Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 3

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 3

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்

உரைநடை: தமிழர் பெருவிழா

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர் முற்றியதும் ________ செய்வர்.

  1. அறுவடை
  2. உரமிடுதல்
  3. நடவு
  4. களையெடுத்தல்

விடை : அறுவடை

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.

  1. செடி
  2. கொடி
  3. தோரணம்
  4. அலங்கார வளைவு

விடை : தோரணம்

3. “பொங்கல் + அன்று” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. பொங்கலன்று
  2. பொங்கல்அன்று
  3. பொங்கலென்று
  4. பொங்கஅன்று

விடை : பொங்கலன்று

4. “போகிப்பண்டிகை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. போகி + பண்டிகை
  2. போ+பண்டிகை
  3. போகு + பண்டிகை
  4. போகிப்+பண்டிகை

விடை : போகி + பண்டிகை

5. பழயன கழிதலும் ________ புகுதலும்.

  1. புதியன
  2. புதுமை
  3. புதிய
  4. புதுமையான

விடை : புதியன

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப் போன மரத்தைக் காண்பது ________ தரும்.

  1. அயர்வு
  2. கனவு
  3. துன்பம்
  4. சோர்வு

விடை : துன்பம்

II. சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. பொங்கல்

விடை : பொங்கல் விழாவில் விளைச்சலுக்கு காரணமான கதிரவனை வணங்கி மகிழ்வர்

2. செல்வம்

விடை : உழவர்களின் செல்வமாக மாட்டினை கருதினர்,

3. பண்பாடு

விடை : தமிழர் பண்பாடு பாரம்பரியமிக்கது

III. குறு வினா

1. பாேகிப் பண்டிகை எதற்காகக் காெண்டாடப்படுகிறது?

  • “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ஆன்றாேர் மாெழி. வீட்டில் உள்ள பயனற்ற பாெருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் பாேகித் திருநாள்.
  • இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.
  • ஆகவே வீட்டைத் தூய்மை செய்வதற்காக கொண்டாடப்படுகிறது.

2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்?

  • மாடுகள் உழவர்களின் செல்வமாக விளங்குவதினாலும், உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் இருப்பதனாலும் உழவர்கள் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்.

IV. சிறு வினா

1. காணும் பாெங்கலை மக்கள் எவ்வாறு காெண்டாடுகின்றனர்?

  • மாட்டுப் பாெங்கலுக்கு அடுத்த நாள் காணும் பாெங்கல் ஆகும்.
  • மக்கள் இந்நாளில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர் விடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்;
  • குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பாெழுதைக் கழிப்பர்;
  • மேலும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர்;
  • விளையாட்டுப் பாேட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.

 தமிழர் பெருவிழா – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இயற்கையோடு இணைந்து வாழ்வது ______________ ஆகும்

விடை : தமிழரின் வாழ்க்கை முறை

2. பொங்கல் விழா _______________  என போற்றப்படுகிறது

விடை : தமிழர் திருநாள்

3. பொங்கல் என்பதற்கு ______________ வருவது என்று பொருள்

விடை : பொங்கிப் பெருகி

4. _____________ நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பாெங்கல் விழா.

விடை : கதிரவனுக்கு

5. மார்கழி மாதத்தின் கடைசி நாள் ______________

விடை : பாேகிப் பண்டிகை.

6. தை முதல் நாளில் தாெடங்கும் ஆண்டு ______________

விடை : திருவள்ளுவர் ஆண்டு

7. திருவள்ளுவர் _____________ -ல் பிறந்தார்.

விடை : பாெ.ஆ.மு. 31

8. மாடுகள் உழவர்களின் _______________ விளங்குகிறது.

விடை : செல்வமாக

II. குறு வினா

5. பொங்கல் விழாவின் வேறு பெயர்கள் யாவை?

  • தமிழர் திருநாள்
  • அறுவடைத்திருவிழா
  • உழவர் திருநாள்

2. பொங்கல் விழாவினை உழவர் திருநாள் என கூறக் காரணம் யாது?

உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே, இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர்.

3. “மஞ்சுவிரட்டு” என்பது யாது?

மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும்.

4. “மஞ்சுவிரட்டு” விளையாட்டின் வேறு பெயர்கள் எவை?

  • மாடு பிடித்தல்
  • ஜல்லிக்கட்டு
  • ஏறுதழுவுதல்

5. எவற்றைப் போற்றும் விழாவகாகப் பொங்கல் விழா விளங்குகிறது?

இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றை போற்றும் விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது

6. போகிப்பண்டிகை பற்றி ஆன்றோர் கூறிய மொழி யாது?

“ பழையன கழிதலும் புதியன புகுதலும்” (நன்னூல் நூற்பா-462) என்பது போகிப்பண்டிகை பற்றி ஆன்றோர் கூறிய மொழி.

7. இந்திரவிழா எதன் நோக்கில் கொண்டாடப்பட்டது?

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் இந்திரவிழா கொண்டாடப்படுகிது. தற்போது இந்திர விழாவினை போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது

8. திருவள்ளுவர் ஆண்டு எப்படி கணக்கிடப்படுகிறது?

திருவள்ளுவர் பொ.ஆ.மு. 31இல் பிறந்தார்.  திருவள்ளுவராண்டை கணக்கிட  நடைமுறை ஆண்டுடன் 31-ஐக் கூட்ட வேண்டும்

எகா : 2020 + 31 = 2051

9. அறுவடைத் திருநாள் மற்ற மாநிலங்களில்  எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

மகரசங்கராந்திஆந்திர, கர்நாடகா, மகாராட்டிரா, உத்திரப்பிரதேசம்
லோரிபஞ்சாப்
உத்தராயன்குஜராத், இராஜஸ்தான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *