையால் காணப் படும்.

6. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

 திறன்தெரிந்து கூறப் படும்.

7. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

  நட்பாடல் தேற்றா தவர்.

8. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

  என்னைகொல் ஏதிலார் மாட்டு.

9. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

 புன்சொல் உரைப்பான் பொறை.

10. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

  தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

25. அருளுடைமை 

1. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்

 பூரியார் கணணும் உள.

2. நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

 தேரினும் அஃதே துணை.

3. அருள்சேர்ந்த  நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த 

 இன்னா உலகம் புகல்.

4. மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு  இல்லென்ப

 தன்னுயிர் அஞ்சும் வினை. 

5. அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

 மல்லம்மா ஞாலம் கரி.

6. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர்  அருள்நீங்கி

 அல்லவை செய்தொழுகு வார்.

7. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை  பொருளில்லார்க்கு

 இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

8. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்

 அற்றார்மற்று ஆதல் அரிது.

9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

  அருளாதான் செய்யும் அறம்.

10. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

 மெலியார்மேல் செல்லும் இ்டத்து.

30. வாய்மை 

1. வாய்மை எனப்படுவது  யாதெனின் யாதொன்றும்

 தீமை  இலாத சொலல்.

2. பொய்ம்மையும் வாய்மை இ்டத்த புரைதீர்ந்த

 நன்மை பயக்கும் எனின்.

3. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

  தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

4. உளளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

 உள்ளத்துள் எல்லாம் உளன்.

5. மனத்தொடு  வாய்மை  மொழியின் தவத்தொடு 

  தானம்செய்ய வாரின் தலை.

6. பொய்யாமை அன்ன புகழில்லை  எய்யாமை

  எல்லா அறமும் தரும்.

7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

  செய்யாமை செய்யாமை நன்று.

8. புறந்தூய்மை  நீரான் அமையும் அகந்தூய்மை 

 வாய்மையால்  காணப் படும்.

9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

 பொய்யா விளக்கே விளக்கு.

10. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை  எனைத்தொன்றும்

  வாய்மையின் அல்ல பிற

39. இறைமாட்சி

1. படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்

 உடையான் அரசருள் ஏறு.

2. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்

 எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.

3. தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்

 நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.

4. அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா

மானம்  உடையது அரசு.

5. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

 வகுத்தலும் வல்லது அரசு.

6. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

 மீக்கூறும் மன்னன் நிலம்.

7. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

 தான்கண் டனைத்துஇவ் உலகு.

8. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

  இறையென்று வைக்கப் படும்.

9. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

 கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

10. கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

  உடையானாம்  வேந்தர்க்கு ஒளி.

வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும். அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளின் 50 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்காக அல்ல.

திருக்குறள் கருத்துகளை மாணவர்களிடையே பரப்புவதற்கான வழிகாட்டுதல்கள் 

• நாள் தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் திருக்குறளைப் பொருளுடன் கூறலாம்.

• வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தலாம். 

• இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகளைக் கூறலாம். 

• திருக்குறள் கருத்துகளை விளக்கும் நாடகங்களை நடத்தச் செய்யலாம்.

• திருக்குறள் கருத்துகளை விளக்கும் ஓவியப் போட்டியை நடத்தலாம். 

• குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து வினாடி வினா நடத்தலாம். 

• சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் கருத்துகளை விளக்கலாம்.

கேள்விகள் மற்றும் பதில்கள்

புறங்கூறாமையில் உள்ள குறலில் ஏதேனும் இரண்டை எழுதுக:

1. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

 புறம்கூறான் என்றல் இனிது.

2. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

 புறனழீஇப் பொய்த்து நகை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *