தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்
கவிதைப்பேழை: வளம் பெருகுக
I. சொல்லும் பொருளும்
- வாரி – வருவாய்
- எஞ்சாமை – குறைவின்றி
- முட்டாது – தட்டுப்பாடின்றி
- ஒட்டாது – வாட்டம்இன்றி
- வைகுக – தங்குக
- ஓதை – ஓசை
- வெரீஇ – அஞ்சி
- யாணர் – புதுவருவாய்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லொம் முளைத்தன.
- சத்துகள்
- பித்துகள்
- முத்துகள்
- வித்துகள்
விடை : வித்துகள்
2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று.
- காரி
- ஓரி
- வாரி
- பாரி
விடை : வாரி
3. ‘அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.
- அ + களத்து
- அக் + களத்து
- அக்க + அளத்து
- அம் + களத்து
விடை : அ + களத்து
4. ‘கதிர் + ஈன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.
- கதிரென
- கதியீன
- கதிரீன
- கதிரின்ன
விடை : கதிரீன
III. குறு வினா
1. பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது யாது?
தகுந்த காலத்தில் பெய்யும் மழையே பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது ஆகும்.
2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?
நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர்
IV. சிறு வினா
உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?
சேரனின் நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கிறது.அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன.முளைத்த விதைகள் செழிப்புடன் வளர தட்டுபாடின்றி மழை பொழிகின்றது.தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது. செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப் பெற்றிருக்கின்றன.அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஒலி எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சி தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற நாடு புது வருவாயுடன் சிறந்து விளங்குகின்றது. |
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மன்பதையை காப்பது ______________
- மாமழை
- வெயில்
- காற்று
- நெருப்பு
விடை : மாமழை
2. தகடூரை இப்போது _____________ என்று அழைக்கப்படுகிறது
- சேலம்
- நாமக்கல்
- தர்மபுரி
- திண்டுக்கல்
விடை : தர்மபுரி
3. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில் _____________
- நெய்தல் தொழில்
- மீன்பிடித் தொழில்
- மண்பாண்டத் தொழில்
- உழவுத் தொழில்
விடை : உழவுத் தொழில்
4. ‘அக்கிளை‘ என்றை மைொல்லப் பிரிதது எழுதக் கிடடிப்பது ____________.
- அக் + கிளை
- அ + கிளை
- அக்க + கிளை
- அம் + கிளை
விடை : அ + கிளை
5. ‘பெடை + ஓடு‘ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.
- பெடையோடு
- பெடைஒடு
- பெட்டையோடு
- பெடையாடு
விடை : பெடையோடு
II. பிரித்தெழுதுக
- அக்கதிர் = அ + கதிர்
- உருகெழும் = உருகு + எழும்
- அகன்றலை = அகன்ற + அலை
- கதிரீன = கதிர் + ஈன
- பெடையோடு = பெடை + ஓடு
III. பிரித்தெழுதுக
1. வாரி | அ. வாட்டம்இன்றி |
2. எஞ்சாமை | ஆ. வருவாய் |
3. முட்டாது | இ. குறைவின்றி |
4. ஒட்டாது | ஈ. தட்டுப்பாடின்றி |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 -ஈ. 4 – அ
III. குறு வினா
1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு எதற்கு உண்டு?
மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு மாமழைக்கு உண்டு.
2. மழை நீரின் பயன் பற்றி கூறு
மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வளர்க்கின்றது
3. எதனால் சேரநாட்டின் வருவாய் சிறந்து விளங்குகிறது?
பெருகிய மழை நீரால் சேரநாட்டின் வருவாய் சிறந்து விளங்குகிறது
4. எது செல்வந்தர்களின் களத்தில் வந்து நிறைகின்றன?
அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைகின்றன