தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்
கவிதைப்பேழை: கண்மணியே கண்ணுறங்கு
I. சொல்லும் பொருளும்
- நந்தவனம் – பூஞ்சோலை
- பார் – உலகம்
- பண் – இசை
- இழைத்து – செய்து
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. “பாட்டிசைத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பாட்டி + சைத்து
- பாட்டி + இசைத்து
- பாட்டு + இசைத்து
- பாட்டு+சைத்து
விடை : பாட்டு + இசைத்து
2. “கண்ணுறங்கு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கண் + உறங்கு
- கண்ணு + உறங்கு
- கண் + றங்கு
- கண்ணு + றங்கு
விடை : கண் + உறங்கு
3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- வாழையிலை
- வாழைஇலை
- வாழலை
- வாழிலை
விடை : வாழையிலை
4. “கை + அமர்த்தி” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- கைமர்த்தி
- கைஅமர்த்தி
- கையமர்த்தி
- கையைமர்த்தி
விடை : கையமர்த்தி
5. “உதித்த” என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________
- மறைந்த
- நிறைந்த
- குறைந்த
- தோன்றிய
விடை : மறைந்த
III. குறுவினா
1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?
- சேர நாடு
- சோழ நாடு
- பாண்டிய நாடு
2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?
நமது வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரிக்க வேண்டும் என நாட்டுப் புறப்பாடல் கூறுகிறது
3. தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறார்?
தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயாே!தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தாெட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேர நாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவளை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியாே!குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் பாேக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழாே! கண்வண கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று, தாய் தன் குழந்தையைப் பாராட்டுகிறாள். |
கண்மணியே கண்ணுறங்கு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. “பார்” என்ற சொல்லின் பொருள் _______________
விடை : உலகம்
2. _______________ என்ற சொல்லின் பொருள் இசை
விடை : “பண்”
3. “தால்” என்னும் சொல் தரும் பொருள் ____________
விடை : நாக்கு
4. தாலாட்டு _____________________ ஒன்று
விடை : வாய்மொழி இலக்கியங்களுள்
5. குழந்தையின் ____________, குழந்தைகளை ____________ பாடும் பாட்டு தாலாட்டு
விடை : அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும்
II. சேர்த்து எழுதுக
- மூன்று + தேன் = முத்தேன்
- மூன்று + கனி = முக்கனி
- மூன்று + தமிழ் = முத்தமிழ்
- பூ + சோலை = பூஞ்சோலை
- நன்மை + தமிழ் = நற்றமிழ்
III. பாடப்பகுதியிலுள்ள எதுகை. மோனைச் சொற்களை எழுதுக
மோனைச் சொற்கள் | எதுகைச் சொற்கள் |
நந்தவன் – நற்றமிழ் | கண் – பண் |
பாட்டிசைத்து – பார் | தொட்டில் – கட்டி |
தந்தத்திலே – தங்கத்திேல | வைக்கும் – முக்கனி |
குளிக்க – குளம் | வெட்டி – கட்டி |
கண்ணே – கண்ணுறங்கு | கண்ணே – கண்ணுறங்கு |
IV. வினாக்கள்
1. முந்நாடுகளின் சிறப்புகள் எவையென தாய் கூறுகின்றாள்?
- சேரநாடு – முத்து
- சோழ நாடு – முக்கனி
- பாண்டிய நாடு – முத்தமிழ்
2. தாலாட்டு பற்றிய குறிப்பினை எழுதுக
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.தால் என்பதற்கு நாவு (நாக்கு) என்று பொருள். நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) எனப் பெயர் பெற்றது.குழந்தையின் அழுகையை நிறுத்தவும், குழந்தைகளை தூங்க வைக்கவும் பாடும் பாட்டு தாலாட்டு |
3. தொகைச்சொற்களின் விளக்கத்தை கூறு
முத்தேன்
- கொம்புத்தேன்
- பொந்துத்தேன்
- கொசுத்தேன்
முக்கனி
- மா
- பலா
- வாழை
முத்தமிழ்
- இயல்
- இசை
- நாடகம்