Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 2

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 2

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

கவிதைப்பேழை: மழைச்சோறு

I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.

1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____.

  1. பெருமழை
  2. சிறு மழை
  3. எடைமிகுந்த மழை
  4. எடை குறைந்த மழை

விடை : பெருமழை

2. ‘வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. வாசல் + எல்லாம்
  2. வாசல் + எலாம்
  3. வாசம் + எல்லாம்
  4. வாசு + எல்லாம்

விடை : வாசல் + எல்லாம்

3. ‘பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பெறு+ எடுத்தோம்
  2. பேறு + எடுத்தோம்
  3. பெற்ற + எடுத்தோம்
  4. பெற்று + எடுத்தோம்

விடை : பெற்று + எடுத்தோம்

4. ‘கால் + இறங்கி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. கால்லிறங்கி
  2. காலிறங்கி
  3. கால் இறங்கி
  4. கால்றங்க

விடை : காலிறங்கி

II. குறுவினா

1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது?

கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது.பெற்றெடுத்த குழந்தைகளின் பசியை தீர்க்க முடியவில்லைகலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரி மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்

2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை எனவே மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்

III. சிறுவினா

1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்இந்தக் கோலத்தை கரைக்க மழை வரவில்லை.பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை.

2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை.கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லைமழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை

3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?

மழைச்சோறு எடுத்த பின், பேய் மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.

1. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது _____.

  1. உணவு
  2. உடை
  3. பணம்
  4. மழை

விடை : மழை

2. கல் இல்லாக் காட்டில் _______________ போட்டனர்

  1. முருங்கைச் செடி
  2. கருவேலமரம்
  3. கடலைச் செடி
  4. காட்டு மல்லி

விடை : கடலைச் செடி

3. முள் இல்லாக் காட்டில் _______________ போட்டனர்

  1. கடலைச் செடி
  2. கருவேலமரம்
  3. முருங்கைச் செடி
  4. காட்டு மல்லி

விடை : முருங்கைச் செடி

II. பிரித்து எழுதுக

  1. பாதையெலாம் = பாதை + எலாம்
  2. முருங்கைச்செடி = முருங்கை + செடி
  3. வேலியிலே = வேலி + இலே
  4. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்
  5. காலிறங்கி =  கால் + இறங்கி
  6. உலகமெங்கும் = உலகம் + எங்கும்

III. குறுவினா

1. எங்கெல்லாம் கோலம் இடப்பட்டது?

வாசல் மற்றும் பாதைகளில் கோலம் இடப்பட்டது

2. வாடிப்போன செடிகள் எவை? காரணம் யாது?

கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது.

3. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது எது?

ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது மழை.

3. எப்போது மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர்?

மழை பொய்த்துவிட்டால் நீர்நிலைகளும் வற்றிவிடும். நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும். அத்தகைய காலங்களில் மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர்.

III. சிறுவினா

1. மழைச்சோற்று நோன்பு பற்றிக் கூறு

மழை இல்லாமல் பஞ்சம் ஏற்படும் நேரங்களில் சிற்றூர் மக்கள் வீடு வீடாகச் சென்று உப்பில்லாத சோற்றை ஒரு பானையில் வாங்குவார்கள்.ஊர் பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர்.கொடிய பஞ்சத்தை காட்டும் அடையாளமாக இது நிகழும்.இதனைக் கண்டு மனம் இறங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.இதனை மழைச்சோறு நோன்பு என்று கூறுவார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *