தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய்
கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன்
I. சொல்லும் பொருளும்
- மல்லெடுத்த – வலிமைபெற்ற
- சமர் – போர்
- நல்கும் – தரும்
- கழனி – வயல்
- மறம் – வீரம்
- எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
- கலம் – கப்பல்
- ஆழி – கடல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________
- மகிழ்ச்சி
- துன்பம்
- வீரம்
- அழுகை
விடை : வீரம்
2. “கல்லெடுத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கல் + அடுத்து
- கல் + எடுத்து
- கல் + லடுத்து
- கல் + லெடுத்து
விடை : கல் + எடுத்து
3. “நானிலம்” என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- நா+னிலம்
- நான்கு+நிலம்
- நா+நிலம்
- நான்+நிலம்
விடை : நான்கு+நிலம்
4. “நாடு+ என்ற” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- நாடென்ற
- நாடன்ற
- நாடுஎன்ற
- நாடுஅன்ற
விடை : நாடென்ற
5. “கலம்+ ஏறி” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- கலம்ஏறி
- கலமறி
- கலன்ஏறி
- கலமேறி
விடை : கலமேறி
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மாநிலம்
- தமிழ்நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்
2. கடல்
- உலகில் பெருங்கடல்கள் ஏழு
3. பண்டங்கள்
- இனிப்பு பண்டங்கள் அனைவருக்கும் அதிகமாக பிடிக்கும்
IV. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – மல்லெடுத்த
- ஊராக்கி – பேராக்கி
- பெருமை – மருதம்
- முக்குளித்தான் – எக்களிப்பு
- பண்டங்கள் – கண்டங்கள்
- அஞ்சாமை – அஞ்சுவதை
V. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – கலமேறி
- மல்லெடுத்து – மறத்தால்
- நானிலத்தை – நாகரிக
- முக்குளித்தான் – முத்தெடுத்து
- பண்டங்கள் – பயன்நல்கும்
VI. குறு வினா
1. நான்கு நிலங்கள் யாவை?
நான்கு நிலங்கள் என்பவை முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பவை ஆகும்.
2. தமிழன் எதற்கு அஞ்சினான்?
தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான்
VII. சிறு வினா
1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினார்?
- தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான்
- தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான்
- முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் தமிழன் தான்.
2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான்.ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களில் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றி கொடியை நாட்டினான்.முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான். எதற்கும் அஞ்சுவான் ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான். |
நானிலம் படைத்தவன் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. “சமர்” என்னும் சொல்லின் பொருள் ____________
விடை : போர்
2. “வயல்” என்ற சொல்லின் வேறு பெயர் ____________
விடை : கழனி
3. வீரகாவியம் படைத்தவர் ____________
விடை : முடியரசன்
4. “ஆழி” என்பதற்கு ____________ என்ற பெயர்
விடை : கடல்
II. குறு வினா
1. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் யார்?
முடியரசன்
2. நானிலம் படைத்தவன் என்ற பாடல் எந்தநூலில் இடம் பெற்றுள்ளது?
நானிலம் படைத்தவன் என்ற பாடல் முடியசரன் எழுதிய புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
3. நானிலம் படைத்தவன் பாடலில் முடியரசன் குறிப்பிட்டுள்ள நிலங்கள் யாவை?
முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல்
4. முடியரசன் – குறிப்பு வரைக
- முடியரசனின் இயற்பெயர் – துரைராசு
- பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
- திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாராட்டப் பெற்றவர்