Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 6

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 6

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்

வாழ்வியல்: திருக்குறள்

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

  1. நம் முகம் மாறினால்
  2. நம் வீடு மாறினால்
  3. நாம் நன்கு வரவேற்றால்
  4. நம் முகவரி மாறினால்

விடை : நம் முகம் மாறினால்

2. நிலையான செல்வம் ______

  1. தங்கம்
  2. பணம்
  3. ஊக்கம்
  4. ஏக்கம்

விடை : ஊக்கம்

3. ஆராயும் அறிவு உடையவர்கள் _______ சொற்களைப் பேச மாட்டார்.

  1. உயர்வான
  2. விலையற்ற
  3. பயன்தராத
  4. பயன்உடைய

விடை : பயன்தராத

4. “பொருளுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. பொருளு+டைமை
  2. பொரு+ளுடைமை
  3. பொருள்+உடைமை
  4. பொருள்+ளுடைமை

விடை : பொருள்+உடைமை

5. “உள்ளுவது + எல்லாம்” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. உள்ளுவதுஎல்லாம்
  2. உள்ளுவதெல்லாம்
  3. உள்ளுவத்தெல்லாம்
  4. உள்ளுவதுதெல்லாம்

விடை : உள்ளுவதெல்லாம்

6. “பயன் + இலா” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. பயனிலா
  2. பயன்னில்லா
  3. பயன்இலா
  4. பயன்இல்லா

விடை : பயனிலா

II. எதுகை. மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

மோனைச் சொற்கள்எதுகைச் சொற்கள்
உள்ளுவது – உயர்வுள்ளல்
தள்ளினும் – தள்ளாமை
உள்ளுவது – தள்ளினும் – தள்ளாமை

III. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

1. பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
மற்றுப் பிற அணியல்ல

விடை :

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

2. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

விடை :

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

IV. “ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திச்சூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடுக்க

1. விருந்து பிறத்தாத் தாணுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டாற்பாற் அன்று

2. உள்ளம் உடைமை உடைமை பொருடைமை
    நில்லாது நீங்கி விடும்

3. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
    சொல்லில் பயன்இலாச் சொல்

விடை :-

உள்ளம் உடைமை உடைமை பொருடைமை
நில்லாது நீங்கி விடும்

V. பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளை தேர்ந்தெடுக்க

வீட்டிற்குள் வந்த வேலவனைத் தந்தை அழைத்தார். “உங்கள் பள்ளியில்  பேச்சுப்போட்டி நடப்பதாக கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். “இல்லையப்பா அமுதன் என்னை விட நன்றாகப் பேசுவான். அவனுக்குதான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். “போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்து கொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்த வேலன். ” நாளை பெயர் கொடுத்து விடுகிறேன் அப்பா என்றான்

1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து

2. வெள்ளத் அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத்து அனையது உயர்வு

3. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பயன் இல்லாத சொல்

விடை :-

வெள்ளத் அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

VI. குறு வினா

1. எப்படி உண்பது விரும்பத்தக்கது?

அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்பாேது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று

2. எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகிறார்?

அடுத்தவர் பாெருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூட தீமையானது என்று வள்ளுவர் கூறுகிறார்.

3. ஆக்கம் யாரிடம் வழிதகட்டுச் செல்லும்?

தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக் காெண்டு செல்லும்.

4. நாம் எத்தகைய சாெற்களைப் பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?

பயனுடைய சொற்களை மட்டுமே பேச வேண்டும். பயன் இல்லாத சொற்களைப் பேசாமல் இருக்க வேண்டுமென வள்ளுவர் கூறுகிறார்

திருக்குறள் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஊக்கம் உடையவனுக்கு கிடைப்பது _______________

விடை : செல்வம்

2. முகர்ந்து பார்த்தால் வாடுவது _______________

விடை : அனிச்ச மலர்

3. நிலையான செல்வம் _______________

விடை : ஊக்கம்

4. ஊக்கத்தின் அளவுக்க ஏற்ப இருப்பது _______________

விடை : உயர்வு

II. பிரித்து எழுதுக

  1. அசைவிலா = அசைவு + இலா
  2. மருந்தெனினும் = மருந்து +  எனினும்
  3. முகந்திரிந்து = முகம் + திரிந்து
  4. அளவிறந்து = அளவு + இறந்து
  5. பயனுடைய = பயன் + உடைய

III. குறுவினா

1. அனிச்ச மலர் வாடுவதை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?

நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும் என்பதை அனிச்ச மலர் வாடுவதுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.

2. களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் பற்றி வள்ளுவர் கூறுவதென்ன?

களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும்.

3. நிலையான செல்வம் எது?

ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.

4. யார் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.?

நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *