Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 1

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 1

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

கவிதைப்பேழை: ஓடை

I. சொல்லும்  பொருளும்

  1. தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்
  2. பயிலுதல் – படித்தல்
  3. ஈரம் – இரக்கம்
  4. நாணம் – வெட்கம்
  5. முழவு – இசைக்கருவி
  6. செஞ்சொல் – திருந்தியசொல்
  7. நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  8. புன்செய்  – குறைந்த நீரால் பயிர்கள்  விளையும் நிலம்
  9. வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

  1. பயிலுதல்
  2. பார்த்தல்
  3. கேட்டல்
  4. பாடுதல்

விடை : பயிலுதல்

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.

  1. கடல்
  2. ஓடை
  3. குளம்
  4. கிணறு

விடை : ஓடை

3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

  1. நன் + செய்
  2. நன்று + செய்
  3. நன்மை + செய்
  4. நல் + செய்

விடை : நன்மை + செய்

4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

  1. நீளு + உழைப்பு
  2. நீண் + உழைப்பு
  3. நீள் + அழைப்பு
  4. நீள் + உழைப்பு

விடை : நீள் + உழைப்பு

5. ‘சீருக்கு + ஏற்ப’ – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

  1. சீருக்குஏற்ப
  2. சீருக்கேற்ப
  3. சீர்க்கேற்ப
  4. சீருகேற்ப

விடை : சீருக்கேற்ப

6. ‘ஓடை + ஆட’ – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

  1. ஓடைஆட
  2. ஓடையாட
  3. ஓடையோட
  4. ஓடைவாட

விடை : ஓடையாட

III. குறுவினா

1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

ஓடை கற்களில் உருண்டும், தவழந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் கூறுகிறார்?

ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முகுக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்

IV. சிறுவினா

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களை செழிக்க செய்கிறது.விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.குளிர்ச்சியை தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.நெஞ்சில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையாழ ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதர் வாழ்வு _______________ இயைந்தது.

விடை : இயற்கையோடு

2. தமிழகத்தின் _____________ என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்

விடை : வேர்ட்ஸ்வொர்த்

3. பிரெஞ்சு அரசு கவிஞர் வாணிதாசனுக்கு _____________ வழங்கியுள்ளது.

விடை : செவாலியர் விருது

4. _____________ என்று அழைக்கப்படுபவர் கவிஞர் வாணிதாசன்

விடை : பாவலர்மணி

II. குறுவினா

1. வண்ணதாசனின் ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

வண்ணதாசனின் ஓடை ஓடை என்னும் பாடல் அவரது தொடுவானம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

2. மனித வாழ்வு எதோடு இயைந்தது?

மனித வாழ்வு இயற்கையோடு இயைந்தது.

3. வள்ளைப்பாட்டு என்றால் என்ன?

பெண்கள் நெல் குத்தும்போது பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு ஆகும்

4. நன்செய், புன்செய் நிலம் பற்றி எழுதுக

  • நன்செய் நிலம் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  • புன்செய் நிலம் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

5. நம் மனத்தை மயக்க வல்லவை எவை?

கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை.

6. வாணிகதாசன் எழுதியுள்ள நூல்கள் சிலவற்றை கூறு?

தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *